தற்போது நாட்டில் பேசப்பட்டுவரும் பல்வேறு பிரச்னைகளில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதற்கு நான் பயன்படுத்தும் உரைகல், ‘தனிமனித சுதந்திரம்’ என்பது. இதற்கு அடிப்படையாக இருப்பது தனிமனிதவாதம் (Individualism) என்ற கோட்பாடும் லிபரலிசம் என்ற கோட்பாடும்.
நாம் அனைவரும் அடிப்படையில் தனி மனிதர்கள். பிற குழுக்களின் உறுப்பினர்களாக இருக்கும் அதே நேரத்தில், நம் தனித்துவம் என்பது இந்தக் குழுக்களால் எவ்விதத்திலும் நசுக்கப்பட்டுவிடக்கூடாது. நம் வாழ்க்கை என்பது நம் சுயத்தை உணர விழையும், நம் மீட்சியை நோக்கிச் செல்லும் நம்முடைய ஒரு தனிப்பட்ட பயணம்.
தனிமனிதவாதம் என்பது ஒரு கொள்கையாக ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டில்தான் வலுப்பெறத் தொடங்கியது. இதிலிருந்துதான் அரசனுடைய ஆட்சி என்ற கருத்து விலகி மக்களுடைய ஆட்சி என்ற கருத்து உருவானது. ‘நாம் யார்க்கும் குடி அல்லோம்’ என்பதுதான் இதன் அடிப்படை. நாம் யார்க்கும் கடன்படவில்லை, நம் முடிவுகளை நாமேதான் தீர்மானிக்கிறோம் என்னும் உறுதி இதன் அடிப்படை.
இந்திய அளவில் குடும்பம், சாதி, சமூகம், மதம், தேசம் போன்ற கட்டுமானங்கள் நம் தனித்துவ அடையாளத்தையும் நம் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பல்வேறு பக்கங்களுக்கு இழுத்துச்செல்ல முயற்சி செய்கின்றன. இந்த அமைப்புகளுக்குள் இருக்கும் அதே நேரம், இவை நம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காது இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் பெரும் சவாலே.
பிற நாடுகளில் குடும்பம், தேசம், மதம் போன்றவை வெவ்வேறு அளவுகளில் தனிமனிதர்மீது தாக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் இவற்றுடன் சாதி, சமூகம் இரண்டும் சேர்ந்துகொள்கிறது. சமூகம் என்பது இங்கே நம் சாதியைச் சேர்ந்த நம்முடைய நெருங்கிய உறவினர்களும் நம் சாதியைச் சேர்ந்த ஊர்க்காரர்களும் அடங்கிய ஒரு குழு.
இந்தியாவில் குடும்பமும் சாதி சமூகமும் மக்களுக்குப் பெரும் அரணாக விளங்குகின்றன. அதே நேரம் ஒரு பெரும் சிறைச்சாலையாகவும் விளங்குகின்றன. இந்த அமைப்புகளால் சில பயன்கள் கிடைக்கின்றன; ஆனால் சிலருக்கு இவை கடும் உளைச்சலையும் தருகின்றன. இதனால்தான் இந்தச் சிலர் இந்த அமைப்புகளிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேற விரும்புகிறார்கள். தனிநபருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்துக்கும் இடையேயான மோதலில் யார் பக்கம் நியாயம் என்ற கேள்வி வருமானால், நான் கண்ணை மூடிக்கொண்டு தனிநபர் பக்க நியாயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வேன். ஏனெனில் குடும்பம் முதற்கொண்டு தேசம் வரையிலான பிற அமைப்புகள் தனிநபர் என்பதற்குக் கீழ்ப்பட்ட நிலையில்தான் இருக்கவேண்டும்.
