Tuesday, February 12, 2008

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

பராக் ஒபாமா டெமாக்ரடிக் கட்சி பிரைமரியில் வென்று, அடுத்து நடக்கவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சிக்காரரைத் தோற்கடித்து, பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

இதனால் அமெரிக்காவின் நடத்தையில் ஓரளவுக்கு மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஹிலாரி கிளிண்டன், ஈராக் மீதான போரை ஆதரித்தது அவர்மீதான ஒரு கரும்புள்ளி. அவர் ஜெயித்தால், பில் கிளிண்டனின் ஈடுபாடு கொஞ்சம் அதிகம் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

ஒபாமா இந்த அளவுக்கு ஆதரவைத் திரட்டியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதே வேகத்தில் தொடர வாழ்த்துகள்.

வெங்கட் பதிவு
அமெரிக்கத் தேர்தல் வலைப்பதிவு

2 comments:

  1. பத்ரி

    மகிழ்ச்சி. 'அமெரிக்காவின் நடத்தையில் மாற்றம் இருக்கும்' என்பதும் பிற நாடுகளின் பார்வையில் அமெரிக்கா மாற்றம் பெரும் என்பதுமே நான் ஒபாமாவை ஆதரிக்க முக்கியமான காரணங்கள்.

    ReplyDelete
  2. ஒபாமா ஜனநாயககட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், அமெரிக்க நிறரீதியான எண்ணங்கள் வெளித்தெரியலாம். அமெரிக்க - குறிப்பாக வெள்ளை - மக்கள் ஒரு கறுப்பின முஸ்லிமை ஜனாதிபதியாக ஆக்கும் அளவிற்கு குடியரசுக் கட்சி மீது இருக்கும் வெறுப்பு அவர்களை செலுத்தப் போகிறதா என்பது சந்தேகம்தான்.

    நஷ்டம் நமக்குத்தான்.

    ஒபாமா முன் மொழியப்பட்டு, ஒரு வெள்ளை இனத்தவரை running mate ஆக தெரிந்தெடுக்கவில்லை என்றால், போண்டா வாய் மெக்கயின் தாவினாமும் தாவி விடுவார்.

    ReplyDelete