Thursday, November 25, 2010

நிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள்

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மிக அதிகமான அளவில் வளர்ச்சி நடந்திருந்தது என்றால் அது பிகார்தான்.

அதன் காரணமாகவே, மைக்கைப் பிடித்து அடித்து அசத்திப் பேசத் தெரியாத நிதீஷ் குமார் + பாஜக கூட்டணி அபார அளவில் வெற்றிபெற்று பிகாரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வெற்றிக்குக் காரணமாக அனைவரும் சொல்வது: சட்டம் ஒழுங்கை நேர்ப்படுத்தினார்; சாலைகளைப் போட்டார்; ஊழலை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்; கல்விக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டது.

சரியாக, ஐந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு

இரண்டு தேர்தல்களுக்குமுன் நடந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் கூட்டணிக்கு சரியாக மேண்டேட் கிடைக்கவில்லை. நிதீஷ் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ஆட்சியை அமைத்தார். ஆனால் காங்கிரஸ் தன் டகால்டி வேலைகளைச் செய்து மாஸ்கோவில் இருக்கும் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கையெழுத்து வாங்கி அந்த ஆட்சியைக் கலைத்தது. தொடர்ந்து நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் + பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.

நிதீஷுக்கும் பாஜகவினருக்கும் உரசல்கள் இருந்தாலும், ஆட்சி நடத்துவதில் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால் ஒன்றுமே இல்லாத இடத்தில் சில முன்னேற்றங்களைக் காட்டுவது எளிது. வரும் ஐந்தாண்டுகளில் நிதீஷ் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் சவாலே. இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட தென் மாநிலங்கள் அளவுக்கு வளர்ச்சியைக் காண்பிக்கவேண்டி இருக்கும். அதற்குத் தேவையான மனித வளம் அவர்களிடம் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் பிகாரிகள் அனைவரும் அந்த மாநிலத்துக்குச் சென்றால்கூட இது மிகவும் கடினமானது.

பார்ப்போம், என்ன செய்கிறார்கள் என்று.

***

காங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே. நிதீஷ் குமாரின் யோசனையைக் கேட்டு ராகுல் காந்தி ஒன்று செய்யவேண்டும். பேசாமல் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, அடுத்த மாநிலத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்வைத்து பிரசாரத்தை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அவரும் காங்கிரஸும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தை ஆட்சி செய்து, பிரச்னைகளைச் சமாளித்து, வளர்ச்சியைக் கொண்டுவந்தால், இந்தியப் பிரதமராக அவரை நினைத்துப்பார்ப்பதில் பெரும்பாலானோருக்கு சிக்கல் இருக்காது.

***

ஆந்திராவுக்கு அற்புதமான முதல்வர் கிடைத்துள்ளார். இன்று தொலைக்காட்சியைப் பார்க்கும்போது எல்லாக் கேள்விகளுக்கும் ‘மேலிடத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பேன்’ என்று காங்கிரஸ் முதல்வர்களிடம் எதிர்பார்க்கப்படும் பதிலை அழகாகச் சொன்னார்.

அவரது பெயர் - மற்றுமொரு ரெட்டி. கிரன் குமார் ரெட்டி. துணை முதல்வராக கீதா ரெட்டி என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிறார்கள். ராயலசீமா ரெட்டி முதல்வர், தெலுங்கானா ரெட்டி துணை முதல்வர். பழைய ரெட்டியின் கோபம்கொண்ட மகன் ரெட்டி, பிரதான வில்லன். இதுதாண்டா ரத்த சரித்திரம்!

***

யெட்டியூரப்பா நகரில் இன்று ஒருநாள் இருக்கிறேன். அவருக்கு வெட்கம் சுத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல; நிறைய chutzpah-வும் உள்ளது. (தமிழில் என்ன சொல்லலாம்? தில்லு?!) ஊழலை எதிர்க்கட்சிகள்மீதே திருப்பிவிடுகிறேன் என்கிறார். அப்படியென்றால் என்ன என்று புரியவில்லை. இப்போது நடந்துகொண்டிருப்பது, கர்நாடகத்துக்கு நல்லதல்ல.

***

அடுத்த உ.பி தேர்தல்(கள்) இரண்டுமே ருசிகரமானவை. ஒன்று உத்தரப் பிரதேசத் தேர்தல். மற்றொன்று உடன் பிறப்பு(கள்) தேர்தல். தமிழக உடன் பிறப்புகள், உடன் பிறவாச் சகோதரிகள் என இன்னும் நான்கு மாதத்தில் படு குழப்பமான நிலையை தமிழகம் அடையப்போகிறது. திமுக விரைவாக உள்கட்சிப் பிரச்னையை முடித்தாகவேண்டும். ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தச் சிக்கலுக்குத் தீர்வே இல்லை என்று தோன்றுகிறது. ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி - மாறன்(சன் டிவி) - கருணாநிதி என்ற இந்த ஈக்வேஷன் எப்படி செட்டில் ஆகும்? யார் யாரைத் துரத்தப் போகிறார்கள்?

யாதவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

14 comments:

  1. Hello Badri,

    I saw your old post on Bihar. Can you let us know the similar data for Tamilndau , with respect to where are we in development and which area we need to improve ( letter to To the Government)

    I am following your blogs regulary and get to know more details about variuos areas. Good Job and Good Luck.

    Thanks,
    Seenivasan
    Bangalore

    ReplyDelete
  2. hi Badri, re:Karnataka scenario, BJP just reaffirms that it is no different from Congress when it comes to morality in politics.

    ReplyDelete
  3. Mr.Badri,

    What is your view on Gujarat state's development?
    If you are to rank all the states of India for quality of Governance and growth,which would you put as the first three and which the last three ranks?

