1980-கள் இறுதியில் இணையத்தில் Usenet Newsgroups என்று ஒன்று கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. அப்போது soc.culture.indian என்ற குழு மிகவும் பிரபலமானது. இப்போது இணையத்தில், வலைப்பதிவுகளில் காணப்படும் அத்தனை சண்டைகளும் அதில் அப்போதே நடந்தன. இன்று வலைப்பதிவுகளில் தென்படும் அருமையான, அற்புதமான எழுத்துகளும் அபூர்வமாகத் தென்பட்டன.
அப்படி எழுதக்கூடிய ஒருவராக ரமேஷ் மஹாதேவன் இருந்தார். இன்றும் கூகிள் குரூப்ஸ் வழியாகத் தேடிப்பார்த்தால் அவர் எழுதியது உங்களுக்குக் கிடைக்கும். அவர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாகவும் இணையத்தில் சில இடங்களில் கிடைக்கலாம். அஜய் பால்வாயண்டீஸ்வரன் என்று அவர் உருவாக்கிய பாத்திரம், பத்திரிகைகளில் மட்டும் கதைகளாக வந்திருந்தால், துப்பறியும் சாம்பு பாத்திரத்துக்கு இணையாகப் பிரபலமாகியிருக்கும். சென்னைக்கு திரும்பிய அவர், இப்போது SSN பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார்.
கர்நாடக இசை பற்றிய ஓர் அறிமுகப் புத்தகத்தை, A gentle introduction to Carnatic Music என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். எளிமையாக, ராகம், தாளம், மேற்கத்திய செவ்வியல் இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடு என்று ஒன்றுமே தெரியாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில், எழுதப்பட்டுள்ளது. 100 பக்கத்துக்கு உள்ளாக இருக்கும் இந்தப் புத்தகம், Oxygen Books பதிப்பாக வெளியாகியுள்ளது. விலை ரூ. 100/-
சென்னை இசைக் கச்சேரி சீசன் ஆரம்பமாகும் நிலையில் இதை வாங்கிப் படித்துப் பலரும் பயன்பெறுவர் என்று நம்புகிறேன்.
அடுத்து... இந்தப் புத்தகத்தை விரைவாகத் தமிழில் கொண்டுவர விரும்புகிறோம். கர்நாடக இசை தெரிந்த, நல்ல தமிழில் மொழிபெயர்க்கக்கூடியவராக இருந்தால் நல்லது. நீங்கள் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மனநோய்…
5 hours ago
Badri,
ReplyDeleteI am a big fan of Ramesh Mahadevan's writings. Ramesh's articales are available at this link.
http://www.image-in-asian.com/ramesh_m/
Hi,
ReplyDeleteI have read his article on Introduction to carnatic Music ( I downloaded it few year back from internet). It's really worth reading.
here some of the audio lessons
http://www.ecse.rpi.edu/Homepages/shivkuma/personal/music/varnams/index.html
Badri,
ReplyDeleteVeeyesvee (vikatan) could be a good fit to do the tamil version.
Regards,
Nataraj
RP Rajanayahem can be tried.
ReplyDeleteவசதி செய்துகொடுத்தால் ராஜநாயஹம் செய்யமுடியும் என்று நானும் நினைக்கிறேன்.
ReplyDeleteகிருஷ்ணமூர்த்தி
பத்ரி, ராம் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்பது எனது எண்ணம். கர்நாடக சங்கீதத்தை எளிமையாக மரத்தடி குழுமத்தில் விளக்கிக்கொண்டு இருந்தவர். உங்களுக்கு அவரை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநல்ல முயற்சி. இது தமிழிலும் அவசியம் கொண்டு வரப்பட வேண்டும். பண்டிதர்கள் ஒளித்து வைத்துள்ள விஷயங்களுள் கர்நாடக சங்கீதமும் ஒன்று. இது குறித்த அறிவு பரவலாக்கப்படுவது சமகாலத்து அவசியங்களுள் ஒன்று. இதனால் அரைவேக்காடாக உருவாக்கப்படும் திரையிசைப்பாடல்கள் குறித்த தெளிவு வெகுஜனத்திடம் ஏற்படக்கூடும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteI'm a big fan of Ramesh Mahadevan. Really glad that his writings have come out as a book. Can't wait to grab my copy. Kudos to NHM!
ReplyDeleteLalitha Ram
அப்படியே தமிழ் இசை பற்றிய புத்தகம் ஒன்றையும் விரைவில் கொண்டுவந்து விடுங்கள். இல்லாவிட்டால், கர்நாடக சங்கீதம் பற்றிய புத்தகத்தை வெளியிட்ட உங்களை ஜாதியைச் சொல்லித் திட்டிவிடுவார்கள்.
ReplyDeleteமொழிமாற்றல் வேலை ஆரம்பமாகிவிட்டது. முடிந்தால் ஒரு மாதத்துக்கு உள்ளாக - சங்கீத சீசனுக்கு முன்னதாக இந்தப் புத்தகத்தைத் தமிழிலும் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பிக்கை. பார்ப்போம்.
ReplyDeleteரெங்கதுரை: தமிழிசை பற்றி எளிய அறிமுகத்தை யாராவது எழுதிக் கொடுத்தால் நிச்சயம் பதிப்பிக்கும் எண்ணம் உண்டு. அதேபோல இந்துஸ்தானி இசை பற்றியும் ஒரு புத்தகம், மேற்கத்திய செவ்வியல் இசை பற்றியும் ஒரு புத்தகம் போடவேண்டும்.
Dear Badri,
ReplyDeleteHave you thought of asking Rajan Parrikar to write an english version for Hindustani Music?
http://www.parrikar.org/
With Regards
Narasimhan