Sunday, January 09, 2011

தெலங்கானா

ஆந்திரத்தைப் பிரிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அரசியலாக்குதல் என்று சொல்லுக்கான எதிர்மறைப் பொருளை மட்டும்தான் நாம் பொதுவாகப் பார்த்திருக்கிறோம். அதற்கு நல்ல அர்த்தம் தரக்கூடிய ஒரு பொருளும் உண்டு. பொதுக்களத்துக்கு வராத, பொதுமக்கள் அனைவரையும் பாதிக்காத, ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை பொதுக்களத்துக்குக் கொண்டுவந்து அனைத்து மக்களையும் யோசிக்கவைத்து, குறைந்தபட்சம் இதுதான் எனக்கு வேண்டும் என்று முடிவெடுக்கவைத்து விவாதங்களை நிகழ்த்தி, அதன் விளைவாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவைத்தலே அரசியலாக்குதல். அப்படிப் பல போராட்டங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தின் மொழி உரிமைப் போராட்டங்கள் அப்படிப்பட்டவையே. இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் அப்படிப்பட்டதே. மொழிவாரி மாநிலப் போராட்டங்கள் அப்படிப்பட்டவையே. ஜேபி இயக்கம் என்று சொல்லப்பட்ட எமர்ஜென்சிக்கு முந்தைய குஜராத், பிகார் மாணவர் போராட்டங்கள் அப்படிப்பட்டவையே. ராமஜன்மபூமி/இந்து எழுச்சி இயக்கம் அப்படிப்பட்டதே. வங்காள மொழி பேசுபவர்களைத் துரத்த முயன்ற அஸாம் மாணவர் இயக்கம், காஷ்மீர் பிரிவினை இயக்கம், சீக்கியப் பிரிவினை இயக்கம் ஆகியவையும் இப்படிப்பட்டவையே.

இந்த எல்லா இயக்கங்களும் போராட்டங்களும் முடிவில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நன்மையைத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. சில நாட்டையே பிளவுபடுத்தும். ஒருவரை ஒருவர் துவேஷத்துடன் பார்க்கச் செய்யும். அடையாளத்தை முன்வைத்துச் செய்யும் போராட்டங்கள் அனைத்துமே இப்படித்தான் முடியும்.

இந்த இயக்கங்கள், போராட்டங்களில் சில அடிப்படை குணாதிசயங்கள் இருக்கும். ஒருவித வஞ்சிக்கப்பட்ட மனநிலையை ஒரு பெரும் மக்கள் குழுவின்மீது இந்த இயக்கங்கள் சுமத்தும். அப்படி வஞ்சிக்கப்பட்டதாக நினைத்த மக்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் திரளவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டும். ஆரம்பத்தில் இந்த இயக்கத்தில் சேராத பலரும் நாளடைவில் சேர ஆரம்பிப்பார்கள். முன்னர் சேர்ந்த சிலர் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்; ஆனால் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றாமல் வேண்டுமானால் போகலாம். எப்படியாயினும் நாளடைவில் கூட்டம் அதிகமாகத்தான் போகும். வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றாலே, எதிராக வஞ்சிப்பவர்கள் என்று ஒரு கூட்டத்தை அடையாளம் காட்டியாகவேண்டும். இதில் உண்மை இருக்கவேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சில புள்ளிவிவரங்கள் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வஞ்சிப்பு என்பது தெளிவற்றதாக இருந்தால் மேலும் நல்லது. என்ன, நமது கூட்டம் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அது மட்டும் போதும்.

அதன்பின், மிக முக்கியமானது, மாணவர் குழுக்களை இதில் ஆத்மார்த்தமாக இறங்கவைப்பது. பொதுவாகவே மாணவர்கள் தங்கள் வயதுக்குரிய கொதிப்பிலும் கொந்தளிப்பிலும் இருப்பார்கள். பகுத்து ஆயும் மனநிலை அவர்களிடம் கிடையாது. அதை நம் கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருவதும் இல்லை. எனவே அவர்களை எளிதில் தூண்டிவிடலாம். இயக்கம் ஆரம்பித்தபிறகு அதைத் தடுக்க முனையும் காவலர்களையே வஞ்சிப்புக்கு உதாரணமாகக் காட்டிவிடலாம். பாருங்கள், நம்மை அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், ரப்பர் புல்லட்டுகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள்... ரத்தம்! ஆனால் மாணவர் கூட்டம் செய்யும் எதுவுமே நியாயம். பஸ்ஸைக் கொளுத்துவது, பொதுவாக எதிரிகள் என்று கருதுவோரை அடிப்பது, உதைப்பது, துரத்துவது... எல்லாமே நியாயம்.

