Wednesday, February 10, 2016

ஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை?

1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

கடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது என்பதில்தான் குறியாக இருந்தனர். கூட்டணி உடன்படிக்கைகள் வெகு சீக்கிரமாக நடந்தேறிவிடும். பேரம் சரியாகப் படியாதபோது சில கட்சிகள் கோபம்கொண்டு தனித்து நிற்பது வழக்கம், அல்லது தேர்தலையே புறக்கணிப்பதும் நடக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை விஜயகாந்தின் தேமுதிக மட்டும்தான் திமுக, அஇஅதிமுக இரண்டையும் விட்டு விலகி தனித்து நின்று தங்கள் வாக்குகளைப் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதுவும் 2011-ல் அஇஅதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததுடன் அழிந்துபோனது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமகவுடனான கூட்டணியால் தேமுதிகவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அஇஅதிமுகவின் அதிரடி அரசியலுக்கு தேமுதிக தன் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் இழந்தது.

இந்நிலையில்தான் மதிமுக, விசி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நால்வரும் திமுகவுடனும் அஇஅதிமுகவுடனும் கூட்டணி அமைப்பது தங்கள் கட்சிகளுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு ஒப்பானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டன. இவ்விரு பெரும் கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதால் தத்தம் கட்சிகளை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல; ஆட்சியில் எவ்விதத்திலும் பங்கு கிடையாது; கூடவே அரசின் திட்டங்களில் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தமுடியாது. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கலாம். கிடைக்கும் ஓரிரு எம்.எல்.ஏ இடங்களை வைத்துக்கொண்டு அது தரும் வசதிகளை அனுபவித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கலாம்; அவ்வளவுதான்.

பாமகவும் இதனைப் புரிந்துகொண்டது என்றாலும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்ற பரப்புரையில் இறங்கி பிற சிறு கட்சிகளிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது. மேலும் விசி-பாமக விரிசல், வெளிப்படையான தலித் எதிர்நிலைப் பிரசாரம் ஆகியவை அக்கட்சிக்கான ஆதரவுத் தளத்தைக் குறுக்கியது.

மக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நான்கு கட்சிகளுக்கும் ஒருவிதத்தில் முன்னோடி தேமுதிகதான். ஆனால் இன்றுவரை தேமுதிக குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. தேமுதிக, தமாக இரண்டும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருந்தால் உண்மையிலேயே மிகப்பெரிய எதிர்ப்பு சக்தியை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியினர் இதனை உருவாக்கப் பெரிதும் முயன்றார்கள். ஒத்துழைக்க மறுத்தது விஜயகாந்த்தும் வாசனும்தான்.

***

தமிழகத்தில் ஊழலை ஆரம்பித்துவைத்தது கருணாநிதி என்றால் அதைப் பெரிதும் வளர்த்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுமே. கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா செய்த மாபெரும் சாதனை ஊழலை முழுமைப்படுத்தி, மையப்படுத்தி, ஒழுங்குபடுத்தியது. அதாவது முன்பெல்லாம் லஞ்சம் கொடுக்காமல் சில செயல்கள் நடக்கலாம். இடையிடையே பலர் காசு பார்க்கலாம், சில அமைச்சர்கள், செயலர்கள் காசு வாங்காமலும் சில செயல்களைச் செய்யலாம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒழுங்குபடுத்தப்பட்டு, எந்தெந்தச் செயல்களுக்கு எவ்வளவு வாங்கவேண்டும் என்று ரேட் கார்ட் நிர்ணயிக்கப்பட்டு, இதிலிருந்து சிறிதும் வழுவாமல் செயல்படவேண்டும் என்று ஆணை விதிக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட பணம் எப்படிப் பிரித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் வழிமுறை தரப்பட்டிருக்கிறது. இது தமிழகம் கண்ட மாபெரும் புதுமை.

அஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிய பழ.கருப்பையா இதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் ஊடக நேர்காணல்களில் யாரும் அவரிடம் இதுகுறித்துக் கேள்விகள் கேட்கவே இல்லை. அவரைக் குடைந்து மட்டம் தட்டுவதிலேயே நேரம் போய்விட்டது. ஊழல் மலிந்த தேசம் என்பதைத் தாண்டி, ஊழலால் நெறிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை என்று ஆகியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொதுமக்கள் உணரவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பைசாகூட லஞ்சம் தராது ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் தராது வாங்கப்பட்ட பொது நூலக ஆணை என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது தரப்பட்ட சாலை போடும் ஒப்பந்தம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று எவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒவ்வொரு நியமனத்திலும் இலக்கு வைத்து அமைச்சர்கள்முதல் அதிகாரிகள்வரை விரட்டப்பட்டிருக்கின்றனர். முதல்வருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோதே இதுதான் நம் மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது.

அஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் துளிக்கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

***

அப்படியென்றால் திமுகவுக்கு வாக்களிக்கலாமே என்ற இயல்பான கேள்வி எழுகிறது. அப்படித்தானே இதற்குமுன்புவரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம்? இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை? கிட்டத்தட்ட இரு கட்சி ஜனநாயகம்தானே தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது?

கவனமாகப் பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் திமுக என்னும் கட்சி சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியவரும். சென்றமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது அது தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையைப் பெறவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதைக் காரணம் காட்டி, கூட்டணி ஆட்சி இல்லாமலேயே தமிழகத்தில் காங்கிரஸின் ஆதரவில் திமுக ஆட்சி நடத்தியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக எந்த அளவுக்குப் பலவீனமாக ஆகியுள்ளது என்பது மேலும் தெரியவந்தது.

ஆனாலும் இந்தப் பலவீனத்தை வெளிக்காட்டாமல், தாங்கள் தனித்து ஆட்சியைப் பிடிப்போம், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே திமுக தலைமை பேசியது. அஇஅதிமுக ஊழல் செய்கிறது என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த அனைத்துக் கட்சிகளும் தாமாக முன்வந்து உதவவேண்டும் என்று இறுமாப்புடன் எதிர்பார்த்தது திமுக. தன் பலத்தை அதிகமாக மதிப்பிட்டு, பிற கட்சிகளைக் கேவலமாகப் பார்த்ததன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. இன்றுவரை மக்கள் நலக் கூட்டணியை ‘அஇஅதிமுக பி டீம்’, ‘ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியவர்கள்’ என்று தூற்றுவது மட்டும்தான் திமுகவின் எதிர்வினையாக இருந்துவருகிறது.

மதிமுக, விசி, கம்யூனிஸ்டுக் கட்சிகள் திமுகவிடமிருந்து விலகி நிற்க வலுவான காரணங்கள் உள்ளன. ஆனால் மக்களாகிய நாம் திமுகவிடமிருந்து விலகி நிற்கக் காரணங்கள் உள்ளனவா?

திமுக இதுவரை பயணித்துவந்த பாதையிலிருந்து மாறி வேறுமாதிரியான ஆட்சியை அளிக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் நமக்கு இதுவரையில் கிட்டவில்லை. எப்போதெல்லாம் தாம் ஆட்சியில் இருக்கிறோமோ அப்போது தமிழகத்துக்கு நன்மை செய்வதாகவும் அஇஅதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்குத் தீமை செய்வதாகவும் சொல்வது திமுகவினரின் வாடிக்கை. அப்படியானால் ஏன் மக்கள் ஒவ்வொரு முறையும் திமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர்? ஏன் அஇஅதிமுகவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்?

திமுகவின் தலைமை உண்மையில் யார் கையில் உள்ளது? கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை? திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு வழக்குகள் உண்மையில்லை, பொய்யாகப் புனையப்பட்டவை என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. புதிய ஆட்சியில் இம்மாதிரியான ஊழல்கள் தொடரா என்பதற்கான சான்றுகளும் இல்லை. புதிய சிந்தனை, தமிழகத்தை மேலெடுத்துச் செல்ல புதிய திட்டங்கள் என்று எவையும் திமுகவிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கட்சி என்பதற்காகவே வாக்குகள் தாமாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்துவிடும் என்ற அவர்களுடைய தன்னம்பிக்கை நமக்கு ஆச்சரியத்தையே தருகிறது.

***

பாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது. ஆனால் அந்தக் கட்சி தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலில் பாமக அதிகம் சாதிக்க முடியாது. காங்கிரஸ் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் செல்லும். பாஜக பெரும்பாலும் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் அல்லது தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் இருவருமே தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அதற்கான சிந்தனையும் இவர்களிடம் இல்லை; பலமும் இல்லை. தேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல், எங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே தற்போதைக்கு நிராகரிக்கவேண்டிய கட்சியாக உள்ளது.

***

விலக்கவேண்டியவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்.

அவ்வகையில் இப்போதைக்கு என் கண்ணில் படுவது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. அதன் உறுப்புக் கட்சிகளில் பலவற்றின் நிலைப்பாடுகளுடன் நமக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லாமல் போகலாம். உதாரணமாக, கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கை எனக்கு ஏற்புடையது கிடையாது. ஆனால் இப்படிப் பார்த்துக்கொண்டே போனால் ‘நோட்டா அல்லது வீட்டோடு கிட’ என்பதுதான் பதிலாக வரும்.

மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உண்டா? ஜெயித்தால் யார் முதல்வர் ஆவார் போன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியைப் பொருத்தமட்டில் முழுப் பெரும்பான்மையுடன் ஜெயிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியில் செய்ததுபோல, திமுக, அஇஅதிமுக இருவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்து, மக்கள் நலக் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைத்தாலே போதும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக கெஜ்ரிவாலை காங்கிரஸ் ஆதரித்ததுபோல, திமுக, அஇஅதிமுக இரண்டில் ஒரு கட்சி மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம். குறைந்தபட்சம், தேர்தலுக்குப்பின் மக்கள் நலக் கூட்டணி ஆதரவுடன்தான் யாராக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அதுவே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

***

மக்கள் நலக் கூட்டணியும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆத்மி என்பது ஒற்றைக் கட்சி. மக்கள் நலக் கூட்டணி என்பது தற்போதைக்கு நான்கு கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி. இவர்கள் நால்வரும் தேர்தலுக்குப் பிறகு (அல்லது தேர்தலுக்கு முன்னமேகூட) பிரிந்துபோய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பிரிந்து திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரிடம் விலை போய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மிக நியாயமான கேள்விகள். இங்கு trust, personal integrity ஆகியவற்றைத்தான் நாம் அலசிப் பார்க்கவேண்டும். வேறு எந்தக் குறைகள் இருந்தாலும் நம்பிக்கை, தனிநபர் நாணயம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோரை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.

