Sunday, June 26, 2011

ஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா

26 ஜூன் 2011 அன்று ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்குப் பின்புறம், இலங்கைத் தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. சில படங்கள் இங்கே:












பெரும்பாலான கோஷங்கள் ‘பிரபாகரன் இறந்தார் என்பதை நம்பமாட்டோம்’ என்றன. ‘மறக்கமாட்டோம் மறக்கமாட்டோம், ஈழப் படுகொலையை மறக்கமாட்டோம்’ என்றன சில. ஐந்தாம் ஈழப்போர் நடக்கும், அதில் ஈழத்தைப் பெறுவோம் என்று சில கோஷங்கள். இந்தியாவையும் மன்மோகன் சிங்கையும் திட்டும் கோஷங்கள் சில. ராஜபக்ஷேவைத் தூக்கில் போடச் சொல்லி சில கோஷங்கள்.

ஓரிடத்தில் ஒருவர், சிங்களவர்கள் வெறும் 1.5 கோடி பேர்தான், தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்றார். சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும்போதே மற்றொரு பேரினவாதத்தைத் தாண் பேசுவதை அவர் புரிந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை.

கண் பார்வை இல்லாத ஒருவர் கையில் தட்டி ஒன்றை ஏந்தி வந்திருந்தார். ஓரிருவர் ஊன்றுகோல் துணையுடன் வந்திருந்தனர்.

எங்கு பார்த்தாலும் ‘நாம் தமிழர்’ புலிக்கொடி பொறித்த வாகனங்கள் இருந்தன. காவலர்கள் அதிகம் இல்லை. அவர்கள் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு சிறு சிறு கூட்டமாக, வட்டமாகக் கூடி கோஷங்கள் சொல்லியபடி இருந்தனர். மழை அவர்களைக் கலைத்துவிட்டது.

நிறைய ஊடக நண்பர்களைப் பார்த்தேன். நாளை பத்திரிகைகளில் நிறையப் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். தொலைக்காட்சியிலும்தான்.

15 comments:

  1. நாம் தமிழர் ஏற்பாடு செய்ததா? பிறகு ஏன் இவ்வளவு நாட்கள் மே 17 இயக்கம் என்று விளம்பரப்படுத்தினார்கள்?

    ReplyDelete
  2. ஈழம் தொலைவில் இல்லை..

    ReplyDelete
  3. மொத்தம் எழுபது அமைப்புகள் பங்கேற்றன.

    ReplyDelete
  4. // ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில்//
    // மழை அவர்களைக் கலைத்துவிட்டது.//


    அப்படியா?

    பத்திரிகையாளர் என்றால் தவறான தகவல்களை அளிக்கவேண்டும் என்பது அடிப்படை விதியா?

    //பெரும்பாலான கோஷங்கள்//

    சில நிமிடங்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். :-)

    ReplyDelete
  5. I have participated in the event.

    pls check this site.

    http://marumozhi.net/indexnew/home/?p=28

    by
    Kanian

    ReplyDelete
  6. மழை வந்து கலைத்துவிட்டது.. நிகழ்வு முடிந்து நாடகம் நடந்த பொழுது, அதாவது ஒரு 45 நிமிட நாடகம் நடந்த பொழுது மழை கிட்டத்தட்ட 15 நிமிடம் பெய்தது. இந்த நாடகத்தை பற்றிய தகவலை அனைவருக்கும் தெரிவிக்க இயலவில்லை ஆனால் அப்பொழுது குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அசையாமல் அங்கு நின்று நாடகத்தை பார்த்தனர்.. அநேகமாக இந்த பதிவர் சரக்கை உள்ளே விட்டுவிட்டு மெரினாவுக்கு வந்திருக்க வேண்டும்.. மேலும் கொடிகள் இருந்த வாகனங்கள் நிகழ்வு நடந்த இடத்தில் இல்லை மெரினாவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே இருந்தது.. அங்கும் வைக்க கூடாது என்றால் பதிவர் அவர் வீட்டை கொடுத்து உதவினால் அடுத்த முறை அவர் வீட்டில் நிறுத்திவிட்டு வர சொல்லலாம அனைத்து கட்சி தோழர்களையும்..

