tag:blogger.com,1999:blog-5012938.post6538943236510376360..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-67220467656613294622008-05-05T08:55:00.000+05:302008-05-05T08:55:00.000+05:30வஜ்ரா: தமிழ் வளர்ச்சிக்கும் ஓப்பன் சோர்சுக்கும் நே...வஜ்ரா: தமிழ் வளர்ச்சிக்கும் ஓப்பன் சோர்சுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.

கட்டற்ற மென்பொருள்மூலமே பல நேரங்களில் மென்பொருள் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லமுடியும்.

வணிக அளவில் பெரிய நிறுவனங்கள் பலவும் சந்தை சிறியது என்ற காரணத்தால் சில மொழிகளுக்கான மென்பொருள் உருவாக்குதலில் ஈடுபடமாட்டார்கள். அல்லது ஈடுபடுவதற்கு வெகு நாள்களாகலாம். சிறு மென்பொருள் நிறுவனங்களுக்கு, இந்தத் துறையில் ஈடுபடுவதற்கான ஒழுங்கு, வழிமுறை, திறன் ஆகியவை இல்லாமல் இருக்கலாம். இன்றைய தமிழ் சிறு மென்பொருள் நிறுவனங்களைப் பார்வையிட்டால் நான் சொல்வது என்ன என்று உங்களுக்குத் தெரியும்.

பல கல்வி நிறுவனங்களில் அரசு நிதியில் பல மொழி மென்பொருள் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை பெரும்பாலும் வீணாகப் போகின்றன. எனவே தன்னார்வ மென்பொருள் வல்லுனர்களும் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்களும் ஒன்றுசேர்ந்தால் அதற்கு நல்ல பலன் இருக்கும்.

அப்படி இவர்கள் ஒன்றுசேரும்போது உருவாக்கப்படும் மென்பொருள்கள், சேவைகள், வணிக நோக்குடன் இருக்க சாத்தியம் இல்லை. எனவே ஓப்பன் சோர்சாக இருப்பதற்கே சாத்தியம் அதிகம்.

இப்படித்தான் தமிழ் வளர்ச்சியும் ஓப்பன் சோர்சும் ஒரு புள்ளியில் இணைகின்றன.

ஆனால் சந்தை விரிவடையும்போது வேறு பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69454229617844595242008-05-05T08:50:00.000+05:302008-05-05T08:50:00.000+05:30அறியாமையாலும், அறிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் மட்டும...அறியாமையாலும், அறிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் மட்டுமே இதைக் கேட்ட அனானி நண்பரே:

(1) தமிழ்க் கணிமைக்கு கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, இதுவரையில் மொத்தமாக நான் எந்தப் பங்களிப்பும் அளித்ததில்லை. அளித்ததாகச் சொல்லிக்கொண்டதுமில்லை.

(2) இணையக்கடை, வலைப்பதிவு நடத்துவதால் ஒருவர் தமிழ்க் கணிமைக்குத் தொண்டு செய்ததாக ஆகிவிடாது. என்னைப் பொருத்தமட்டில் இவையெல்லாம் பங்களிப்புகள் அல்ல.

(3) NHM Writer - உருவாக்குதலில் ஈடுபட்டது எங்களது நிறுவனம். தனி மனிதர்களின் பங்கு எப்படியிருந்தாலும் புராகிராமர்களுக்கு டீ போட்டுக் கொடுப்பவர்கள்வரை அனைவரது பங்களிப்பும் அதில் உள்ளது. எனது பங்களிப்பு அதில் கடுகைவிடக் குறைவுதான். அது எங்கள் நிறுவனத்தின் product.

(4) கவலைப்படாதீர்கள்; தமிழ்க் கணிமையை நான்தான் கட்டி எழுப்புகிறேன் என்று எங்கும் அரைகூவி யாருக்கோ வரவிருக்கும் பெயரை நான் தட்டிக்கொண்டுபோக விரும்பவில்லை!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83130547831498937892008-05-05T05:09:00.000+05:302008-05-05T05:09:00.000+05:30//இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைச...//இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார்.//

அறியாமையாலும், அறிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் மட்டுமே இதைக் கேட்கிறேன்.

உங்கள் பதிப்பகத்திற்காக இணையக்கடை தளம் நடத்துகிறீர்கள். இந்த வலைப்பதிவில் எழுதுகிறீர்கள். இவற்றைத் தவிர கடந்த ஆண்டுகளில் தமிழ்க் கணிமைக்கு உங்கள் பிரத்தியேகப் பங்களிப்பு என்ன? NHM Writer உங்கள் முயற்சியா அல்லது திரு நாகராஜனின் முயற்சியா? அதில் உங்கள் பங்கு என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88531247781758303622008-04-30T15:32:00.000+05:302008-04-30T15:32:00.000+05:30தமிழ் வளர்ச்சிக்கும் ஓபன் சோர்ஸ்க்கும் என்ன சம்பந்...தமிழ் வளர்ச்சிக்கும் ஓபன் சோர்ஸ்க்கும் என்ன சம்பந்தம் ?

மொழி வளர்ச்சி கட்டற்ற மற்றும் விண்டோஸ் மேகிண்டோஷ் போன்ற கட்டுள்ள OS களிலும் பல்கிப் பெருகினால் நன்மையடையப் போவது அனைவரும் தானே ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54508852828502281862008-04-29T08:08:00.000+05:302008-04-29T08:08:00.000+05:30பதிவிட்டமைக்கு நன்றி. தொடர்ந்து எடுத்துச் செல்வோம்...பதிவிட்டமைக்கு நன்றி. தொடர்ந்து எடுத்துச் செல்வோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75621138103781943372008-04-28T19:31:00.000+05:302008-04-28T19:31:00.000+05:30அடடா எனக்கு தெரியாம போச்சே! இப்போ திறமூல நிரல்கள் ...அடடா எனக்கு தெரியாம போச்சே! இப்போ திறமூல நிரல்கள் பற்றி ஏதாவது நிகழ்நிலை அறிக்கை மாதிரி ஏதாவது பகிரப்பதட்டதா?Yagnahttps://www.blogger.com/profile/13951274481515958779noreply@blogger.com