சன் டிவி காலி என்று பலரும் நினைத்தனர். 15 மே 2007 அன்று நான் எழுதிய பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் சன் டிவியின் வருமானமும் லாபமும் சடாரெனக் குறைந்துவிடும் என்று கணக்கு செய்யவே கூடாது. அதற்கான 'நிரூபணம்' ஏதும் சந்தையிடம் இல்லை.இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகு சன் குழுமத்தின் இரண்டு காலாண்டு வருமானமும் வெளியாகியுள்ளது.
...
இரண்டு நிறுவனங்களின் [அதாவது ராஜ், சன்] அடுத்த இரண்டு காலாண்டு வருமானத்தையும் லாபத்தையும் கவனிப்பது நல்லது.
ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் 2007 காலாண்டில், சன் தொலைக்காட்சி குழுமம் பெற்ற வர்த்தக வருமானம் ரூ. 194.45 கோடி. நிகர லாபம் ரூ. 80.16 கோடி. அதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன் 2007) பெற்ற வர்த்தக வருமானம் ரூ. 202.34 கோடி. நிகர லாபம் 93.07 கோடி.
வர்த்தக வருமானத்தில் சுமார் ரூ. 8 கோடி குறைந்துள்ளது. அவ்வளவே. லாபத்தில் ரூ. 13 கோடி குறைந்துள்ளது; இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். மார்க்கெட்டிங்கில் நிறையச் செலவுகளை செய்திருக்கலாம். (இதர செலவுகள் என்ற தலைப்பில் ரூ. 8 கோடி அதிகமாகச் செலவாகியுள்ளது.)
ஆக, சன் டிவி வருமானம், கலைஞர் டிவி வரவால் சொல்லிக்கொள்ளும்படிக்கு பாதிக்கப்படவில்லை. சுவாரசியமான விஷயம்... சன் டிவி குழுமத்தின் சம்பளச் செலவுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. ரூ. 22.4 கோடியிலிருந்து ரூ. 17.5 கோடியாக - அதாவது 22% குறைந்துள்ளது. இதற்கு ஒரே காரணம், நிறைய ஊழியர்கள் சன் டிவியை விட்டுவிட்டு, கலைஞர் டிவியில் சேர்ந்துள்ளனர் என்பதாக மட்டுமே இருக்கமுடியும்!
இந்த நிலையையும், வேறு சில தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது, அடுத்த இரண்டு காலாண்டுகளில் சன் டிவியின் வருமானமும் லாபமும் வெகுவாக அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.
சரி, இதனால் சிறு முதலீட்டாளர்களுக்கோ என்ன வந்தது என்கிறீர்களா, அதுவும் சரிதான். ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறு முதலீட்டாளர் வசம் இருந்தது வெறும் 0.91% சன் டிவி பங்குகள் மட்டுமே. இப்பொழுதோ அது வெறும் 0.8%தான்!
Sun tv மட்டுமல்ல Reliance
ReplyDeleteகூட இதெ style தான
follow பன்னுராங்க
சன் டீவிக்கு இது தற்காலிகமான பின்னடைவுதான். அதுவும், சந்தைக்குப் புதிய ப்ளேயர் வந்ததால் ஏற்பட்டது என்றுதான் தோன்றுகிறது.
ReplyDeleteஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் சொந்தத் தொலைக்காட்சி என்ற ஹோதாவைத் தவிர கலைஞர் டீவிக்கு எந்த மதிப்பும் இல்லை.
கலைஞர் டிவி
பலங்கள் :
1. டீவியின் பெயரில் இருக்கும் கலைஞர்.
2. பணம்
3. பணம் மூலமாக வந்த உள்கட்டமைப்பு.
4. சில ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கையகப்படுத்தி இருப்பது ( தற்காலிகமான viewership க்கு உதவும் )
பலவீனங்கள்.
1. சன் டீவியின் க்ளோனாக இருப்பது. எல்லா நிகழ்ச்சிகளும், சன் டீவி நிகழ்ச்சிகளை நினைவு படுத்துவது. மார்க்கெட்டில் ஏற்கனவே சன் டீவி இருக்கும் போது, அதைப் போலவே இன்னொன்று எதற்கு?
