Wednesday, April 08, 2015

ஊழல் சாம்ராஜ்ஜியம்

தற்போது நடந்துகொண்டிருக்கும் அஇஅதிமுக ஆட்சியை தமிழக ஊழல் வரலாற்றின் உச்சம் என்று சொல்லலாம். ஊழல் பற்றி என் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் அதனைப் பெரும்பாலும் “ஜெயலலிதா vs கருணாநிதி” என்று சுருக்கி, “ஏன் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள். இவ்விருவரையும் விட்டால் வேறு கதி இல்லை என்பதால், ஊழலை நகர்த்திவிட்டு பிற காரணங்களுக்காக திமுகவா அல்லது அதிமுகவா என்று தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திலேயே மக்கள் உள்ளனர்.

நான் இப்போது பேச வருவது தேர்தல் பற்றியே அல்ல. அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது பற்றியல்ல. இப்போதைய ஆட்சியில் நடக்கும் ஊழல் குறித்து மட்டுமே. இதனால் முந்தைய ஆட்சியில் ஊழலே இல்லை என்றோ இனி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் நடக்காது என்றோ நான் சொல்லவில்லை என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.

ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி 2011-ல் ஆரம்பித்ததும், ஊழல் மிகவும் தெளிவாக, திட்டமிட்ட வகையில், கட்டுக்கோப்பாக நடக்கிறது. எனக்குத் தெரிந்த சில உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். புதிய பள்ளிகூடங்களுக்கான அனுமதி, பழைய பள்ளிகளுக்கான அனுமதி நீட்டிப்பு ஆகியவற்றுக்கு மிகத் தெளிவாக ரேட் கார்ட் போடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. புதிய தனியார் பள்ளி (சமச்சீர்) தொடங்கி 1-8 வகுப்பு வரை நடத்த அனுமதி பெறவேண்டுமானால் ரூ. 6 லட்சம் கல்வி அமைச்சருக்குத் தரவேண்டும். இதனை கல்வி அமைச்சரின் தனிச் செயலர் பெற்றுக்கொள்வார். 9-10 வகுப்புகளுக்கு நீட்டிக்க, மேலும் ரூ. 4 லட்சம். 11-12 வகுப்புகளுக்கு இன்னுமொரு ரூ. 4 லட்சம். பள்ளிகளின் அனுமதி நீட்டிப்புக்குத் தலா ரூ. 2 லட்சம். சிபிஎஸ்இ பள்ளி தொடங்க, மாநில அரசிடமிருந்து நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற 35 லட்ச ரூபாய். என் நண்பர்கள் பலர் பள்ளிகளை நடத்திவருகின்றனர். இந்தத் தகவல் அவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.

நீங்கள் புதிய பள்ளிக்கூடம் ஆரம்பித்து, இந்தப் பணத்தைத் தரவில்லை என்றால், எவ்வகையிலும் உங்கள் பள்ளிக்கு அனுமதி தரப்படாது. இந்தப் பணம் தவிர்த்து, உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு 50,000 முதல் 60,000 வரை செலவாகும். அது தவிர, பஞ்சாயத்து அல்லது முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்குத் தனியாகக் கப்பம் தரவேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைப் பெறுபவர்கள் மொத்த ஒப்பந்த அளவில் குறிப்பிட்ட சதவிகிதம் லஞ்சம் தரவேண்டும். இந்தப் பணத்தை துறையில் பொறியாளர் பெற்று, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தருவார். நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டதுபோல், பொது நூலகத்துறையிடமிருந்து நூலக ஆணை பெற விரும்புவோர், ஆர்டர் தொகையில் 20% முன் லஞ்சமாகக் கொடுத்தே ஆகவேண்டும்.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் தலா 20-25 லட்ச ரூபாய் பெறப்படுகிறது. இது உயர் கல்வி அமைச்சர் வாயிலாகத் தொகுக்கப்பட்டு, மேல்நோக்கிச் செல்கிறது.

