ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். ஜாட்கள் அந்தப் பட்டியலில் இல்லை; பொதுப்பட்டியலில் இருந்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக, பாரதீய ஜனதா கட்சி, ஜாட்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. அதனால் குஜ்ஜார்கள் தங்களுக்கான இடங்கள் குறைந்துவிடும் என்று நினைத்தனர். நீனா வியாஸின் கட்டுரையைப் படித்தால், அதில் பிற்படுத்தப்போருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக நிரப்பப்படவில்லை, நிறைய இடங்கள் பாக்கியுள்ளன என்கிறார்.
As for the 27 per cent OBC quota, on average only 4-5 per cent of the slot was filled. This means there is a very large unused OBC quota, which the Gujjars could use to their advantage as they are already in this category.ஆனால், குஜ்ஜார்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக) வாக்குறுதி அளித்தார். மீண்டும் வியாஸ்:
The figures collected by the Ministry of Personnel, Public Grievances and Pensions are revealing. As on January 1, 2005, the STs filled 4.3 per cent of a 7.5 per cent quota of jobs in the ‘A’ category’ that includes civil service officers and superintendents of police. The OBCs managed only 4.7 per cent of the 27 per cent quota, clearly establishing that there were many more vacancies here if suitable candidates presented themselves.ஆனால் புள்ளிவிவரம் எப்படி இருந்தாலும், குஜ்ஜார்கள் பழங்குடியினர் அந்தஸ்து பெறுவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அங்கே ஏற்கெனவே இருக்கும் 'மீனாக்கள்' இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்கின்றனர்.
மொத்தத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து பலன்களை எப்படிப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனைச் சரியாகக் கையாளாத பாரதீய ஜனதா கட்சி, இந்த நிலைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
இதற்கிடையில் குஜ்ஜார் போராட்டம், வன்னியர் போராட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது வருத்தம் தரத்தக்கது. பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வன்னியர்கள் தமிழகத்தில் போராடியது இன்று பலருக்கு மறந்துபோயிருக்கலாம். மரங்களை வெட்டி நடுச்சாலையில் போடுதல், பேருந்துகளைக் கொளுத்துதல், சாலைகளுக்கு நடுவில் குழிதோண்டுதல், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற அசிங்கமான முறைகளில் அந்தப் போராட்டம் அமைந்தது. அதனை ஏற்காத அன்றைய தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்கு 20%-ம் உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
இன்று குஜ்ஜார்கள் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தெடுக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தை பாதிக்கிறார்கள். பொதுச்சொத்து பற்றி கவலைப்படுவதில்லை. தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதைப் பிற மக்களைப் புரிந்துகொள்ளவைக்கவும் முயற்சி செய்வதில்லை. ‘எனக்கு வேண்டும்; அதனால் தா' அல்லது ‘எனக்குத் தருகிறேன் என்று சொல்லி வாக்கு கொடுத்துவிட்டாய்; எனவே தா' என்றே பேசுகிறார்கள். வன்னியர்களது போராட்டமும் இப்படித்தான் இருந்தது.
இது ஆரோக்கியமான முறை அன்று. முதலில் குஜ்ஜார்கள் தங்களுக்கான தேவை பழங்குடியினர் என்ற அங்கீகாரமா அல்லது வேறு ஏதேனுமா என்று பார்க்கவேண்டும். பழங்குடியினர் என்பதுதான் என்றால் அதனை குடியாட்சி முறைப்படி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். ஆளுக்காள் தண்டவாளத்தைப் பெயர்த்தால் அந்தப் பகுதி வளர்ச்சி பெறாத காட்டுப்பகுதியாகத்தான் இருக்கும்.
இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்களுக்கு இப்போது நடக்கும் போராட்டம் வருத்தம் தரவைக்கும் ஒன்று.