***
(1) இளவரசன்-திவ்யா, கௌசல்யா-சங்கர் காதலை, அவர்களுடைய திருமணத்தைத் தடுக்க அவர்களுடைய பெற்றோர்களுக்கே உரிமை இல்லை. இதுதான் தனிமனிதவாதமும் லிபரலிசமும் முன்வைக்கும் கருத்தாக்கம். பெற்றோருக்கே இடம் இல்லாதபோது சாதி, சமூகம் போன்றோருக்கு இங்கே சிறிதுகூட இடமில்லை. நாடகக் காதலா, ஏமாற்றா என்றெல்லாம் நாம் பேசவேண்டிய அவசியமே இல்லை. திவ்யாவோ, கௌசல்யாவோ, சங்கரோ, இளவரசனோ சுய நினைவுடன் இந்தச் செயலில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் நாளை அவர்கள் ஏமாற்றப்பட்டால் அது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்னை. அவர்களை அவர்களுடைய குடும்பங்கள் ஏற்காமல் போகலாம். ஆனால் கொடூரமான முறையில் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தற்கொலைக்குத் தூண்டி, வீடுகளை எரித்து, தெருவில் பட்டப்பகலில் வெட்டி வீழ்த்தி அராஜகம் புரிவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இதுகுறித்த விவாதத்தில் ஈடுபடும் சிலர், ‘உன் பெண்ணை _________க்கு மணம் செய்து தருவாயா, தந்திருக்கிறாயா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். தனிநபர் சுதந்திரத்தை முன்வைக்கும்போது நாம் யாருக்கும் யாரையும் மணம் செய்துதருவதில்லை. அவரவர் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்கிறார்கள். அதை நாம் ஏற்றால் கூடி மகிழ்ந்து விழா கொண்டாடுவோம். ஏற்க மனம் இல்லை என்றால் விலகிப்போவோம். அவ்வளவுதான்.
இங்கே நாம் கவனிக்கவேண்டியது, எந்தத் தனி நபரையும் இன்னொருவர் கட்டுப்படுத்தக்கூடாது என்பதே. இங்கே வயது ஒரு பொருட்டல்ல. அதனால்தான் குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் நிலைநாட்ட முனைகிறோம். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் துன்புறுத்தக்கூடாது; உணவு கொடுக்காமல் தெருவில் ஓடவிடக்கூடாது. பிள்ளைகளைப் பெற்றால் அந்தப் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை எதையும் எதிர்பார்க்காமல் வளர்க்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அவ்வாறு செய்யமுடியாது என்றால் பிள்ளைகளைப் பெறாமல் இருக்கவேண்டும். பெற்று சோறு போட்ட காரணத்தினாலேயே யாரை மணம் முடிக்கவேண்டும், எந்தப் படிப்பு படிக்கவேண்டும், எந்த வேலையில் சேரவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளை வற்புறுத்த எந்தப் பெற்றோருக்கும் உரிமை இல்லை.
(2) அடிமை முறையை நாம் இதே உரைகல் கொண்டே எதிர்க்கிறோம். தனிநபர் ஒருவரது சுதந்திரத்தை நசுக்கி, அவரை அடிமையாக வைத்திருக்கும் எந்த முறையும் ஒவ்வாததே. தூக்கி எறியப்படவேண்டியதே.
(3) எந்த மதத்திலும் சேர, மாற, விலக எவருக்கும் உரிமை உண்டு. எந்த உணவையும் உண்ண எவருக்கும் உரிமை உண்டு. இவை மிக முக்கியமாண தனிநபர் சுதந்திரங்கள். ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றோ, இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ மதத்தில் சேரக்கூடாது என்றோ சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல ஒருவரை மதமாற்றம் செய்ய ஓர் அமைப்பை உருவாக்குவதையோ, அந்த அமைப்பின்மூலம் பெரும் மக்கள் திரளை மதமாற்றம் செய்ய முனைவதையோ யாரும் தடுக்கக்கூடாது.
ஆனால் இதற்கு எதிராக ஓர் அரசு சட்டங்களைக் கொண்டுவருகிறதே? உதாரணமாக நம் நாட்டின் பல மாநிலங்களில் மாட்டுக்கறி விற்கத் தடை இருக்கிறது. பல மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றியிருக்கிறார்கள், இயற்ற முனைகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி வருவதற்குமுன்னதாகவே இந்தச் சட்டங்கள் உள்ளன என்றாலும் இன்று பாஜகதான் இந்தச் சட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மிகவும் விரும்புகிறார்கள்.
அடிப்படையில் இந்தச் சட்டங்கள் யாவுமே மக்கள் விரோதச் சட்டங்கள்,. தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான சட்டங்கள். இம்மாதிரியான சட்டங்கள் உருவாவதைத் தடுக்கவேண்டியது தனிமனிதவாதத்தையும் லிபரலிசத்தையும் முன்வைக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்யவேண்டியது.
