(2002-03 ஆம் ஆண்டு) (கோடி ரூபாய்கள்) | ||
ஆந்திரம் | தமிழ்நாடு | |
நிதிநிலை அறிக்கை மொத்த வருவாய் | 35,353 | 30,188 |
நிதிநிலை அறிக்கை மொத்த செலவு | 35,420 | 30,831 |
ஆண்டு திட்ட முதலீடு | 10,100 | 5,750 |
மத்திய வரி வருவாயில் மாநிலத்தின் பங்கு | 4,575 | 3,199 |
மத்திய அரசிடமிருந்து உதவி மான்யங்கள் | 4,104 | 1,715 |
மத்திய அரசிடமிருந்து பெறும் கடன் | 3,872 | 1,273 |
மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மொத்த நிதி ஆதாயங்கள் (Resources) | 12,551 | 6,187 |
சந்தையிலிருந்து திரட்டும் கடன் | 2,574 | 1,136 |
* ஆந்திர மாநிலம் விவசாயம், மின் உற்பத்தி, கனிம வளங்கள் பெருக்கம் ஆகியவற்றில் தமிழ்நாட்டை விட முண்ணனியில் உள்ளது. 2000-01 ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே அரிசி உற்பத்தியில் மூன்றாவது இடம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இரண்டாவது இடம், பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது.
* சந்திரபாபு நாயுடு அளித்த ஒரு புள்ளி விவரம்: இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் விழுக்காடு 21%. தமிழ்நாட்டில் 21.02%, கர்நாடகத்தில் 20.4%, ஆனால் ஆந்திரத்தில் 15.77% மட்டும்தான். (இந்தப் புள்ளி விவரத்தை சரியாகப் பரிசீலிக்க வேண்டும். பீமாரு மாநிலங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் சதவிகிதம் நிச்சயம் 21க்கு மேல் இருக்க வேண்டும். இங்குள்ளவர்களின் மக்கள் தொகையும் மிகப் பிரம்மாண்டமானது. அப்படியானால் பல மாநிலங்களில் 21% ஐ விடக் குறைந்த விழுக்காடுதான் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்க வேண்டும்.)
*1991 ஆகஸ்டு முதல் முதல் 2003 மே மாதம் வரையில் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தவர்கள் கொண்டுவருவதாகச் சொன்ன தொகை: ரூ. 1,26,271 கோடிகள். (இவ்விடத்தில் பிசினஸ் ஸ்டாண்டர்டு செய்தித்தாளின் கட்டுரை பற்றிய வலைப்பதிவையும் படிப்பது நல்லது.)
* Indian School of Business ஹைதராபாதில் நிறுவப்படக் காரணமான கதை ஒன்றையும் குறிப்பிடுகிறார். இந்தக் கதையும் Business Standard இல் வந்தது. உலகப் புகழ் பெற்ற வார்ட்டன், கெல்லாக் மற்றும் லண்டன் நிர்வாகப் பள்ளிகள் இணைந்து உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் ஒரு நிர்வாகத்துறை பற்றிய கல்லூரியை நிர்மாணிக்கத் திட்டமிட்டு இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கும் வந்தனராம். மும்பையில் பால் தாக்கரே தனது மாநிலத்தவருக்குத் தனியிடங்கள் கோரினார். அதனை நிராகரித்து சென்னை வந்தபோது தமிழக உயர் அரசு அதிகாரி வெளிநாட்டுக் குழுவினர் ஒவ்வொருவரிடமும் ஒரு மாலையைக் கொடுத்து அதனை அப்பொழுதைய முதல்வர் திரு.கருணாநிதிக்குப் போடச் சொன்னாராம். அதனையடுத்து கருணாநிதியும் ஒரு ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் 100 ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னாராம். பின்னர் ஹைதராபாத் சென்ற அந்தக் குழுவினை விமான நிலையத்திலேயே வரவேற்று ஒவ்வொருவருக்கும் மாலையிட்ட சந்திரபாபு நாயுடு, ஏன் அவர்கள் அந்தப் பள்ளியை ஹைதராபாதில் அமைக்க வேண்டும் என்று பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் காட்டி, அந்தக் கல்லூரி கட்ட வேண்டுமான நிலத்தை இலவசமாகவே கொடுப்பதோடு வேண்டிய மற்ற உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னாராம்.
அன்று மாலையே அந்தக் குழு ஹைதராபாதில் கல்லூரி கட்டுவதாக அறிவிப்பை வெளியிட்டது. அந்தக் கல்லூரிதான் Indian School of Business, Hyderabad. இக்கல்லூரி ஜூலை 1, 2001 முதல் நடந்து வருகிறது.
இக்கட்டுரையின் முதல் பகுதி பற்றிய வலைப்பதிவு
No comments:
Post a Comment