    ReplyDelete
  7. //நாம் தமிழர் ஏற்பாடு செய்ததா? பிறகு ஏன் இவ்வளவு நாட்கள் மே 17 இயக்கம் என்று விளம்பரப்படுத்தினார்கள்?// அனைவரும் இணைந்து நடத்திய நிகழ்வு தோழர்.. இந்த சிண்டு முடிவது வேண்டாம்.. நிகழ்வின் துண்டறிக்கையில் கூறியது தான் சாதி, மத, கட்சி பேதங்களை தாண்டிய கூட்டம் இது.. அனைவரும் விளம்பரபடுத்தி பேனர் வைத்தோம் போஸ்டர் அடித்தோம் உங்கள் மூளைக்கு அது புரியவில்லை... இல்லை எட்டவில்லை போலும்... இது தமிழர்களின் நிகழ்வு...

    ReplyDelete
  8. தவறான தகவல்களை கொடுத்து உள்ளீர்கள் தெரிந்து
    செய்ய பட்டு இருந்தால் அநியாயம்...!

    ReplyDelete
  9. மிகவும் தவறான செய்தி ! நல்ல நோக்கத்துடன் நடத்தப்பட்ட நிகழ்வை , இப்படி எழுதுவது தவறு. திருத்திக்கொள்ளுங்கள்.ஒரு நண்பர் நாடகம் என்று எண்ணுகிறார் , அவருக்கு புரிதல் இல்லை , 1௦௦௦௦௦ க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டோருக்கு நிகழ்த்தப்பட்ட அஞ்சலியை அப்படி கூறாதீர்கள் சகோதரே!

    ReplyDelete
  10. hi all,

    please read this link

    http://kumarikantam.blogspot.com/

    kanian

    ReplyDelete
  11. nadantha nikazhvai nadiththu kaattinaarkal.appadiththane solla varukireerkal raasaa! mazhai iru murai kurukkittathu.perumpakuthi makkal kalaiyaavillai 9 mani varai!

    ReplyDelete
  12. சிங்களவர்கள் வெறும் 1.5 கோடி பேர்தான், தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்றார். சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும்போதே மற்றொரு பேரினவாதத்தைத் தாண் பேசுவதை அவர் புரிந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை............ ஏங்க உங்க வீட்டுல பத்து ஆண்கள் இருக்கும் சமயம் ஒரு எளியவரை அடித்து விட்டு போகும் 3 பேர் ... அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள் இத்தனை பேர் இருந்து என்னத்த பிடுங்கினீர்கள் என்று தானே கேட்பீர்கள். அது எப்படி இனவாதமா...? இல்லை குடும்ப பாசமா.. அந்த நிகழ்வை மட்டும் எப்படி வரையறை செய்வீர்கள்....? தயை கூர்ந்து பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  13. பதிவர்கள் அனைவருக்கும் தெரியும் திருமுருகனின் மே பதினேழு இயக்கம் முன்னேற்பாடு செய்த நிகழ்வென்று நீங்கள் தெரிந்தே நடிக்கிறீர்களா..? அல்லது தெரியாமல் நடிக்கிறீர்களா...?

    ReplyDelete
  14. http://ibnlive.in.com/news/huge-support-for-eelam-at-candle-light-vigil/162890-60-120.html

    kanian

    ReplyDelete
  15. நீங்கள் தெரிவித்த உண்மைகளை தான் தான் சில இலங்கை நண்பர்களும் எனக்கு தெரிவித்தார்கள். நண்பர் கும்மியின் நல்ல மனதுக்காக எதுவும் கூற விரும்பவில்லை.தகவலுக்கு நன்றி.

    ReplyDelete