(4) இதே தனிமனிதவாதத்தின் அடிப்படையில்தான் அரசு தொழில்துறையில் ஈடுபடுவதை நான் எதிர்க்கிறேன். அரசு தொழில்துறையில் ஈடுபடும்போது ஏற்படும் சமமின்மை மோசமானது. இரு தொழில் நிறுவனங்களிடையே நிகழும் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் இடத்தில் இதே அமைப்பான அரசு உள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அரசு ஏகபோகம் என்பதையும் நாம் இதற்காகத்தான் எதிர்க்கவேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நான் ரயில்வே துறையில் ஈடுபட முடியாது. ஏனெனில் அரசு மட்டுமே இதனைச் செய்ய முடியும். இது தனிநபர் சுதந்தரவாதத்துக்கு எதிரானது. எனவேதான் அரசு ரயில்வே துறையிலிருந்து விலகி வழிவிட்டு, தனிநபர்கள் அத்துறையில் ஈடுபட வகை செய்யவேண்டும். தனியார்மயம் ஒன்று மட்டுமே தனிமனித சுதந்திரத்தை முழுமையாக உறுதிசெய்யும்.
(5) தேசியவாதம் என்பது அதீதமாகப் போய்விடக்கூடாது என்பதையும் இந்தத் தனிமனிதவாதமே நிலைநாட்டுகிறது. இப்போது என்னிடம் ஒருவர் வந்து “பாரத் மாதா கீ ஜெய்” என்று சொல் என்று சொன்னால் ‘போடா ம__!” என்றுதான் சொல்வேன். ‘நீ யார் என்னை வற்புறுத்துவதற்கு’ என்பதுதான் என் பதில். ஒவைசியோ வாரிஸ் பட்டானோ ‘பாரத் மாதா கீ ஜெய்’ அல்லது ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்லவேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. அதீத தேசியவாதிகள் அடுத்தவர் வாழ்க்கையில் தேவையின்றித் தங்கள் மூக்கை நுழைக்கிறார்கள். நான் எப்போது எழுந்து நிற்கவேண்டும், எப்போது உட்காரவேண்டும், என்ன சொல்லவேண்டும், என்ன செய்யவேண்டும், என்ன சாப்பிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மீது கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இது முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.
***
அரசு என்ற அமைப்பு முக்கியமானது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, நீதியை நிலைநாட்ட, பொது வளங்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க, வறியவர்களைக் காக்க, எதிரிகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற என்று ஒரு சமூகம் முன்வந்து அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஓர் அரசை உருவாக்குகிறது. அந்த அரசு மக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல; மக்களிடையே ஏற்படும் மோதல்களை சமரசமான வகையில் தீர்த்துவைப்பதற்காகத்தான் இருக்கிறது. அரசு என்பது மக்களுக்கு மேலானதாக எக்காலத்திலும் ஆகக்கூடாது. தனிமனித சுதந்திரத்தில் கைவைப்பதாக அது எக்காலத்திலும் இருக்கக்கூடாது.
ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள அரசமைப்புகளும் அவற்றின் அங்கங்களும் சிறிது சிறிதாகத் தங்கள் அதிகாரத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். கம்யூனிச அரசுகள் இதில் முழு மோசம். அவை தனிமனித சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை மதிப்பதே இல்லை. ராணுவ பலத்தைக்கொண்டு நடத்தப்படும் சர்வாதிகார ஆட்சிகள், அரசர்கள் அல்லது அமீர்கள் தலைமையிலான ஆட்சிகள் போன்றவையும் இதே மாதிரியான ஆபத்தைக்கொண்டவை. எனவேதான் இவை தூக்கி எறியப்படவேண்டும். சிறிது சிறிதாக இது நடந்துகொண்டிருக்கிறது.
மக்களாட்சியில் ஓர் அரசு அதிகாரத்தைத் தன்னகத்தே குவிக்கும் வேலையில் இறங்கினால் அதனைத் தடுத்து நிறுத்தவேண்டியது மக்களின் கடமை.
