சில நாள்களாக சத்தமே போடாமல் ஒரு மின்வணிக ஆஃபரை எங்கள் தளத்தில் கொடுத்துவந்துள்ளோம். தானாகவே வருபவர்கள் அதைக் கண்டுபிடித்து வாங்குகிறார்களா என்ற பரிசோதனை, நன்றாகவே வேலை செய்துள்ளது.
ஒரு brainstorming சந்திப்பின்போது எங்கள் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் ஜெயின் இந்த ஐடியாவை முன்வைத்தார். இந்தியா டுடே புக் கிளப், அதுபோன்ற பல புக் கிளப் அனைத்திலும் இப்படி ஒரு ஆஃபர்தான் இருக்கும். பார்த்தவுடனேயே ஆசையைத் தூண்டக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும். ஆனால் அது வெறும் இத்தனை சதவிகித டிஸ்கவுண்ட் என்ற அளவில் மட்டும் இருக்கக்கூடாது. அதன் விளைவாக உருவானதுதான் கிழக்கு புக் கிளப். இணையம் வழியாக மட்டுமே இதனைப் பெறலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுட்டியில் சென்றால், அங்கே குறிப்பிட்ட சில புத்தகங்கள் இருக்கும். அவை குறைந்தபட்சம் ரூ 20 முதல் தொடங்கி ரூ 100 அல்லது அதற்குமேலும் செல்லும். இவற்றிலிருந்து 20 புத்தகங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நிச்சயமாக அவற்றின் விற்பனை விலை ரூ 1,000-ஐ விட மிக அதிகமாக வரும். பொதுவாக நாங்கள் பார்த்த சில தேர்வுகளில், மொத்த விலை ரூ 1,600, ரூ 1,800, ரூ 2,000 என்றெல்லாம்கூட வந்துள்ளன. ஆனால் அந்த 20 புத்தகங்களும் உங்களுக்கு ரூ 1,000 என்ற விலைக்கே கிடைக்கும். மேலும் இந்தியாவுக்குள்ளாக என்றால் இந்தப் புத்தகங்களை அஞ்சல்துறையின் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பக் கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டோம். (ஆனால் இந்தியாவுக்குள் குரியர் அல்லது வெளிநாடு என்றால் இந்தச் சலுகை கிடையாது.)
முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்குத் தேவையான புத்தகங்கள், உங்களுக்குப் பிடித்தமான விலையில் கிடைக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கடைசிக் கட்டத்தில் வேண்டாம் என்று நீங்கள் ஒதுங்கிவிடலாம்.
ஷாப்பிங் கார்ட்டில் இதனை செயல்படுத்தத்தான் மிகவும் தாமதம் ஆகிவிட்டது. அதற்கென நிறைய போராட்டங்கள் செய்யவேண்டி இருந்தது. நாகராஜனின் விடாமுயற்சியால் கடைசியில் அது நடந்துள்ளது.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
1 hour ago
I saw this offer. But the problem is, its not showing the books that i prefer to buys :(
ReplyDeleteAnyway, Keep posting new offers :)
Thanks for the information, Badri..Personally I feel selecting 20 books in that 6 pages is difficult. If somebody just want to avail the offer, they will be selecting some books which they don't want to read..
ReplyDeleteசுப்பராமன்: அப்படி வாங்கிய புத்தகங்களை, அவை பிடிக்கும் பிறருக்குப் பரிசாக அளிக்கலாமே? :-) இது ஒரு சோதனை முயற்சிதான். அது பலருக்கு ஏற்புடையதாக இருப்பதால்தான் மேற்கொண்டு ‘புரமோட்’ செய்ய முடிவு செய்துள்ளோம். இல்லாவிட்டால், சத்தமே போடாமல் தூக்கிப் போட்டிருப்போம். மேலும் சில புதிய, பிரபலமான புத்தகங்களை இவற்றுடன் சேர்க்க முயற்சி செய்கிறோம்.
ReplyDeleteI agree. But what I suggest is you can even give some offer like 5 books for 300Rs, 10 books for 550 Rs. Thanks!!
ReplyDeleteநல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்னும் சில புத்தகங்கள் சேர்த்திருக்கலாம்.