2. புதுப் பட டைட்டில்கள் தவிர, உருப்படியான டெலிவிஷன் சாஃப்ட்வேர் எதுவும் கையி்ல் இல்லை. இன்னமும்., மெகா சீரியல்களையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
3. கட்சி சார்பு.
4. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், விளம்பர வருவாயில் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் :-)
சன் டீவி
பலங்கள் :
1. first mover advantage. அதை நல்லா கேஷ் இன் செய்திருக்கிறது இது வரையிலும்.
2. 14 வருஷங்களில் சேர்ந்திருக்கும் ஏகப்பட content. அதை எல்லாம் மறு ஒளிபரப்பு செய்வதற்காகவே இன்னொரு தொலைக்காட்சி ஆரம்பிக்கலாம்.
3. மைண்ட்ஷேர். ஹிந்து வாசிப்பதைப் போல, பல்துலக்குவதைப் போல, சன் டீவி பழக்கம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அது லேசுப்பட்ட விஷயம் அல்ல.
4. பல நிகழ்ச்சி வடிவங்களுக்கு முன்னோடி. இன்றைக்குக் கிண்டல் செய்தாலும், கோட் சூட் அணிந்து நாற்காலியில் அமர்ந்து அமர்த்தலாக திரை விமர்சனம் செய்யும் பாணி துவங்கி, பல புதிய நிகழ்ச்சி வடிவங்களை உருவாக்கியது. இன்றைக்கு விஜய் டீவியைப் பார்த்து காப்பி அடிக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
5. நிகழ்ச்சிகளுக்கு இடையில் விளம்பரங்களைச் செருகுதல், சன் டீவீ போல யாரும் செய்ய முடியாது. ராஜ், ஜெயா, விஜய் என்று எல்லோரும் கவனிக்கத் தவறும் அம்சம் இது. சன், மிகச் சரியான இடைவெளிகளில் விளம்பரங்களைச் செலுத்தும். எரிச்சல் மூட்டாது. விட்ட இடத்தில் வந்து மறுபடியும் சரியாக சேர்ந்து கொள்ளலாம்.
6. இன்னும் பல.
பலவீனங்கள் :
1. நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் க்ரியேட்டிவிட்டி குறைந்து விட்டது. அப்ப்பட்டமாகக் காப்பி அடிக்கிறார்கள்.
2. விஜய் டீவியின் பரிசோதனைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவது நிதர்சனமாகத் தெரிகிறது.
3. சிவாஜி, தசாவதாரம் ரைட்ஸை கோட்டை விட்டது.
4. தினமணி, DD போல ஆகிக் கொண்டு வருவது, with a glorious past and a hopeless future.
5.பரிசோதனை முயற்சிகளுக்கு அஞ்சுவது. இன்றைக்கு ஜெயாவிலே,அசத்தலாக அதிரடியாக பல நிகழ்ச்சிகள் தயாரித்து இயக்கும் சுபஸ்ரீ தணிகாசலம், சன் டீவியில் இருந்தவரை, வெறுமனே ஆணி தான் பிடுங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6.பேட்டி, சினிமா நிகழ்ச்சிகள், சீரியல், பாடல் நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும் பழைய வாடை அடிப்பது. கடந்த பத்து வருடங்களாக, சாகுல் அமீது, நிபுணர்களைப் பேட்டி எடுக்கிறார், எடுக்கிறார் எடுத்துக் கொண்டே இருக்கிறார்.
7. இன்னும் பல. வேறு சந்தர்ப்ப்பத்தில் எழுதுகிறேன்.
கூட்டி கழித்துப் பார்த்தால், சன் டீவிக்கு, கலைஞர் டிவீயால் இன்னும் சில வருடங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றே தோன்றுகிறது.
Thanks. For the past one week I was wondering, what was the effect of kalaignar tv on Sun's share value?
ReplyDelete