இப்படி தெரு வன்முறையாக்கப்படும் அரசியல், தங்களது முக்கிய நோக்கத்திலிருந்து பிறழமுடியாதபடி முக்கியத் தலைவர்களே வாக்குக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் தெலங்கான ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் போன்றோர் தம் மாணவர்களிடம் வாக்களித்துவிட்டனர். தெலங்கானா பெற்றே தீருவோம்; அதிலிருந்து வழுவமாட்டோம். எனவே அவர்கள் வழுவ, மாணவர்கள் விடமாட்டார்கள். புலிவாலைப் பிடித்த சந்திரசேகர ராவ், அதன்மேல் சவாரி செய்தே தீரவேண்டும். ஒன்று அவர் இறக்கும்வரை, அல்லது புலி இறக்கும்வரை.

இந்த நிலையில் தெலங்கானாவுக்கு எதிரான இயக்கம் என்று ஒன்றுமே இல்லை. எதிர்ப்பு அனைத்துமே ஹைதராபாத் பற்றியதாகத்தான் இருக்கிறது. பிற ஆந்திரர்களின் ஒரே கவலை ஹைதராபாத்துக்கு என்ன ஆகும் என்பதே. கொட்டிக் கொட்டிச் செலவழித்த ஒரு நகரம் எதிராளிக்குப் போய்விடுமோ என்ற ஒரே கவலை. அதில் உள்ள நம் சொத்துகள் என்ன ஆகும் என்ற கவலை.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அளித்துள்ள ஆறு வழிகளில் தெலங்கானா பிரிவினையைத் தவிர வேறு எதுவும் நடைமுறைக்கு ஒவ்வாதது. தெலங்கானா மாணவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தெலங்கானா கிடைக்காததே அவர்களைப் பிறர் வஞ்சிப்பதன் காரணமாகத்தான் என்று அவர்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. எனவே வஞ்சிக்கப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு பெரும் மாணவர் கூட்டம் கொத்தித்துத்தான் எழும். வன்முறை வெடிக்கத்தான் செய்யும்.

எனவே சுவிட்சர்லாந்தில் நடப்பதுபோல, தைரியமாக அந்த மாநிலத்தைப் பங்கிட்டு இரண்டாக அல்லது மூன்றாக ஆக்கிவிடலாம். தவறே இல்லை. இதற்கு மத்திய அரசு செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். மற்ற இரண்டு நகரங்களை (அல்லது ஒரு நகரத்தை) ஹைதராபாத் அளவுக்கு மாபெரும் தரத்தில் கொண்டுவரத் தேவையான பெரும் தொகையை புது மாநிலத்துக்கு வழங்குவது. அது ஒன்றே போதும், எதிர்ப்பைச் சமாளிக்க.

இதைச் செய்யாமல் ஏன் மத்திய அரசு தடுமாறுகிறது?

இதேபோன்ற நிலை, நாளை தமிழகத்தில் ஏற்படுமா? கொங்கு மக்கள் பேரவை போன்றவை சும்மா குரல் கொடுக்கின்றனவே தவிர, அங்குள்ள மக்கள் தாம் வஞ்சிக்கப்பட்டதாக நிஜமாகவே நினைக்கிறார்களா?

49 comments:

  1. பஞ்சாப் - ஹரியானாவுக்குப் பொதுவாக சண்டிகர் இருப்பதுபோல ஹைதராபாத் இருக்கலாமே! இதை ஏன் யாரும் முன் வைப்பதில்லை என்று புரியவில்லை.

    ReplyDelete
  2. //இதேபோன்ற நிலை, நாளை தமிழகத்தில் ஏற்படுமா? கொங்கு மக்கள் பேரவை போன்றவை சும்மா குரல் கொடுக்கின்றனவே தவிர, அங்குள்ள மக்கள் தாம் வஞ்சிக்கப்பட்டதாக நிஜமாகவே நினைக்கிறார்களா?//

    இல்லை. அரசின் பாராமுகம் தொடர்ந்தாலும் தனியாரின் முயற்சியால் மேற்கு பகுதி என்னமோ (மற்ற பகுதிகளை விட) வளமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  3. //இதேபோன்ற நிலை, நாளை தமிழகத்தில் ஏற்படுமா? கொங்கு மக்கள் பேரவை போன்றவை சும்மா குரல் கொடுக்கின்றனவே தவிர, அங்குள்ள மக்கள் தாம் வஞ்சிக்கப்பட்டதாக நிஜமாகவே நினைக்கிறார்களா?//