இவர்கள் ஒரு கூட்டாக, ஒரே அணியாக தங்கள் குழுவை தேர்தலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளிலும் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். அப்போது தனிநபர் ஆதாயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் தங்கள் கூட்டணியின் நலனையும் மாநிலத்தின் நலனையும் மட்டுமே முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப்பின் திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோருடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி நடத்தவேண்டிவந்தால் குறைந்தபட்சச் செயல் திட்டத்தின் அடிப்படையில் அது இருக்குமாறும், தனிநபர் துதிக்காக அரசின் பணம் விரயமாவதைத் தடுக்குமாறும், ஊழலற்ற ஆட்சி அமையுமாறும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

என் நம்பிக்கை நிறைவேறுமா, வீண்போகுமா என்று தெரியாது. ஆனால் ஏதோவொரு நம்பிக்கையை முன்வைத்துத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்களிக்கவேண்டியிருக்கிறது. முக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.

எனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.

மந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.

வாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நாம் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.

இது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது. நீங்கள் வாக்களித்து ஜெயிக்கவைத்த ஒருவர்தான் அஇஅதிமுக இந்த அளவுக்கு ஊழல் செய்யக் காரணமாக இருந்திருக்கிறார். இது நம்மைச் சிறுமைப்படுத்தத்தான் வேண்டும். எனவே நாம் வாக்களிக்கப்போகும் ஒருவர் தேர்தலில் ஜெயிக்கப்போகிறாரா அல்லது தோற்கப்போகிறாரா என்பதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். நாம் விரும்பும் கூட்டணியை ஜெயிக்கவைக்க இன்னும் எத்தனை பேரை நம் தரப்புக்கு மாற்றுவது என்று சிந்தியுங்கள்.

***

இம்முறை நம் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குப் போகட்டும். தமிழகம் நல்ல மாற்றத்தைச் சந்திக்க உதவுவோம்.

132 comments:

  1. Good one. My Vote also for மக்கள் நலக் கூட்டணி. Its time to have a change in Tamilnadu.

    ReplyDelete
  2. Very well articulated Sir! Yes. We badly need a change! Let us vote for Makkal Nala Koottani!! Let us make a change!

    ReplyDelete
  3. என் நிலைப்பாடும் இதுவே. பி.ஜே.பி. தனியாக நின்றாலும், அதன் த.நா தலைமை சரியாக இல்லையே என்ற வருத்தமும் இருக்கும் நிலையில், நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. பாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது.// ஆனால் அவருக்கு நான் வாக்களிக்க மாட்டேன், காரணம் ஆந்திரா, கர்நாடகா, உ.பி, ம.பி, ராஜஸ்தான், பஞ்சாப் போன்று இங்கும் பெரும்பான்மை சமூகம் ஆட்சியை பிடித்தால் அது தங்களைப் போன்ற சிறுபான்மை சாதியினரின் சுரண்டலுக்கு ஆபத்து, எனவே எங்களைப் போன்ற சிறுபான்மை சமூகத்தினர் எல்லாம் ஒன்று கூடி கட்டிருக்கும் மடம் கருத்தியல் ரீதியில் எதிரி என்றாலும் அவர்களை ஆதரிப்பதே நம் சுரண்டலுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. neenga solra athe karanathai ennalum solla mudiyum.. minority people ah pathukaaka oru government irukku. appo engalai kaaka yar irukka.. so this time i am going to vote for anbumani

      Delete
  5. திராவிடம் VS ஆரியம் என்பது மட்டுமே இங்க சீன், இதைத்தாண்டி தமிழ் தேசியமெல்லாம் சீனில் வரவே கூடாது, அப்படி வந்தாலும் அப்படி ஒன்னு வந்ததாவே காட்டிக்க மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் தேசீயமா? யார் யார்? அதுவும் ஒரு வாக்கு வங்கி நோக்கியே. ஒட்டு மொத்த தமிழர் நலன் பற்றி பேசுவதே அரசியல்அதிகாரம் சாமானிய மக்களுக்கு பயன் தரும்.

      Delete
    2. இப்போ... வி.சி.க வுக்கு வாக்களிப்பவன் எல்லாம் தலித்தியத்தின் அடிப்படையிலா வாக்களிக்கிறான்? ம.தி.மு.க வுக்கு வாக்களிக்கிரவன் எல்லாம் திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையிலா வாக்களிக்கிறான்? எல்லாம் சாதி அடிப்படையில் தான் வாக்களிக்கிறான். ஆனா வாக்கு வாங்குறவனுக்கு ஒரு அஜெண்டா இருக்கும் அது தான் தமிழ் தேசியம், திராவிடம், ஹிந்துத்துவம். கம்யுனிசம். தமிழ்நாட்டு மக்களுக்கான கருத்தியல் தமிழ் தேசியமா தான் இருக்க முடியும்.

      Delete
  6. பா.ம.க தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலில் பாமக அதிகம் சாதிக்க முடியாது. பா.ம.க தனித்து நின்று பெரும் வாக்குகளுக்கு போட்டியாகத்தான் ம.ந.கூ இருக்கும் என்று பலர் பேசி வரும் நிலையில், என்னமோ ம.ந.கூ நான்கு கட்சி கூட்டணி ஆதலால் அது பெரிய வாக்கு வங்கியை வளைக்கும் என்பது போன்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வை.கோ மற்றும் கம்யுனிஸ்ட்களை வட மாவட்டங்களில் பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். அந்த வகையில் வட மாவட்டங்களில் பெரும் பலத்துடன் இந்த தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க விற்கு சவாலாக இருக்கப்போவது பா.ம.க தான். என்பது வெள்ளிடை மலை. உண்மை இப்படி இருக்க ம.ந.கூ வை ஆதரிக்க காரணம்?? வேறு என்ன வன்னியர் வெறுப்பு தான்.

    ReplyDelete
    Replies
    1. ம. ந. கூ நம்பகத்தன்மை பொது மக்கள் பொது மக்களால் அங்கீகரிக்கப்படும்.

      Delete
    2. யாராவது ஒருவர் தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள்-பற்றியும் அக்கறையுடன் யோசித்து ஒரு தெளிவான சிந்தனையை முன்வைத்தால் போதும், முதல் ஆளாக வந்து வன்னியர், தலித்-னு ஜாதி ரீதியாக பேசி விவாதத்தையே வேறு பக்கமாக திருப்பிவிட வேண்டியது. நீங்களாம் கடைசி வரைக்கும் திருந்தவே மாட்டிங்க.

      Delete
  7. I will also support மக்கள் நலக் கூட்டணி

    ReplyDelete
  8. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களின் பொருளாதாரக் கோட்பாடுகள் உங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்பதோடு உங்கள் கோட்பாடுகளுக்கு எதிரானவையும் கூட. வைகோவின் தனித் தமிழ் நாடு மற்றும் புலி ஆதரவு உங்களுக்கு ஏற்புடையது அல்ல. உங்களுடைய கோட்பாடுகளுக்கு எதிரானவையும் கூட. திருமாவின் தலித் விடுதலையை வரவேற்பீர்கள். ஆனால், இட ஒதுக்கீடு பற்றி அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் கொள்கைகளில் பலத்த வேறுபாடு உண்டு. மேலும் திருமாவளவனின் சமீபத்திய இஸ்லாமிய (தீவிரவாத) ஆதரவு உங்களுக்கு அறவே பிடிக்காத கொள்கை. இப்படி அனைத்துவகையிலும் எதிராக இருக்கும் ஒரு கூட்டணியை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீர்கள் என்றே புரியவில்லை. பக்தனுக்குக் கடவுள் மீது இருக்கும் நம்பிக்கை கூட புரிந்துகொள்ள முடியக்கூடியதுதான். அதிமுக, திமுக மீது ஒருவருக்கு அதிருப்தி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதற்காக மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்பது என்பது தாகமாக இருக்கிறது என்று அமிலத்தை எடுத்துக் குடிப்பதைப் போன்றது. உண்மையில் உங்கள் கொள்கையின்படிப் பார்த்தால் தமிழகத்து கெஜ்ரிவால் சகாயம் தான் உங்கள் தேர்வாக இருக்கவேண்டும். மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை என்பதால் வாக்கு வீணாகிவிடக்கூடாது என்று நினைக்கும் எளிய மனிதர்களைப் போலவே நீங்களும் குறைந்த தீமை என்று சொல்லி மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ம. ந. கூ யில் யார் தீங்கிழைத்தவர்கள். யார் அமிலம்? யார் தண்ணீர் என்று மக்களுக்கு தெரியும். கெஜ்ரிவாலுக்கு இணையான, ஏன் அதை விட சிறந்த ஆட்சியை தர முடியும் ம. ந. கூ யால்.

      Delete
    2. //தமிழகத்து கெஜ்ரிவால் சகாயம் தான் உங்கள் தேர்வாக இருக்கவேண்டும்//
      சகாயம் அரசியலுக்கே வரவில்லையே.

      Delete
  9. சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். /// ஹிஹிஹி என்ன சார் சொல்றிங்க? பா.ம.க வுக்கு இந்த பின்னடைவு சாத்தியம் என்றால் வி.சி.க விற்கும் சாத்தியம் தானே? சரி மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்டது பா.ம.க தொண்டரா? வி.சி.க தொண்டரா? பாவம் வி.சி.க தொண்டர்கள் 6 பேர்கள் ஆயுள் தண்டனை பெற்றது பத்ரிக்கு தெரியாது போல. சரி கிரவுண்ட் ரியாலிட்டி படி பார்த்தல் கூட 20 விழுக்காட்டிற்கு மேல் இருக்கும் வன்னியர் வாக்குகளை விட, 5 விழுக்காடு இருக்கும் பறையர் வாக்குகள் அவ்வளவு பலமானதா என்ன? இதில் வன்னியர்கள் 40%க்கு மேல் இருக்கும் தொகுதிகளே 100 க்கும் மேல் உள்ளதே? அரியலூர், தர்மபுரி போன்ற முழுக்க வன்னியர்கள் மட்டுமே அதிகம் கொண்ட பகுதிகளில் எல்லாம் ம.ந.க கூட்டநியாலோ அல்லது வி.சி.க வாளோ என்ன செய்ய முடியும்? அதாவது இவர்களால் பா.ம.க வை எதிர்த்தே என்ன செய்ய முடியும் என்பதே என் கேள்வி, இந்த லட்சணத்தில் இவிங்களை தி/மு/க, அ.தி.மு.க வுக்கு மாற்றா எப்படி முன்னிருத்துருங்க?

    ReplyDelete
  10. கிரவுண்ட் ரியாளிட்டியும் மகள் நல கூட்டணிக்கு சாதகமா இல்லை, தமிழகத்திற்கான திட்டம் அன்புமணி அளவிற்கு இல்லை (அன்புமணி கிட்ட அரசியல் பார்வை தெளிவா இருக்கு உங்கள் வாதப்படி). ஆனாலும் பா.ம.க வை ஆதரிக்காததன் காரணம் ஒன்னு பா.ம.க வின் வாக்கு வங்கியை சரியாக அனலைஸ் செய்யாம இருக்கணும், இல்லை வன்னியர்கள் வந்து விடக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவரா இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி எனது ஆதரவு மக்கள்நலகூட்டணிக்கே

      Delete
    2. ஆதரவெல்லாம் அந்த கட்சியில் இல்லாத அல்லது அந்த கட்சிகள் ஏதேனும் ஒன்றின் ஆதரவாளராக இல்லாத பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும், எல்லா காலங்களிலும் ஆதரவாளராக இருப்பவர்கள் தெரிவிக்க கூடாது.

