சில நாள்களாக சத்தமே போடாமல் ஒரு மின்வணிக ஆஃபரை எங்கள் தளத்தில் கொடுத்துவந்துள்ளோம். தானாகவே வருபவர்கள் அதைக் கண்டுபிடித்து வாங்குகிறார்களா என்ற பரிசோதனை, நன்றாகவே வேலை செய்துள்ளது.
ஒரு brainstorming சந்திப்பின்போது எங்கள் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் ஜெயின் இந்த ஐடியாவை முன்வைத்தார். இந்தியா டுடே புக் கிளப், அதுபோன்ற பல புக் கிளப் அனைத்திலும் இப்படி ஒரு ஆஃபர்தான் இருக்கும். பார்த்தவுடனேயே ஆசையைத் தூண்டக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும். ஆனால் அது வெறும் இத்தனை சதவிகித டிஸ்கவுண்ட் என்ற அளவில் மட்டும் இருக்கக்கூடாது. அதன் விளைவாக உருவானதுதான்
கிழக்கு புக் கிளப். இணையம் வழியாக மட்டுமே இதனைப் பெறலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுட்டியில் சென்றால், அங்கே குறிப்பிட்ட சில புத்தகங்கள் இருக்கும். அவை குறைந்தபட்சம் ரூ 20 முதல் தொடங்கி ரூ 100 அல்லது அதற்குமேலும் செல்லும். இவற்றிலிருந்து 20 புத்தகங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நிச்சயமாக அவற்றின் விற்பனை விலை ரூ 1,000-ஐ விட மிக அதிகமாக வரும். பொதுவாக நாங்கள் பார்த்த சில தேர்வுகளில், மொத்த விலை ரூ 1,600, ரூ 1,800, ரூ 2,000 என்றெல்லாம்கூட வந்துள்ளன. ஆனால் அந்த 20 புத்தகங்களும் உங்களுக்கு ரூ 1,000 என்ற விலைக்கே கிடைக்கும். மேலும் இந்தியாவுக்குள்ளாக என்றால் இந்தப் புத்தகங்களை அஞ்சல்துறையின் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பக் கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டோம். (ஆனால் இந்தியாவுக்குள் குரியர் அல்லது வெளிநாடு என்றால் இந்தச் சலுகை கிடையாது.)
முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்குத் தேவையான புத்தகங்கள், உங்களுக்குப் பிடித்தமான விலையில் கிடைக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கடைசிக் கட்டத்தில் வேண்டாம் என்று நீங்கள் ஒதுங்கிவிடலாம்.
ஷாப்பிங் கார்ட்டில் இதனை செயல்படுத்தத்தான் மிகவும் தாமதம் ஆகிவிட்டது. அதற்கென நிறைய போராட்டங்கள் செய்யவேண்டி இருந்தது. நாகராஜனின் விடாமுயற்சியால் கடைசியில் அது நடந்துள்ளது.