ஆங்கிலம், தமிழ் மொழிகளில் புத்தகங்களை லே-அவுட் செய்ய, அதுவும் முக்கியமாக கணிதச் சமன்பாடுகளை டைப் அடிக்கத் தெரிந்தவர்கள், பாடப் புத்தகங்களை லே-அவுட் செய்யத் தெரிந்தவர்கள் தேவை. முழு நேர வேலை அல்ல; பகுதி நேர, ப்ராஜெக்ட் வேலைதான். அடோபி இன்-டிசைன், அடோபி பேஜ்மேக்கர் மென்பொருள்களைப் பயன்படுத்திச் செய்யவேண்டிய வேலை. வீட்டிலேயே கணினி வைத்திருக்கவேண்டும்; இந்த மென்பொருள்களையும் வைத்திருக்கவேண்டும்.
செய்யத் தெரிந்தோர், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக vaidehi@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள்.
செய்யத் தெரிந்தோர், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக vaidehi@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள்.
எனக்குத் தெரிந்தவரை பேஜ் மேக்கர் காலாவதியாகிப் பல காலம் ஆகிறது, இன் டிசைன் புதிய வெர்ஷன்கள் வந்தபடியே இருக்கின்றன. யானை விலை! வீட்டில் ஃப்ரீ லான்ஸ் ஆக வைத்திருப்பவர்கள் பொதுவாக பழைய வெர்ஷன்களை, அதிலும் முறையான லைசன்ஸ் இல்லாத தொகுப்புகளையே பெரும்பாலும் வைத்திருப்பார்கள். இவற்றில் ஒரு முறை டைப்செட் செய்துவிட்டீர்கள் என்றால் அதை அடுத்த எடிஷன் கொண்டுவருகையில் சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உண்டு - அதாவது அந்த வெர்ஷன் காலாவதியாகியிருக்கும், புதிய தொகுப்பு உள்ள கணினியில் திறந்தால் அதில் பல குழப்பங்களும், சிரமங்களும் உண்டாகும்.
ReplyDeleteஃப்ரீ லான்சர்களிடம் வேர்ட் ஃபைலாக அடித்து வாங்கிக்கொண்டு (கணித சமன்பாடுகளுக்கு மேத்டைப் போதும்) இன் டிசைன் வேலையை சற்று பெரிய நிறுவனத்திடம் (சென்னையில் இவை ஏராளம்), இன் டிசைன் லைசன்ஸ்டு காப்பி வைத்திருப்பவர்களிடம் ஒப்படைப்பதே நல்லது. முதலில் சற்று கூடுதல் செலவானாலும், நீண்ட கால நோக்கில் (அடுத்த அச்சு, பதிப்பு) கால விரையத்தையும், பொருள் விரையத்தையும் தவிர்க்கும்.
ஏதோ என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
சரவணன்