***
சாதிக்கு எதிராக, மதத்துக்கு எதிராகப் பேசுவோர் இந்த அமைப்புகளைத் தகர்க்கவேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். என் நோக்கம் இஃதல்ல. இந்த சாதி, மத அமைப்புகள் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இவற்றை அழிக்கும் போராட்டத்தில் நேர விரயம் செய்ய நான் விரும்பவில்லை. இந்த அமைப்புகள் தனி மனித சுதந்திரத்தின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதைத் தடுப்பதுதான் என் நோக்கம். அகமணமுறை என்னும் கட்டுப்பாடு, தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே அது போகவேண்டும். ஆனால் குறிப்பிட்ட பண்டிகையைக் கொண்டாடுவது, குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விரதம் இருப்பது, சூரியனைப் பார்ப்பது, சந்திரனைப் பார்ப்பது என்று எதைவேண்டுமானாலும் நீங்கள் செய்துகொள்ளுங்கள். சொல்லப்போனால் அதைச் செய்யாதே என்று நான் சொல்ல முடியாது. ஏனெனில் அப்படி நான் சொல்வது உங்கள் தனிமனித உரிமையைத் தகர்க்கக்கூடியது.
இதேபோல்தான் மூடநம்பிக்கை எனப்படும் பழக்கவழக்கங்கள். நரபலி - கட்டாயம் தடுக்கப்படவேண்டும். குழந்தைகளை வற்புறுத்தி நெருப்புமீது ஓடவைப்பது - தடுக்கப்படவேண்டும். அதேபோல்தான் வற்புறுத்தி ஒருவரை அலகு குத்திக்கொள்ளச் சொல்வதும் காவடி தூக்கச் சொல்வதும். ஆனால் நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், நீங்கள் விரும்பி அலகு குத்திக்கொண்டால், காவடி தூக்கினால் அல்லது தீமிதித்தால் அதனால் எனக்குப் பிரச்னை இல்லை. அது உங்கள் தனிமனித சுதந்திரம்.
மயானக்கொள்ளையில் ஆட்டைப் பச்சையாகக் கடித்து, குடலை மாலையாக அணிந்து, ரத்தம் குடித்தால் அல்லது ஏறுதழுவுதல் என்று மாட்டை ஓடவைத்து அதன்மீது நூறு பேர் பாய்ந்து விழுந்தால் என்ன செய்யலாம்? இவை சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவைகுறித்து நாம் விவாதிக்கலாம். மனிதர்களுடைய சுதந்திரத்துக்கு இணையாக மிருகங்களுக்கு எம்மாதிரியான சுதந்திரம் தரப்படவேண்டும்? இறைச்சிக்காக எவற்றை வளர்க்கலாம், கூடாது? வனவிலங்குகள் என்ற பட்டியலில் எவை வரலாம், கூடாது? சிங்கங்களை தனியார் காடுகளில் வளர்த்து அவற்றை வேட்டையாடும் உரிமத்தைத் தனியாருக்குத் தரலாமா? இவையெல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவை ஒரு சமூகத்தில் விவாதத்துக்கு உரியவை. கூடி முடிவெடுத்து ஒரு திசையை நோக்கிச் செல்லவேண்டும்.
***
நாட்டுக்கு எதிரான செயல், நாட்டைப் பிளவுபடுத்தும் செயல், பேச்சு ஆகியவற்றை எப்படி எடுத்துக்கொள்வது? தனிமனிதர்களுக்கு இதற்கான சுதந்திரம் உள்ளதா? கனையா குமார், உமர் காலித் ஆகியோர் பற்றிய கருத்து என்ன?
ஒருவருடைய சுதந்திரம் என்பது பிறரது சுதந்திரத்தைப் பறிக்காதவரைதான். பிற மனித உயிர்களுக்கு ஆபத்து வரும் என்றால் அரசு இயந்திரம் தலையிடவேண்டியிருக்கும். அவ்வகையில் மாவோயிஸ்ட் இயக்கங்கள் தடை செய்யப்படவேண்டியவை, அவ்வியக்கங்களின் போராளிகள், முடிந்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள். ஆனால் பிரிவினையைப் பேசுவது, காஷ்மிர் அல்லது தமிழ்நாடு தனியாகப் போகவேண்டும் என்று விரும்புவது ஆகியவை எவ்வகையிலும் பிறருடைய சுதந்திரத்தைப் பாதிப்பதில்லை. எனவே இவற்றைக் கட்டாயம் அனுமதிக்கலாம். கனையா குமாரோ, உமர் காலீதோ அல்லது ஜே.என்.யுவில் முகமூடி அணிந்துகொண்டு ஆசாதி, ஆசாதி என்று கூடிக் கும்மி அடித்த வெளியாரோ, இவர்கள் யார்மீதும் குற்றம் சாட்டவேண்டிய தேவையில்லை. அபத்த சட்டங்களைத்தான் தூக்கி எறியவேண்டும்.
