அவசரப் பதிவு. பராக் ஒபாமாவுக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுத்திருப்பது வருத்தம் தருகிறது. ஒபாமா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆகி, சில மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில், ஒன்றும் கான்கிரீட்டாகச் சாதிக்காத நிலையில், ஆஃப்கன் போரில் காலை விட்டுவிட்டு வெளியே மீளமுடியாமல், ஈராக்கில் சொன்னதுபோல் வெளியேறமுடியாமல், காண்டானமோ பே சிறை பிரச்னையை சரியாகத் தீர்க்கமுடியாமல் தடுமாறும் நிலையில், இந்த விருது அவசியம் இல்லை.
ஒபாமாவுக்கே இது distraction ஆக அமையும். ஒபாமா எதிரிகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக.
[ஆனால், அதேநேரம், ஒபாமாவின் புத்தகங்களை தமிழில் வெளியிடும் அதிகாரபூர்வ பதிப்பாளனாக - Dreams From My Father, The Audacity of Hope, Change We can Believe in - அவர் நோபல் வாங்கிய விஷயத்தை மிகவும் பெருமையுடன் அட்டையில் குறிப்பிடுவோம். விரைவில் புத்தகங்களை எதிர்பாருங்கள்!]