      Delete
    3. வன்னியர் வாக்குகள் எல்லாமே பா ம க வுக்கு மட்டுமே விழும் என்பது கற்பனை. பா ம க வுக்கு 2% ஓட்டு கூட கிடைக்காது. பா ம க வில் இருக்கும் வன்னியர்களை விட தி மு க மற்றும் அ தி மு க வில் வன்னியர்கள் மிக அதிகம். மக்கள் நல கூட்டணி வெல்லும்!!

      Delete
  11. மிக்க நன்றி எனது ஆதரவு மக்கள்நலகூட்டணிக்கே

    ReplyDelete
  12. மிக்க நன்றி எனது ஆதரவு மக்கள்நலகூட்டணிக்கே

    ReplyDelete
  13. மிகவும் தெளிவான பதிவு..
    ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு பேசாமல்,இரண்டு பக்கமும் நன்கு புரிந்து கொண்ட பொதுவான கருத்து.
    நம் தமிழ் மக்கள் விடுதலைப் பெறுவதற்கான முதல் வழி...

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் @Praveen Kumar.நான் நினைப்பது இதுதான் என வழ வழ கொழ கொழ இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு.பணக்காரர்களையே(திமுக,அதிமுக) தேர்ந்தெடுத்து மேலும் பணக்காரர்களாக ஆக்குவதை விட சமானியர்களை(மநகூ) பணக்காரர்களாக்கி பார்ப்போமே.நீ பணக்காரனானது என்னால் தான் என சந்தோசமாவது பட்டுக்கொள்ளலாம்.காசா பணமா ஒரு ஓட்டு தானே.போட்டுத்தான் பார்ப்போமே.காசு பணம் மற்றவர்கள் தந்தால் வாங்கியும் கொள்ளலாம். அவர்கள் திருப்பி கேட்க முடியாது.

      Delete
  14. directly you can declare that aryan + diravidan not like to vote for PMK with the help of dalith. Why you should writing so many story Mr. Badri? really you people dont like change anytime but pretend like would change.

    ReplyDelete
  15. தேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல் - கூட்டணியை எதிர்ப்பார்க்கும் ஆண்ட கட்சியும் ஆளுங்கட்சியும் தனது நிலையை தெளிவாக்காத நிலையில் தேமுதிக மட்டும் எப்படி அதை செய்திட முடியும் ?

    எங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே - மற்ற கட்சிகளெல்லாம் ஆதாயம் தேடாமல் மடம் நடத்துகிறதா என்பதை நீங்கள் தெளிவு படுத்தவேண்டும்...

    மற்றவர்களை போலவே உங்களுக்கும் தேமுதிக மீது ஏன் கோபம் என்று தெரியவில்லை.

    தேமுதிக குறித்த மேற்கண்ட உங்கள் வரிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Thu Feb 11, 03:00:00 AM GMT+5:30

      உங்கள் பெயர் ஒன்றும் சுதீஷ்குமார் இல்லையே ? :)

      Delete
  16. I understood that you never would like to have change because your gene made like that. without telling so many story can directly declare that you d'nt like PMK in any point of view. then finally you act as brand ambassoder for MNK

    ReplyDelete
  17. சாதீயக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் ம.ந.கூ.அணியில் இல்லாமல் இருந்தால் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோரும், வடமாவட்டங்களில் அதிகமாக உள்ள வன்னியர்களும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர்களும் மற்ற இனத்தவர்களும் மாற்றத்தை எதிர்நோக்கி ஆதரிப்பார்கள். அப்படி இல்லாமல் வி.சி.க இருக்கும்வரை அச்சமூக மக்களால் ம.ந.கூ.வை ஒதுக்கியே வைப்பார்கள். மக்கள் நலக் கூட்டணி மாற்றம் தரும் என நம்புவர்கள் கூட விசிக இடம் பெற்றுள்ளதே என்பதற்காக புறக்கணிப்பார்கள் என்பதுதான் உண்மை. பல இடங்களில் சமூக கொந்தளிப்புகளுக்கு விசிக மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதை பத்ரி சேஷாத்ரி புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வி சி க ஜாதி கட்சி அல்ல. வித்தியாசத்தை உணருங்கள். அன்று வெள்ளைகாரர்கள் நம்மை அடிமை படுத்திய போது எத்தனையோ பேர் போராடி உயிர் நீத்து விடுதலை வாங்கி கொடுத்தார்கள். ஆனால் இன்று எல்லோடும் தமிழர்கள் என்றும் சொல்கிறோம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை கீழே தள்ளி அவர்களை அடிமைகளாக வைக்கவே ஆதிக்க ஜாதிகள் விரும்புகின்றன. அவர்களின் விடுதலைக்காக உள் நாட்டிலேயே போராட வேண்டியிருக்கிறது. அதைத்தான் வி சி க செய்கிறது. இன்று விளிம்பு நிலையில் உள்ள ஒடுக்கப்படுகிற மக்களுக்காக போராடுகிற இயக்கம் (வி சி க) vs விளிம்பு நிலையில் உள்ள மக்களை ஒடுக்குவதற்காக மற்றவர்களை தூண்டுகிற இயக்கம் (பா ம க). ஜாதி பார்த்து ஓட்டு போடுபவர்களின் வாக்கு மக்கள் நல கூட்டணிக்கு தேவை இல்லை!!

      Delete
  18. பத்ரி நாசூக்காக சொன்னார், வெளிப்படையாக தன்னை ஜாதிய கட்சியாக, அறிவித்த, ஜாதிய அமைப்புகளை ஒருங்கிணைத்த பாமக என்றும் பெரும்பாலான தமிழர்கள் நலனை காக்க முடியாது. நம்பிக்கையை பெற முடியாது.

    ReplyDelete
    Replies
    1. இது திரு பத்ரி அவகளின் பாம க வின் மீதுள்ள வெறுப்பையே காட்டுகிறது தவிர மக்களின் நலன் என்கிற அக்கறை இல்லை அவருக்கு

      Delete
  19. Makkal nalla kutani is a viable alternative.

    ReplyDelete
  20. எனது வாக்கும் மக்கள் நலக்கூட்டணிக்குதான்......என்னால் முடிந்தளவுக்கு மக்கள்நலக்கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பேன்....இதனால் என்ன இழப்புகளையும் சந்திக்க தயார்....

    வெல்லட்டும் மக்கள் நலக்கூட்டணி

    ReplyDelete
  21. நீங்கள் ஏன் நாம் தமிழர் கட்சி பற்றி எதுவும் கூறவில்லை .

    ReplyDelete
  22. yes, i hope your support, aware some educated yousters to change the vote cating into #makkalnan kotani #PWF

    ReplyDelete
  23. முக்காலும்உண்மை. எப்போது பாமக வன்னியர் நலன் தாண்டி, ஒட்டு மொத்த தமிழர் நலன் பேசுகிறதோ, செயல் படுகிறதோ, ்அப்போதுதான்

    ReplyDelete
    Replies
    1. பாமக எந்த விடயத்தில் தமிழர் நலன் பற்றி பேசவில்லை. கடந்த காலத்தில் பாமகதான் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உண்மையாக குரல் கொடுத்துள்ளது

      Delete
    2. டேய் அப்பா... ஏண்டா சாமி கொல்றிங்க. பா.ம.க அதன் கொள்கை வரைவில் வன்னியருக்கென்று தனியா ஏதாவது பத்திகள் ஒதுக்கி இருக்கா? இல்லை வருடம் முழுக்க விடுகிற அறிக்கையில் வன்னியருக்கென்று ஒரு விழுக்காடாவது அறிக்கை வருகிறதா? இல்லை அது முன்னெடுக்கும் போராட்டங்கள் எல்லாம் வன்னியருக்கானதா? ஷபா........ வன்னியர் வன்னியர்ன்னு உங்களுக்கு வன்னியர் மேல இருக்க வெருப்ப நல்லா காட்டுரிங்கடா சாமிகளா...

      Delete
  24. பெரும்பான்மையினருக்கு சாதியை வெளிகாட்டினால் ஆதாயம்

    சிறுபான்மையினருக்கு சாதியை காட்டிகொள்ளாமல் இருந்தால் ஆதாயம்

    ஏனெனில் பெரும்பான்மையினர் 10 க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் இருப்பான். அவன் சாதியை சொன்னால் 10 மாவட்டத்திலும் கட்சி வளரும் . ஆட்சியை பிடிக்க இயலும்

    அது இவர்களுக்கு பலம்

    ஆனால் சிறுபான்மையினர் இரண்டு மூன்று மாவட்டத்தில் இருப்பான் . அல்லது அனைத்து மாவட்டத்திலும் சிறுபான்மையாக இருப்பான். அவனுக்கு அவன் ஓட்டு வங்கியை வைத்து ஆட்சி அமைக்க முடியாது . அதனால் அவன் சாதி பேசாமல் சாதி அரசியல் செய்வான்

    எல்லாம் தமிழன் என்பான்
    ஆனால் அவன் சாதிக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும்

    ஆக இருவருக்கும் சாதி பாசம் உண்டு
    இருவர் செய்வதும் சாதி அரசியல்

    ஆனால் பெரும்பான்மையினர் தன்னை இன்ன சாதியாக காட்டிப்பார்

    சிறுபான்மையினர் தன்னை தமிழனாக "நாம் தமிழனாக" சாதி இல்லை என காட்டிப்பார்

    தட்ஸால் பாலிட்டிக்ஸ்
    wink emoticon

    ஆனால் பெரும்பான்மையானவன் , தன்னோடு இருக்கும் சிறுபான்மையினரையும் வாழ வைப்பான் வளர வைப்பான்

    ஆனால் சிறுபான்மையானவன் அரசியலில் பெரும்பான்மையானவனை வளர விடமாட்டான் .

    அது சிறுபான்மையின அரசியல் அதிகாரத்திற்கு ஆபத்தாகுமோ என்ற அச்சத்தை அவனுக்கு ஏற்படுத்தும் அதனால் .. ஆனாலும் பா.ம.க வை ஆதரிக்காததன் காரணம் ஒன்னு பா.ம.க வின் வாக்கு வங்கியை சரியாக அனலைஸ் செய்யாம இருக்கணும், இல்லை வன்னியர்கள் வந்து விடக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவரா இருக்கணும்.

