கிழக்கு பதிப்பகம், 31/5/2014 அன்று சென்னையில் ஒரு நாள் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. நாங்கள் பல புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்திருக்கிறோம். மேலும் பல புத்தகங்களை வரும் ஆண்டுகளில் மொழிபெயர்க்க உள்ளோம். எங்களுடன் பல மொழிபெயர்ப்பாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.
இந்த ஒரு நாள் கருத்தரங்கின் நோக்கம், எங்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும், மொழிபெயர்ப்பில் விருப்பம் உள்ள பிறரையும் ஒரே இடத்தில் குழும வைத்து மொழிபெயர்ப்பின் சவால்கள் குறித்துப் பேசவைப்பதும், அதன்மூலம் மேலும் கற்றுக்கொள்வதும் ஆகும்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மதிய உணவும் தேநீர் சிற்றுண்டியும் நாங்கள் தருகிறோம்.
கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே பதிந்துகொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் வருபவர்களுக்குக் கட்டாயமாக அனுமதி இருக்காது. (ஏனெனில் உணவு, காபி, டீ ஆகியவற்றை முன்கூட்டியே ஆர்டர் செய்யவேண்டும். மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கூட்டம் இருக்க முடியும்.)
நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால், badri@nhm.in என்ற மின்னஞ்சலில் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் ஏற்கெனவே புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளீர்கள் என்றால் புத்தகங்கள் குறித்த தகவலை அனுப்பவும். மொழிபெயர்ப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆர்வம் இருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். ஆனால் இடம் இருப்பதற்கு ஏற்பவே அனுமதி.
கிழக்கு பதிப்பகத்துக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டோம். உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை என்றால், நீங்களும் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு நடைபெறும் இடம், நேரம் பற்றிய விவரங்களையும் இதே பதிவில் சேர்க்கவும்.
ReplyDeleteநன்றி
மொழி பெயர்ப்பு புத்தகங்களை பற்றிய எனது ஒரு தாழ்மையான கருத்து. உங்கள் பதிப்பகத்தின் சரஸ்வதி நதி புத்தகத்தின் மொழி பெயர்ப்பு நன்றாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போகும் ரயில், சிறப்பாக இல்லை. காரணம் அதன் நடை. வடநாட்டில் நடக்கும் கதை என்று வாசகனுக்கு நன்றாக தெரியும், அங்கு வந்து நம் தமிழ் நாட்டு வட்டார வழக்கை சேர்த்தால் அது எப்படி ஒட்டும். டப்பிங் படம் பார்த்த மாதிரி இருந்தது. யயாதியும் ஒரு மொழிபெயர்ப்பு, ஆனால் அது தெரியாத வண்ணம் அருமையாக இருந்தது. மொழிபெயர்ப்பாளர்களும் ஓரளவிற்கு எழுத்தாளர்களாக இருக்க வேண்டும். அதோடு தங்கள் கைச்சரக்கை தாறுமாறாக சேர்த்தால், மூலக்கதையின் ஜீவனும் போய், படிக்கும் சுவாரஸ்யமும் போகின்றது.
ReplyDeleteமொழியாக்கம், தமிழாக்கம் என்ற சொற்களை நீங்கள் பயன்படுத்துவதில்லையா.
ReplyDeleteஅருமையான நிகழ்வில் பங்கு கொள்ள முடியாதபடி வெளி நாடு போகவேண்டி இருப்பதை நினைத்தால் வருத்தம் மேலிடுகிறது. நிகழ்வு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.
ReplyDeleteconversion without expectation is beautiful !!
ReplyDeleteSir
ReplyDeleteI am interested to participate. Kindly register my name. I already sent email to your email id. With regards Kumar