இன்று தி ஹிந்து செய்தித்தாள் இணைப்பு இதழில் மைக் மார்குஸீ எழுதியுள்ள Fudging history படிக்க வேண்டிய கட்டுரை.
வரலாற்றுத் திரிபுகள் எல்லா நாடுகளிலும் உண்டு. சொல்லாமல் விடுதலும் திரித்துச் சொல்வதைப் போன்றே மோசமான ஒரு விஷயம்தான். ஆனால் அதை எடுத்துச் சொல்ல சிலராவது இருக்கிறார்களே என்பது சந்தோஷம்.
இந்தியாவிலும் ஏகப்பட்ட சொல்லப்படாத விஷயங்கள், திரித்துச் சொல்லப்படும் விஷயங்கள் என்று உண்டு.
மஹாராஷ்டிரத்தில் சிவாஜிக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாது. கர்நாடகத்தில் புலிகேசிக்கு எதிராக. ஒரிஸ்ஸாவில் அசோகரைப் புகழ்ந்து சொல்ல முடியாது! தமிழகத்தில்? அந்த அளவுக்கு மோசம் இல்லை என்று நினைக்கிறேன். பழைய அரசர்கள் யாரைப் பற்றியும் அந்த அளவுக்கு பயப்பட வேண்டியதில்லை. கண்ணகி போல சில புனிதப் பசுக்கள் உண்டு; ஆனால் அவரைப் பற்றியும் விமரிசனமாக எழுதினால் ஆர்வமுடன் பிரசுரிக்கின்றன இதழ்கள்.
பழங்கால இந்தியா பற்றிய முழுமையான, பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு நடுநிலையான, முக்கியமான விஷயங்கள் ஏதும் விடுபட்டுப் போகாத வரலாறு ஒன்று வேண்டும்.
எமர்சன் / சிறிய அறிமுகம்.
1 minute ago
நேரு போல ஒரு தலைவர் இன்று இல்லாததுதான் குறை. அவருக்கிருந்த உலக வரலாற்று அறிவு, சகிப்புத் தன்மை, பெரிய அண்ணன்களின் மூக்கைக் குறி வைக்கும் பயமின்மை போன்றவை இன்றைய முதுகெலும்பில்லாத தலைவர்களிடம் இல்லாததுதான் குறை.
ReplyDeleteஜப்பானில் வரலாற்றுப் புத்தகங்கள் இப்படி உண்மையைத் திரித்து எழுத முயன்றால் சீனாவில் உடனேயே பலமான எதிர்ப்பு ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் இந்தியாவிலிருந்து ஒரு முனகல் கூட இல்லை.
அன்புடன்,
மா சிவகுமார்
ஔரங்கசீப்பு, கஜினி, போன்ற அதிபயங்கர தீவிரவாதிகளைப் பற்றி விமர்சனம் செய்தாலோ, அவர்கள் உண்மையைப் பற்றிச் சொன்னாலோ, நம் ரொமிளா தாபர்,இர்பன் ஹபீப் போன்றவர்களுக்கு பொருக்காது....அதே போல் இந்த ஆரிய மாயையை கேள்வி கேட்டாலும் அவர்களுக்குப் பொருக்காது...
ReplyDeleteஇப்படி கேட்பவர்களெல்லாம் இந்துத்வா-வி-யா-தி-கள்...
What is your views on Arun shourie's "eminent historians"?