கணினி உபயோகிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் சில பிரச்னைகள் இல்லாமல் இல்லை.
எனது இடது மணிக்கட்டில் கடந்த மூன்று நாள்களாக வலி. நான் ஐ.பி.எம்/லெனோவா மடிக்கணினியை (Thinkpad R60) பயன்படுத்துகிறேன். டைப் அடிக்க, இரண்டு கைகளையும் பயன்படுத்துகிறேன். இதில் இடது கை, மடிக்கணினியின் இடது மூலையின்மீது அழுந்துவதுபோல் இதுநாள்வரை கைகளை வைத்திருந்திருக்கேன். இதனால் இடது மணிக்கட்டு எலும்பை தசைகளுடன் சேர்க்கும் திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, திடீரென்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வலி. இது wrist tendonitis என்ற வகையில் சேருமாம்.
பிசியோதெரபிஸ்ட் ஒருவரைப் பார்த்ததில், ஐஸ் ஒத்தடம் கொடுக்கச் சொன்னார். அதில் நல்ல பலன் இருந்தது. கூடவே, அல்ட்ரா சவுண்ட் கதிர்கள்மூலம் tendon வீக்கத்தைக் குறைக்க முயற்சி. அதே நேரம் மணிக்கட்டு ஆடாமல் இருக்க, முதலில் crepe bandage போட்டுக்கொண்டேன். அது மடிசார் புடைவைபோல் பலமுறை கையில் சுற்றிச்சுற்றி குண்டாக இருக்க, பார்ப்போரெல்லாம் என்னவோ கை உடைந்துவிட்டதா என்பதுபோல விசாரிக்கத் தொடங்கினர். இப்போது மெலிதான, அழகான ஸ்டிராப் ஒன்று போட்டிருக்கிறேன்.
கையை நகர்த்தி வைத்து அடித்தால் தப்பு தப்பான எழுத்துகள் வருகின்றன. எழுதும் வேகம் குறைகிறது.
வேறு எர்கோனாமிக் டிசைன் உள்ள லாப்டாப்பைத் தேடவேண்டும்.
எதற்குரியது நம் வாழ்க்கை?
6 hours ago
Go for a desktop rather than a laptop. Keep your content in the cloud.
ReplyDelete//Go for a desktop rather than a laptop. Keep your content in the cloud.//
ReplyDeleteஅல்லது ஒரு USB விசைப்பலகை வாங்கி அதை மடிக்கணனியுடன் இனைக்கலாம். மேலும் தனியாக ”எலி”யும் வாங்குவது நலம்
நான் அப்படிதான் செய்துள்ளேன்.
நான் தற்பொழுது மடிக்கணினியுடன் உபயோகிப்பது 2001ல் நான் வாங்கிய HP Pavilion கணினியுடைய விசைப்பலகை மற்றும் அதே எலி.
Can't escape it.
ReplyDeletehttp://pari.kirukkalgal.com/?p=48
http://pari.kirukkalgal.com/?p=49
http://pari.kirukkalgal.com/?p=50
-Pari