    ReplyDelete
  25. I will also support மக்கள் நலக் கூட்டணி

    ReplyDelete
  26. உங்ளுடைய இந்தப் பதிவை பற்றி விமர்சித்த தி.மு.க பிரமுகர் ஒருவர் பத்ரியைப் போன்றவர்களின் எழுத்துக்களை மேலோட்டமாகப் பார்த்தால் அக்மார்க் அறிவுத் தெளிவு போலத் தான் தோன்றும். ஆனால் உண்மையில் இவர் கூறுவது போல் செய்தால் அது கடைசியில் மீண்டும் அ.தி.மு.க வைத் தான் ஆட்சி பீடத்தில் ஏற்ற உதவும்.காரணம் இவர் சொல்லக் கூடிய மக்கள் நலக் கூட்டணியில் மூன்றாவது பெரிய ஓட்டு சதவீதக் கட்சியான தே.மு.தி.மு.க வை மிகக் கவனமாக கழற்றி விடும் பாங்கு தான் தெரிகிறது. அ.தி.மு.க வின் ஓட்டு வங்கி என்பது கற்கோட்டை, அல்லது இரும்பு எஃகுக் கோட்டை போல. எந்த நிலையிலும் அது அதன் வாக்கு சதவீதத்தை, (வாக்காளர்களில் கணிசமானவர்கள் வயது, மூப்பு காரணமாக இறந்து போனால் ஒழிய) இழந்து விடாது. தே.மு.தி.மு.க வையும், பா.ம.க.வையும், பி.ஜே.பி யையும் கவனமாக ஒதுக்கி விடும் முனைப்பு தான் அவரது பதிவில் தென்படுகிறது. அப்படிக் கழற்றி விடும் பட்சத்தில் இது கடைசியில் அ.தி.மு.க வைத் தான் பலப் படுத்தும். பத்ரியின் இந்தப் பதிவை சற்றுக் கூர்மையாக, உற்று நோக்கி ஊடுருவி ஒரு எக்ஸ்ரே பார்வை கொண்டு எல்லாம் பார்க்கத் தேவையில்லை. மேலோட்டத்திலேயே அதில் இந்த அப்பட்ட உண்மை தான் அம்மணமாகத் தெரிகிறது. அதைத் திரு பத்ரி அவர்கள் அரசியல் ஆய்வு, விமர்சனம் எனும் எத்தனை அத்தர் கொண்டு மூடி மறைத்தாலும் உள்ளே உள்ள பூணூல் பார்வையை மறைக்க இயலவில்லை என்பதும் தெரிய, புரிய வரும் என்கிறார். ஐயா அ.தி.மு.க வுக்கு எதிரான வாக்கு சதவீதத்தை எவ்வளவிற்கு எவ்வளவு சிதறடிக்க முடியும் என்ற பிராமண பூணூல் முனைப்பு தான் இதில் அப்பட்ட அம்மண உண்மையாய் தெரிகிறதே ஒழிய தமிழ் நாட்டுத் தமிழர் நலன் துளியும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார். அதில் ஒன்றும் பொய் இருப்பது போலவும் தெரியவில்லை. இதில் உள்ள சில சொற்பதங்களைத் தங்களைக் காயப்படுத்துவற்காகப் பயன்படுத்த வில்லை. அதன் நீர்க்கப்பட்ட வடிங்களிலேயே கூட பயன்டுத்தியிருக்கலாம். ஆனால் இப்படியெல்லாம் பதிவிட்டால் முதலில் உங்கள் பதிவையே வெளியிடுகிறாரா எனப் பாருங்கள்.உண்மையான தர்க்க நியாயம் பேணுபவராய் இருந்தால் இந்தக் கருத்திற்கான எதிர் கருத்தில் தான் கவனம் செலுத்துவார். அதற்குப் பதிலாய் சொற்குற்றம் காட்டிப் பொருட் குற்றத்தை மறைக்க முயல மாட்டார் என்கிறார். அ.தி.மு.கவை விமர்சித்து அதற்கு எதிரான ஒரு நிலைபாட்டை போலக் காட்டிக் கொண்டே அ.தி.மு.கவை ஆட்சியிலமர்த்துவற்கான ஒரு உத்தி தானே ஒழிய எதிரான நிலைபாடல்ல என்கிறார். அப்படித்தானா?

    ReplyDelete
    Replies
    1. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.

      Delete
    2. அப்ப நீங்க அதிமுக வுக்கு ஓட்டு போடுங்க. மறமொகமா என்ன நேரடியாவே சொல்லுங்க.

      Delete
  27. யப்பா இல்லாத மா நா கூ வுக்கு இவாளோ பெரிய கட்டுரையா -நிஜம்மாவே சூப்பர் // அன்புமணி மட்டும் மட்டுமே தெளிவா இருக்கார் அப்ப எப்படி பின்னடைவு இருக்கும்.ஒரே மாற்றம் பாமாக தனித்து போட்டி என்று சொன்னதன் விளைவு தான் இத்துணை மாற்றம்.இனி எல்லா தேர்தலிலும் இரண்டு கழகமும் பிச்சை எடுக்கும் நிலைமை வரும். இதுவே மாற்றம் முன்னேற்றம்

    ReplyDelete
  28. i support makkal nala kootani

    ReplyDelete
  29. மிகத் தெளிவான, நேர்மையான பார்வை ; பாராட்டுகள் பத்ரி !

    ReplyDelete
  30. மக்கள் நலக் கூட்டணி வலுப்பெறட்டும். பத்ரி போன்றவர்களின் தற்போதைய நல்லெண்ணங்கள் கட்டாயம் ஈடேறும்.

    ReplyDelete
  31. இம்முறை என் வாக்கு , என் குடும்ப வாக்கு மக்கள் நல கூட்டனிக்குதன் , என்னால் முடித்த வாக்குகளை மக்கள் நல கூட்டனிக்கு மாற்ற முயற்சிப்பேன் ..........

    ReplyDelete
  32. ஒளிவு மறைவு இல்லாத தெளிவு.

    ReplyDelete
  33. Good. oru nalla samooka sevayai seytheerkal

    ReplyDelete
  34. //மந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.//
    இந்த வகையில் இந்தப் பதிவு எனக்கு ஒரு சில கோணங்களில் சரியான புரிதலை அளித்திருக்கிறது. நன்றி. என் ஓட்டு மக்கள் நலக் கூட்டணிக்கே.

    ReplyDelete
  35. இந்த மக்கள் நலக் கூட்டணி தேர்தலின்போது மம்மி நலக் கூட்டணியாகும். மக்கள் நலக் கூட்டணி நேர்மையானவர்களாலானது என்று பத்ரி சொல்வதால், அந்த நேர்மையானவர்கள் ஆதரிக்கும் ஜெயலலிதாவும் ஆதரிக்கப்படவேண்டியவர் ஆகிவிடுவார். அப்போது பத்ரியின் புரிதல் எந்த அளவு ஆழமானது என்பது தெளிவாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வியுவ்ல நான் சிந்தக்கலையே! இதுவும் ரைட்டு தான். :p

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Yes! I do go with Badri as he says. We are totally fed up with both major parties one after another for their limitless corruption. As pazha Karuppaiah said, it seems the ruling party engaged in centralised corruption and it is evident in the talk of every common man too. So it is better to vote for this Alliance to save TN. As you quoted I too missed voting for good candidates in the past for their no-popularity and nil-winning chance. This time me and we all shall consider only good candidates/good alliance to cast our vote irrelevant to that 'winner side syndrome'. Learned people and intelligent groups shall make the positive change. Enough is Enough!!

      Delete
  36. ஒருவேளை பத்ரி ம.ந.கூ வை ஆதரிக்காமல் பா.ம.க வை ஆதரித்திருந்தால் ஹிந்துமதத்தின் சாதிப்படிநிலையை பாதுகாக்கத் துடிக்கும் பா.ம.க வை பிராமண ஆதிக்க மனுவாத சிந்தனையாளர் பத்ரி ஆதரிப்பதில் ஆச்சர்யம் இல்லை என்று தலித்திய, திராவிட, பொதுவுடமையாளர்கள் பத்ரியை வசைபாடி இருப்பார்கள். பதரி இதற்கு பயந்து எல்லாம் ம.ந.கூ வை ஆதரிக்கிறார் என்று சொல்ல முடியாது, ஆனால் தலித்திய அட்ராசிட்டிக்கு எதிராக பேசுவதில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் பத்ரிக்கும் உண்டு. இந்த தலித்தியவாதிகளும், பத்ரியை போன்ற நபர்களும் ஒருங்கினைகிற இடம் எது என்று பார்த்தல் அது சமூகநீதிக்கு எதிரான கருத்தியலில் தான், வி.சி.க வும் சாதி வாரி இட ஒதுக்கீடு வந்தால் தங்களுக்கு இதுவரையில் கிடைக்கும் அதிக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும், இதனால் சாதி ரீதியில் மற்றவர்கள் ஆதிக்கம் பெறுவர்கள் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறது. இந்த கருத்தில் பத்ரிக்கு உடன்பாடு இல்லாமல் இருக்குமா? ஆக இது தான் ம.ந.கூ பக்கம் பத்ரி திரும்ப காரணமாக இருக்கும். என்னவோ சமூகநீதிக்கு எதிரான நபர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்ன சாதிக்க போறிங்கன்னு பாப்போம்.

    ReplyDelete
  37. ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் எம் எல் ஏ, எம் பி-க்களாக நிறைய வருடம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது இந்து வரையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஊழல் வழக்குகளோ இல்லை. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறார் என்பதற்காக திருமா அவர்களின் மீது சாதி சாயம் பூசுவது உள் நோக்கம் கொண்டது. அவர்களின் திட்டங்கள் மிகவும் தெளிவாக, நல்ல திட்டங்களாக உள்ளது. மதுவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற, ஊழல் இல்லாத, நல்ல ஆட்சி அமைய மக்கள் நல கூட்டணி தான் இன்றைய தேவை. பா மா காவின் கொள்கை நல்லதாக இருக்கலாம். அவர்கள் செய்த சத்தியங்கள் இதுவரையில் மீள பட்டே வந்துள்ளது. அன்புமணியின் சிபிஐ கேஸ் தீர்ப்பு வந்தபின் தான் அவரின் நேர்மை தெரியும். ஆக மக்கள் நலன் வேண்டுவோர் மக்கள் நல கூட்டணிக்கே வாக்களியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறார் என்பதற்காக திருமா அவர்களின் மீது சாதி சாயம் பூசப்படுகிறதா?? ஹிஹிஹி சாருக்கு மரக்காணம் கலவரத்தை கிளப்பி 2 பா.ம.க வினரை வி.சி.க கொலை செய்தது தெரியாது போல. அப்படி என்ன திருமாவிடம் நல்ல திட்டங்கள் இருக்கு கொஞ்சம் காட்டுங்க பாப்போம். பா.ம.க என்ன சத்தியத்தை மீறியது? ஹஹஹா அன்புமணி அரசியலுக்கு வந்தது தானே? அன்புமணி அரசியலுக்கு வந்ததால் உங்களுக்கெல்லாம் அரசியலில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட நாட்டத்தால் இப்படி காழ்புணர்வு கொண்டு பேசாதிங்க பாஸ். திருமாவளவன் கூடத்தான் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் மேடுகளில் இருந்து நான் சத்தியம் செய்து சொல்கிறேன், நான் எக்காலத்திலும் அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்றார், என்ன ஆனது அந்த சத்தியம்? அன்புமணி மீது விதி மீறல் வழக்கு இருக்கா மாதரி திருமா மீதும், வை.கோ மீதும் வழக்குகள் இருக்கு. தயவு செய்து கொஞ்சமாவது அறிவுபூர்வமா பேசுங்க சார்.