ஆனால் ஆயுதம் தாங்கிப் போரில் ஈடுபடுவோர், பொதுநன்மையைக் குலைப்போர், குண்டுவைப்போர் ஆகியோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
*** முற்றும் ***

அது என்ன சார் 18 வயது... அப்போ 17 வயதுடைய ஒருவன் அலகு குத்திக்கொண்டால் தடுக்கப்பட வேண்டும். அதே 18 என்றால் அது அவர் விருப்பம். உதாரணத்திற்கு நாளை 17 வயது கொண்ட ஒருவனுக்கு பிறந்தநாள் எனில், இன்று அவன் அலகு குத்திக்கொள்வதை தடுக்கும் நாம் மறுநாள் அவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். அப்படித்தானே? 18 வயதில் முடிவெடுக்கும் திறனுடன் ஒருவரின் பெற்றோர் அதாவது உங்களைப் போன்றோர் - ஒரு குழந்தையை வளர்க்கும் போது எந்த பிரச்சினையும் இல்லை சார்... இங்க நிலைமை அப்படி இல்ல. எந்த பிரச்சினையும் உங்க பார்வையிலேயே அணுகி அதுக்கு ஒரு தீர்வு சொல்லாதிங்க சார்... கொஞ்சம் இறங்கி வாங்க...
ReplyDeleteSuper true
DeleteLovely
ReplyDeleteநல்ல கட்டுரை. ஆனால் ஏறு தழுவுதல், தனி மனித சுதந்திரம் என்ன தொடர்பு?
ReplyDeletethis is quite nonsense....and ppl from brahmin community are doing it more.they say, my girl will decide...my boy will decide as you are going to live etc...but decision may not be fully informed.its only family duty to guide and counsel their kids.for ex, if a girl postpones marriage for better alliance, she may not be aware after sometime she may find only with bad choices...or she may face health related concerns...or even a familys situation can turn adverse etc...if somebody wants to marry intercaste,inter religion, the family gets impacted...its so superficial to say family can have no say in it. then you need to think about their future...who will marry their children etc. you just escape from some questions ....as a liberal can you accept your girl marrying a man who cleans toilet, let him be x,y,z caste. love is blind right...but killing for any cause is inhumane.
ReplyDeleteIf a girl decides to marry someone it is her choice. I dont have any say in that.. Coming to your point, a boy who cleans toilet should find and marry a girl who cleans another toilet. So their child should also clean toilets right?? This is how the caste system emerged. It is really a horrible example.
Deleteif choices of your kids are wrong, who will bear the burden...the govt..or badri seshadri...or progressive corrupt politicos....or your kids and you
ReplyDeleteSo can a father stop paying college for his son /daughter once they attain thevage of 18??As per your yardstick the parents need not feed the children once they reach 18. No one is a stand alone individual .He is part of a society.Agreed that caste differences should be banished but your stand of total freedom will lead to anarchy .You say that slogan shouting is not wrong.i belong to a particular religion and do i have the " individual freedom" to abuse other religion God??I am not indulging in violence only shouting slogans how ever outrageous it may be .Do you agree to that??No country in the world can survive nor people live a peaceful life if your suggestion of unfrtered freedom is accepted
ReplyDeleteபொதுவாக பொலிட்டிக்கலி கரெக்ட் என்கிற நிலையைத்தான் பத்ரி எடுப்பது வழக்கம். இப்பதிவும் அதற்கு விதிவிலக்கு இல்லை.
ReplyDeleteகொடியை எரிப்பது, அரசியல் சாசன சட்டத்தின் பிரதிகளை எரிப்பது போன்றவற்றையும் கருத்து சுதந்திரமாகவே அணுக வேண்டும், அனுமதிக்க வேண்டும்.
