நேற்றே இந்தத் தகவல் கிடைத்தது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இன்று தினசரிகளில் வந்துவிட்டது.
நாகர்கோவிலைச் சேர்ந்த நீல பத்மநாபனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி இலக்கிய விருது கிடைத்துள்ளது. அவரது இலையுதிர் காலம் என்ற நாவலுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
நீல பத்மநாபனது இரண்டு மிக முக்கியமான, அதிகமாகப் பேசப்பட்ட நாவல்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்ற எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தேடிக்கொண்டிருந்த சமயம், ஏதோ காரணத்தால் இவருக்கு ஏற்கெனவே சாகித்ய அகாதெமி கிடைத்திருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் இதுவரையில் கிடைக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது! இவருடைய பள்ளிகொண்டபுரம் என்ற நாவலின் ஆங்கில வடிவத்தை Where The Lord Sleeps என்று பதிப்பித்துள்ளோம்.
நீல பத்மநாபன் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதும் திறன் வாய்ந்தவர். இவரது சில சிறுகதைகளை விரைவில் மலையாளத்தில் வெளியிட உள்ளோம்.
நீல பத்மநாபனுக்கு வாழ்த்துகள்!
முந்தைய பதிவுகள்:
சாகித்ய அகாதெமி விருதுகள் - 2005
ஈரோடு தமிழன்பனுக்கு சாகித்ய அகாதெமி 2004
வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதெமி 2003
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
இம்மாதிரியான விருதுகள் வயது முதிர்த்த பின் கொடுப்பதை விடவும் இளம் வயதில் கொடுத்தால் இளம் எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பது போலிருக்கும்.
ReplyDeleteநன்றி
நாஞ்சில் நாட்டிற்கு இது இரண்டாவது
ReplyDeleteசாகித்ய அகாதெமி விருது என நினைக்கிறேன். முன்பு திரு. பொன்னீலன்.
இன்று திரு. நீலபத்துமநாபன்.
மிக்க மகிழ்ச்சி.
நாஞ்சில் பீற்றர்
www.thirukkural2005.org