எண்ணிக்கை 20 எட்டுவதற்காக, நான் வாசிக்க விருப்பமில்லாத சில புத்தகங்களையும் வாங்க நேரிட்டது :( (நண்பர் சுப்புராமன் சொல்வதைப்போல)
எனக்கு விருப்பமில்லாத புத்தகங்களை பிறருக்கு பரிசளிப்பதும் ஏற்புடையதல்ல :)
சுப்பராமன்: நீங்கள் குறிப்பிடுவதுபோல, ரூ 600/-க்கு 10 புத்தகங்கள் என்று (ஒன்று மட்டுமாவது கூடுதலாகச்) செய்யமுடியுமா என்று பார்க்கிறோம். இதில் நிறைய புரோகிராமிங் வேலைகள் உள்ளதால், அவ்வளவு எளிதாக மாற்றங்கள் செய்வதற்கு இடைஞ்சல் உள்ளது.
ReplyDeleteபீர்: மேலும் சில புத்தகங்களை இதில் சேர்ப்பதன்மூலம் பலருக்கும் பிடித்த, விருப்பமுடைய புத்தகங்கள் கிடைக்குமாறு செய்கிறோம்.
நன்றி.
Thanks, Badri..Kizhaku pathipagam's efforts are pioneer in Tamil publishing. Wish you all the best..
ReplyDelete//Thanks for the information, Badri..Personally I feel selecting 20 books in that 6 pages is difficult.//
ReplyDeleteSubbaraman: To make the ordering process quick and simple, we are experimenting a module called QuickOrder.
1. Visit this link
2. Select "Kizhakku Book Club" as the imprint(category).
3. You can see all the books in this category listed in a single page.
4. Now start adding the books to the cart without need of refreshing the page.
--
K.S.Nagarajan
New Horizon Media
Thanks for the offer. Just made an order. However emails to the following id are bouncing:
ReplyDeletenagarajan@nhm.in
shop@nhm.in
Hope my order went through safely. Otherwise I have transaction receipt to help you with. I could forward the returned mails in case you want to debug.
Thanks & Regards
Subbu
Hi Badri,
ReplyDeleteHow about selling used books (nlm books only) concept. just a midline trader to sell used books online. just an idea i donna how it will support your business.
//எனக்கு விருப்பமில்லாத புத்தகங்களை பிறருக்கு பரிசளிப்பதும் ஏற்புடையதல்ல :)//
ReplyDelete:) :)
இல்லை பீர் சார்
கட்டாய இந்தி வேண்டும் என்று கூறும் ஒரு புத்தகத்தை (உதாரணத்திற்கு) நான் உங்களுக்கு பரிசளிக்கலாம் அல்லவா
ஹி ஹி ஹி
பத்ரி, வெளிநாட்டில் இருந்து இணையத்தில் வாங்க முயற்சித்தால், முப்பது டாலருக்கு ஐம்பது டாலர் தபால் செலவு வாங்குகிறீர்கள்? இது மிகவும் அதிகமாக இல்லை?இதற்கு மாற்று எதாவது உண்டா?நன்றி.
ReplyDelete//இல்லை பீர் சார்
ReplyDeleteகட்டாய இந்தி வேண்டும் என்று கூறும் ஒரு புத்தகத்தை (உதாரணத்திற்கு) நான் உங்களுக்கு பரிசளிக்கலாம் அல்லவா//
முடியல :(
Hi,
ReplyDeleteI found many of your books on thehindushopping.com at a considerable discount of 15-25%. Inspite of adding shipping cost i have always found thehindushopping less pricier. flipcart.com is another site i found with free shipping but a lesser discount 7-10%. of course flipkart has many tamil books out of stock.
Regards,
Vedha
I too believe Rs.1000 is bit more to my budget. If possible Can u add one more category -Rs 500 and 10 books? Hope this will bring wide spread participation.
ReplyDeleteமுழு தளத்தையும் புரட்டிவிட்டேன்,
ReplyDeleteவெளி நாடுகளுக்கு அனுப்ப எவ்வளவு குரியர் சார்ஜ் என்று அறிய முடியவில்லை,
air mail means?
சஹ்ரிதயன்