எல்லாத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதில் கணிசமாகப் பணம் பெறப்படுகிறது. இது சார்ந்த தகவல்கள் விவசாயத் துறைப் பொறியாளர் முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

முத்துக்குமாரசுவாமிபோல நேர்மையாகப் பணியாற்றும் ஓர் அதிகாரியின் நிலை தமிழகத்தில் இதுதானா? ஒன்று அவர் லஞ்சம் வசூலித்துத் தரவேண்டும்; அல்லது அப்படிச் செய்யாவிட்டால் அவரது நேர்மையால் பொறுக்கிகள் இழக்கும் பணத்தை அவர் தனது சொந்தக் காசிலிருந்து தரவேண்டும் என்ற நிலைக்கு நாம் சென்றிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆளும் கட்சியினரின் உந்துதலில், சாதாரண மக்களிடமிருந்து ஒப்பந்தக்காரர்களிடமிருந்தும் அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள். இது தமிழக அரசில் வேலை செய்யும் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த அரசு ஊழியர்களில் ஒரு சிறு சதவிகிதத்தினராவது நடக்கும் அட்டூழியங்களைக் கண்டு மனம் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை (1) ஏன் தடுக்கவேண்டும் (2) எப்படித் தடுப்பது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமாரசுவாமியின் தற்கொலை ஒரு டிப்பிங் பாயிண்ட். இந்த நேர்மையான அரசு ஊழியர்கள் என்ன செய்யவேண்டும்?

முதலில், நாட்டு மக்கள் அனைவரும் நன்கு தெரிந்துகொள்ளும் அளவுக்கு அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலை ரகசியமான முறையில் வெளியே அம்பலப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யும்போது தங்களுக்குப் பிரச்னை ஏற்படாதவாறு கவனமாகச் செய்யுங்கள். பத்திரிகை நண்பர்களிடம் உங்கள் தகவல்களைத் தாருங்கள். ஏதேனும் ஒரு பத்திகையாவது இவற்றை வெளிப்படுத்தும். இல்லாவிட்டால் இணையம் இருக்கவே இருக்கிறது. தமிழகத்துக்கு என்று நாமே விக்கிலீக்ஸ் போன்றதோர் இணையத்தளத்தை உருவாக்குவோம்.

இந்தத் தகவல்கள் வெளியாகும்போது அரசு ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும். ஜெயலலிதா குற்ரவாளியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் ஓர் அதிகாரி தற்கொலை செய்துகொண்டிருப்பதால்தான், இன்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் சரியான நேரம். இன்னும் பிறர்மீதும் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவோம். இனி யார் அரசு அமைத்தாலும், ஊழல் செய்வதற்கு இடம் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். அதற்கு முதல் கட்டமாக, தற்போது நடந்துவரும் அட்டூழியங்களை வெளிப்படுத்துவோம்.

32 comments:

  1. நம்ம ஊரில் விசில் ப்ளோயர் (Whistle Blower) சட்டம் உள்ளதா? அது இருந்தால் கொஞ்சம் பேர் தைரியமாக வருவார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. அந்த விசில் ப்ளோயர் சட்டம் நிறைவேற்ற வேண்டுமானால் அதற்குத் தனி ரேட் கார்டு இருக்கும். :-)

    ReplyDelete
  3. அய்யா, பத்ரி.

    கீழ்கண்ட விவரங்களை - நான் தமிழகம் பரவாயில்லை என்பதற்காகச் சொல்லவில்லை.

    நான், பெங்களூரில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒரு பள்ளியில் 'தொடங்கியோர் குழுவில்' இருந்ததால் கிடைத்த நேரடி அனுபவத்தால், பலவிதமாகக் கிடைத்த செய்திகளினால் சொல்கிறேன் - கீழ்கண்டவை 2007-8க்கான பெங்களூர் ரேட்டுகள்: (இப்போது இவை குறைந்திருக்குமா என்ன?)