    பத்ரி

    ஸ்ரீகிருஷ்னா அறிக்கையில், ஆந்திராவின் வெவ்வேறு பகுதிகளை ஒப்பிட்டுள்ளார்கள்

    தமிழகத்தில் அந்த அளவு வித்தியாசம் கிடையாது

    நீலகிரி போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தவிர, இங்கு பெரும்பாலான மாவட்டங்களில் வித்தியாசம் அதிகமில்லை

    திராவிட ஆட்சியில் அரசின் திட்டங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தே அளிக்கப்படுகிறது

    மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என்ற திராவிட அரசியல் இதில் பெரும் பங்கு வகிக்கிறது

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள், ஆரம்ப பள்ளிகள், மேல் நிலை பள்ளிகள், பாலிடெக்னிக், கலைக்கல்லூரிகள் என்று நீங்கள் கணக்கிடலாம்

    அல்லது

    சாலைகளின் நீளம், குடிநீர், காவல் நிலையங்கள் !!, அரசு பேரூந்துகள், அரசு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் என்று எப்படி கணக்கிட்டாலும் (நீலகிரி போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தவிர) கடந்த 40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழகம் சமநிலையிலேயே உள்ளது

    ReplyDelete
  4. முக்கியமாக ஒரு தொழில் செய்பவரின் சராசரி வருமானம் என்பது தமிழகத்தின் எந்த பகுதியை எடுத்தாலும் ஒன்று தான் (சென்னை தவிர)

    உதாரணமாக கோவில்பட்டியில் ஒரு கொத்தனாரின் ஒரு நாள் கூலியும், செங்கல்பட்டின் ஒரு கொத்தனாரின் ஒரு நாள் கூலியும் ஒன்றாகத்தான் இருக்கிறது

    தமிழகத்தில் நகர் மயமாக்கல் அதிகம் இருப்பதும் (கிட்டதட்ட50 சதம்) ஒரு காரணம்

    அது தவிர

    வேலை தேடி மக்கள் செல்லும் ஊர்களின், சென்னைக்கு அடுத்த இடம் திருப்பூர், மற்றும் கோவை தானே

    ReplyDelete
  5. இது தவிர

    தமிழகத்தில் விவசாயம் செய்ய வாய்ப்பு குறைவான பகுதிகளில் (சிவகங்கை, அறந்தாங்கி போன்ற சில விதிவிலக்குகள் தவிர), மக்கள் ஏதாவது ஒரு தொழிலை staple economyயாக கண்டுபிடித்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்

    தூத்துக்குடி - உப்பளம்
    ராஜபாளையம் - துணி மில்
    சிவகாசி - அச்சகம், பட்டாசு

    --

    ReplyDelete
  6. ---

    இது தவிர

    தமிழகத்தில் விவசாயம் செய்ய வாய்ப்பு குறைவான பகுதிகளில் (சிவகங்கை, அறந்தாங்கி போன்ற சில விதிவிலக்குகள் தவிர), மக்கள் ஏதாவது ஒரு தொழிலை staple economyயாக கண்டுபிடித்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்

    தூத்துக்குடி - உப்பளம்
    ராஜபாளையம் - துணி மில்
    சிவகாசி - அச்சகம், பட்டாசு

    ReplyDelete
  7. மற்றப்படி ஹைதராபாத்தின் அதீத வளர்ச்சி அங்குள்ள பிற பகுதி மக்களின் கண்களை உறுத்துகிறது
    ஆந்திராவின் ஒரு மாவட்ட தலைநகரில் இருந்து வருபவனுக்கு ஹைதரபாத் முற்றிலும் புதிய நகரமாக இருக்கிறது
    அதாவது ஆந்திராவின் ஒரு மாவட்ட தலைநகரில் இருக்கும் வசதியை ஹைதராபாத்தில் பல வசதிகள் கூடுதலாக உள்ளன
    எதற்கெடுத்தாலும் ஹைதராபாத் வரவேண்டும் என்ற நிலை இருப்பதாக அங்கு ஒரு புலம்பல் உள்ளது (நிதர்சணம் வேறாக இருக்கலாம்)

    ஆனால் இங்கு அப்படியில்லை
    சென்னையில் இருக்கும் வசதிகளில் (மின்சார தொடர்வண்டி, ப்ராத்தனா டிரைவ் இன் திரையரங்கு, மார்கழி மாத சங்கீத கச்சேரி போன்ற ஒரு சிலவற்றை தவிர) பெரும்பாண்மையானவை திருநெல்வேலியிலோ, விழுப்புரத்திலோ, திருச்சியிலோ, கோவையிலோ கிடைக்கும் - பல நேரங்களில் மிகக்குறைந்த விலையிலேயே

