Sunday, October 19, 2008

ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து

மாவிலாறு தொடங்கி, இன்று வரை, விடுதலைப் புலிகள் தரப்புக்குக் கடும் சேதம். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்தக் காலகட்டத்தில் புலிகள் டாக்டிக்ஸில் கடுமையாக அடிவாங்கியுள்ளனர் என்பது தெளிவு. ஆனால் ஈழ யுத்தங்களில் ஒரு கை ஓங்குவதும், பின் இறங்குவதும் கடந்த இருபதாண்டுகளாகவே நடந்துவருவதே. மீண்டும் புலிகளின் கை ஓங்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இலங்கையில் போர் நடந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதும் சரி, இப்போது கிளிநொச்சியை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறும்போதும் சரி, பெரும் பாதிப்பு தமிழ் மக்களுக்குத்தான். அதைத்தவிர வங்காலை, செஞ்சோலை என்று பல பாராமிலிட்டரி, மிலிட்டரி பாதிப்புகள். குண்டுவீச்சுகள், பாலியல் வன்கொடுமைகள்.

அப்போதெல்லாம் தமிழகத்தில் குரல் கொடுத்தது வைகோ, நெடுமாறன், திருமாவளவன், ஓரளவுக்கு ராமதாஸ், பிற பெரியாரிய, தமிழ் தேசியக் கட்சிகள்.

திராவிட முன்னேற்றக் கழகமும், முதல்வர் கருணாநிதியும் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்ச்செல்வன் கொலைக்குப்பிறகு முரசொலியில் ஒரு கவிதை எழுதினார். அம்மா அறிக்கை ஒன்றை விடுத்து, ‘புலி வருது, கருணாநிதியை நீக்குங்க’ என்றதும், பின்பு கருணாநிதி ஆஃப் ஆகிவிட்டார்.

ரேடார் கருவிகள் விஷயத்தில், கூட்டு ரோந்து விஷயத்தில் என்று பலவற்றிலும் முதலில் நின்று குரல் கொடுத்தது வைகோதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால், அந்த நேரத்தில் அவர் ஜெயலலிதாவுடன் வைத்திருந்த கூட்டு. இதெப்படி சாத்தியம்? ஆனால் தமிழகத்தில் இது நடக்கும்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் திமுகவும் கருணாநிதியும் ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கமுடியும். உதாரணத்துக்கு, வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு இணை அமைச்சர் பதவியாவது தங்கள் கட்சிக்கு வேண்டும் என்று கேட்டுவாங்கியிருக்கலாம். திமுகவின் கேபினட் அமைச்சர்கள், பிரணாப் முகர்ஜியுடனும் வெளியுறவுச் செயலர்களுடனும் தினந்தோறும் பேசக்கூடிய நிலையில் உள்ளவர்கள். இலங்கையில் என்ன நடக்கிறது என்று பேசி, ஒரு குறிப்பிட்ட திசையில் கொள்கைகள் செல்லுமாறு பார்த்துக்கொள்ளலாம்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், உள்துறை அமைச்சக, பாதுகாப்பு அமைச்சக, அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் - இவர்கள்தான் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை வகுக்கிறார்கள். இதில் திமுக நிச்சயமாகத் தலையிட்ட ஒருமித்த கருத்து உருவாக வழிவகுத்திருக்கலாம்.

அதேபோல, இலங்கைக்கான இந்தியத் தூதர் யாராக இருந்தால், தமிழர் நலனுக்கு ஆதரவாக இருக்கும் என்று அறிந்து, அவர்களுக்கு அந்தப் பதவி கிடைக்குமாறு செய்ய திமுக முனைந்திருக்கலாம். பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் லாபி செய்திருக்கலாம். மன்மோகன் சிங்கை வற்புறுத்தியிருக்கலாம். அப்படி எதையுமே செய்ததாகத் தெரியவில்லை.

மற்றொன்று: திமுக வெளிப்படையாக, தங்களது நிலை என்ன என்றே இதுவரையிலும் சொல்லவில்லை. புலிகளுக்கு ஆதரவான நிலையா, அல்லது எதிரான நிலையா என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. எதையாவது சொல்லப்போக, அது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிடும் அபாயம் உள்ளதே என்ற பயம்.

வைகோ, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோருக்கு இந்தப் பயம் கிடையாது. அவர்களுக்கு மட்டும்தான் இந்தப் பயம் கிடையாது. ராமதாஸும் தெளிவாக எதையும் வெளியே சொல்லாவிட்டாலும் புலிகளுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பவர்தான்.

இடதுசாரிகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் இலங்கைப் பிரச்னையில் உருப்படியாக ஒன்றையுமே முன்வைத்ததில்லை. இப்போது மத்திய அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தில் தோல்வியடைந்தபிறகு, திடீரென தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர்.

வைகோ, ராமதாஸ், திருமாவளவன் மட்டும் இலங்கைப் பிரச்னையைப் பற்றி பேசிவந்திருந்தால், கருணாநிதி முன்போலவே ஒன்றும் செய்யாமல் ஒரு கவிதை எழுதி, கண்ணைத் துடைத்துக்கொண்டிருப்பார்.

ஆனால் இப்போது தேர்தல் வரப்போகிறது. ஜெயலலிதாதவிர அனைத்துக் கட்சியினரும் இலங்கை விஷயத்தைக் கையில் எடுக்க, தானும் ஏதாவது செய்தாகவேண்டும் என்று கடும் நெருக்கடி. உடனே ஏவு அஸ்திரத்தை. ராஜினாமா செய்வோம். பட்டினிப் போராட்டம். மனித சங்கிலிப் போராட்டம்.

ஏதோ இவையெல்லாம் நடந்தால் இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதான அடக்குமுறையை நிறுத்திவிடும்; அல்லது இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தி இவற்றைச் சாதித்துவிடும் என்பது போல பாவ்லா.

**

பிரச்னையை வேறுவிதமாக அலசவேண்டும்.

1. இலங்கையில் புலிகள் என்ற குழு இருக்கும்வரை, அவர்களும் போரை ஆதரிக்கும்வரை, இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபடிதான் இருக்கும்.
2. போர் என்று நடந்தால், சாதாரணமாகவே அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் சிங்கள் வெறியாட்டமும் சேர்ந்துகொண்டால், அதிகம் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்.

எனவே புலிகள் பற்றிப் பேசாமல், தமிழர்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், உணவு-உடை கிடைக்காமை, அகதிகள் பிரச்னை போன்ற எதைப் பற்றியும் தனியாகப் பேசமுடியாது.