    புதுப் பள்ளி துவங்க:
    எட்டாம் வகுப்புவரை - ரூ 12 லட்சம்.
    பத்தாம் வகுப்பு வரை - ரூ 3 லட்சம்.
    பத்தாவது பரீட்சைகளை (எக்ஸாம் ஸென்டர்) நடத்த - ரூ 2 லட்சம்.
    ஒங்க கர்நாடகாவே வேண்டாண்டா என ஸிபிஎஸ்இ போக என்ஓஸிக்காக - ரூ 27 லட்சம்! (மொத்த செலவு)
    நம்மூரில் +2/ஹையர்ஸெகன்டரி என்று பள்ளிகள் நடத்துவதை/என்பதை அங்கு பியு (ப்ரி-யுனிவர்ஸிடி) படிப்பு என்கிறார்கள், அவற்றுக்குத் தனி கல்லூரிகள் இருக்கின்றன - இவற்றின் ரேட் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

    பள்ளி லைஸென்ஸ்/அனுமதி நீட்டிக்க அங்கு 3 லட்சம் ரூ தரவேண்டியிருந்தது. இதைத் தவிர தீயணைப்புப் படை, காவல் நிலையம், மாநகராட்சியின் பொது ஒப்புதல், 'ஆராக்கியம்' (ஹெல்த் டிபார்ட்மென்ட்) அலுவலகம், மின்சார வாரியம், உள்ளாட்சியமைப்பு, கட்டிடச் சான்றிதழ், மாசுக்கட்டுப்பாடு, தணிக்கையாளர் சான்றிதழ், குடிநீர் ஆய்வு, போக்குவரத்து ஆய்வு, உள்ளூர் கல்வியதிகாரிக் கேனையர்கள் என மேலதிகமாகச் சுமார் 1.75 - 2.5 லட்சம் தண்டம். நாமே இந்த எழவையெல்லாம் செய்ய சங்கடப் பட்டுக்கொண்டு, ஒரு புரோக்கர் ("மாமா") வழியாகச் சென்றால், இது சுமார் மொத்தம் 6.5 லட்சமாவது ஆகும்!

    இதைத் தவிர, அவ்வப்போது தலையைச் சொறிந்துகொண்டு வருவார்கள்.
    குமாரசாமி (தேவே கவுடரின் மகன்) கறார். பணம் கொடுக்காமல், லோக் அயுக்தா பக்கம் போன ஒரு அழகான, சிறிய பள்ளி, அடித்து நொறுக்கப் பட்டது. அவர் கட்சியின் செயல்வீரர்கள் அப்படி. குமாரசாமியின் பராக்கிரமம் பெரிது. இப்போது அந்தப் பள்ளியின் நிலத்தையும் குமாரசாமி 'வாங்கி'விட்டார். ஏனெனில், அந்த வளாகத்தைச் சுற்றியும் ஏற்கனவே அவருடைய நிலம்தான்! குமாரசாமி ஒரு திராவிடர்.

    ஆனால், நாங்கள் பள்ளியை இழுத்து மூடிவிட்டோம். (மேலும் பல காரணங்களும் இருந்தன!)

    கேல் கதம்.

    என்ன சொல்லவருகிறேன் என்றால், தமிழகத்துத் திராவிடச் சிகாமணிகள் போகவேண்டிய தூரம் அதிகம்.

    இன்னொன்று - ஏறத்தாழ நீங்கள் குறிப்பிடும் அதே ரேட், முந்தைய ஆட்சியிலும் இருந்தது. ஆனால் - பல அடுக்குகளில் அது திராவிடச் செயலூக்க தர்மத்துடன் பங்களிக்கப் பட்டது. இப்போது அப்படியல்லவோ எனத் தோன்றுகிறது. அதனால் தான் இவையெல்லாம் வெளிவருகின்றனவோ?

    -0-0-0-0-

    இப்போது - விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் பள்ளிக்கு வருவோம்.

    ஆரம்பிக்க (எங்கள் பள்ளி ஆரம்பித்து 35 வருடங்கள் ஆகின்றன) லஞ்சம் ஒன்றும் கொடுக்கவில்லை.

    ஆனால் நீட்டிப்பிற்குப் பலப்பல பிரச்சினைகள். கொஞ்சம் விவரமாக இங்கு எழுதியிருக்கிறேன்: https://othisaivu.wordpress.com/2014/06/04/post-382/

    நாங்கள் பைசா கொடுக்காமல் (ஆனால் பகீரதப் பிரயத்தனப்பட்டு) இந்த முறையும் நீட்டிப்புச் சான்றிதழை வாங்கிவிட்டோம். எங்கள் பகுதி தாசில்தார் பரிவுடன் இருந்ததும், அவர் பெண்மணியாக இருந்ததும் - சில உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை நாங்கள் அணுகியதும் காரணங்கள். (ஆக, அடுத்த முறையை நினைத்தால் அடிவயிற்றில் கலக்கம்தான்!)

