ஏழெட்டு மாதங்கள் இருக்கலாம். என் பெண் சென்னை மயிலாப்பூர் கிளப்பில் சதுரங்கம் கற்றுக்கொள்ள ஆரம்பித்து சில மாதங்கள் ஆகியிருந்தன. உலக செஸ் சாம்பியனாக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை அங்கே அழைத்திருந்தனர். செஸ் கற்றுக்கொள்ளும் அனைவருமே சின்னக் குழந்தைகள். 8-13 வயதுக்குட்பட்டவர்கள்.
நான் என் பெண்ணுடன் போயிருந்தேன். எல்லாக் குழந்தைகளும் கோலாகலமாக ஆடைகளை உடுத்துவந்திருந்தனர். அனைவரும் தனித்தனியாக ஆனந்துடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளலாம்.
என் பெண்ணைப் பொருத்தமட்டில் நான்தான் உலகிலேயே சிறந்த செஸ் ஆட்டக்காரர். ஏனெனில் என்னிடம் அவள் எப்போதுமே தோற்றுவிடுவாள். மேலும் நான் அந்த செஸ் கிளப்பில் கற்றுக்கொள்ள வரும் சில சிறுவர்களுடன் அவ்வப்போது விளையாடி, அவர்களைத் தோற்கடிப்பதையும் அவள் பார்த்திருக்கிறாள். எனவே என்னால் ஆனந்தைத் தோற்கடிக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனந்த் என்னைப்போல ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் ஆடினாலும், எங்கள் அனைவரையுமே எளிதாகத் தோற்கடித்துவிடுவார் என்று பதில் அளித்தேன். அதை அவளால் ஜீரணிக்கமுடியவில்லை.
ஆனந்த், அவரது மனைவி அருணா, ஆனந்தின் பெற்றோர் ஆகியோர் வந்தனர். கூட்டத்தில் பலருடனும் மிகவும் இயல்பாக ஆனந்த் பழகினார். குழந்தைகளுக்கு செஸ் கற்றுக்கொடுக்கும் ஓர் ஆசிரியர், மிகவும் நெர்வஸாக, மைக்கை எடுத்துப் பேசி, ஆனந்தை வரவேற்றார். பிறகு ஆனந்த், குழந்தைகளிடம் பேசினார். குழந்தைகளுக்கு என்ன புரிந்தது என்று தெரியாது. ஆனால் “நான் எப்போதும் எதிராளியைவிட ஒரு மூவ் அதிகமாக யோசிப்பேன்” என்று ஒரு வாக்கியம் சொன்னதை என் மகள் ஞாபகம் வைத்திருக்கிறாள். அவ்வப்போது என்னிடம் அப்படியென்றால் என்ன என்று கேட்பாள். நான் விளக்குவேன்.
***
இப்போது ஆனந்த் மீ்ண்டும் உலக சாம்பியன். இம்முறை match play-off முறையில் கிராம்னிக்கை வென்றுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் ஆனந்த் சென்னையில் இருக்கும்போது, மைலாப்பூர் செஸ் கிளப்பில் மீண்டும் ஒரு வாழ்த்து விழா நடக்கும். அதற்கு ஆனந்த் நிச்சயம் வருவார். இந்த முறையும் குழந்தைகள் அவருடன் சிறிது நேரத்தைக் கழிப்பார்கள்.
அப்போதும் அவர்கள் ஆனந்திடமிருந்து ஓரிரு வாக்கியங்களைக் கேட்டு மனத்தில் வைத்திருப்பார்கள்.
சதுரங்க ஆட்டம் தோன்றிய இந்தியாவில், ரஷ்யாவுக்குச் சவால் விடக்கூடிய அளவுக்கு மேலும் சில செஸ் வீரர்கள் தோன்ற அது வழிவகுக்கும்.
மானுடத்தின் வெற்றி
7 hours ago
Anand is an epitome of a great champion and a fine gentleman. He has blazed a luminous trail and I am sure time is not far off when India will emerge as one of the chess superpowers.
ReplyDeleteஎழுதிய விஷயத்தை விட, எழுதாமல் விட்ட விஷயத்தை தெளிவாக புரிய வைத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஇந்தப் பதிவின் வாசனை வேறு பல மணங்களை நுகர வைத்திருக்கிறது.
ஹாட்ஸ் ஆஃப்.
It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.
ReplyDeleteIt seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!
He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.
Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!
He is a filthy RAT!
akil
akilpreacher.blogspot.com
// சதுரங்க ஆட்டம் தோன்றிய இந்தியாவில், ரஷ்யாவுக்குச் சவால் விடக்கூடிய அளவுக்கு மேலும் சில செஸ் வீரர்கள் தோன்ற அது வழிவகுக்கும். //
ReplyDeleteBadri,
Thanks to the Chess Boom started by the success of Vishy, India has already started establishing itself as a power in the Chess World.
