A close reading of the judgment shows that the expression "creamy layer" was used while interpreting Article 16(4), 16(4A), and 16(4B) compendiously and in the process of laying down limitations on the amending power of Parliament in the context of social reservations. The expression used in the judgment in the Nagaraj case is confined to Other Backward Classes (OBCs) and it is not in the context of SCs and STs. It should not be forgotten that the court was interpreting Article 16(4) and 16(4B) as much as it was interpreting 16(4A). The first two apply to OBCs also.நாகராஜ் வழக்கு தீர்ப்பு பற்றிய என் பதிவு. அதில் நான் என்ன சொல்லியிருந்தேன் என்று கொஞ்சம் மேற்கோள்:
The issue of excluding the creamy layer among SCs and STs did not arise for consideration. That issue was already settled in 1992 by a larger bench of nine judges (Indra Sawhney versus Union of India — the `Mandal case,' AIR 1993 SC 447) and also in 2004 by a co-ordinate bench of five judges (E.V. Chinnaiah versus State of Andhra Pradesh and Others, AIR 2005 SC 162) by holding that the concept of creamy layer had no application to SCs and STs. The October 19, 2006 judgment in the Nagaraj case by five judges could not and, in fact, does not derogate from these earlier pronouncements.
இந்த வழக்கின் நோக்கமே மத்திய அரசு கொண்டுவந்திருந்த சில சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்பதைக் கண்டறிவது. இதில் மத்திய அரசுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வந்துள்ளது.விஸ்வநாதன் மேற்கோள் காட்டியிருந்த சின்னையா வழக்கின் தீர்ப்பைப் படித்துப் பார்த்தேன். அந்தத் தீர்ப்பு SC பிரிவை மேலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கக்கூடாது என்றுதான் வலியுறுத்துகிறது.
ஆனால் இதுநாள்வரையில் நடைமுறையில் SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் தவிர்ப்பு என்ற ஒன்று இருந்ததில்லை. 19 அக்டோபர் 2006 தீர்ப்பு இதைப் புதிதாகப் புகுத்தவும் இல்லை. ஆனால் இனி யாரேனும் வழக்கு தொடர்ந்தால், இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு (1992), நாகராஜ் வழக்கின் தீர்ப்பு (19 அக்டோபர் 2006) ஆகியவற்றை வைத்து கிரீமி லேயர் SC/ST பிரிவினருக்கும் செயல்படுத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
ஆந்திரா அரசு SC பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அனைத்து SC சாதியினருக்கும் சமமாகப் போய்ச்சேரவேண்டும் என்ற கருத்தில் SC சாதிகளை நான்காகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் இத்தனை இத்தனை என்று உள் ஒதுக்கீடு செய்திருந்தது. அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பாக ஆந்திர அரசின் சட்டம் செல்லுபடியாகாது, SC பிரிவினர் பலவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரே குழுவாக மட்டுமே கருதக்கூடியவர்கள், அந்த சாதியினருக்குள் பல குழுக்களைப் பிரிக்கக்கூடாது, அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனப்பட்டது.
ஆனால் கிரீமி லேயர் SC பிரிவினருக்குத் தேவையில்லை என்று வெளிப்படையாக சின்னையா வழக்கின் தீர்ப்போ, இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்போ சொல்வதாகத் தெரியவில்லை. அதே சமயம் நாகராஜ் வழக்கும்கூட SC பிரிவினருக்கு கிரீமி லேயர் அவசியம் தேவை என்றும் சொல்லவில்லை.
எனவே இப்பொழுதைய நிலையில் அரசு SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் ஏதும் இல்லாமல் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி வரலாம். நாளை ஏதேனும் வழக்குகள் தொடுக்கப்பட்டால் அப்பொழுது எதிர்வினை ஆற்றலாம் என்று நினைக்கிறேன்.
http://marchoflaw.blogspot.com/2006/12/6.html
ReplyDelete