ReplyDeleteசரவணன்
EASWARAN Ramanathan. (EASWAR) Dear Sri.Badri, Even though I agree with you on certain points, I have to point out certains dangers the Indian Society, The Hindu society are facing from the lacunae of the past rule. Especially Point nO.3 in your statement. Even if a group is interested in converting people to other religions, it should be treated as a right under freedonm and democracy - is a point is one thing which requires revisit by you. Probably you have not seen it. I had been a witness to this mindless act by certain specific group of people in the past. And they were doing this Act, utilising the very good Schemes formulated and put into practice by the erstwhile Government. I won't blame the Government because the problem was not at first envisaged. Yes. with the help of a wonderful , Government Scheme ever to be conceived and formulated by a democratic country on Earth, this Conversion was going on. IRDP..Scheme? Have you ever heard of it? Integrated Rural Development Plan - for the downtrodden, under privileged ( the BPL families, if you want to be specific) for the development of Rural poor. This Scheme came in handy for those who wanted to create a dent in 'Hindu Society" . With the help of funds they were receiving from foreign Institutions, they were able to achieve what they wanted. How? I have written in my English book, which was published in the year 2015. Bang..Oh..Bank...! Groups of rural people along the foothills of a particular locality in certain states were converted comfortably and conveniently. For this India Public Funds were put in place. Also the Treasury funds wre conveniently were written off, in a clever manner. All tax-Payer's money. Budgeted Money. Your statement, knowingly or unknowingly include this type of activity also, under freedom. This I can never accept. Aiming at poor if is done, I am sure there is no difference between keeping a sword on your neck to get your approval 'to change your religion'. Here instead of a sword, money replaces the weapon. that is all. Other points I would like to discuss with you, in person. Email: murali_easwar@yahoo.co.in
ReplyDeletePublic funds should not be used for such activities. If people are poor and money is offered to induce them to change religion, and the poor are ready to take the money and convert, what is your and my problem? You offer more money to stop them from changing religion. I see it as a marketplace and the best bidder wins. The poor, on the other hand may decide not to take the money for certain principled reasons, if they truly believe that their current religion is offering them something worthwhile.
DeleteMarket societies remedy this arbitrariness, at least to some degree. They open careers to those with the requisite talents and provide equality before the law. Citizens are assured equal basic liberties, and the distribution of income and wealth is determined by the free market. This system—a free market with formal equality of opportunity—corresponds to the libertarian theory of justice. It represents an improvement over feudal and caste societies, since it rejects fixed hierarchies of birth. Legally, it allows everyone to strive and to compete. In practice, however, opportunities may be far from equal. Those who have supportive families and a good education have obvious advantages over those who do not. Allowing everyone to enter the race is a good thing. But if the runners start from different starting points, the race is hardly fair. That is why, Rawls argues, the distribution of income and wealth that results from a free market with formal equality of opportunity cannot be considered just. The most obvious injustice of the libertarian system “is that it permits distributive shares to be improperly influenced by these factors so arbitrary from a moral point of view.” One way of remedying this unfairness is to correct for social and economic disadvantage. A fair meritocracy attempts to do so by going beyond merely formal equality of opportunity. It removes obstacles to achievement by providing equal educational opportunities, so that those from poor families / suppressed castes can compete on an equal basis with those from more privileged backgrounds. It institutes Head Start programs, childhood nutrition and health care programs, education and job training programs—whatever is needed to bring everyone, regardless of class or family background, to the same starting point. According to the meritocratic conception, the distribution of income and wealth that results from a free market is just, but only if everyone has the same opportunity to develop his or her talents. Only if everyone begins at the same starting line can it be said that the winners of the race deserve their rewards.
ReplyDeletethe quality of comments & thought process itself shows how backward thinking & stuck in 18th century most of the commenters are. justifying paying for fees & spending on children/offsprings as a reason for controlling them like robots after 18 is laughable. whats the difference between cattle and children then.. just because you take care of them you don't own them like cattle!
ReplyDeleteதிரு பத்ரி, அப்படியானால் நீங்கள் எந்தஅடிப்படையில் இந்தியாவையும் அதன் சனநாயகத்தையும் ஏற்றுக் கொள்கிறீர்கள். அது அடிப்படையில் பல்வேறு தேசிய இனங்களின் எல்லைப் பாதுகாப்பு, மொழிப் பாதுகாப்பு, பொருளியல் பாதுகாப்பு ஆகிய ஒவ்வொன்றிலும் சமத்துவம் மறுக்கிறதே. பிறகு எப்படி இது சனநாயகம் ஆகும்? நீங்கள் சொல்வது போல், தனியார் வேண்டாம், தமிழக அரசுக்கு ரயில்வே துறையை எடுத்து நடத்தும் அதிகாரம் உண்டா?