1. Vishy is the World Chess Champion.
2. India finished top (first) in the World Junior Chess for Men - Under 20 (lost in the semifinal for World Junior Chess for women though)
3. India won the Chess Olympiad for kids recently.
5. Please see the attached URL to see India's tally (finished first) in another recently concluded World Youth Chess Championship. http://wycc2008.vietnamchess.com/index.php Russia finished only fifth.
So, India is already a superpower in Chess.
- PK Sivakumar
Forgot to add, in the Chess Olympiad (which is a team game with 4 boards), we beat Russia 3.5-0.5. RB Ramesh was the coach of Indian Team.
ReplyDelete- PK Sivakumar
சில விஷயங்களை தெளிவுபடுத்தவும். ஆனந்த் உலக சாம்பியன் என்றால் அவரால் காஸ்பிரோவை வெல்ல முடியுமா...ஏதோ காஸ்பிரோ தனியாக சங்கம் வைத்திருப்பதைப் போல படித்தேன். இருவரும் தனித்தனியாக இயங்குபவர்களா அல்லது காஸ்பிரோ ஆட்டத்தை விட்டு விலகி விட்டாரா?
ReplyDeleteபொதுவாகவே செஸ்ஸில் இந்தியா குறிப்பிடத்தகுந்த இடம் பிடிக்கும் இல்லையா?
http://www.hindu.com/2008/11/01/stories/2008110156542000.htm
ReplyDeletePKS: இந்தியாவை இப்போதே செஸ் சூப்பர்பவர் என்று சொல்லமுடியுமா என்பது சந்தேகமே.
ReplyDeleteஉலகின் டாப் 100 செஸ் ஆட்டக்காரர்களில் 3 பேர்தான் இந்தியர்கள். 24 பேர் ரஷ்யர்கள். பல்வேறு முன்னாள் சோவியத் குடியரசுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 50-க்கும் மேல் வருகிறார்கள்.
ஆனந்துக்கு அடுத்து, சசிகிரன், ஹரிகிருஷ்ணா ஆகிய இருவரும் உலக அளிவிலான சாம்பியன்ஷிப் டோர்னமெண்டுகளில் சாதிக்கவேண்டியது நிறைய.
ஜூனியர் ஆட்டங்களில் பெறு வெற்றி போதாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அது நல்ல தொடக்கமே.
ரஷ்யாவில் தெருவுக்குத் தெரு செஸ் விளையாடும் கிளப்கள் உள்ளன. அங்கே வெகுஜன கலாசாரத்தில் செஸ் விளையாடுவது ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை.
ஆனந்த் வெற்றியினால், அப்படி மாறினால், நன்றாக இருக்கும். செஸ் விளையாட, கற்றுக்கொள்ள, நிறையப் பணம் தேவையில்லை. பயிற்சிகளுக்கு என்று எக்கச்சக்கமான செலவு ஆகும் என்று சொல்வதற்கில்லை. அதனால், சமுதாயத்தின் பலதரப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
பிரபு: தனிப்பட்ட ஓர் ஆட்டத்தில் ஆனந்த் காஸ்பரோவை ஜெயிப்பாரா... என்றால், பதில்: ஜெயிக்கலாம், டிரா ஆகலாம் அல்லது தோற்கலாம். காஸ்பரோவ் இப்போது போட்டிபோடும் செஸ்ஸிலிருந்து விலகிவிட்டார். அரசியல்வாதியாக உள்ளார்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் ‘பிரிவினை’ நடந்துமுடிந்து, மீண்டும் சேர்ந்துவிட்டனர்.
கார்போவுக்கும் காஸ்பரோவுக்கும் இடையே நடந்த பனிப்போர் காரணமாகவே 1993-ல் அந்தப் பிரிவினை ஏற்பட்டது. அதன்பின், 2006-ல் இரு குழுக்களும் சேர்ந்து, மீண்டும் FIDE (ஃபீடே) என்ற அமைப்பின் கீழேயே உலக சாம்பியன்ஷிப் நடக்கிறது.
ஃபீடே சாம்பியன்ஷிப்பில் ஆனந்த் 2000-2002 கட்டத்தில் சாம்பியனாக இருந்தார். ஆனால் அதே கட்டத்தில் கிராம்னிக் எதிர்க்குழுவான காஸ்பரோவின் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாம்பியனாக இருந்தார்.