    -0-0-0-0-0-

    ஊழலை ஒழிக்கவேண்டும். எங்கிருந்து என்றுதான் தெரியவில்லை. எவர்தான் ஆன்ம பலத்துடன் செய்யமுடியும் என்று புரியவில்லை. தற்போது - பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் வைஸ்-சான்ஸ்ஸலர் ஊழல் செய்தார் என்று பெரிதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதவுரிமை அமைப்பு, தானே நிறைய பணத்தை (தற்போதைய வைஸ்-சான்ஸ்ஸலரின் எதிராளிகளிடமிருந்து) வாங்கிக் கொண்டிருக்கிறது!

    ஸொடெக்ஸோ பாஸ்/க்யூப்பன்களை வாங்கிக்கொண்டும் இன்னும் சிலவகைச் சில்லுண்டி வழிமுறைகளிலும், மிக அற்பமாக வருமானவரி ஏய்க்கும் பதர்கள் பலர், நடைமுறை வாழ்க்கையில் அநீதிகளைக் கண்டு 'கொதிப்பதைப்' பார்த்திருக்கிறேன்.

    சில சமயம் "உங்களில் எவன் நேர்மையானவனோ, அவன் முதலில் கல்லெறியட்டும்" என்று சொல்லத் தோன்றுகிறது.

    இவற்றை விரக்தியாகச் சொல்லவில்லை எனத்தான் நினைக்கிறேன். அப்படித்தான் நம்ப ஆசை.

    மற்றபடி, ஊழலை எப்படியேனும் பகிரங்கப் படுத்தினால் அது நல்லதே! உங்கள் நல்ல/வெள்ளை மனதுக்கு நன்றி.

    ReplyDelete
  4. இனி அரசு வேலை பெறும் / வேலை பெற்ற அனைவரையும் சுற்றி வளைத்தால் - அவர்கள் முலம் பல உண்மைகள் வெளிவரும். ஒவ்வொரு ஊரிலும் அரசு வேலை பெறும் நபரை கண்காணிக்க வேண்டும். விழுப்புணர்வு துவக்க வேண்டும்.

    ReplyDelete
  5. சவுக்கு சங்கர் போன்ற விசயம் தெரிந்தவர்களே சட்டத்தில் அல்லல் படும் போது சாதாரணவர்கள் பெரியளவில் களமிறங்க அஞ்சுவார்கள். Whistle Blowers Protection Act, 2011 உரிய திருத்தங்கள் வந்தால் நலம். அதுவரை நேரடி விமர்சனமின்றி குற்றங்களை wikinews போல ஒரு மூன்றாம் தளமாக ஆவணம் செய்வது நல்லதாக இருக்கலாம்.

    ReplyDelete
  6. என்னாச்சு? இத்தனை வெளிப்படையாக? இனிய பாராட்டுரைகள் மற்றும் வாழ்த்துகள். பெங்களூரில் லஞ்சம் வாங்குபவர்கள் குறித்து இணையதளத்தில் வெளியிட்ட (தொடர்ச்சியாக)வர்கள் குறித்து இப்போது என் நினைவுக்கு வந்து போகின்றது. நீங்க சொல்வது ஒரு வேளை நடந்தால் லஞ்சம் பெறும் அதிகாரவர்க்கத்தினர் இன்னமும் கடுமையாக தங்கள் திறமையை காட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

    ReplyDelete
  7. இந்த கூட்டம் அடிக்கிற கொள்ளை உங்களுக்கு இப்போதான் உங்களால் உணரமுடிந்ததா. - வில்லவன்கோதை

    ReplyDelete
  8. Same way it is happening Bar Liecence renewal also, Private Secretary of Excise Minister is taking money from every bar during renewal every year ranging from Rs.55,000/- to Rs.1,25,000/- according to the location of the bar. If you donot pay you will not get the liecence renewed.

    ReplyDelete
  9. ஆட்சி மாற்றம் 2016இல் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது

    ReplyDelete
  10. டிப்பிங் பாயிண்ட் என்றெல்லாம் நம்ப முடியவில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளை கொல்லப்படவில்லையா? பால் கமிஷன் அமைக்கப்பட்டு அதன் அறிக்கையைக் கூட கருணாநிதி வெளியிட்டார். என்ன ஆனது? மணல் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட தாசில்தார்கள் ஏராளம். சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்டது. உமா சங்கரை இரு கழக ஆட்சிகளும் பந்தாடின. அவர்களால் என்ன செய்ய முடிந்தது?

