Monday, October 24, 2005

தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்

இது தமிழ்மணம் பற்றிய பதிவல்ல:-)

Blogger வலைப்பதிவுகளுக்கான தேடுதல் வசதியினைச் சேர்த்துள்ளது உங்களுக்குத் தெரியும். http://search.blogger.com என்ற இடத்தின் மூலமாக இது கிடைக்கிறது. ஆனால் இதன்மூலம் பல புது வித்தைகளைச் செய்யமுடியும்.

உதாரணத்துக்கு, உங்கள் வலைப்பதிவில் நீங்கள் பல பதிவுகளை எழுதுகிறீர்கள் (blogger.com, உங்கள் சொந்த மூவபிள்டைப், லைவ்ஜர்னல், ந்யூக்ளியஸ் என்று எதுவானாலும் சரி). இந்தப் பதிவின் சுட்டியை யாராவது எடுத்துக் கையாளுகிறார்களா, உங்கள் பதிவின் மீதான விமரிசனத்தை வைக்கிறார்களா, உங்களை நாயே, பேயே என்று திட்டுகிறார்களா? எப்படிக் கண்டுபிடிப்பது? மேற்சொன்ன search.blogger.com சென்று உங்கள் வலைப்பதிவின் உரலை link: என்று போட்டுத் தேடவும். உதாரணத்துக்கு நான் link:thoughtsintamil.blogspot.com என்று தேடுவேன். சரி, இந்த உரல் சென்று ஒவ்வொரு முறையும் தேடிக்கொண்டிருக்கவேண்டுமா என்றால், இல்லை. ஒருமுறை தேடி, கீழே தெரியவரும் atom அல்லது rss செய்தியோடையைக் கவ்வி, உங்களுக்குப் பிரியமான செய்தியோடை படிப்பானில் படிக்கலாம். உதாரணத்துக்கு, எனக்குத் தேவையான Atom செய்தியோடை.

இதை நீங்கள் வெட்டியெடுத்து என் thoughtsintamil.blogspot.com க்கு பதில் உங்கள் பதிவின் உரலை இட்டு, num=100 என்பதற்கு பதில் num=20, 30, 40 என்று எதுவேண்டுமோ அதைப்போட்டுக்கொண்டு அவ்வப்போது செய்தியோடையில் உங்கள் பதிவை யார் இணைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கலாம்.

இதன் தொடர்ச்சியாகத்தான் blogger.com இல் பதிவுகள் வைத்திருப்பவர்கள் பின்தொடர்தல் வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது நிஜமான பின்தொடர்தல் வசதியல்ல. ஆனால் இப்போதைக்கு இது போதும். பின்தொடர்தல் பற்றிய முழு அறிமுகம் என் முந்தைய பதிவுகளில் இருக்கும். தேடிப்பிடித்து இங்கு பின்னர் இடுகிறேன்.

இதை எப்படிச் செயல்படுத்துவது என்று blogger.com பதிவு வைத்திருப்பவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளவும். Blogger.com இதனை Backlinks என்று அழைக்கிறார்கள். இதனை என் ஆங்கில வலைப்பதிவில் உட்புகுத்தினேன். நன்றாக வேலை செய்கிறது. ஆனால் தமிழில் இதுவரை சரியாக வேலை செய்யவில்லை. ஏன் என்று பார்க்கவேண்டும்.

11 comments:

  1. reader.google.com provides a opml import facility which is better than google.com/ig or my.yahoo.com.

    .:dYNo:.

    ReplyDelete
  2. Forgot to mention, it takes a long time to update, so beware if you are going to import the whole list of tamil blogs.

    .:dYNo:.

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி, பத்ரி. '...ஆலோசனைகள்' என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?

    ReplyDelete
  4. மறுமொழி அடித்துவிட்டுப்பார்க்கிறேன், ஏற்கனவே மாற்றியிருகிறீர்கள், நான் தான் கவனிக்கவில்லை :-(

    ReplyDelete
  5. விடுதலை இனி இல்லை- படித்தேன்

    பெண்ணுடைய கண்ணோட்டத்திலிருந்து கூறப்பட்ட அருமையான படைப்பு இந்தச் சிறுகதை- எண்ணங்களை கோர்வையாக அதே சமயம் இயல்பாக எழுதியுள்ளீர்கள்

    சிறுகதைக்கு அருகிலேயே மறுமொழி எழுத இடம் தெரியாததால் இங்கு எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  6. Mr.Badri
    The technology may be useful but how about the quality of the Tamil
    blogs.How blogs are worth reading or recommending to others in terms
    of content. The number of blogs has increased but in terms of content Tamil blogs have a long way to go.I am a Tamil blogger and if i reveal my identity there will be a war of words ignoring the substance but attacking me personally. As one who tried to read as many blogs as possible
    i am disappointed with the quality
    of the blogs and comments.What one
    sees is the replication of what has
    been happening in the discussion
    groups and ezines, lots of heat,
    little light. This will result in
    stagnation and stale fights involving personal biases and
    prejudicies.

    ReplyDelete
  7. Anon: தமிழ்ப் பதிப்புகளின் தரம் இன்னமும் அதிகமாக இருக்கவேண்டியதுதான். தொழில்நுட்பம் வளர வளர, தரமான ஆசாமிகளும் அதிகரிக்க அதிகரிக்க, இப்பொழுதிருக்கும் நிலை மாறும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  8. Arivali Badri
    First learn how to write in proper Tamil before giving your arivurai to others.

    ReplyDelete
  9. ---ஆனால் தமிழில் இதுவரை சரியாக வேலை செய்யவில்லை.---

    It works equally well. Just takes time?! Google takes more time to update its db, compared to technorati. That might be one of the reason.

    One of my pages which shows the 'link to this post': http://etamil.blogspot.com/2005/10/blog-post_112959626231253626.html

    ReplyDelete
  10. பாலாஜி: என் தமிழ் வலைப்பதிவில் வேலை செய்யவில்லை என்றுதான் சொன்னேன். என் டெம்ப்ளேட்டில் ஏதோ பிரச்னை என்று நினைக்கிறேன். தட்டிக்கொட்ட வேண்டும். பேக்லிங்க்ஸ் ஆட்டோ-அப்டேட் ஆகவில்லை. மேனுவல் அப்டேட் தான் செய்தேன், ஆனால் ம்ஹூம்...

    ReplyDelete