மேலே சொன்ன சில தலைவர்களின் கீழ் இருக்கும் தமிழகக் கட்சிகள், நேரடியாகப் புலிகளை ஆதரிக்கக்கூடியவை. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக புலிகளை எதிர்க்கும் கட்சி. தமிழக காங்கிரஸ் தவிர பிற மாநில காங்கிரஸ் கட்சியினர் புலிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழக காங்கிரஸுக்கு சோனியா என்ன சொல்வாரோ என்று இன்றுவரை தெரியவில்லை.

திமுக, தெளிவாக புலிகளைப் பற்றிய கருத்தை முன்வைக்கவில்லை. நேற்று முளைத்த தேமுதிகவும் தெளிவாக எதையும் சொல்லவில்லை.

இதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு தமிழகத்தில் இல்லை. தமிழகத்திலேயே முழுமையான ஆதரவு இல்லாதபோது, இந்திய அரசின் கருத்தை ஒரு பக்கம் செலுத்துவது எளிதல்ல.

**

1. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில், இந்திய அரசு எந்தத் தரப்பை ஆதரிக்கவேண்டும்?

2. போர் நிறுத்தத்தை வற்புறுத்த இந்தியாவால் முடியுமா? போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதும், இரு தரப்பினரும் அவற்றை மீறி, தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவரச் செய்ய, இந்திய அரசுத் தரப்பிடம் எந்த நெம்புகோலும் இல்லை. இரு தரப்புக்கும் ஒட்டோ, உறவோ இல்லை.

3. தமிழகத்தில் பல சிறு கட்சிகள் சொல்லும் ‘சுய நிர்ணய உரிமை’, ‘தனித் தமிழ் ஈழம்’ போன்ற கொள்கைகளுக்கு இந்தியாவில் ஒருமித்த ஆதரவு ஏற்படப்போவதில்லை. உலகின் அனைத்து அரசுகளுமே, தம் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை இப்போதைக்கு வழங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழ் ஈழம் அமைவதைக் கடுமையாக எதிர்க்கும். இந்தியா, தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு, விடுதலைப் புலிகளை ஆதரித்தாலும், தனித் தமிழ் ஈழம் என்ற நாடு உருவாவதற்குத் தேவையானவற்றை அதனால் செய்ய இயலாது.

4. இணைந்த இலங்கையில், கூட்டாட்சி முறையில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழர் மாகாணங்கள் வருவதற்கு விடுதலைப் புலிகள் ஒப்புதல் தருவார்களா என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஏற்பட்டாலும், சிங்கள வலதுசாரிகள், இந்த முறை செயல்படாமல் இருக்க, வேண்டிய அனைத்தையும் செய்வார்கள். எனவே இப்படி ஒரு இடைக்கால அரசியலமைப்புச் சட்ட மாறுதல் ஏற்பட்டாலும், அதனால் உருப்படியாக இயங்கமுடியாது.

5. முன்னர் விடுதலைப் புலிகள் கை ஓங்கிய நிலையில் இருந்தபோதே, இலங்கை அரசிடம் பல சலுகைகளைப் பெறமுடியவில்லை. இப்போது கை தாழ்ந்த நிலையில் இருக்கும் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தாலும் அதிகம் பெற்றுத் திரும்ப முடியாது.

6. புலிகளை எடுத்துவிட்டு (அதாவது அழித்துவிட்டு), பிற தமிழர் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியைக் கொண்டுவரலாம் என்று இலங்கை அரசோ, பிறரோ நினைத்தால் அதுவும் நடக்கப்போவதில்லை. அமெரிக்கா தனது முழு பலத்தைக் கொண்டும், அல் காயிதாவை அழிக்கமுடியவில்லை.

**

இந்தியாவும் தமிழகமும் என்ன செய்யலாம்?

1. முதலில் தமிழ் அகதிகள் மறுவாழ்வு. இந்தியாவுக்கு வரும் தமிழ் அகதிகளுக்கு முழுமையான மறுவாழ்வு அளித்தல். அவர்களுக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்கி, பிற இந்தியர்களைப் போல கண்ணியமான வாழ்க்கையை வாழ அனுமதி அளித்தல். அவர்கள் விரும்பும்போது இலங்கை செல்லலாம். இந்தியக் குடியுரிமையைத் துறக்கலாம்.

இதைச் செய்வது மிக எளிது. இதற்கான ஆண்டுச் செலவு சில நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் ஆகாது. இலவச கலர் டிவிக்கு ஆகும் செலவை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்பது எனது கணிப்பு.

அவர்களை கேம்ப் என்ற பெயரில் மட்டமான வாழ்விடங்களில் வாழவைத்து, மோசமான உணவைக் கொடுத்து, தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துதராமல், யாராவது பெரிய தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் இவர்களை முகாமை விட்டு வெளியே வராமல் தடுத்து... என்று அவமானப்படுத்துகிறோம்.

தமிழகம் வரும் ஒவ்வொரு அகதிக் குடும்பத்துக்கும் கையோடு குடியுரிமை, ரேஷன் கார்ட், உதவித் தொகை, பள்ளிக்கூடத்தில் அல்லது கல்லுரியில் எந்த வகுப்பிலும் சேர்ந்து படிக்கும் அனுமதி, முடிந்தால் அவரவர் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ப வேலை. இது போதும். அதற்குமேல் அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வார்கள். இதற்கு மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து சில சட்டங்களை இயற்றவேண்டும்.

கருணாநிதி, ராஜினாமா நாடகத்துக்கு பதில், இதனைச் செய்யலாம்.

2. இலங்கை தொடர்பான ஒருமித்த கருத்து.

ஆயுதப் போராட்டம் நடக்கிறது. இதை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா குறைந்தபட்சம் ஒரு நடுநிலை வகிக்கும் நாடாகவாவது இருக்கும் என்ற கொள்கையை எடுக்க வற்புறுத்தலாம். அதற்கு, முதலாவதாக, விடுதலைப் புலிகளால் இந்திய நலனுக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் இருக்காது என்பதை முடிவுசெய்துகொள்ளவேண்டும். புலிகளிடமும் இதனை எடுத்துச் சொல்லவேண்டும். ஏதேனும் அச்சுறுத்தல் நிஜமாகவே ஏற்படும் பட்சத்தில், இந்தியா எந்தமாதிரி தனது முடிவை மாற்றிக்கொள்ளும் என்பதையும் தெளிவாக, முன்னதாகவே எடுத்துச் சொல்லவேண்டும்.

இலங்கை அரசுக்கு எந்தவிதமான ராணுவ உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது. இலங்கையில் இந்தியா எந்தவிதமான முதலீட்டையும் செய்யக்கூடாது. இந்திய தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதையும் அரசு ஊக்குவிக்கக்கூடாது.