    Thanks in anticipation

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நிதிஷ். தமிழகம் வந்து சென்ற குஜராத் முதல்வர் மோடி யை பற்றி ஏன் பத்ரி கலைஞர் போல நீங்களும் பதிவில் இருந்து புறக்கணித்து விட்டீர்கள்? எல்லா வற்றிற்கும் கேள்வி பதில் பணியில் பதில் அளிக்கும் முதல்வர், மோடி சொன்ன 24 மணிநேரமும் தடை இல்லாமல் மின்சாரத்தை தருவதாக சொன்னதை பற்றி மௌனம் சாதிப்பது ஏன்?

    உங்கள் பார்வையில் மோடி + குஜராத் மாநிலத்தின் முந்தைய நிலை மற்றும் இன்றைய நிலை, நாளைய குஜராத் பற்றி ஒரு பதிவு வருமா?

    ReplyDelete
  5. மௌனம் சாதிப்பது ஏன்?

    ReplyDelete
  6. நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி இருவரையும் சொல்ல வேண்டிய இடத்தில் நிதீஷ் குமார் + பா.ஜ.க என்றால் நன்றாக இல்லை.

    நிதீஷ் தான் எல்லாமே என்பது மாதிரி காங்கிரஸ் பின்புறத்தை நக்கும் மீடியா சேனலகள் பிரச்சாரம் செய்கின்றன.

    ReplyDelete
  7. bihar is the new karnataka and karnataka is the new bihar. quipped a twitter.!

    ReplyDelete
  8. திரு . சரண் அவர்களுக்கு குஜராத் வரும் காலத்தில் இந்தியாவின் மிக சிறந்த மாநிலமாகவும், உலக அரசியவாதிகளுக்கு திரு. மோடி அவர்கள் மிக சிறந்த வாழும் உதாரணமாக இருக்க போகிறார்

    ReplyDelete
  9. இந்த ஈக்வேஷன் எப்படி செட்டில் ஆகும்? யார் யாரைத் துரத்தப் போகிறார்கள்?

    யாதவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்

    -------------------------------------------
    சூப்பர் உதாரணம் !! ஆனால், இந்த கேப்பில், அம்மா உள்ளே வந்தாலும் கூட, (சூப்பர் ஸ்டார் 1995 -இல் ஏர்போர்ட்-இல் சொன்னது போல) தமிழ் நாட்டை, அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது :(

    ReplyDelete
  10. இந்தியாவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகமானால், பா.ஜ.க அல்லது பா.ஜ.க கூட்டணி தான் வெற்றி பெருகிறது. வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்தால் தான் காங்கிரஸ் வருகிறது. இதை கவனித்தீர்களா ?

    ReplyDelete
  11. 2ஜியோடு ஒப்பிட்டால் யெட்டியூரப்பா செய்தது ஊழலே கிடையாது. நம்மூர் எம்.எல்.ஏக்கள் செய்வதைவிடக் கம்மியாகத்தான் செய்திருக்கிறார். ஆனால், ஆஊ என்று ஆர்ப்பாட்டம் அவருக்குத்தான் அதிகம் !!

    ReplyDelete
  12. நிதீஷ் குமார்-+பாஜக கூட்டனி வெற்றி எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. மோடி,நிதீஷ் இவர்களிடம் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை அடையாளம் மக்கள் கண்டிருக்கிறார்கள்

    நிறைய் திறமைசாலிகள் கைகளில் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவோம்

    ReplyDelete
  13. யாதவர்கள் இருக்கும் வரை நன்றாக, எல்லாம் செய்தார்கள். இருக்கும் போது நன்மையே செய்யாதவர்களுடன் ஒப்பிட முடியுமா!

    ReplyDelete
  14. அவர்கள் நரேந்திர மோதி, சுஷீல் குமார் மோதி : இருவரும் "மோடி" அல்ல. ஆங்கில எழுத்தால் மொழி அழிவது போதாதா, பெயர்களும் மாற வேண்டுமா?

    முன்னேற்றத்திற்கு ஒரு மிக சிறிய பகுதி வாக்கு அளித்திருக்கலாம். நிதீஷ், பஸ்வான் ஜாதியை தவிற மற்ற ஷெட்யூல்ட் ஜாதிகளுக்கு மகாதலித் என்று பெயர் சூட்டி நிதி உதவிகள் செய்ததும், சில முஸ்லிம் பிரிவுகளுக்கு பஸ்மாண்டா முஸ்லிம் என்று பெயர் சூட்டி நிதி உதவிகள் செய்ததும், பெரும்பான்மை பெற்றுள்ளார். வாக்கு பெரும்பான்மை அல்ல், சீட்டு பெரும்பான்மை தான். 40% வாக்கு தான் கிடைத்தது. பஸ்வான் ஜாதி மக்கள் ராம் விலாஸ் பஸ்வானுக்கும், யாதவர்கள்
    லாலுவிற்கும் வாக்களித்துள்ளனர்.

    35.3% வாங்கிய சோனியா 206 சீட்டுகள் பெற்று இத்தாலிய திராவிட பாரத மாதாவாக கும்பிடபடுவதும் 35.1% வாங்கிய அத்வானி 120 சீட்டுகள் பெற்று தன் கட்சியாலும், காங்கிரஸ் /அம்பானி/ டாடா லுவின்ஸ்கிகளாக அம்பலபடுத்த்ப்பட்ட பத்திரிகை பாரிஸ் ஹில்டன்களாலும் கேவலப்படுத்தபட்டது போலத்தான்.
    தங்களை தாங்களே ஏமாற்றிகொள்பவர், அதை தொடரலாம்.
    - R Gopu

    ReplyDelete