    ReplyDelete
  11. நம்மையும் சந்தர்ப்பவாதிகள் ஆகா சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  12. பல்கலை கழகம் துணை வேந்தர் பதவிக்கு எவ்வளவு என்று நீங்கள் விசாரித்தீர்களா? மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்

    ReplyDelete
  13. சம்பள உயர்வுக்காக வேலை நிறுத்தம்.சம்பளக் குழு அமைக்கவில்லை என்றால் வேலை நிறுத்தம்.ஆனால் தன்னுடன் பனிபுரியும் ஒரு நேர்மையான அதிகாரி இறந்தால் .... எங்கே உங்கள் பனியாளர் சங்கம்

    ReplyDelete
  14. பூனைக்கு யார் மணி கட்டுவது,,

    ReplyDelete
  15. ஆம் ஆத்மி போல நம் ஊரிலும் ஒரு கட்சி வரவேண்டும். ஆனால் நம் ஊரில் பிராமின், நான் பிராமின் பிளவு அதற்கு இடம் கொடுக்குமா என்பது சந்தேகம். சீர்படுத்த முடியாத அளவுக்கு இது புரையோடி உள்ளது.

    ReplyDelete
  16. As reader Naina says, you will faint, if you know the amount for a VC(Vice Chancellor post - or is it Wise Chancellor! ) . But you will never ever sleep or faint, if you find out "to whom" this Good News Delivery money goes and the flawless trade practices followed, to provide a level playing field for all the VC aspirants !!

    ReplyDelete
  17. Mr. Badhri, What you say is absolutely correct and it is the need of the hour. Corruption or the thought process starts at home and in institutions where the young minds are trained. Schools were once a revered place, but nowadays many things happen in front of the children. Schools swindle money. The children assume swindling is natural one. They become indifferent & resilient to. It goes to the next level. They reach colleges. again repeated. Indifference & resilience are reinforced. Then next level. They start practicing it. The cycle is full. School Education & Higher education system must change. We are in the cross roads of this decision. Let us join hands....
    Don't stop here just with the start of this post pl.

    ReplyDelete
  18. ஊழலை ரகசியமான முறையில் வெளியே அம்பலப்படுத்தவேண்டும் --

    eppadi mudiyum ?

    ReplyDelete
  19. மிகவும் தெளிவாக, திட்டமிட்ட வகையில், கட்டுக்கோப்பாக ஆட்சியை நடத்துவார்கள் என்று பார்த்தால் ஊழலை நடத்துகிறார்கள்.

    ReplyDelete
  20. நூலக ஆர்டர் இப்போது இல்லை. போன ஆட்சியில் காசு கொடுத்து வாங்கிய பத்ரிக்களும், மனுஷ்யக்களும் இப்போது அல்லல்படுகிறார்கள். எழுத்தாளர்களுக்கு ராயல்டியெல்லாம் கொடுக்காமல் ஏமாற்றுவது ஊழல் கணக்கில் வராது தானே?

    ReplyDelete
    Replies
    1. நூலாசிரியர் நான். ராயல்டி ஒழுங்காகத்தான் வந்துகொண்டிருக்கிறது. பல பின்னூட்டங்களில் உங்கள் பொய்ப் பிரச்சாரத்தைப் பார்க்க முடிகிறது.

      Delete
    2. நூலாசிரியர் ஏன் பெயரில்லாமல் வரவேண்டும்?

      கொண்டையை மறைக்கவும்

      Delete
  21. When their leader is expecting a judgement for release from the case,
    how dare the ministers swindle money and do malpractices, this will
    turn against them. Temple gods will not tolerate their atrocities and no puja
    will help them. As for library orders are concerned most of the books
    purchased by LLA at Mount road library does not have books published
    by Kizhakku, Kalachuvadu, Uyirmai and tamizhini. Probably you people
    donot pay any commission to them. Most of the books that are lying on
    the floor of that library are useless and they were strewn everywhere
    as no readers prefer them. What a criminal waste of money.