      Delete
    2. //பா.ம.க என்ன சத்தியத்தை மீறியது?//
      சாட்டையை கொண்டு அடிக்க சொல்லியும் அடிக்காம சத்தியத்தை மீறுனவர்கள் யாரு ன்னு கேக்குறாப்புல.

      Delete
    3. சாட்டைக் கொண்டு அடிக்கிறதெல்லாம் இருக்கட்டும், இது அந்த கட்சிக்கு உள்ளான விஷயம், தமிழக மக்களுக்கு அவர்கள் அதிகாரத்தில் இருந்த பொழுது செய்கிறேன் என்று செய்யாமல் விட்டது என்ன? திராவிட கட்சிகளுக்கும், வை.கோ, கம்யுனிஸ்ட் போன்ற வெளங்காத கட்சிகளும் செய்ய முடியாத பிராட் கேஜ் ரயில் பாதை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமைகள், 108 ஆம்புலன்ஸ் என உலக சாதனைகளை புரிந்துள்ளது பா.ம.க. அதனால ஏற்கனவே விலை போகாத உங்க சாட்டை பிரசாரத்தை மூடிட்டு வேற ஏதாவது புதுசா டிரை பண்ணுங்க சார்.

      Delete
  38. எனக்கு ஒன்னு மட்டும் புரியல. அன்புமநிகிட்ட நல்ல திட்டம் இருக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய திறமையும் இருக்கு, கடந்த காலங்களில் அவர் அமைச்சராக இருந்து இதை நிரூபித்தும் உள்ளார். இதை ஏற்கும் பத்ரிக்கு அன்புமணியை ஆதரிப்பதில் என்ன பிரச்சனை? சாதிய அரசியலால் பின்னடைவு என்கிற ஜால்சாப்பு எல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சரி அப்படியே பின்னைடைவாக இருக்கட்டும். அட ஒரே ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாமல் தினரக்கூடிய பரிதாப நிலையில் கூட பா.ம.க இருந்துவிட்டு போகட்டுமே! நல்ல திட்டம் இருக்கும் பொழுது அதை ஆதரிக்க வேண்டியது தானே? ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கிற பாமரத்தனமான மண நிலையை வெளிப்படுத்தும் விதமால்ல இருக்கு பா.ம.க வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு அதனால் ம.ந.கூ வை ஆதரிக்கிறேன் என்பது? அப்புறம் என்ன சார் நீங்களெல்லாம் சமூகத்தில் அடுத்த தலைமுறை சிந்தனாவாதிகள்? மக்களுக்கு சரியான ஒரு மாற்ற காட்டாம, இதுக்கு தான் வாய்ப்பு இருக்கும் என்கிற அடிப்படையில் வேண்டாத கட்சியா இருந்தாலும் அனுமானத்தின் அடிப்படையில் முன்னிறுத்துவது என்ன மாதரியான டிசையின்?

    ReplyDelete
    Replies
    1. அன்புமணி கிட்ட நல்ல திட்டம் இருக்கு?? எப்படி ஒரு ஜாதி கலவரத்தையும் கொலைகளையும் அரங்கேற்றலாம், அதன் மூலம் சில தொகுதிகளில் வெற்றி பெறலாம் னு திட்டம் இருக்கு. தருமபுரியில் அன்புமணி பெற்ற வெற்றி இளவரசனின் ரத்தத்தையும் உயிரையும் ஒரு பலி கொடுத்து, ஒரு பெண்ணை விதவை ஆக்கி பெற்ற வெற்றி. இதே நிலைமை அன்புமணி, ராமதாஸ், பாலு, குரு மற்றும் ஜாதி வெறியர்கள் அனைவருக்கும் வரணும், வரும்.

      Delete
  39. பத்ரி பல விடயங்களை பார்க்கவில்லையோ??
    கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கும், வி.சி.க வுக்கும், ம.தி.மு.க வுக்கும் இடையிலான ஓட்டு ஷேரிங் எப்படி இருக்கும்??
    வட மாவட்டங்களில் ம.தி.மு.க நிலைமையும், கம்யுனிஸ்ட் நிலைமையும் கிட்ட தட்ட ஒன்னு தான். ரெண்டு பேரையும் இங்க பூதக்கண்ணாடிய வச்சி தான் தேடனும்.

    கம்யுனிஸ்ட், வி.சி.க வுக்கு இடையில் ஓட்டு ஷேரிங் நல்லா இருக்கும், ஆனா அதனால் பிரயோசனம் என்ன? எப்படியும் வி.சி.க வட மாவட்டங்களில் தான் அதிக இடங்களில் நிற்கப்போகிறது. இங்கு கம்யுனிஸ்ட்டுகளுக்கு தொகுதிக்கு 1000 ஓட்டுகள் விழுவதே பெரிய விஷயம். ஆக கம்யுனிஸ்ட் எல்லாம் ஓட்டு ஷேர் பண்ணியும் ஒரு பிரயோசனம் இல்லை?

    அதே சமயம் ம.தி.மு.க பக்கத்தில் இருந்து வி.சி.க விற்கு ஓட்டு விழுவது சந்தேகம் தான், ஏற்கனவே வன்னியரான மாசிலாமணி; திருமாவுடன் கை கோர்த்தால் தான் கழகத்தையே மாற்றிக்கொண்டு தி.மு.க கூடாரத்திற்கு தாவினார், இதைப் போலத்தான் ம.தி.மு.க வில் இருக்கும் வன்னியர்கள் எல்லாம் ஆல்ரெடி தி.மு.க, பா.ம.க என எல்லாம் ஸ்ப்ளிட் ஆகி விட்டார்களாம். ம.தி.மு.க வில் வன்னியருக்கு அடுத்தபடியாக இருக்கும் பறையர்கள் ஆல்ரெடி வட மாவட்ட தனித்தொகுதிகளை தனக்குத் தரவேண்டி வை.கோ வுக்கு நெருக்குதல் கொடுத்துட்டு இருக்காங்களாம். கடைசி நேரத்தில் திருமா எல்லா தனித் தொகுதிகளையும் அள்ளிகிட்டு போனாருன்னா இன்னொரு கேங் தி.மு.க வுக்கு தாவ ரெடியாகிட்டு இருக்கு என்பதும் காத்துவாக்குல வந்துகிட்டு தான் இருக்கு. மற்றபடி ம.தி.மு.க வின், ரெட்டி, நாயுடு வாக்குகள் எப்பொழுதுமே லோகல் தி.மு.க வினரால் கடைசி நேரத்தில் வாங்கப்படுவது வழக்கம் தான். எனவே ம.தி.மு.க பக்கத்தில் இருந்து ஓட்டு ஷேரிங் என்கிற பேச்சிக்கே இடமில்லை.

    இதை எல்லாம் வச்சி பாக்கும்போழுது. வி.சி.க நிலைமை ரொம்ப பரிதாபம் தான். ஆனா ம.ந.கூ வை ஆதரிக்கும் பத்ரியின் நிலைமை இதைவிட பரிதாபமா இருக்கு.

    ReplyDelete
  40. ரொம்பத் தெளிவாகக் குழம்பியிருக்கிறீர்கள் பத்ரி!. ஊழலுக்கு முக்கிய காரணம் மக்கள்தான். மக்கள் இலவசம் இருந்தால் போதும் என்று இருக்கிறர்கள். - ரூபாய்க்கு மூணு படி அரிசி என்று சொன்னதும் காமராஜரையே தோற்கடித்தவர்கள். 2001-2006 அ தி மு க ஆட்சிக்கு என்ன குறை? தமிழகம் கண்ட நல்ல ஆட்சிகளில் ஒன்று. இலவச டீ வீ க்கு ஒட்டு போட்டார்கள். அதான் அ தி மு க இப்படி ஒரு ஆட்சி தருகிறது. - காவிரி, முல்லை பெரியாறு, மின் விநியோகம், நில அபகரிப்பு தடுப்பு, சட்டம் ஒழுங்கு என்று பல துறைகளிலும் முன்னேற்றம். நீங்கள் அரசு ஆர்டர் பிரச்சினை என்கிறீர்கள். சினிமாக்காரர்களைக் கேளுங்கள். அவர்கள் அம்மா ஆட்சிதான் நிம்மதி என்பார்கள்.
    நீங்கள் பேசாமல் கொஞ்சம் லைப்ரரி ஆர்டருக்காக - " சட்டைப் பித்தான் தைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்" கத்தரிக்காயில் முப்பது கறி வகைகள் . மங்கள வாழ்வுதரும் நாற்பது யோகங்கள் மாதிரி கொஞ்சம் புத்தகம் போடுங்கள். - எல்லாம் சரியாப் போகும்.

    வைக்கோ முதல்வரா? அய்யகோ!

    ReplyDelete
    Replies
    1. The Vaiko is more better than liers like Jayalalitha and Karunanith, he always express the heart feelings not like above Gang Robbers

      Delete
    2. அமாம், ஆமாம் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்கு போடுகிறேன் என்கிற பேர்வழியில் அந்த ஆலை காண்ட்ராக்ட் வேலைகள் எல்லாம் தன் மச்சானுக்கு வாங்கிக்கொடுத்த நல்லவர் தானே வை.கோ, அது மட்டுமா புகையிலை விநியோகஸ்தராகவும் பல கொடிகளில் புரண்டுகொண்டு மதுவை மட்டும் எதிர்கிராராம். கிளம்புக்கப்பா.. எனக்கு வேற வேலை இருக்கு.

      Delete
  41. There is no evidence of data analysis. Can you please give a break up, under what basis you say "மக்கள் நலக் கூட்டணி" will win? Thanks.

    ReplyDelete
  42. Not sure this data is accurate, can someone confirm it.

    Vanniyar 20%
    Mutharaiyar(its 29 subcastes) 19%
    Kongu vellala gounder 10%
    Nadar 8%
    Thevar 7%
    Pillai,Mudaliyar 5%
    Reddiyar,Chettiar,Naidu 3%
    SC(Pallar,Paraiyar,Chakiliyar) 18%
    Muslim,+Christain 9%
    what else is left in this list?