    இதுவும் ஒரு முக்கிய விஷயம்

    ReplyDelete
  8. கடைசியாக அனைவருக்கும் ஒரு கேள்வி

    தமிழக்த்தை மண்டலங்களாக பிரிக்க வேண்டுமென்றால் எப்படி பிரிப்பது

    உதாரணமாக மேற்கு மண்டலம் என்றால் - எந்தெந்த மாவட்டங்கள் இருக்க வேண்டும்
    தென்மண்டலம் என்றால் எது வரை

    இங்கு ஒரு criteria வைத்துக்கொண்டு

    கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு மண்டலத்திற்கு அரசு நிதி ஒதுக்கியது எவ்வளவு, திட்டங்களின் சதவிதம் போன்றவற்றை கணக்கிட்டு பார்க்கலாம்

    ReplyDelete
  9. கொங்கு மக்கள் பேரவை போன்றவை சும்மா குரல் கொடுக்கின்றனவே தவிர, அங்குள்ள மக்கள் தாம் வஞ்சிக்கப்பட்டதாக நிஜமாகவே நினைக்கிறார்களா?

    To a level. Yes.
    For parties, Madras is the center. They want to bring development to that city only.

    Not only CBE,Madurai, Tiruchi, Salem are neglected.

    There's no major investment in infrastructure, besides Chennai.
    We have traffic troubles, water troubles etc.. but why are they just trying to fix chennai only.

    There's no metro rail in any other city. Number of bridges (though the usefulness is debatable),all state and regional offices are only in Chennai.

    list and grudge can go on....

    ReplyDelete
  10. \\பஞ்சாப் - ஹரியானாவுக்குப் பொதுவாக சண்டிகர் இருப்பதுபோல ஹைதராபாத் இருக்கலாமே! இதை ஏன் யாரும் முன் வைப்பதில்லை என்று புரியவில்லை. \\
    ஐதராபாத் தெலுங்கானாவுக்கு நடுவில் இருப்பது தான் சிக்கல்.

    ஐதராபாத் இல்லாமல் தெலுங்கானா இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.(பல் இல்லாத புலி தான்) சொல்லப்போனா ஐதராபாத் தான் தெலுங்கானா.

    ஆந்திராகாரங்களுக்கு பிரிவினை பற்றிய கவலையைவிட ஐதராபாத் பற்றிதான் அதிக கவலை :-(. எங்க அது தெலுங்கானாவுக்கு போயிடுமோன்னு. தங்களுக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை அது தெலுங்கானாவுக்கு போககூடாது அப்படிங்கிற நல்ல எண்ணம். :)

    \\இதேபோன்ற நிலை, நாளை தமிழகத்தில் ஏற்படுமா? கொங்கு மக்கள் பேரவை போன்றவை சும்மா குரல் கொடுக்கின்றனவே தவிர, அங்குள்ள மக்கள் தாம் வஞ்சிக்கப்பட்டதாக நிஜமாகவே நினைக்கிறார்களா? \\ வாய்ப்பு மிக குறைவு. அரசின் பாராமுகம் உள்ளதென்று கொங்கு பகுதி மக்கள் நினைப்பது உண்மை.

    \\ஹைதராபாத் அளவுக்கு மாபெரும் தரத்தில் கொண்டுவரத் தேவையான பெரும் தொகையை புது மாநிலத்துக்கு வழங்குவது. அது ஒன்றே போதும், எதிர்ப்பைச் சமாளிக்க.\\
    ஐதராபாத் மாதிரி .... நடக்கிற செயலா? வேற ஏதாவது சொல்லுங்க.

    ReplyDelete
  11. Kerala is also good example for overall development. (not in Industrialisation).

    Tamilnadu has development only in Chennai. Trichy is same like this for many years, no major project or development.

    ReplyDelete
  12. Tamil Nadu is homogeneous.

    Please read my view about Emergnecy - the book published from your publishing house.

    Karthick
    http://lenz101.com/?p=19&preview=true

    ReplyDelete
  13. தெலுங்கானா மாணவர்கள் வன்முறையில் இவ்வளவு தூரம் போனதற்கு நம்ம மத்திய உள்துறை அமைச்சர் சீனாதானா தான் முழுமுதற்காரணம். KCRன் வாக்கு பாராளுமன்றத்தில் சீனாதானா சொன்னதை நம்பிக் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் ஒரு துறைக்குப் பொறுப்பு வகிக்கும் சொன்னதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் அவலம் இது.

