tag:blogger.com,1999:blog-5012938.post110146057960579449..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அம்பானி குடும்பத் தகராறுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1101612752053486142004-11-28T09:02:00.000+05:302004-11-28T09:02:00.000+05:30அலெக்ஸ்: தி எகனாமிக் டைம்ஸ், இந்தச் செய்தியைப் படி...அலெக்ஸ்: தி எகனாமிக் டைம்ஸ், இந்தச் செய்தியைப் படிக்கவும். http://economictimes.indiatimes.com/articleshow/938044.cms

இங்கு வரிவரியாக சகோதரர்களுக்கிடையில் என்ன நடந்தது என்பதை விவரிக்கின்றனர்.

முகேஷ் - அனில்: இருவரில் அனில் அம்பானிதான் வெளியே அதிகமாகத் தெரிபவர். நன்கு பேசக்கூடியவர். [முகேஷ் பேசுவது படு கேவலமாக இருக்கும். எழுதுவச்சுப் படிக்கறது கூட. நம்ம தயாநிதி மாறன் மாதிரி...] தொலைக்காட்சிகளுக்குப் பிடித்தவர் அனில்தான்.

அத்துடன் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்வதிலும் அனில்தான் பெரிய ஆள். (மாபெரும் fixer அமர் சிங்கின் நெருங்கிய நண்பர். அதன்மூலம் முலாயம் சிங் மனது வைத்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் அனில்.) அனில் ஜாக்கிங் செய்துகொண்டே வந்து மும்பையில் வாக்குச்சாவடிக்குப் போய் வாக்களித்தது முதல் பக்கச் செய்தியானது. எந்த CII விழாவென்றாலும், அதில் நல்ல பேச்சு இருக்க வேண்டுமென்றால் கூப்பிடுவது அனிலைத்தான். முகேஷை அல்ல.

இப்பொழுது நடக்கும் பிரச்னை சொத்தைப் பிரிப்பதற்கு அல்ல. யார் எந்த நிறுவனத்தை எப்படி control செய்வது என்பதில்தான். முகேஷ் பின்கதவு வழியாக தன் ஆளுகையை நிலைநாட்டியுள்ளார். அது அனிலுக்குப் பிடிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. முகேஷ் திட்டமிட்டே, போர்டில் தன் ஆசாமிகளை வைத்து தலையாட்டி பொம்மை போல ஆடவைத்து, தனக்கு வேண்டியதை supplementary agenda மூலம் சாதித்துக் கொண்டது அனிலின் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

ரிலையன்ஸ் பங்குதாரர்கள் ரிலையன்ஸ் சேர்மன் மற்றும் போர்ட் மீது பல குற்றங்களை இதுவரை கொண்டுவந்ததேயில்லை. இப்பொழுது ரிலையன்ஸ் vs பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், DoT ஆகியவற்றுக்கிடையே உள்ள பிரச்னைகளைப் பாருங்கள்.

ரிலையன்ஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சாற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் கொதித்துப் போயிருக்க வேண்டும். ஆனால் வாயையே திறக்கவில்லை ஒருவரும். பெரும் நிதிநிறுவனப் பங்குதாரர்கள் கூட வாயைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நல்லதொரு Corporate Governance என்பதற்கு ரிலையன்ஸ் நிச்சயமாக மோசமான உதாரணம். ரிலையன்ஸ் இன்ஃபோகாம் முழுவதிலுமே தொடங்கியதிலிருந்து சிறுசிறு மோசடிகள், ஏமாற்றல்கள். ஆனாலும் வாயைப் பொத்திக்கொண்டு இருந்ததால் independent directors மற்றும் நிதிநிறுவனப் பங்குதாரர்கள், தம் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள்.

அனில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பற்றி சில கேள்விகளைக் கேட்டதாகத் தெரிகிறது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் முகேஷின் செல்லப்பிள்ளை. அதனாலும் முகேஷ் கோபம் அடைந்ததாகத் தெரிகிறது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1101535413681995862004-11-27T11:33:00.000+05:302004-11-27T11:33:00.000+05:30பத்ரி,
அருமையான பதிவு, நன்றி,
ஆனாலும் அவர்கள் தங்...பத்ரி,

அருமையான பதிவு, நன்றி,
ஆனாலும் அவர்கள் தங்கள் பிரச்னைகளை உள்ளுக்குள் செட்டில் செய்ய முயற்சித்திருக்கலாம்.
ராஹுல் பஜாஜ் போன்றோர் முயற்சிக்கின்றனர். பார்க்கலாம்.

- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.com