    ReplyDelete
    Replies
    1. Vanniyar - 12%, Kongu - 8%, Nadar 8%, Pillais- Vellalars - 5%, Thevars-Mukkulaththors -10% - Mudaliyars - 4%, Muththarayars - 5%, Muslims -5%, Chriistians( including ones declared as Hindus)-8%, Dalits 16%- Brahmins ( Tamil, telugu,Kannada,marathi)-5%, Telugu Naidus/Nayakkars -10%.

      Delete
    2. இதெல்லாம் எனனது?

      Delete
    3. ஜாதி வெறியர்கள் - 10%
      மனிதர்கள் - 90%

      கூட்டி கழிச்சு பாரு. கணக்கு சரியா வரும்.

      Delete
  43. Badri,

    I have one criticism of your views. Recently i watched TV Show Samvidaan - making of Indian constitution episode 9. Indian constitution is parliamentary. Founders of India were intending for the electorate to vote for the best candidate who will represent the consituencies interests. Believe long ago we the electorate departed from this vision and converted the parliamentary election into a presidential one. DMK-ADMK is a symptom of this crisis.

    The day we are able to educate ourselves better is the day when we will break the shackles of electing right legislature from which the best would be chosen as executive. Until then like you have advocated our confusion in choosing the best of the worst will continue.

    Murali

    ReplyDelete
  44. 2016 சட்டமன்ற தேர்தலின் ம.ந.கூ என்ற நால்வர் அணியில் இருக்கும் வி.சி.க; கிட்ட தட்ட தனியா நிக்கிற மாதரி தான், ஏன் என்றால் வட மாவட்டங்களில் ம.தி.மு.க, கம்யுனிஸ்ட் கட்சிகளை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடனும். அப்படி இருக்கையில் ஏன் இந்த ஆபத்தான முடிவை திருமாவளவன் எடுத்தார் என்றால் தி.மு.க வி.சி.க வை கழட்டி விடும் முடிவுக்கு வந்துவிட்டதாம், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வி.சி.க வாக்குகளை நம்பி ஓட்டு மொத்தமா வன்னியர் வாக்குகளை இழந்துவிட்டதாம் தி.மு.க. இதனால் தி.மு.க வில் உள்ள பெரிய தலைகள் தி.மு.க வின் ஆரம்பகட்டமான 1957,1962,1967 ஆகிய காலகட்டத்தில் நடந்த தேர்தல்களில் 90 விழுக்காடு வெற்றி பெற்ற தொகுதிகள் எல்லாம் வட தமிழகத்து வன்னியர் பெரும்பான்மை தொகுதிகளாம், கிட்ட தட்ட தி.மு.க வின் பேக் போனும் வன்னியர் வாக்குகள் தானாம், இந்த நிலையில் தி.மு.க வின் இன்றைய நிலை கட்சிய துவங்கிய காலகட்டதை போன்றே மாறியுள்ளதால், மறுபடியும் வன்னியர்களை வளைத்தால் தான் கட்சி கரை சேரும் என்று தி.மு.க வில் உள்ள பெரிய தலைகள் அறிவுறுத்த கருணாநிதியும் சரிதான் என்று ஏற்றுக்கொண்டாராம். எனவே வரும் தேர்தலில் திருமாவளவனை பக்கத்தில் வைத்துக்கொள்வது தனக்குதானே சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் என்று முடிவெடுத்த நிலையில். திருமாவளவன் வன்னியர்களுக்கு எதிராக திரட்டிய ஒரு கருத்தரங்கிற்கு தலீவரை இன்வைட் பண்ண போனாராம். ஆனால் தலீவர் நாசூக்காக கழண்டுகிட்டாராம். பின்னர் விவரம் தெரிஞ்சவங்க திருமா கிட்ட மேட்டரை சொல்ல, தானா கழன்டுகிட்டு போனா மரியாதையாவது மிஞ்சும் என்று தனியா போய் ஆட்சியில் பங்கு என புது புருடாவை கிளப்பினாராம். ஆண்டிகள் எல்லாம் சேர்ந்து மேடம் கட்டிய கதையாக ஏற்கனவே ஜெயலலிதாவால் கழட்டி விடப்பட்ட ம.தி.மு.கவும் காம்ரேடுகளும் பின்னர் ஒன்று சேர்ந்தது உலகறியும். இது போகாத ஊருக்கு வழி என்று தெரிந்து தான் ஜவாஹிருல்லா பின்னாளில் எஸ்கேப் ஆனாராம். ஆக மொத்ததுல இந்த தேர்தல் திருமாவளவனுக்கு ஒரு அக்கினி பரீட்சை தான் என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். ம.தி.மு.க வில் காம்ரேடுகளும் செத்தாலும் வீரமரணம் என்கிற ரீதியில் மட்டுமே இந்த தேர்தலை எதிர்கொல்கிரார்களாம்.

    ReplyDelete
  45. பத்ரிக்கு இன்னொரு வரலாற்றையும் நியாபகப்படுத்த விரும்புகிறேன், சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் கிட்ட தட்ட அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் ஆட்சியமைக்க முடியாமல் திணறினர், அதற்கு காரணம் அன்று வன்னியர்கலான விழுப்புரம் ராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயகர் போன்றோர் தனிக்கட்சி துவங்கி தேர்தலை சந்தித்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்று காமராஜர் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் படியாக போய் விட்டது. பின்னர் படையாட்சியாரும், நாயகரும் கொடுத்த ஆதரவால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது, பின்னர் காங்கிரஸ் மறுபடியும் வன்னியர்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கவே, வன்னியர்கள் திராவிட இயக்கத்தின் பக்கம் தன் பார்வையை திருப்பினர் தி.மு.க தன் ஆரம்ப கால கட்டங்களில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான தொகுதிகள் எல்லாம் வன்னியர்கள் வாழும் தொகுதிகளே. உதயசூரியன் சின்னமே தி.மு.க விற்கு ஒரு வன்னியர் கொடுத்த பிச்சை தான். அதே போன்று நேருவை விட அதிக வாக்குகள் வாங்கிய வன்னியர் என தேசிய அளவிலும் மாநில அளவிலும் தன்னுடைய எழுச்சியை பல முறை காட்டிய வன்னியர்கள் இந்த தேர்தலில் தூங்கிக்கொண்டிருப்பார்கள் என்று பத்ரி எப்படி நினைக்கிறார் என்று தான் தெரியவில்லை! சுதந்திர இந்தியாவில் தன் சமூகத்தின் முதல் முதல்வர் வேட்பாளரை சந்திக்கபோகும் தேர்தலை வன்னியர் சமூகம் எல்லா தேர்தலைப் போன்று பார்க்கும் என்று நீங்கள் எல்லோரும் நினைத்தால் உங்களைப் பார்த்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

    ReplyDelete
  46. வாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நாம் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.

    இது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது

    நல்ல ஆழமான கருத்துடன் கூடிய பதிவு தற்போதைய அரசியல் சூழ்நிலையை இதைவிட யாரும் தெளிவாய் எடுத்துரைக்க இயலாது

    ReplyDelete
    Replies
    1. இது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள்.
      எனது எண்ணமும் அதேதான்

      Delete
  47. During the last 15 days I have intracted with several hundred people. Overwhelming majority dont want ADMK and DMK. Their preference is People's Welfare Front
    What attracts them towards it is the Corrupt free leadership

    ReplyDelete
  48. இயல்பாக எழும் அனைத்து கேள்விகளையும் எழுப்பி...
    இன்றைய நிலையில் எது சரி என்று நீங்கள் எடுத்திருக்கும் முடிவோடு நானும் உடன்படுகிறேன்

    ReplyDelete
  49. Nicely articulated post that will bring clarity among voters

    ReplyDelete
  50. ஜனதா கட்சி மக்கள் நல கூட்டணியின் amalgamated உருவமாக தான் இருந்தது போல் எனக்கு தோன்றுகிறது. Integrated ஆகவும் ஒருமித்த கருத்துக்களும் எவ்வளவு நாள் தாங்கும் என்று சொல்ல முடிவதில்லை.

    ReplyDelete
  51. Makkal Nala kootani will be disastrous. All those leaders know only Dharna.. none of them capable of giving any solutions... They will fight with center everyday....

    ReplyDelete
  52. One question for you...Badri..Why you have not considered Naam tamizhar Katchi for your analysis...Don't you consider them for an option to vote..? My personal opinion If I am voting Makkal Nala Kootani..It is same that we are voting for DMK and ADMK..My question to you is why you haven't included NTK in your analysis..Why you are not proposing them..for vote?

    ReplyDelete
  53. முக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.

    எனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.

    ReplyDelete
  54. இம்முறை என் வாக்கு , என் குடும்ப வாக்கு மக்கள் நல கூட்டனிக்குதன்

    ReplyDelete
  55. Makkal nala kuttanikku makkalidamum valithalangalium perugi varum aatharaukku valthukkal.thiru batri nadunilaiyaga alasuvathagave nambuoom.vimarsanam mukkiyam illa maatram vanthal sari than enathu voteum makkal nala kuttanikkeaaa...sathiya pagupadu pesieaaaa veena ponathu poothum....maattram vendum yosinga nanbarkalea....

    ReplyDelete
  56. Very nice informative analysis. Appreciate if you made some analysis on NAAM TAMILAR too. From the beginning, Seeman is very clear in his party's vision & criticizing both ADMK/DMK & DMDK too. Anyways my favorite is MNK (though slightly have soft corner for NAAM TAMILAR). Still i want to analyse any Independent candidate in my constituency, if found he is good & "ABLE" to implement good. Definitely my vote not for ADMK,DMK,DMDK or PMK.

    And Dear Mr Badri, hope you wont mind if i put your above article in my facebook. Thanks

    ReplyDelete
  57. Like Vaiko&Co Badri Seshadri is also seriously trying to bring admk back to power.
    Badri is Misleading and hiding many facts.
    Communal forces like VCK are much more danger than Corruption. Communal forces should never be brought to power to rule a state.

    ReplyDelete
  58. Badri Seshadri is Misleading and hiding many facts. Communists have spoiled West Bengal, Kerala, Tripura etc where they have ruled for many years. Milk and honey are not running in those states. Unemployment and labour problem is a huge problem in West Bengal.
    Whoever Wants to bring communists to power should once visit West Bengal to see the pathetic situation there.
    Coalition government will not work in any states. Recent example is Bihar. When Nithish was ruling with single majority things were going very well.
    But today under coalition government it is entirely different. Nithish cannot control the crimes effectively as he was doing earlier. Under coalition government there will be couple of chief ministers and many hands will be on the rise.
    VCK is as good as PMK in spreading communal violences. Recently 4 VCK cadres are convicted on murder charges of PMK functionaries. Ramadoss alleging that VCK is behind the murder of 3 SVS college girls. A cbi enquiry may reveal that.
    Vaiko speaks about total prohibition. cigarette is TEN times danger than alcohol. Can Vaiko tell his son to leave cigarette business from which he makes huge money.
    Badri is as good as Vaiko & Co in indirectly bringing admk back to power.
    But Tamil nadu electorates will only toss the coin between admk and dmk for the benefit of states.
    Finally bringing Communal and caste parties to power is much more danger than Corruption.