அதேபோல, இந்திய உளவுத்துறை, பிற துறை அதிகாரிகள், முக்கியமாக அயலுறவுத் துறை அதிகாரிகள், இந்திய அரசு வெளியிட்ட கொள்கைகளை மட்டுமே செயலில் காண்பிக்கவேண்டும். தன்னிச்சையாக, கொள்கைக்கு மாறாக அவர்கள் ஏதேனும் செய்தால், அவர்களை வேலையில் இருந்து உடனடியாக விலக்கவேண்டும்.

இந்த ஒருமித்த கருத்து தமிழகக் கட்சிகள், இந்தியாவின் பிற அரசியல்வாதிகள் ஆகியோரைச் சென்றடைய, தமிழக அரசியல்வாதிகள் - முக்கியமாக திமுக, பிற கட்சிகளைச் சந்தித்துப் பேசவேண்டும். தங்களது நிலையை விளக்கி, அதற்கான ஆதரவை, இந்த வேற்று மாநிலக் கட்சிகளிடம் பெறவேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலக் கட்சிகளுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. அதைப்பற்றி அவர்கள் கவலைகொள்ளப் போவதில்லை. ஆனால் அவர்களையும் சேர்த்து இழுத்தால்தான், மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டுவரமுடியும். சென்னையில் உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம் போன்றவை எந்தவிதத்திலும் உபயோகமற்ற, அபத்தமான நாடகங்கள். ஊரை ஏமாற்றும் வித்தைகள்.

மாற்றுக் கருத்துகள் எப்போதும் இருக்கும். அதுதான் குடியாட்சி முறை. எனவே தன் கருத்தை முன்வைத்து மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களது மனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

3. வன்முறையை முற்றிலுமாக எதிர்ப்பது நல்லது. புலிகள் வன்முறையைப் பற்றி ஒன்றுமே பேசாமல், எதிர்ப்பக்கத்தை மட்டும் குறை கூறுவது நியாயமல்ல. அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்த கட்டத்தில்தான் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாமீது கொலைத் தாக்குதல் நடந்தது. அதிலிருந்து தப்பித்த அந்த மனிதர், வெறியுடன், புலிகளை அழிக்காமல் விடமாட்டேன் என்று நடந்துகொள்கிறார். அந்தக்கட்டத்தில்தான் மற்றொரு ராணுவத் தளபதி பரமி குலதுங்கா கொல்லப்பட்டார். இந்த ஒவ்வொரு கொலைக்கும் பதிலாக, ராணுவம், பொதுமக்கள்மீது குண்டெறிந்து தாக்கியது.

போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது.

29 comments:

  1. You have analysed beautifully. But your article does not take into consideration one important point. Whether you like it or not, accept it or not Tigers have made themselves to be the representatives of Tamils in North. No solution can be arrived at taking a stand against them. You condemn suicide attact. Yes it has to be condemned. When they don't have enough supply of arms they'd resort to it. The only solution is to lift the sanction against LTTE and condemn their acts if they violate normal ethics.

    ReplyDelete
  2. Good article. The best thing we can do is to give life to 'tamil agathigal'. Countries like France, England and other European countries are treating them as "people" but our tamilnadu doesn't.

    China, America are trying to form their base in SriLanka. India is giving money to Srilanka to prevent this. Otherwise, it will become security problem for India. So, we need to compromise srilankan government.

    ReplyDelete
  3. தலைப்பு போலத்தான் இருக்கிறது உங்கள் கட்டுரையும்.

    இறுதியாக சொல்கின்ற விசயத்தை தவிர மற்றதெல்லாம் வழவழ கொழகொழன்னு..

    //வன்முறையை முற்றிலுமாக எதிர்ப்பது நல்லது. புலிகள் வன்முறையைப் பற்றி ஒன்றுமே பேசாமல், எதிர்ப்பக்கத்தை மட்டும் குறை கூறுவது நியாயமல்ல. அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்த கட்டத்தில்தான் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாமீது கொலைத் தாக்குதல் நடந்தது. அதிலிருந்து தப்பித்த அந்த மனிதர், வெறியுடன், புலிகளை அழிக்காமல் விடமாட்டேன் என்று நடந்துகொள்கிறார். அந்தக்கட்டத்தில்தான் மற்றொரு ராணுவத் தளபதி பரமி குலதுங்கா கொல்லப்பட்டார். இந்த ஒவ்வொரு கொலைக்கும் பதிலாக, ராணுவம், பொதுமக்கள்மீது குண்டெறிந்து தாக்கியது.

    போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //

    இதையே நேரிடையாக சொல்லும் துகளக் சோ, ஹிந்து ராம் போன்றோரை முத்திரை குத்தி காறி துப்பும் கூட்டம் இது. நீங்களும் ஜோதியில் ஐக்கியமாயிடுங்கோ சீக்கிரமா

    ReplyDelete
  4. ஈழம் குறித்த போராட்டங்களும், விவாதங்களும் தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் வெளிவந்திருக்கும் நடுநிலையான கட்டுரைகளுள் ஒன்று. எதையும் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே அணுகுவது பிரச்சனையின் தீவிரத்தை மேலும் உக்கிரப்படுத்தி அவிழ்க்க இயலாத சிக்கலாக்கி விடும். அருமையான பத்தி. நன்றி.

    ReplyDelete
  5. Very ordinary thoughts & proposals Badri. Importantly, the article does not show a reasonable understanding on the issue. it is good only for confused and
    anti-dmk/dk people.

    Regards
    naaga elangovan

    ReplyDelete
  6. It is impossible for India to take any stand other other than anti-LTTE. Why? for the simple reason is that VP is the convicted conspirator in the assasination of Rajiv Gandhi and many others. LTTE has burnt it's bridges with India. No state worth it's salt is going to get cozy with someone who has been convicted by it's courts of comitting highest crime. India's first priority with VP is to arrest him to be sentenced in India. That is a fundemental fact on which the entire tamasha by TN political parties will break. LTTE-SL Govt war will continue till both parties are utterly exhausted. LTTE will fight to it's last suicide bomber and the resources and will of the SL Government to wage an indefinite war is also high. No Exit from the Deadly Embrace.


    Vijayaraghavan

    ReplyDelete
  7. சிங்களவர்கள் சகட்டுமேனிக்கு சுடுவதையும், குண்டுகள், ஷெல்கள் வீசுவதையும் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். நீங்களும் சோ, ராமுக்கு சளைத்தவரில்லை என்பதை சொல்லிவிட்டீர்கள். உங்கள் ஈழத்தமிழர் மீதான கரிசனைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  8. பிரச்சினையை நன்றாக நடுநிலையோடு அலசி இங்கே கொடுத்திருக்கிறீர்கள். நல்லதோ கேட்டதோ விவாதிப்பது அவரவர் கடமை வேண்டுமா வேண்டாமா என்பதும் அவரவர் விருப்பம்.