    ReplyDelete
  22. As both dmk amd aiadmk are corrupt, degree of corruption may vary,
    both are mired in corruption cases for dmk it is 2G and for aiadmk it
    is wealth accumulation awaiting judgement and there is no other alternative
    seems to be there. BJP is a non entity as its vote percentage is very poor
    in Tamilnadu and its performance at the cental govt is dismally poor, it has
    not delivered what it has promised before the elections. all others are
    caste outfits which have to be avoided at any cost. so 2016 elections is
    like a puzzle and voters are confusede to whom to vote.

    ReplyDelete
  23. I am a retired T.N.State Government Teacher Pensioner. My pension income has been above the taxable limit for the past 10 years. I have been representing to the District Treasury Officer, District Collector, Director of Pensions and the Commissioner of Income Tax, TDS to deduct due taxes from my pension. My request went unheeded. Suddenly this financial year (2014-15) from my August Pension the treasury started deducting Rs.4800 per month and they had deducted Rs.14400 in three months whereas my tax commitment would be only around Rs.5000. So I sent by registerd post copies of my investments qualifying for 80C in November. They stopped deducting further income tax from my pension for December and January. But my pension for February to be paid in March was not released. On enquiry, I was told that the assistant looking after my pension was on leave and the Superintendent included me in the list of people who have not furnished their internal return and has stopped my pension. I made repeated representation by Registerd posts proving that I had fulfilled their requirements. Till today my pension for February 2015 has not been released, Making me suspect if the clerical person is expecting me to grease his palm to release the stopped pension. It is quite likely because every one appointed for a State Government posting had shelled out money to get that post whether through service commission or otherwise. As such they tend to create such hardships to the incumbent so that they may get something in return.

    ReplyDelete
    Replies
    1. Despite boasting efficient administration, TN Govt offices have become inefficient and corrupt to the core. You may have to visit in person to find out what the trouble is. When my father died, we went through the regular procedure for getting pension for my mother. Despite us doing everything as per the procedure, the Srirangam Treasury claimed that my father's pension files were lost/missing. They kept unnecessarily dragging the process. It went on for six months. We decided not to pay one penny and fight it out. After several representations to various officers, I threatened to take it to higher levels if they did not act. At some point orders were passed based.

      However I realise that many widows do not have the means to wait it out for months as they entirely depend on the pension money to survive. These are the people who fall prey to the vultures lurking in the corridors of government offices.

      The endemic corruption has to be rooted out and I request the readers of this blog to write to me about how the public are defrauded in government offices, collectorates, secretariat and ministries. I will publish them in my blog after removing your name and references.

      Delete
  24. Registrar offices,treasury offices. RTO offices,EB office,Education department
    and ofcourse both traffic and regular police offices are mired in corruption
    so deep it is very difficult to for a common man to lead his life as normal.
    The officials who are working in these department does not have conscience
    and consideration for the citizens and only God can give them punishment
    for the injustice they have done to common man and these greedy people
    are responsible for the decay and destruction of this country. No wonder
    why people prefer to settle in foreign countries rather than in India

    ReplyDelete
  25. This is only reg pensioners'income tax. No need to ask for TDS. Get full pension and calculate tax in next June and pay to the IT Dept. Only ask for pension statement from the Govt Dept as proof of the exact payments.

    ReplyDelete
  26. Much of the collections officials and ministers make make their way into the party's coffers for fighting (and bribing in) the next election. That is the reason why arrested minister Agri Krishnamurthy confidently claimed that he did everything with the knowledge of the Supreme Leader

    ReplyDelete
  27. Our son died in 2011. We needed a legal heir certificate in favour of his mother .(He was unmarried.) We applied to the Tahsildar, Mambalam, at KKNagar. we were too grieved to pursue this matter. A friend of my son arranged for the visit of the revenue inspector to my house and issue of the certificate. He directed me to pay Rs.200 to the RI. I did. The matter was finished within a month. When I went to collect the LHC, I saw many people waiting for similar certificate for more than 6 months, having waked to the office many times. I felt guilty.

    It is almost impossible to meet the RI as he is always surrounded by petitioners. No order, no queue. He would look into the crowd and recognize only those who had paid and call them only.

    ReplyDelete