நெட்ஃபிளிக்ஸில் இரண்டு சீசன் மார்க்கோ போலோ பார்த்தேன். மார்க்கோ போலோ என்று பெயர் இருப்பதால் அந்தப் பாத்திரத்தை மிகப் பிரம்மாண்டமாகக் காட்டவேண்டும் என்று செய்திருக்கிறார்கள். விட்டால், மங்கோலியர்களுக்குக் குதிரை ஏறவும் அம்பு விடவும் சொல்லிக்கொடுத்ததே மார்க்கோ போலோதான் என்று சொல்லியிருப்பார்கள்.
மிக அதிக பொருட்செலவில் பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். வரலாற்றைப் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல இதுபோன்ற சீரியல்கள் உதவும். ஆனால் இதில் தடால் தடாலென்று கலவிக் காட்சிகள் வந்துவிடுகின்றன. இப்படியெல்லாம் சீன்கள் வைத்தும் 200 மில்லியன் டாலர் நஷ்டம் என்று விக்கிபீடியா சொல்கிறது. அதனால் இரண்டு சீசன்களோடு முடித்துவிட்டார்களாம்.
மீண்டும் இந்தத் தொடரைத் தொடர்ந்து எடுத்தார்கள் என்றால் நன்றாக இருக்கும்.