    என்னைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி படுகொலையில் விடுதலைப்புலிகள் ஒரு கைக்கூலிப் போலதான் செயல்பட்டு உள்ளார்கள். சொந்த புத்தியோ, எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கத் தெரியாததே அந்தப்படுகொலையின் செய்தி. முதல் மூன்றாண்டுகளில் புலிகள் சாதித்ததை கடந்த பதினைந்து ஆண்டுகளில் (ராஜிவின் படுகொலைக்குப்பின்) அவர்கள் சாதிக்கவில்லை. மேலும் அங்கே தமிழகத்தைப் போலவே நிறைய அரசியல் கட்சிகள் உள்ளது. தமிழீழம் பிறந்தால் அனைவரும் இணைவார்களா?..இல்லை புலிகளின் தலைவர் மட்டும் நாடால்வாரா?..

    ஈழமக்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் அவர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை இல்லையேல் அங்கே இருக்க தரப்படும் விசா அளிக்கப்பட்டு மனிதர்களாக மதிக்கப் படுவர்..ஆனால் தமிழகத்தில் அகதிகளாக எந்த ஒரு குறைந்தப்பட்ச சலுகையும் கிடைக்க விடாமல் பார்த்துக்கொள்ளும் நமது அரசியல் பன்றிகள்.எதாவது இதுபோல் பிரச்சினை வந்தால் ஏதாவது அறிக்கை கொடுப்பதுபோல பேசிவிட்டு அடுத்து தொலைக்காட்சி தொடங்கவோ கூத்தாடிகளின் குத்தாட்டம் பார்க்கவோ சென்று விடுவார்கள்.

    முதலில் ஒற்றுமை என்ற ஒன்று நமக்கு உள்ளதா என நம்மையே கேட்டுகொள்வோம். இங்கே (துபாய்) நமது ஊர்மக்கள் படும் வேதனையெய் (கண்களில் ரதக்கநீர் வரும்) துடைக்க வக்கில்லாத அரசாங்கம் கடல் கடந்து உதவ போகிறதாம்..இங்கே இனஉணர்வு வியாபாரம் ஆகிப்போனதால் அனைவரும் இதை பெரிசுப்படுத்துவார்களே தவிர தீர்வு இருகிறது.

    நான்பார்த்த வரையில் வெளிநாடுகளில் வாழும் ஈழ சகோதரன் நன்றாகத்தான் இருக்கிறான்.அவனது ஒரே கவலை சொந்தபந்தங்களை சந்திக்கவோ மற்றும் உயிர்பலியை தடுக்கமுடியவில்லை என்ற கவலைதானே தவிர வேறொன்றுமில்லை..

    ஆனால் நமது மக்களின் கவலை தினம் தினம் பொருள் ஈட்டுவத்ர்க்க்காகவே இங்கே வந்து அனைத்தும் இருந்தும் அனாதையாக வாழும் எங்களுக்கு குரல் கொடுக்க ஒருத்தர்கூட இல்லை. ஏனெனில் இது யார் கவனத்தையும் சிதைக்காது யாருக்கும் பலனில்லை.

    இங்கே சிலபேர் பத்ரியை துக்ளக் சோ மற்றும் ஹிந்து ராமுடன் ஒப்பிட்டு உள்ளார்கள்.
    அந்த ரெண்டுபேரும் காவிகள்.

    பத்ரியின் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததாகவே உள்ளது.தேவையில்லாமல் கண்ட சாயங்களை பூசாதீர்கள் பகுத்தறிவு கொண்டு ஆராயுங்கள், பக்குவப்படுங்கள் உங்களுக்கு சாதகமாக எழுதினால் மட்டும் ஆதரிப்பீர்கள் இல்லையேல் வாய்க்கு வந்ததை எழுதுவீர்கள்.

    இதனால்தான் தமிழகம் கூத்தாடிகளின் கோட்டையாகவும் முட்டாள்களின் கைகளிலும் உள்ளது..உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு நாமும் அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறோம்.
    பெரியாரை பற்றி அடுத்த தலைமுறைக்கு கூறவேண்டிய அரசாங்கம் தொலைக்காட்சில் தொலைந்து போச்சு அப்புறம் என்னத்த சொல்ல அடபோங்கப்பா!!!

    ReplyDelete
  9. I am surprised at few comments berating you for taking sides. I feel the whole tone and tenor of your post was quite balanced. It is indeed very sad that most of the Tamil Nadu political parties are indulging in crass competitive chauvinism.

    ReplyDelete
  10. //அந்த நேரத்தில் அவர் ஜெயலலிதாவுடன் வைத்திருந்த கூட்டு. இதெப்படி சாத்தியம்? ஆனால் தமிழகத்தில் இது நடக்கும்.//

    வை கோ ஜெயலலிதாவுடன் கூட்டுவைத்திருப்பது தமிழக அரசியலை அடிப்படையாக்க்கொண்ட அடுத்தடுத்த காய்நகர்த்தல்களுக்கு தமக்கு சாதகமான நிலையை/ பாதகமற்ற நிலையை தோற்றுவிக்கமுடியும் என்று புலிகளின் கொள்கை வகுப்பாளர்கள் கருதியிருக்கலாம் என்றொரு பக்கம் இதற்கு உண்டு என்பதையும் கருத்திலெடுக்கவும்.

    அவ்வாறு ஜெயலலிதாவுக்கு கடிவாளமிடும்/அதிமுக நிலைப்பாடுகளை அவ்வப்போது உடைத்துப்போடும் வேலையை வைகோ வைத்தவிர வேறு எவரைக்கொண்டுதான் செய்யமுடியும்?


    //திமுக வெளிப்படையாக, தங்களது நிலை என்ன என்றே இதுவரையிலும் சொல்லவில்லை. புலிகளுக்கு ஆதரவான நிலையா, அல்லது எதிரான நிலையா என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. எதையாவது சொல்லப்போக, அது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிடும் அபாயம் உள்ளதே என்ற பயம்.//

    இது ஆரோக்கியமான போக்கு இல்லை என்றாலும் தற்போதைய இந்திய அரசியல் அடிப்படையில், நடப்பில் புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒன்று. புலிகளுக்கு, ஈழத்தமிழருக்கு இந்தியா மீது அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசர நிலை உருவாகியிருக்கிறது. இதில் தவறேதுமற்ற சீர்மை, முழுமை இருகவேண்டுமென்று எதிபார்ப்பதைவிட, நடைமுறைக்குகந்த வழிமுறைகள் என்ன என்பதைத்தானே பார்க்க முடியும்?