2006 முடிவில், ஒரு பக்கம் டோபோலோவும் மறுபக்கம் கிராம்னிக்கும் சாம்பியன்களாக இருந்தனர். இரு குழுக்களும் இணைந்தபோது, டோபோலோவ்-கிராம்னிக் இருவருக்கும் இடையில் உலக சாம்பியன்ஷிப் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் கிராம்னிக் வென்றார்.
2007-ல் 8 பேர் விளையாடிய ஒரு டோர்னமெண்டில் (அதில் கிராம்னிக்கும் உண்டு) ஆனந்த் வென்று சாம்பியன் ஆனார். அடுத்து இப்போது, 2008-ல், ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையில் நேரடிப் போட்டி நடந்து, அதில் ஆனந்த் வென்றுள்ளார்.
//செஸ் விளையாட, கற்றுக்கொள்ள, நிறையப் பணம் தேவையில்லை.//
ReplyDeleteடென்னிஸ் போல் அல்லாமல் அதிக செலவில்லாமலேயே மாவட்ட அளவிலான ஆட்டங்களில் பங்கு பெற முடியும்.
தென்மாவட்டங்களில் ஆர்வம் அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன்
அங்கு நடைபெறும் ஸ்பிக், காயாமொழி ஆகிய ஆட்டங்கள் பிரபலமானவை
//2007-ல் 8 பேர் விளையாடிய ஒரு டோர்னமெண்டில் (அதில் கிராம்னிக்கும் உண்டு) ஆனந்த் வென்று சாம்பியன் ஆனார். அடுத்து இப்போது, 2008-ல், ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையில் நேரடிப் போட்டி நடந்து, அதில் ஆனந்த் வென்றுள்ளார்.//
ReplyDeleteசுருங்க சொல்வதானால் ”தற்போதைய உலக செஸ் சாம்பியன் ஆனந்த”
அப்படித்தானே (அல்லது கிடையாதா)
புருனோ: இப்போதைய உலக செஸ் சாம்பியன் ஆனந்த் என்பது மிகச்சரி.
ReplyDeleteகுத்துச்சண்டை போலவே, அடுத்து ஒருவர், உலக சாம்பியன்ஷிப்புக்கு சேலஞ்சராக வரவேண்டும். அவர், ஆனந்துக்கு சவால் விடவேண்டும். அப்போது ஆனந்த் தீர்மானிக்கும் இடத்தில், நேரத்தில், இருவருக்கும் இடையே இதேபோல 12 ஆட்டங்கள் கொண்ட போட்டி நடக்கும். இது அடுத்து 2009-ல் நடக்கும்.
"நான் எப்போதும் எதிராளியைவிட ஒரு மூவ் அதிகமாக யோசிப்பேன்" ஆனந்தின் மிகச் சிறந்த Management தத்துவம்.,.,தமிழர்களை தலை நிமிரச் செய்ததில் ஆனந்தின் பங்கு அருமையானது.
ReplyDeleteBadri, miga arbuthamana oru post. Nandri. Sila kelvigal.
ReplyDeleteUlaga championshipirku oru challenger vendum ena koori irukeergal. Eppadi andha challenger ariyapadugirar.
Anand ulaga champion engira pozhuthu avar kadai nilai potigalil kalandhu kolla mataara. vilakamaga ketka vendum endral, tennisil Federer wimbledonil mudhal roundil irundhu thaan vilayadi finals vara vendum. Adhu chessil sellu padi aagatha?
வாசெலின் டொபாலோவுக்கும் காதா காம்ஸ்கிக்கும் இடையே போட்டிகள் நடந்து அதில் யார் ஜெயிக்கிறாரோ, அவர்தான் அடுத்த ஆண்டுக்கான சேலஞ்சர். இருவரில் யாரோ ஒருவர் அடுத்த ஆண்டு, ஆனந்துடன் செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடுவார். அதன்பிறகு, உலக செஸ் சாம்பியன்ஷிப் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடக்கும். அதில் முதல் ஆண்டில், சேலஞ்சர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த ஆண்டு, அவர் நடப்பு உலக செஸ் சாம்பியனுடன் விளையாடுவார். இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும் - FIDE உடையாமல் அப்படியே இருந்தால்.
ReplyDeleteஆனந்த் பிற எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம். மைலாப்பூரில் நாம் ஒரு போட்டி வைத்தால் அதில்கூடக் கலந்துகொள்ளலாம்:-) லினேரஸ் போன்ற போட்டிகளில் அவர் நிச்சயமாகக் கலந்துகொள்வார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும் பிற போட்டிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘பை’ கொடுப்பது போன்றவை ஒவ்வொரு டோர்னமெண்டுக்கும் மாறுபடலாம்.