Wednesday, January 23, 2013

சென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட்டியல்

இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. நேற்றைய நிலவரத்தின்படி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ. மேலே உள்ளது அதிகம் விற்றுள்ளது. கீழே செல்லச் செல்ல விற்பனை எண்ணிக்கை குறைவு. இந்தப் பட்டியலில் இன்றைக்குப் பிறகு சில மாறுதல்கள் இருக்கலாம். நாங்கள் வாங்கி விற்கும் பிறர் பதிப்புத்துள்ள புத்தகங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.

இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.
  1. கிமு கிபி
  2. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
  3. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்
  4. பிரபல கொலை வழக்குகள்
  5. மோட்டார் சைக்கிள் டைரி
  6. ராஜராஜ சோழன்
  7. ஸீரோ டிகிரி
  8. ஜாலியா தமிழ் இலக்கணம்
  9. திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
  10. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  11. ஜப்பான்
  12. அக்பர்
  13. சே குவேரா: வேண்டும் விடுதலை
  14. ஹிட்லர்
  15. கோணல் பக்கங்கள் - பாகம் 1
  16. இட்லியாக இருங்கள்
  17. இரண்டாம் உலகப் போர்
  18. முதல் உலகப் போர்

19 comments:

  1. சாரு வின் 2புத்தகங்கள்

    ஜெமோ புக் நீங்கள் விற்பது இல்லையா

    ReplyDelete
  2. How do you estimate your sales this year ? poorer than last year ?

    ReplyDelete
    Replies
    1. We will end up making less than last year. My guess is at least 10% down, maybe a bit more down. Depends on today's sale. I will write a note next explaining what I think hurt us in terms of sales. My guess is almost all others would have done lower than their previous year sales.

      Delete
  3. சாருவின் புத்தகங்கள் இரண்டு இடம்பெற்றதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. Happy to know that Charu's two books also in this list.

    ReplyDelete
  5. நல்ல தகவல்.. சாருவின் புத்தகங்கள் இரண்டு இடம்பெற்றதில் எக்‌ஷ்ட்ரா மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. Is it possible tell in terms of number ? How many number of books sold for the top 10 ?

    ReplyDelete
  7. I never had idea whats the top seller in Chennai Book Fair. At least you have informed from your publication. Similarly we never knew how much each top seller sold in CBF?

    ReplyDelete
  8. ஐயகோ, கைக்காசு பப்ளிகேஷன்ஸ் ப்ராக்ஸீ வைத்து வாங்கியும் ‘அந்த’ புத்தகம் லிஸ்ட்டில் வரவில்லையா?

    ReplyDelete
  9. பேஸ்புக் கில் நண்பர்கள்
    பகிர்ந்த பட்டியல் படி தஞ்சை பிரகாஷின் புத்தகங்கள் தான் டாப் செல்லர்
    முதல் மூன்று இடங்கள் பிடித்து இருக்க வேண்டும்.

    கிழக்கில் தஞ்சை பிரகாஷ் புத்தகங்களும் விற்பனை செய்ய வில்லையோ .
    அத்துனை பேஸ்புக் பயனார்களின் பட்டியலிலும் தஞ்சை பிரகாஷ் பெயர் தவறாது இருந்தது

    ReplyDelete
  10. "கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ".

    ReplyDelete
  11. இதில் முக்கால்வாசி வரலாற்றுப் புத்தகங்கள். ஏறக்குறைய மீதி எல்லாமே அரசியல் புத்தகங்கள். 18 ல் 2 மட்டுமே புனைகதைகள். எனக்கென்ன தோன்றுகிறது என்றால் இலக்கியம், இலக்கியம் தொடர்பான புத்தகங்களுக்காக ஒரு பிரத்யேகக் கண்காட்சியை சில மாதங்கள் கழித்து ஏற்பாடு செய்யலாம். அதில் ஆன்மீகம், மதம், வாஸ்து, சமையல், வரலாற்றுச் சுவடுகள், கொலைக் கேஸ் புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்கள், மல்டிமீடியா சிடிகள், நுழைவு தேர்வு கைடுகள், டெல்லி அப்பளம் போன்றவற்றுக்கு அனுமதி இருக்கக் கூடாது (அதற்காக இந்தப் புத்தகங்களைப் படிப்பது தவறு என்று சொல்லவில்லை). இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு ஃபோகஸ் கிடைக்கும்.

    கண்காட்சி நடக்கும் இடத்திலிருந்து பார்க்கிங் தூரம் என்று பலர் குறிப்பிட்டிருந்தார்கள். அதுவரை எத்தனை புத்தகங்களைச் சுமந்துகொண்டு நடக்க முடியும்? பத்து வரலாறு, அரசியல் புத்தகங்களை வாங்குபவர் இரண்டு நாவல்களை வாங்க விரும்பினாலும் சுமையை எண்ணியே விட்டுவிடக் கூடும். ஒரு தனிக் கண்காட்சி இலக்கிய விற்பனையை அதிகரிக்கலாம். எப்படியும் ஒரு ஹாலுக்குள் நடத்துகிற அளவில்தான் இருக்கும் என்பதால் நிதானமாக எல்லாக் கடைகளையும் பார்த்து புத்தகங்களைத் தேர்வு செய்ய முடியும்.

    சரவணன்

    ReplyDelete
  12. சாருவின் புத்தகங்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி...அதிலும் ஸீரோடிகிரியால் இரட்டிப்பு மகிழ்ச்சி

    ReplyDelete
  13. IT IS NO WONDER MODI'S GUJARAT SOLD MORE NUMBER OF COPIES
    AS MOST PEOPLE WANT TAMILNADU TO BECOME ANOTHER GUJARAT.
    BUT HERE PEOPLE ARE LAZY AND WANT TO MAKE QUICK MONEY
    THRO' REAL ESTATE AND NOT READY FOR HARD WORK LIKE GUJARATIS.
    REALLY MODI IS A HERO NOT ONLY FOR GUJARAT, MAY BE FOR INDIA
    TOO IN 2014 ONWARDS.

    ReplyDelete
  14. இதன் மூலம் தாங்கள் விடுக்கும் செய்தியை புரிந்து கொண்டோம்,எண்ணிக்கையை சொல்ல வேண்டாம், சொன்னாலும் வம்பு என்பதையும் அறிந்து கொண்டோம்.சாரு கிழக்கு/உங்களைப் பாராட்டி எழுதிவிடுவார், அதில் ஒரு எண்ணிக்கையை எழுதிவிடுவார்.இதில் முன்பு பெஸ்ட் செல்லர்/சூப்பர் செல்லர் என்று சொல்லப்பட்ட கிழக்கால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பல இல்லை.அவை அச்சில் இல்லையா, இல்லை அவற்றின் விற்பனை முன்பு போல் விறுவிறுப்பாக இல்லையா.

    ReplyDelete
  15. நீங்கள் விற்பனை உரிமை பெற்ற சின்மயி புத்தகத்தின் விற்பனை எப்படி இருந்தது

    ReplyDelete
  16. கிழக்கு ஸ்டால்களின் இட அமைப்பும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். நிறைய 'டொக்கு' ஸ்டால்கள் கார்னர் இடத்தைப் பிடித்திருந்தன. உங்களின் மூன்றில் ஒன்றான 'இ-ரீடர்' நிறைய பேருடைய கவனத்தைக் கவர்ந்ததற்குக் கூட 'கார்னர்' ஒரு காரணம். இடங்கள் எப்படி பிடிக்கப்படுகின்றன.. குலுக்கல் முறையிலா?

    அ. சரவணன்.

    ReplyDelete