    ஈழத்தமிழ் அககள் குறித்த தங்கள் பார்வைக்கு நன்றிகள்.



    //போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //

    :-)

    இப்படி ஒரு பார்வை பலரிடம் பரவலாக உண்டு. இதற்கு ஒன்றும் செய்யமுடியாது.
    போராட்டக்களத்தில் உள்ளவர்களுக்கே இதன் பரிமாணங்கள் புரியும்.

    அரசபடையின் பொதுமக்கள் மீதான கொலை வெறித்தாக்குதலையும் அதற்கு பதிலடிக்கும் தற்கொடைத்தாக்குதலையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கும் பக்கசார்பான நடுநிலைப்பார்வை என்பது எப்போதும் ஒடுக்குபவர்களுக்குச்சார்பானதே.

    அமைதிக்காலத்தில் மிக நாசூக்காக கொலைத்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த இராணுவத்தளபதியை "போடாமல்' என்ன செய்வது?

    கேவலங்கெட்ட ஆயுதங்களைக்கையிலெடுக்கும் பவுத்தப்பேரினவாத இயந்திரத்தை, 'நியாயமான" "நாகரிகமான" வழிமுறைகளால் எதிர்கொள்ள முடியுமென்று நம்புகிறீர்களா?

    அந்த பேரினவாதத்துக்கு முட்டுக்கொடுத்து நிற்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க, ஏகாதிபத்திய ஆதிக்கவர்க்க நோக்கங்களை, இந்தியாவின் "பசு" த்தோல் போர்த்திய கோரப்பற்கள் கொண்ட அரக்க முகத்தை நயவஞ்சக நோக்கங்களை "சட்டபூர்வமான" "நாகரிகமான" வழிமுறைகளால் எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?


    அரசு, அரசாங்கம், இந்திய அரசாங்கம், உளவுத்துறை என்பவை எல்லாம் ஏதோ சட்டபூர்வ அலகுகள் என்றும் ஏதோ தவறுதலாக நியாயத்தின் பக்கம் நிக்காமற்போயின என்றும் நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் அதற்கு நாமொன்றும் செய்ய முடியாது.

    ஈழ்த்தமிழர்களின் இன்றைய இந்த நிலைக்கு இந்தியாவே பெரிதும் பொறுப்புக்கூறவேண்டும். இந்திய ந்லன்களுக்காகவே, இந்திய ஆதிக்க வர்க்கத்தின் சுயநலன்களுக்காகவே எம்மக்கள் இன்றுரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டு நிற்கின்றனர்.

    சகட்டுமேனிக்கு வானிருந்து கொண்டெறிந்து தெரிந்தே பொதுமக்களைக்கொல்லும் இலங்கை அரசின் அதிகார வர்க்கத்தையும் அரச இயந்திரத்தையும் அடித்து விழுத்தும் குண்டுகளை, அக்கம்பக்கம் பார்த்து அப்பாவிகள் நோகாமல், இலக்கைமட்டும் துல்லியமாய் தாக்கும்படிக்கு artifitial inteligence ப்ருத்தியா ஒரு போராடும் ஒடுக்கப்படட் இனம் அனுப்பமுடியும்.?

    என்னய்யா உங்கள் நியாயம்?

    ஏதையா உங்கள் "நாகரிக" நடுநிலை வாதம்?

    ReplyDelete
  11. The hullabaloo over srilankan issue in tamil nadu and the tamil cine industry is nauseating to watch. Their concern to violent militant organizations is far too much than the apparent concern over their homophones in srilanka.

    Newdelhi remained too timid in srilankan issue and this is making colombo to take help from Pakistan. china and other hostile neighbors which can have grave consequences later.

    ReplyDelete
  12. //பாலியல் வன்கொடுமைகள். //

    ஆதாரம் தர இயலுமா?

    ReplyDelete
  13. I think you need to look this matter in a broader term. China and India are emerging as big powers, atleast in western point of view. China is trying to gain influence in all the developing countries by helping in building ports, military deals and other projects. Sri lanka is also one among them. India is also doing the same but is well behind China. So What about India's strategic interests regarding SriLanka?. If India refused to work with Sri Lanka then China, Pakistan, Iran would do it and it is already happening. Just how China is building a Port in Pakistan it would build one in Sri lanka.India needs to measure all its interest before interfering in Srilanka. In the past 6 years after 9/11 in US, the global perception of terrorists have changed a lot and SL have worked clearly to its advantages by branding LTTE as terrorists all over the world. Now SL is hitting LTTE with all its force. In the post 9/11 world there is little options left for India in this matter. I wish LTTE worked out some peace deal with SL so massacre of Tamil people could have reduced some extend. In this World strategic and Political interests take a high priority than the human lives. I think we need to accept this painful truth.

    ReplyDelete
  14. மயூரன், சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  15. //போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //
    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  16. http://www.engaltheaasam.com/page.227.htm

    ஏராளமான இலங்கை தமிழ் மக்கள் புலிகளிடமிருந்து தப்பி இலங்கை ராணுவத்திடம் வருகிறார்கள்.

    ஏன் என்று சிந்தியுங்கள்.

    ReplyDelete
  17. பத்ரி, ஈழப்போராட்டத்தில் சில யதார்த்தங்களை மட்டும் சொல்லி இருக்கின்றீர்கள். படித்த உடனே விடுபட்ட மற்றவற்றைச் சொல்லத் தோன்றியது. இருந்தாலும் நான் சொல்லி என்ன பயன், வீணான வாதங்களுக்குச் செல்ல நேரிடும், நின்று வாதிட நேரமில்லை என்று விட்டுவிட்டேன். சில பின்னூட்டங்களைக் கண்டபின் சொல்லலாமென்று தோன்றியது.

    யதார்த்தம் 1 - இந்தியா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது. ஏனெனில் காஷ்மீர் உள்ளிட்ட பல சுயநிர்ணயப் பிரச்னைகள் இங்கும் உள்ளன.

    யதார்த்தம் 2 - தமிழகத்துக் கட்சிகளும், அமைப்புகளும் அவ்வப்பொழுது குரல் எழுப்புவதும், சவால் விடுவதும் பல பத்தாண்டுகளாக எந்த பயனையும் தரவில்லை, இனியும் தரப்போவதில்லைதான். இவர்களில் பலர் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவைக் களமிறங்க அழைப்பது என்பது ஏமாளித்தனத்தின் உச்சகட்டம்.

    (ஆனால் அனைத்தையுமே முழுக்கக் கேலிக் கூத்து என்று ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் பல நேரங்களில் நம்மால் ஏதும் செய்ய முடியாவிட்டாலும் அழாமல் இருக்க முடியாது. அதைக் கோழைத்தனம் என்று வேண்டுமானால் சொல்லலாம், கேலிக்கூத்து என்று சொல்வது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமையே. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் ஒட்டிக் கொண்டு புலம்பும் கட்சிகளை வேண்டுமானால் கேலிக்கூத்து என்று சொல்லலாம். ஆனால் அனைவருமே அப்படியல்ல.)

