Thursday, January 11, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 2

11/1/2007. இதுதான் 'officially' முதல் நாள். நல்ல கூட்டம். புது மக்கள் நிறைய இருந்தனர். மதியம் 2.00 மணி முதற்கொண்டே கூட்டம் உள்ளே வரத்தொடங்கியது.

ஆனால் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை நடந்து செல்வதில் பலரும் கஷ்டப்பட்டனர். நடுநடுவே இருந்த எமெர்ஜென்சி பாதை வழியே குறுக்காகச் செல்ல மக்கள் முற்பட்டனர். அவர்களைக் காவலர்களும் சில கடைக்காரர்களும் தடுத்தனர்.

Other news

* முதல்வர் ஒரு கோடி ரூபாய்க்கு காசோலையை அனுப்ப (நேற்று சொல்லி, இன்று பணம் தயார்!) காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.

* கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது "தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே கலைஞர் நிறைவேற்றிவிட்டார், இங்கு (முதல்நாள்) கொடுத்த வாக்குறுதிகள் எம்மாத்திரம்?" என்றார்.

* கழிப்பிட வசதிகள் சுமார். கிடையவே கிடையாது. எங்கோ பாழடைந்த கட்டடம் போன்று இருந்த ஓரிடத்தில் பெண்களுக்கான கழிவறை இருந்தது. அங்கு விளக்குகள் ஏதும் இல்லை. இந்தியாவில் ஆண்களுக்கு கழிப்பறையே தேவையில்லை. அவர்கள் ஆங்காங்கு ஒதுக்குப்புறமாகத் தங்கள் வேலைகளைச் செய்தனர். பெண்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டனர்.

நாளைக்குள் நிர்வாகத்தினர் ஏதாவது செய்வார்களா என்று பார்ப்போம்.

* திடீரென குமுதம் ஸ்டாலில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் பக்கம் வருபவர்களுக்கு ஒரு புத்தகம் இலவசம் என்று அறிவித்தனர். ஒரே கூட்டம். கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் வரிசையில் நின்றனர். இதனால் பிற கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட, பலரும் சத்தம்போட, அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாது.

இலவசம் என்பதற்காக...

Smile of the day:



பல்லோடு ஸ்மைல்.

Picture of the day:



தென்கச்சி சுவாமிநாதன் பேசுவதைக் கேட்கும் மக்கள்.

4 comments:

  1. கவரேஜ் அருமையாக இருக்கு பத்ரி...

    இந்தப் புன்னகை என்ன விலை :)

    ReplyDelete
  2. என்ன இவ்வளவு மக்கள் கூடும் இடத்தில் கழிப்பிட வசதியில்லையா??
    பணம்/வியாபாரம் பண்ண விரும்பும் மக்கள் யாராவது இந்த நிரந்தரமில்லா கழிப்பறையை வைத்து 4 காசு பாக்கலாமே?

    ReplyDelete
  3. Thanks for covering this event.

    Even though it is expected that rest room facilities in India are going to substandard, we can no longer justify this. We are a rapidly developing country and this aspect of India makes travel and tourism a nightmare.

    ReplyDelete
  4. இதுதான் இந்தியா. மத்த எந்த நாட்டில் இது மாதிரியான மக்கள் கூடும் இடங்களில் முதலில் பொதுக்கழிப்பிடம் வைப்பார்கள். இந்தியாவில் யாருக்கும் அக்கறையில்லை.

    ReplyDelete