Thursday, August 21, 2003
எப்படிச் செய்கிறேன்?
- ஐ.பி.எம்மின் திங்க்பேட் ஆர். 40 மடிக்கணினி, Win XP இல் இயங்குவது.
- Blogger மூலம் இயங்கும் வலைப்பதிவு
- ரிலையன்ஸ் இந்தியா மொபைலின் CDMA எல்.ஜி செல்பேசி, USB இணைப்பான் - இணையத்தில் இணைக்க
- முரசு அஞ்சல் - தமிழ் யூனிகோடை நேரிடையாக உள்ளிட
- கோடக் ஈஸிஷேர் சி.எக்ஸ் 4230 கேமரா - டிஜிடல் படம் எடுக்க
- இர்பான்வியூ என்னும் மென்பொருள் - படத்தை வெட்டி, கோப்பின் இயல்பை மாற்ற
மாநாட்டை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நீங்களும் அவ்வாறே என்று எண்ணுகிறேன்!
நண்பர்களோடு சந்திப்பு

நேற்று இரவு உள்ளூர்க்காரர் மாலனுடன், சிங்கப்பூர் அருண் மகிழ்ணன், நாராயணன், மலேசியா 'முரசு' முத்து நெடுமாறன், சுவிட்சர்லாந்து 'மயிலை' கல்யாணசுந்தரம், யூனிகோடு பற்றிப் போராடும் அமெரிக்கா மணி மணிவண்ணன் ஆகியோரோடு சந்தித்துப் பேசினோம். மணிவண்ணன், நாராயணன் நீங்கலாக மற்றவர் அனைவரும் ஓட்டல் சவேராவின் மால்குடி உணவகத்துக்குச் சென்றோம். அப்பொழுது எடுத்த படம் மேலே. முத்து, அருண், மாலன், நான், கல்யாண் என்று வரிசை. நடக்கவிருக்கும் மாநாடு பற்றியும் மற்ற பல பற்றியும் நிறையப் பேசினோம்.
தமிழ் இணையம் 2003