ReplyDeleteஇந்திய சனநாயகத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அது நான் விரும்பிய இடத்துக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் சனநாயகம் என்பது என் ஒருவனுடைய விருப்பம் மட்டுமல்ல. அதை நோக்கிப் பெரும்பான்மையினரை நகர்த்த நான் உழைக்கவேண்டும். அது என் வாழ்நாளில் நடைபெறாமல் போகலாம். ஆனால் அதற்கான பரப்புரையில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன். இன்றைய இந்திய சனநாயகத்தின் அனைத்துக் குறைகளையும் உணர்கிறேன் நான். இதற்கான மாற்று பிரிவினை அல்ல, உள்ளிருந்து இதனை மேம்படுத்துவது என்பது என் கருத்து. சமத்துவத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மறுக்கவில்லை. இன்றைய அரசமைப்பு இயந்திரங்களும் இதில் ஈடுபட்டுள்ள மனிதர்களும்தான் மறுக்கிறார்கள். அரசியலமைப்பிலுமே சில மாற்றங்கள் தேவை. இவையெல்லாம் சாத்தியமே.
Deleteதமிழக அரசுக்கு இன்றைக்கு ரயில்வே துறையை எடுத்து நடத்த முழு அதிகாரம் இல்லை. ஆனால் இது வேண்டும் என்று நான் எழுதியிருக்கிறேன். ஒருவிதத்தில் மெட்ரோ ரயில் நடத்துவதே மத்திய அரசு கொஞ்சம் தன் அதிகாரங்களைத் தளர்த்துவதன் ஒரு வடிவம்தான். ரயில்வே குறித்து விரிவான கட்டுரையை என் தளத்தில் நான் எழுதியுள்ளேன். முழுமையான ரயில்வே தனியார்மயத்துக்கு முன்பாக, மாநில அரசுகளுக்குத் தத்தம் மாநிலங்களுள் ரயில் வண்டிகள் விடும் அதிகாரம் தரப்படவேண்டும் என்பது முதல்கட்டம். பிறகு எந்தத் தனியாரும் ரயில் வண்டிகளை விடலாம் என்பது அடுத்த கட்டம். ரயில்வே நிலையங்களை யார் பராமரிப்பது, நடத்துவது என்பது இன்னொரு மாற்றம். விமானப் போக்குவரத்தில் நடந்ததுபோல். இவையெல்லாம் வரும் ஆண்டுகளில் நடக்கும் என்பது என் கணிப்பு.
1.பிள்ளைகளைப் பெற்றால் அந்தப் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை எதையும் எதிர்பார்க்காமல் வளர்க்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அவ்வாறு செய்யமுடியாது என்றால் பிள்ளைகளைப் பெறாமல் இருக்கவேண்டும். -----ஐரோப்பா அமெரிக்க போல் 15 வயது என்று வைத்துக்கொள்ளலாமா?
ReplyDelete2.ஒருவரை மதமாற்றம் செய்ய ஓர் அமைப்பை உருவாக்குவதையோ, அந்த அமைப்பின்மூலம் பெரும் மக்கள் திரளை மதமாற்றம் செய்ய முனைவதையோ யாரும் தடுக்கக்கூடாது.--------அப்போ தாய் மதம் திருப்பும் கர் வாபசியையும் தடுக்கலாமா? கூடாதா?
3.ஒருவருடைய சுதந்திரம் என்பது பிறரது சுதந்திரத்தைப் பறிக்காதவரைதான். பிற மனித உயிர்களுக்கு ஆபத்து வரும் என்றால் அரசு இயந்திரம் தலையிடவேண்டியிருக்கும்.------அப்போ அந்த தீவிரவாதிகளுக்கு தந்த தூக்கு தண்டனையை அவர்கள் எதிர்த்ததும், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் உருவாக்குவோம் என்று சொன்னதும் சரியா?