    யதார்த்தம் 3 - நீங்கள் சொல்லாமல் விட்டது. முதல் யதார்த்தத்தையாவது தமிழர்கள் புரிந்து கொள்ள முடியும், பொறுத்துக் கொள்ளமுடியும். மூன்றாவது யதார்த்தமோ நீசத்தனமானது. அதுதான் தமிழ்ப் பார்ப்பனியப் பாசிசம். இராம், சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி போன்ற பார்ப்பனியப் பாசிஸ்டுகள் தமிழர்கள் அழித்தொழிக்கப் படவேண்டுமென்பதில் இலங்கை அரசை விட அதிகம் விரும்புபவர்கள். இந்தப் பயங்கரவாதிகள் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிக்கும் ஜனநாயகவாதிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்வதுதான் கேலிக்கூத்து. இவர்கள் தொடர்ந்து இலங்கை அரசையும், இந்திய அரசையும் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி விடுவதில்தான் தங்களுடைய தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்தியாவே தமிழர்களை ஒடுக்கும் இலங்கை அரசை ஆதரிக்க விரும்பாவிட்டாலும் தனிப்பட்ட அளவில் இந்தியாவுக்குத் தெரியாமலேயே வேற்று நாட்டுடன் சேர்ந்து இரகசியச் சதிசெய்யும் அளவுக்கு தமிழர் விரோதிகள் இவர்கள். தமிழர்களுக்குள் பிளவுகளை உண்டுபண்ணி ஒருவரையொருவர் வெட்டிச் சாய்ப்பதற்கு அனைத்துக் காரியங்களையும் செய்யத் துணிபவர்கள் (இவர்கள் ஆதரிக்கும் கருணா, டக்ளஸ் தேவானந்தா எல்லாம் சமரச சன்மார்க்க வாதிகளா என்ன?). இவர்களுடைய ஒரே நோக்கம் தமிழர்களுக்கு தனிநாடு ஒன்று அமைந்துவிடக்கூடாது. அப்படி அமைந்தால் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள் தமிழ்நாட்டில் வலுப்பெற்று விடும். (ஒருவேளை என்றாவது ஒருநாள் தமிழீழம் சாத்தியமாகி விட்டால் ஈழத்தமிழர் பெரும்பாலரிடம் மண்டியிருக்கும் சாதி-மத-மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தக் கும்பல் முதலில் போய் தொற்றிக் கொள்ளும் என்பதுதான் இங்கு முரண்நகை.)

    இங்கு மயூரனின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

    தமிழ்ப் பார்ப்பனியப் பாசிஸ்டுகள் இந்திய அதிகார மற்றும் ஊடக வர்க்கத்தில் கையோங்கி இருக்கும் வரை வட இந்தியாவில் போய் ஈழப்பிரச்னையில் தமிழர்களின் நியாயத்தைப் புரியவைப்பதெல்லாம் கனவில் கூட நிறைவேறாது. ஏனெனில் தமிழர்களை இந்தியாவுக்கு எதிரானவர்களாகத் திரிப்பதுதான் மிகஎளிது. எனவே ஈழப்பிரச்னையில் தமிழர்களுக்கு இந்தியாவால் எந்த நன்மையும் எப்பொழுதுமே கிடைக்காது. இந்தியா தன் சுய இலாபங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதால் தீமைகளே விளையும். இதைப்பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஒருபுறம் புலிகளை ஆதரித்துக் கொண்டே, இன்னொருபுறம் இந்திய உணவு, உடை, மதம், பண்பாடு, இந்தியக் கிரிக்கெட் அணி என அனைத்தின் மேல் அளப்பரிய ஆசையாயிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கிறது.

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    (பி.கு. இங்கு தொடர் விவாதத்துகு வரப்போவதில்லை. அனானிகள் விருப்பம் போல் அடித்து விளையாடலாம் :-))

    ReplyDelete
  18. பாதிவரை படித்தேன்.பதிவு புத்திசாலித்தனமாகப் போகிறது.இனி மீதிக்குப் போகிறேன்:)

    ReplyDelete
  19. படித்து முடித்து விட்டு இனி...

    பின்னூட்டக்காரர்களும் சளைத்தவர்கள் மாதிரி தெரியவில்லை.தலைப்பில் ஈழம் தொடர்பாக வரை சரியெனப் படுகிறது.கேலிக்கூத்து என்பதில் எனக்கு உடன்பாடில்லை.காரணம் இதுவரையில் இலை மறை காயாக இருந்த உணர்வுகள் கலைஞரின் அறிக்கை,தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு சூடு பிடித்திருக்கிறது.It is ridiculous to read in blogs L.T.T.E propaganda machine is working perfectly in tamil nadu.For that propaganda machine to create still they have to go a long way. நிகழும் தனி மனித ஓலங்களின் ஒட்டு மொத்தக் குரல்கள் ஒன்றாக ஒலிப்பதன் எதிரொலியே தற்போதைய நீங்கள் கூறும் கேலிக்கூத்துக்கள்.இந்திய சட்ட அமைப்புக்களுக்குட்ப்பட்டு நிகழும் எதிர்ப்புக்கள் இவை.வன்முறையில் ஒரு பக்கத்துக்கு வக்காலத்து முறை சரியல்ல.இரண்டுமே தவறானவை.ஆனால் Everything is fair in war ன்னு உலக யுத்த காலத்திலேயே சொல்லி வச்சுட்டானுங்க.

    இனி தமிழ்நாட்டுப் பக்கம் வந்தா நடப்பவைகள் கேலிக்கூத்து மாதிரி தோன்றினாலும் அரசியலும்,சினிமாக் கலையும் ஒன்றாகிப் போய் விட்ட தமிழ்நாட்டில் இது பொது மனிதனைப் பாதிக்கும்.Elite வர்க்கத்தின் பார்வைகள் குதிரைக்கு கண்மூடி போட்டு விட்ட மாதிரி ஏன் ஒரே திசையை நோக்கியே போகிறதென்று எனக்கு ரொம்ப நாட்களாகவே புரியாத புதிர்.ஈழத்துப் பிரச்சினைக்கு வக்காலத்து வாங்கும் பழ.நெடுமாறன் வை.கோ,டாக்டர் ராமதாஸ்,திருமா வளவன் போன்றோர்க்கு அரசியல் லாபங்கள் இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும் கூட ஈழத்துப் பிரச்சினையில் எதிர் நிலை கொள்ளும்,நேர் நிலை கொள்ளும் குழப்பங்களுடன் ஜெயலலிதாவை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் அனைத்தையும் சீர்தூக்கி விமர்சகப் பார்வையில் வைக்கும் சோ அவர்களும்,இந்து பத்திரிகையின் எழுத்து ரசனை தவிர்த்து ராம் அவர்களின் இலங்கை அரசை மட்டும் சார்ந்த பார்வைகள் நடுநிலையிலிருந்து கவனித்தால் it creates a so called divide among us which is not good for a cultured society.எப்பவாவது பதிவுகள் போடும் நாம் எழுதும் நடு நிலை விமர்சனங்களைக் கூட பத்திரிகையே தொழிலாய் வாழ்பவர்கள் செய்வதில்லை என்பது வருந்தத்தக்கது.