    ReplyDelete
  59. Dear Mr. Badri,
    Really I am very much thankful to you, for the message from your heart. It shows very clear to the Tamilnadu people to vote for whom. I have decided when they formed the Koottani. I again conformed by your message. Poor tamilnadu people are struggling because of the wrong Management Owners of Tamilnadu Karunanithi and Jayalalitha and their allies.Please encourage Makkal nala koottani further and I am living in Saudi Arabia and I will come to vote for tamilnadu definitely because of you.

    ReplyDelete
  60. Good message to the neutral people

    ReplyDelete
  61. பின்னூட்டத்திலும் பெருகுகிறது மக்கள் நலக்கூட்டணிக்கான ஆதரவு.
    நல்லதொரு கட்டுரை.அதோடு தீர்மானமாய் உங்கள் ஆதரவை சொன்னதற்கும் பாராட்டுகிறேன் பத்ரி.(பாராட்டலாம் தானே!)

    ReplyDelete
  62. மக்கள் நலக்கூட்டணி க்கு ஆதரவளிப்போம்

    ReplyDelete
  63. Good message to people of Tamilnadu Thanks to Mr.Badri.

    ReplyDelete
  64. மாற்றத்திற்க்கான விதையை விதைத்தவர்களே பா.ம.க.வும் அன்புமனியும்தன் .அவர்கள் தி மு க ,அ.தி மு க. மாற்று என்று கூறவில்லையெனில் மக்கள் நல கூட்டணியே இருந்திருக்காது. அப்படியிருக்கையில் பா.ம.க. வை விளக்கி வைப்பதாக நடுநிலை போர்வையில் கூப்பாடு போடுவது சாதியை உணர்வு அன்றி வேறில்லை .சாதி இல்லாமல் தமிழ்சாதி இல்லை. இதுதான் இன்றிய யதார்த்தம் .

    ReplyDelete
    Replies
    1. உண்மை. ம.ந.கூ வை உருவாக்குவதற்கு கொஞ்ச நாள் முந்தி வரையில் இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று தமிழகத்தில் உருவாகவில்லை என்று சொல்லிக்கிட்டு கிடந்தார் திருமா, தி.மு.க கூட கூட்டணிக்கு ஆயத்தமானார் வை.கோ. இடையில் ஒருசில வாரங்களில் ஏற்பட்ட ஏதோ ஒரு மேட்டர் இவங்க ம.ந.கூ என்ற ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர்.

      Delete
    2. பா.மா.கா ஒரு கட்சியே கிடையாது, அது வன்னியர் சங்கம் அவ்வளவுதான்.

      Delete
  65. என் வாக்கு, என் குடும்ப வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்கே

    ReplyDelete
  66. பாமக மேல் தொடர்ந்து சாதிய சாயம் பூசுவதே உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள்தான். மரக்கானம் கலவரம் விசிகவால் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்ட சதி. இதைப் போன்றுதான் தருமபுரி விடயமும். ஊதி ஊதி பாமக வை வசைப்பாடி உங்களைப் போன்றோர் பெரும்பாண்மை சமூகத்தின் மேல் ஒட்டு மொத்த வன்மத்தையும் கட்டவிழ்த்தீர். இப்போது பாமக மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு தனித்து, மதுவிலக்கு, இலவச கல்வி,இலவச மருத்துவம், இலவச சுகாதாரம் போன்ற மிகச்சிறந்த தேர்தல் வரைவு வாக்குறுதிகளை தந்துவிட்டு களம் காணும்போது, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற அற்ப ஆசைக்காக எந்தவித மக்கள் நலன் என்கிற விடயமும் இல்லாமல், அவர்களின் நலனை மட்டும் அடிப்படையாக கொண்டவர்களுக்கு ஆதரவா? என்னய்யா உங்க நியாயம். மறைமுக அதிமுக ஆதரவுதான் உங்களின் இந்த மநகூ ஆதரவு. ஊடக தர்மத்தை வாழ்வில் இந்த முறையாவது கடைப்பிடியுங்கள். அன்புமணியின் சுகாதார துறை சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பதை மறவாதீர். மாற்றமும், முன்னேற்றமும் வேண்டுவோர் அன்புமணியை நிச்சயம் ஆதரிப்பார்கள். எனது வாக்கு அன்புமணிக்கே

    ReplyDelete
  67. பொன்.முத்துக்குமார்Fri Feb 12, 04:25:00 AM GMT+5:30

    அடேங்கப்பா, இந்த பதிவுக்கு மட்டும் எத்தனை பின்னூட்டங்கள் ? தமிழர்களுக்கு கழகங்களும் கட்டவுட்டுகளும் போதும் போலும் :) அதிலும் பா.ம.க-வுக்கு ஆதரவாக பத்ரியை விமர்சித்து எவ்வளவு நுரை தள்ளல்கள் :)

    ReplyDelete
  68. எனக்கு ஒன்னு மட்டும் புரியல. அன்புமநிகிட்ட நல்ல திட்டம் இருக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய திறமையும் இருக்கு, கடந்த காலங்களில் அவர் அமைச்சராக இருந்து இதை நிரூபித்தும் உள்ளார். இதை ஏற்கும் பத்ரிக்கு அன்புமணியை ஆதரிப்பதில் என்ன பிரச்சனை? சாதிய அரசியலால் பின்னடைவு என்கிற ஜால்சாப்பு எல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சரி அப்படியே பின்னைடைவாக இருக்கட்டும். அட ஒரே ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாமல் தினரக்கூடிய பரிதாப நிலையில் கூட பா.ம.க இருந்துவிட்டு போகட்டுமே! நல்ல திட்டம் இருக்கும் பொழுது அதை ஆதரிக்க வேண்டியது தானே? ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கிற பாமரத்தனமான மண நிலையை வெளிப்படுத்தும் விதமால்ல இருக்கு பா.ம.க வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு அதனால் ம.ந.கூ வை ஆதரிக்கிறேன் என்பது? அப்புறம் என்ன சார் நீங்களெல்லாம் சமூகத்தில் அடுத்த தலைமுறை சிந்தனாவாதிகள்?எந்த கொள்கையும் இல்லாத மநகூ ஆதரவு கொடுக்க வேண்டுமா! என்ன சார் நியாயம்? இதில் சாதி சாயம் பூசுவதே உங்கள மாதிரி ஆளுங்களுக்கு வேளையா போச்சி. நடந்த எல்லா கலவரங்களுக்கும் திராவிட கைகூலியா இருந்தது விசிக என்பது பாவம் பத்ரிக்கு தெரியாமல் போய்விட்டததோ?

    ReplyDelete
  69. Now we have to choose only two parties whether dmk or aiadmk.I think aiadmk has got a slight edge over Dmk of the credibility factor dmk has sacrificed tamils interest at the national and internatinal level for its personal reasons.

    ReplyDelete
  70. அனைவரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்

    ReplyDelete
  71. PMK should form a limitted agenda alliance with Makkal nala kootani

    ReplyDelete
  72. தலித்துகளின் தலைவராக தன்னை அடையாளம் காட்டிகொள்ளும் தொல்.திருமாவளவன் தி.மு.க ,காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் வெற்றிபெற்ற சிதம்பரம் மற்றும்,கடலூர் தொகுதி தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக இதுவரை என்ன செய்துள்ளார் என்பதை பட்டியலிட்டு கூறமுடியுமா ?

    ReplyDelete
  73. என் ஓட்டு மக்கள் நலக் கூட்டணிக்கே...

    ReplyDelete
  74. பெருகுகிறது மக்கள் நலக்கூட்டணிக்கான ஆதரவு,இம்முறை என் வாக்கு , என் குடும்ப வாக்கு மக்கள் நல கூட்டனிக்குதன்

    ReplyDelete

  75. ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் எம் எல் ஏ, எம் பி-க்களாக நிறைய வருடம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது இந்து வரையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஊழல் வழக்குகளோ இல்லை,ம. ந. கூ நம்பகத்தன்மை பொது மக்கள் பொது மக்களால் அங்கீகரிக்கப்படும்.

    ReplyDelete
  76. பத்ரி உங்களை போன்ற சிந்தனையாளர்கள் இது போன்று சிந்திக்கும் பொழுது தான் உங்களை கேவலமாக நினைக்க வைக்கின்றது. மக்கள் நல கூட்டணியில இருக்குற எவனுக்கு என்ன தெரியும்?? அவனுங்க தேர்தல் அறிக்கை பார்த்தீங்களா??? பாமக வின் தேர்தல் அறிக்கைக்கு 72% மக்கள் ஆதரவு news7 தொலைக்காட்சியில், பாமகவை ஆதரிப்பதில் என்ன உங்களுக்கு வஞ்சம்.. உன்னை போல கேடு கெட்டவனையெல்லாம் என்ன சொல்வது?? போயா போ.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப மரியாதை தெரிந்தவராக இருப்பிங்க போல.

      Delete
  77. இங்கு பாமகவுக்காக கமெண்ட் போடுபவர்கள் யாராவது வன்னியரல்லாதோர் இருக்கிறார்களா என்று அறிய ஆவல்.