4. ஆனால் பிரிவினையைப் பேசுவது, காஷ்மிர் அல்லது தமிழ்நாடு தனியாகப் போகவேண்டும் என்று விரும்புவது ஆகியவை எவ்வகையிலும் பிறருடைய சுதந்திரத்தைப் பாதிப்பதில்லை. ------அப்போ காஷ்மீர் பண்டிட்டுகள் மனிதர்கள் இல்லையா? ---சொல்லுங்க பத்ரி --- sankaranarayanan
1. 18 என்பது நம் சட்டதிட்டங்களின்படியான வயது. அதற்குமேல் நம் குழந்தை சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அவர்களிடம் எடுத்துச்சொல்லி தயார் செய்யவேண்டும். அவரவர் விருப்பப்படி 21/22 வயதுவரைகூட இதனைச் செய்யலாம்.
Delete2. கர் வாபசியைத் தடை செய்யக்கூடாது. முடியாது.
3. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; செய்யத்தான் கூடாது. இந்தியா பிளவுபடுவது ஏன் தேவை என்று பேசுவதில் தவறில்லை. ஆனால் அதற்காகக் குண்டுவைப்பது தண்டனைக்குரிய குற்றம்.
4. நான் சொல்வதற்கும் காஷ்மிர் பண்டிட்டுகளுக்கும் என்ன தொடர்பு? நான் "பேசுவதை" பற்றிப் பேசுகிறேன். பண்டிட்டுகள் காஷ்மிரிலிருந்து துரத்தப்பட்டது மிகத் தவறான விஷயம். பெரும் குற்றம்.
Seeking your views on my Comments furnished. Easwar Ramanathan.
ReplyDelete19/03/2016
Badri - For many us to understand and even analyze your views without bias, it requires certain level of maturity and an ability to think. The post is very simple and easy to comprehend. Many cannot even stretch their original position to admit that you can have your view and they can have theirs as long as it is not affecting the individuals and society. Most of us are afraid to stand alone and think for ourselves. Here if someone stays alone, we brand him as either arrogant or stupid.
ReplyDeleteசில பேச்சுகள் மற்ற்வர்களை குற்ற்ம் செய்ய தூண்டுபவை சில பேச்சுகள் ஜாதி, மத , இனக்கலவரங்களா தூண்டுபவை, வன்முறையை தூண்டுபவை . அவற்றை தடை செய்யவேண்டும்
ReplyDelete1. Whole concept [except govt participation in industries] is almost exactly what is followed here in US & Western worlds. It would be difficult to digest for Eastern society as its evolved over the years into different structure. If we weight the 2 system naturally western system is best. He doesn't mean that we can implement that into India next week. As its total cultural change, it would require may be 50 or even 100 yrs to change.
ReplyDelete2. I totally against the point of govt shouldn't run any business like Railways. Any government decide what business to run based on so many conditions, we cant restrict them by saying privatize everything. I can go on long on this but better to avoid that.
On lighter Note for this: I guess our current CM and past CM very well agree with you long before, thats why they privatized the Liquor production [by owning them-self the production units] just use Govt to facilitate their selling. And their drastic selling urge made them to open shops in every street and soon will see in Ration shop and aavin shops.
// எந்த மதத்திலும் சேர, மாற, விலக எவருக்கும் உரிமை உண்டு. .... இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ மதத்தில் சேரக்கூடாது என்றோ சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. //
ReplyDeleteஇதுவரை சரி.
// அதேபோல ஒருவரை மதமாற்றம் செய்ய ஓர் அமைப்பை உருவாக்குவதையோ, அந்த அமைப்பின்மூலம் பெரும் மக்கள் திரளை மதமாற்றம் செய்ய முனைவதையோ யாரும் தடுக்கக்கூடாது. //
இங்குதான் சற்று முரண்படுகிறீர்கள். பெரும்பாலான மதமாற்றங்கள் என்பவை, சுயதேர்வாக இல்லாமல் - ஆன்மீக ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ - புற நிர்ப்பந்தத்தின்பாற்பட்டதாகவே இருக்கிறது. இது தனிமனித தேர்வல்ல என்பதால் எதிர்க்கப்படவேண்டியது மட்டுமல்ல தடுக்கப்படக்கூடியதுமாகும். ஆனால் இது சட்டரீதியாக நிரூபணமாதல் கடினம் என்பதால் முதலில் இது விவாதிக்கப்படவேண்டியது.
Crystal clear views..Hats Off Sir..voice of sanity indeed..Thanks..
ReplyDeleteமதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு, தனிமனித சுதந்திரம் மூலமாக இந்தியாவை பிற்காலத்தில் மேம்பாடுத்திட முடியுமா?
ReplyDelete