    அகதிகள் முகாம்கள் பற்றி சொன்னீர்கள்.தமிழக முகாம்கள் எப்படி இயங்குகிறதென தெரியவில்லை.போலிஸ் மாமூல் போன்ற விசயங்கள் வருத்தம் தர வைக்கின்றது.

    நல்ல பதிவுக்கும் பின்னூட்டக் கண்ணோட்டகர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  20. //இராம், சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி போன்ற பார்ப்பனியப் பாசிஸ்டுகள் தமிழர்கள் அழித்தொழிக்கப் படவேண்டுமென்பதில் இலங்கை அரசை விட அதிகம் விரும்புபவர்கள். இந்தப் பயங்கரவாதிகள் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிக்கும் ஜனநாயகவாதிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்வதுதான் கேலிக்கூத்து. //

    இன்றையத் தமிழகத்தின் நிலை இதுதான். தமிழ் நாட்டில் வந்து பிழைப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத் தமிழரை பிரித்து வைத்து பந்தாடும் வேற்று மாநிலக் கயவர்களை அடையாளங்கண்டு விரட்டியடிக்க வேண்டும்.

    அப்போதுதான், தமிழர்களின் உணர்வை ஒருசேர தட்டி எழுப்ப முடியும். தமிழ் ஈழம் அமைவதால் பார்ப்பனீய புரட்டுகள் அத்தனையும் புதைக்குழிக்குள் போய்விடும் என்பதால் இவர்கள் மிக சூழ்ச்சியாக நாடகமாடி வருகின்றனர்.

    தமிழரின் தனி அடையாளம் உலகத்திற்குத் தெரியவேண்டுமானால் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை!

    இப்போது, இத்தனை நெருக்கடிக்களுக்கு இடையிலும் தமிழ் ஈழம் அரசு நிலையில் இருந்து செயல்படுகிறது. அதற்கான உலக அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  21. இருபத்தைந்து சதவீத சிறுபான்மையினம் - தன்மீது உலக நாடுகளின் அனைத்து வளங்களையும் இணைத்து போர் தொடுக்கின்ற வலுவில் வானளாவ நிற்கின்ற சிங்கள தேசத்தோடு போர் தொடுக்கும் போது - மகாபாரத காலங்கள் போல் சங்கூதி றெடி ஸ்ரார்ட் சொல்லித்தான் சண்டையை செய்வார்கள் என்றோ - இன்று போய் இனி நாளை வா எனச் சொல்லி செல்வார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது.

    92 ம் வருடம் யாழ்குடாவை கைப்பற்ற டென்சில் கொப்பேகடுவ திட்டமிடுகிறார். 10 000 ராணுவம் குவிக்கப் படுகிறது. டென்சில் யாழ்பாணத்தின் தீவு பகுதிக்கு வந்து நேரடியாக வழிநடத்த திட்டங்கள் தீட்ட முற்படுகிறார். அந் நடவடிக்கையின் மூளையாக அவர் இருந்தார்.

    10 000 பேரை புலிகள் எதிர்கொள்ள வேண்டும். அப்போதய காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாதது அது.

    அராலியில் ஒருகாலை டென்சில் போட்டுத் தள்ளப்பட்டார். அவர் ஒரு ராணுவத் தளபதி.

    யாழ்ப்பாணத்த கைப்பற்றும் திட்டம் ஒத்திப் போடப்பட்டது.

    இதைதானே ஒரு சிறுபான்மை செய்ய முடியும்.

    புலிகள் ஆயுதங்களுடன் போராடி பிரதேசங்களை கைப்பற்றி தமிழீழம் அமைப்பர் என்பதிலும் பார்க்க -
    சிறிலங்காவிற்கு பொருளாதார இராணுவ நெருக்கடிகளை ராணுவ வழியில் கொடுத்து அரசாங்கத்தை அழுத்தி - அதனூடாக தாம் விரும்பும் வழிக்கும் கொண்டுவரவே என நாம் நம்புகிறேன்.

    2002 பேச்சுவார்த்தைக்கு கட்டுநாயக்கா தாக்குதல் ஒருகாரணம்.

    ஆனால் - சிங்கள அரசை இதுவரை அவ்வழியில் அடிபணிய வைக்க முடியவில்லை என்பத உண்மை.

    ReplyDelete
  22. Badri, what you have said is perfectly alright.
    Well-analyzed article.
    keep writing.
    Saravana Kumar
    Bangalore.

    ReplyDelete
  23. // அமைதிக்காலத்தில் மிக நாசூக்காக கொலைத்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த இராணுவத்தளபதியை "போடாமல்' என்ன செய்வது? //

    பிரபாகரன் மட்டும் எப்படி சமாதானம் கொண்டுவருவது என்று "Room" போட்டு யோசிச்சுகொண்டு இருந்தவர் தானே :)

    ஓடிப்போய் சொகுசு வாழ்க்கை வாழ்பவருக்கேல்லாம் இது எல்லாம் விளங்காது.

    ReplyDelete
  24. பிரபாகரன் தலைமையில் உள்ளவரைக்கும் இந்தியா எக்காரணம் கொண்டும் எந்த வித உதவியும் இலங்கை தமிழருக்கு செய்யமாட்டாது. இந்திய உதவி தேவையெனின் பிரபாகரன் போகவேண்டும்.