    ReplyDelete
  78. பத்ரிநாத்துடன் எந்த வகையிலும் நான் உடன் பட்டது கிடையாது. அதே சமயம் அவர் மீது வெறுப்பொன்றும் கிடையாது.தமிழகத்தில் பிஜேபி வளர வேண்டும் என்கிற நினைக்கிறவர்கள் அனைவருமே நேரடியாக பிஜேபிக்கு ஓட்டு போடுகின்றவர்கள் அல்ல.அவர்கள் அனைவருமே தமது ஓட்டுக்களை வீணாக்காமல் இன்றைக்கு பிஜேபியின் சித்தாந்தங்களை இதயத்திலும் மூளையிலும் கொண்டிருந்தும் தவிர்க்க முடியாதபடி ஒரு 'திராவிட' கட்சியின் தலைமையாக இருக்கின்ற ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் .இந்த சாதுர்யமான ஆதரவு கொல்லைப்புற வழியில் வந்து விழுவது தான் வெளிப்படையாக சிறுபான்மை ஓட்டுகளில் ஓட்டை விழாமல் அதிமுகவை காப்பற்றி வருகிறது.எந்த உடனடி பலனையும் எதிர்பார்க்காமல் பிஜேபியின் சாகாக்கள் அதிமுகவுடன் கூட்டு அமைந்து அதனோடு கூடி கரைக்கும் தங்களது மராட்டிய பாணி கனவை தொடர்கிறார்கள்.இதை மிகச்சரியாக புரிந்து கொண்டுள்ள அதிமுகவின் தலைவி தனது சொந்த நெருக்கடிகளை தீர்க்கும் தேவை எழுகின்ற வேளையிலும் கூட பிஜேபியுடன் கூட்டு என்கிற தற்கொலைப் பாதையை ஏற்பதாக இல்லை.இது தவிர ஜெயலலிதாவின் அதீத தன்னம்பிக்கை யாருடனும் கூட்டு சேர அனுமதிக்கவில்லை.ஆட்சியில் இருக்கும் போது அவர் வழக்கமாக நடந்து கொள்ளும் முறைதான் இது. இந்தவிதமாக அவர் ஆட்சியை -வழக்கம் போல- பறிகொடுப்பது தவிர்க்க முடியாது என்பதை சென்னை வெள்ளத்திற்கு பிந்தைய களநிலவரம் உறுதிபடுத்துகிறது.எந்த நேரத்திலும் தனது யோசனைகளை படித்து புரிந்து கொள்ள தயாராக இல்லாத ஜெயலலிதாவை அப்படியே விட்டு விட ஜெ விசுவாசிகளுக்கும் ஏன் பிஜெபிக்காக காத்திருக்கும் சாகாக்களுக்கும் மனம் வருவதில்லை.தாமே யோசித்து அவருக்கு நன்மை பயக்கும் காரியங்களை தன்னெழுச்சியாக இழுத்து போட்டுக் கொண்டு செய்வது அவர்களது வாடிக்கை.இந்த அர்ப்பணிப்பு உணர்வு பல்வேறு தளங்களிலும் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.இங்கேயும் அதனையே ஒரு நுட்பமான ’யுத்த’ தந்திரத்தோடும் தேர்ந்த செய்நேர்த்தியுடனும் பார்க்கிறேன்.எந்த விதத்திலும் முட்டுக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற அதிமுக அரசை காப்பாற்றும் நேரடி நடவடிக்கையை குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் விலை போகின்ற அதிமுக அடிமை அல்லது இன்னொவாவுக்கு ஏமாந்த சம்பத் போன்றவர்கள் நிலையில் ஒரு பத்ரி செய்தால் என்னாவது? அதானால் தான் தன் கனவிலும் ஏற்க மறுக்கும் கம்யூனிஸ்டுகளையும், ஈழமோ, கூடங்குளம் அணுஉலையோ எந்த பிரச்சினையிலும் தன்னால் ஏற்க முடியாத சிறுத்தைகளையும், வைகோவையும் பத்ரி சேசாத்ரி தற்காலிக ஏற்பாடாக ஏற்று கொள்வதாக அறிவிக்கிறார். ஒருவரை ஏற்க வேண்டுமானால் அவரது கொள்கைகளை செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக இருப்பது தான் பத்ரி போன்ற அறிவு ஜீவிகளுக்கு உகந்ததாக இருக்க முடியும். அதைவிடுத்து இரண்டு பெரிய கட்சிகளும் சரியல்ல, தான் விரும்பும் பிஜெபியும் இன்னும் வளரவில்லை என்பதால் தனக்கு எந்த வகையிலும் உடன்பாடில்லாத ம ந கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருவதன் உண்மையான நோக்கம் தான் என்ன என்கிற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

    ReplyDelete
  79. ஒரு கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுத்தால் அவர்களை கொஞ்சமேனும் பாராட்ட வேண்டும்.அப்படியொன்றும் பாராட்ட தகுதியில்லாவர்களாக அவர்கள் இல்லையே? குறிப்பாக இன்றைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைமையோ அணிகளோ எல்லோருமே ஏறத்தாழ ஒரே வகையினர் தாம்.ஒரு வட்ட செயலாளரோ, வார்டு கவுன்சிலரோ யாரகினும் அவர்கள் அரசியல் நடவடிக்கை என்பது ஒரு ஆளும் கட்சியின் அதே பதவியில் உள்ள எவரோடும் இணைவைக்க தகுந்தது தான்.அடிதடி,மாமுல், ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து இன்ன பிற. இதில் ஒப்பீட்டளவிலேனும் குறிப்பிடத்தக்க அளவில் சரியாகவும் மக்கள் நலன் நாடும் வகையில் போராடுகின்ற அணிகளையும் கொண்ட அமைப்பை வைத்திருப்பவர்கள் கம்யுனிஸ்டுகள் தாம்.அவர்களை ஏன் பத்ரியால் பாராட்ட முடியவில்லை? ஒவ்வொரு பகுதியில் இருக்கின்ற பிரச்சினைகள் முதல் சர்வதேச பிரச்சினைகள் வரை சலிக்காமல் வீதியில் இறங்கி மக்கள் நலன் விரும்பி ஆத்மார்த்த அரசியல் செய்யும் அவர்களின் நடவடிக்கைகளை ஏன் பத்ரியால் பாராட்ட இயலவில்லை? ஏனென்றால் பத்ரியின் மனம் விரும்புபவர்களாக கம்யூனிஸ்டுகள் இருந்ததோ இருக்க போவதோ இல்லை.இப்படியெல்லாம் அவர்களை பாராட்டி விட்டால் பின்னாளில் ஒரு பத்தாம் பசலியாக ஆட்டுமந்தையாக அவர்களை தன் மனம் விரும்புகின்ற வகையில் சித்தரிப்பதில் ஒரு முரண் வந்து விடுமல்லவா?ஆக ம ந கூட்டணியின் கொள்கைகளையும் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற குறைந்த பட்ச செயல் திட்டத்தையும் விவாதித்து அதில் எதுவெல்லாம் தனக்கு உடன்பாடு என்று அறிவிக்காமலே அல்லது பெரும்பகுதி ஏற்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக கூட அறிவிக்காமலே அதன் 4 தலைவர்கள் வரை ஒரு நம்பிக்கை இருப்பதாக சொல்வது பத்ரி போன்ற அறிவு ஜீவிகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா? இந்த 4 பேர் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்வதென்றால் ஏற்கனவே பலரும் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த் என ஆளாளுக்கு நம்பி தொலைக்கின்ற பாமரத்தனமல்லவா? அந்த பாமரத்தனத்தையா பத்ரி போன்ற அறிவு ஜீவிகளும் முன்மொழிவது? ஆக ம ந கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தையும் ஆதரிக்காமல் அவர்களை மனசார புகழ்வதற்கும் ஒத்திசைவு இல்லாத நிலையில் ஒரு பிஜேபி, ஆதரவாளராகவும், பிறப்பால் ‘’உயர்’’ சாதி இந்துவாகவும் இருக்கும் ஒரு அறிவி ஜீவி வழங்குகின்ற இந்த ஆதரவு என்பது திமுக எனும் அரைகுறையாகவேனும் திராவிடம் பேசும் கட்சியை ஒழிக்கும் உத்தியாகவே பார்க்கப்படும்.இது ஆரிய சூழ்ச்சி என்று சொன்னால் நம்புவதற்கு முகாந்திரம் அமைந்து விடுகிறது.
    இந்த நாட்டின் ஒவ்வொருவரும் சாதியால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். பலரும் அதனை விரும்பி ஒழுகுகிறார்கள்.பெருமை பொங்க பேசுகிறார்கள். ஆனால் பொதுவெளியில் செயல்பட வருகிறவர்கள் தமக்கு சாதிய உணர்வில்லை என்பதை வெளிக்காட்டி கொள்கிறார்கள்.அதில் இரு பிரிவினர் உண்டு.1.சாதிய உணர்வற்று இருப்பது தான் நாகரீகம் என்கிற உணர்வுடன் அப்படி நயம் பட நடிப்பவர்கள் உண்டு.2.சாதிய உணர்வுக்கு அப்பற்பட்டு தான் இருந்தும் தாம் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னே தன் சாதிய நலன் அல்லது பெருமிதம் இருப்பதாக யாராவது கருதிவிடக்கூடாது என்று கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.பத்ரி எப்படி என்பதைப் பற்றி அவர் மட்டுமே அறிவார். இந்த அவஸ்தை அவருக்கு இருப்பதால் தான் ஒரு ’’சோ’’ போல புரிந்து கொள்ளப்படக் கூடாது என்று மெனக்கெடுகிறார். சுப வீ க்கு தனது பழைய பதிவுகளை ஆதாரம் காட்டுகிறார். உண்மையில் “உயர்” சாதி பிறப்பு என்பது அதன் சார்பு மற்றும் பெருமிதங்கள் அற்ற ஒருவரை சங்கடப்படுத்தும்.ஆனால் இந்த நாட்டில் தாழ்த்தபட்டவனாக பிற்படுத்தப்பட்டவனாக ஒரு மனிதன் படுகின்ற வேதனைகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு கொசுக்கடி தான்.ஏன் முஸ்லிமாக பிறந்த ஒருவன் எல்லா இடங்களிலும் தனது தேச பக்தியை நிரூபிக்க வேண்டியிருக்கிறதே?

    ReplyDelete
  80. Good perception myvote also to MNK .It will succeed 2016 assembly election

    ReplyDelete
  81. வணக்கம் திரு பத்ரி. உங்களைக் கேள்விகேட்டு, திரு சுப.வீ.அவர்கள் எழுதிய பதிவுக்குப்பின், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_14.html

    ReplyDelete
  82. தேவையான பதிவு சார். தமிழகத்தில் இன்னொரு-முறை தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வந்தால், அதைவிட பேரழிவு வேறெதுவும் இருக்க முடியாது. நல்லகண்ணு,வை.கோ போன்ற நேர்மையான தலைவர்கள் இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு தாராளமாக ஒரு வாய்ப்பு அளிக்களாம். I support மக்கள் நலக் கூட்டணி.

    ReplyDelete
  83. மக்கள் நலக் கூட்டணிக்குத்தான் என் ஓட்டும். பாமக வின் தேர்தல் அறிக்கை பிடித்திருந்தது. ஆனால் காடுவெட்டி, இங்கு பின்னூட்டம் எழுதும் சுரேந்தர் போன்ற வெறியர்களைக் கட்டுபடுத்தும் அளவு துணிவு அன்புமணிக்கு இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
  84. Thanks to Badri for this wonderful article.... my choice also to People's Welfare Front

    ReplyDelete
  85. எளிய மக்களின் பல கேள்விகளுக்கும் எளிய முறையில் புரியும் வகையில் வலுவான வார்த்தைகள். நன்றிகள் பத்ரி. .எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் நல கூட்டணிக்கே வாக்களிப்போம். ...

    ReplyDelete
  86. Thanks to Mr.Badri for the good analysis about the poll scenario and the conclusion of him for Makkal Nala Kottani. But in your analysis have not included Mr.Seeman's Naam tamizhar - Policies and its good intentions about Tamilnadu and its People.

    ReplyDelete