    ReplyDelete
  25. மிக அருமையான கட்டுரை . ஈழப் பிரச்சனைகுறித்து அனைத்து கோணங்களிலும் நின்று ஆய்ந்து தொகுத்து அளித்து இருக்கிறீர்கள்.
    ஒன்று மட்டும் கோடிட்டு சொல்ல ஆசைபடுகிறேன் : ஈழ தமிழர்கள் நலம் என்பது வேறு, ஈழ புலிகள் நலம் என்பது வேறு. தமிழர்கள் நலம் குறித்து தம்மைத் தவிர வேறு எந்த கட்சியோ அல்லது குழுவோ இலங்கை அரசு அல்லது நார்வே அல்லது இந்திய அரசு அல்லது U N O உடன் பேச்சு நடத்த கூடாது; அப்படி பேச முன் வந்தால் அவர்களை அடக்கி விடுவது அல்லது களைந்து விடுவது என்பதே புலிகளின் செயலாக இருந்து வந்திருக்கிறது.
    மனித நேயம் உள்ள தமிழர்களுக்கு இது மிகவும் வேதனை அளித்தாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது என ஒப்புக் கொண்டு இங்கு வரும் அகதிகளுக்கு வாழ்வு அளிப்பதே சரியாகும்.
    யாவரும் இன்புற்றிருக்க வேண்டுவது அன்றி வேறு யாதொன்றும் அறியோம் பராபரமே.

    ஆனால், பின்னூட்டங்களில் இந்திய அரசின் நிலைப்பாட்டிலும் தமிழக கட்சிகளின் நிலைப்பாட்டிலும் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வர முடியாத சோ, சுப்ரமணியசாமி போன்றவரைக் குறிப்பிட்டு சந்தடி சாக்கில் தமிழ் பார்பனர்களை ஏன் வார வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை, பெரியாருக்குப்பின் பல் பிடுங்கிய பாம்புகளாக தாம் உண்டு தம் தொழில் உண்டு என்று இருக்கும் தமிழ் பார்பனர்களை சாடுவது ஏன் ? ; பழக்க தோஷமோ?

    சமூக பிரச்னைகளில் ஒருவேளை தமிழக பார்பனர்களைப் பற்றியும் அவர்களின் கருத்துகளையும் குறிப்பிட வேண்டி இருந்தாலும் அரசியலைப் பொறுத்தவரை அவர்களும் அவர்களின் கருத்துகளும் செல்லாக்காசுகளே. இப்போது பெரியாரின் கண்மணிகளும் கண்ணீர்த்துளிகளும் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்; மீண்டும் மீண்டும் வருவார்கள். அரசின் அடிகள் நமக்கு ஒப்பாது என்றால், எவரையேனும் குறை சொல்ல வேண்டும் திட்டவேண்டும் என்றால் பார்பனர்களைத்தான் இழுக்க வேண்டுமா?

    ReplyDelete
  26. மிக தெளிவான அலசல். இன்னுமா அரசியல்வாதிகளை நம்புகிறீர்கள் ? தமிழக, இந்திய அரசியல்வாதிகள் சுய லாபம் தவிர வேறு எதையும் யோசிக்க மாட்டர்கள். இந்த பிரச்சினையில் இந்திய தலையீட்டுடன் கூடிய அரசியல் தீர்வு இருக்கவே இருக்காது. அங்கேயே ஏதாவது அதிசயம் நிகழ வேண்டும்.

    ReplyDelete
  27. எட பைத்தியக்காரர்களே!

    ஈழத்தமிழர்களாகிய நாங்கள் வலியிலிருந்து விடுபட எந்தவிதமான வழியையும் நாடதயாராகவே இருக்கின்றோம். இது நமக்காக நாம் செய்யும் போராட்டம். நீ இப்படித்தான் போராட வேண்டும் என்று சொல்ல எப்படி உங்களால் முடிகின்றது. எங்கள் போராட்டத்தில் உங்களின் பங்களிப்பு என்ன இருக்கின்றது எங்களுக்கு போராட்ட வழிமுறையை சொல்லிதருவதற்கு. ஏதோ உங்களிடம் எமக்காக குரல் கொடுங்கள் என்று கேட்டதற்காக தயவு செய்து நாங்கள் உங்களிடம் உயிர்பிச்சை கேட்கினறோம் என்று நினைத்துவிடவேண்டாம். இது போராட்ட அரசியலோடு சம்பந்தப்பட்டது. நீங்கள் எம்போராட்டத்தை நடுநிலைமையோடு நோக்கின்றோம் என்ற எண்ணத்தில் ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். ஈழத்தமிழனாய் ஒரு நாள் ஒரே ஒருநாள் வாழ்ந்து பாருங்கள் அப்போது புரியும் தற்கொடை தாக்குதல்களின் அவசியத்தை. எங்கள் அண்ணன் இருக்கும் வரை எங்களுக்கு யாரின் உதவியும் தேவையில்லை நாங்கள் போராடுவோம் கடைசி ஈழத்தமிழன் இருக்கும்வரை.

    குறிப்பு : என் கூற்றுக்கள் உங்களை காயப்படுத்தியிருந்தால் வலைப்பதிவாளர் மன்னிக்கவும் . தயவு செய்து ஈழம் பற்றி எழுதும் போது சரியான தகவல்களை சேகரித்து எழுதவும். இது எமது உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் எம்மிலும் மேலாக நேசிக்கும் விடுதலை பற்றியது. சினிமா விமர்சனம் எழுதுவது போன்று எழுதவேண்டாம் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இங்கே கூடுதலாக உங்கள் கருத்துக்கு எதிரான கருத்துடையவர்கள் மிகஅதிகமானோர் ஈழத்தமிழர்களே. இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டாம் எங்களுடைய மக்களின் வேதனையை

    ReplyDelete
  28. //போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //

    இங்கு உணர்ச்சி வசப் பட ஒன்றும் இல்லை, "நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள்" அவ்வாறு இருக்கும் பொழுது தற்க்கொலை படை கொண்டு தாக்குவது சாத்தியமே.

    ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியம் சில நேரங்களில் சில செயல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது, உண்மை தமிழர்களுக்கு (ஈழத் தமிழர்) உயிரின் வழி நன்றாக புரியும், உள்ளிருந்து ஆராய வேண்டுமே தவிர தூரத்தில் நின்று கொண்டு கருத்தை பரப்புவது நமக்கு நாமே செய்துகொள்ளும் தற்க்கொலைக்கு சமம்.

    ReplyDelete
  29. பெயரில்லா அவர்களே!

    பாலியல் வன்முறைக்கு ஆதாரம் கிடைத்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ஏதோ பேச வேண்டும், கருத்து கூற வேண்டும் என்று கூறாதீர்கள், சிந்தியுங்கள் தமிழனாக. நாக்கு ருசிக்காக உயிரை (கோழி, ஆடு ...,) கொன்று தின்னும் கூட்டம் தானே நாம் பிறகு எவ்வாறு மற்றொருவருடைய உணர்வு புரியும். எண்ணங்களால் இலட்சியத்தால் ஒன்று பட்டு இருக்கும் மக்களை தங்கள் மாதிரி எத்தனை விஷப் பூச்சிகள் வந்தாலும் வெற்றி கொள்ள இயலாது.

    ReplyDelete