    ஏதோ KCR அரசியலாக்குகிறார் என்பது போல நீங்கள் சொல்வது தவறான தகவல். பாரத உள்துறை அமைச்சர் KCRன் உண்ணாவிரதத்தை நிறுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தெலுங்கானா உதயமாக நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குக் கொடுத்துவிட்டு பிறகு பின்வாங்கியுள்ளார். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

    அதனாலேயே கிருஷ்ணா கமிஷன் அறிக்கை பற்றிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சீனாதானாவை ஒதுக்கிவிட்டு பிரணாப் முகர்ஜியை அனுப்பினார் சோனியா. அதன் எதிர்வினையாகத்தான் விலைவாசி உயர்வு பற்றி சீனாதானா விம்மி அழுது கடிதம் எழுதுகிறார். உள்குத்துக்களை கண்டுகொள்ளாமல் குற்றச்சாட்டுக்களை KCR மீது சுமத்தியிருக்கிறீர்கள் பத்ரி!

    ReplyDelete
  14. //To a level. Yes.//

    ஐயா

    மாநில தலைநகர் என்றால் அது மாவட்ட தலைநகர்களை விட பெரிதாக இருப்பதில் வியப்பில்லை

    //For parties, Madras is the center.//
    மாநில கட்சிகள் மாநில தலைநகரில் தானே இருக்கும்

    // They want to bring development to that city only.//

    ஆனால் சென்னை மட்டும் என்று நீங்கள் கூறுவதை நான் மறுக்கிறேன்

    //Not only CBE,Madurai, Tiruchi, Salem are neglected.//

    ஆதாரம் தர முடியுமா
    அல்லது நான் மேலே அளித்துள்ள தகவல்களில் எதாவது தவறு இருக்கிறது என்றால் குறிப்பிட்டு கூற முடியுமா

    அல்லது நான் இறுதியாக Mon Jan 10, 02:04:00 AM IST கேட்ட கேள்விக்கு விடையளியுங்கள்

    //There's no major investment in infrastructure, besides Chennai.//
    major investment என்று நீங்கள் கூறுவது என்ன என்று விளக்குங்கள்

    //We have traffic troubles, water troubles etc.. but why are they just trying to fix chennai only.//
    உங்கள் ஊரில் சாலையே இல்லையா

    //There's no metro rail in any other city. //
    சென்னை தவிர எந்த ஊரில் மெட்ரோ வேண்டும் - எந்த தடத்தில் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்

    உதாரணம் - திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் - பாளை பேரூந்து நிலையம் - சந்திப்பு - நெல்லையப்பர் கோவில் - பேட்டை

    இது போல் ஒரு வழித்தடம் தாருங்கள்

    //Number of bridges (though the usefulness is debatable)//
    உங்கள் ஊரில் பாலமே கட்டவில்லையா

    //all state and regional offices are only in Chennai.//
    மாநில அலுவலங்கள் வேறு எங்கு இருக்க வேண்டும்
    என்ன கொடுமை சார் இது

    //list and grudge can go on.... //

    ஆதாரமில்லாத பட்டியல் இருக்கத்தான் செய்கிறது :) :)

    grudge - அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது - அது உங்கள் சுதந்திரம் !!!

    ReplyDelete
  15. //Kerala is also good example for overall development. (not in Industrialisation).//

    அதாவது கேரளாவில் தமிழகத்தை விட
    அதிகம் சாலைகள்
    அதிகம் பேரூந்துகள்

    உள்ளன என்று சொல்கிறீர்களா :) :)

    ReplyDelete
  16. //Tamilnadu has development only in Chennai.//
    சிரிப்பாக வருகிறது சார்

    // Trichy is same like this for many years, no major project or development. //

    சரி, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை தாருங்கள்

    1. திருச்சியில் பெல் இருக்கிறதா
    2. திருச்சியில் திருச்சி டிஸ்டில்லரிஸ் இருக்கிறதா
    3. திருச்சி மதுரை சாலையில் புது பாலங்கள் கட்டப்பட்டனவா
    4. திருச்சி சென்னை சாலையில் புது பாலங்கள் கட்டப்பட்டனவா
    5. திருச்சி தஞ்சாவூர் சாலையில் புது பாலங்கள் கட்டப்பட்டனவா

    6. திருச்சியில் அரசு மருத்துவ கல்லூரி துவக்கப்பட்டதா
    7. திருச்சியில் தனியார் மருத்துவ கல்லூரி துவக்கப்பட்டதா

    8. திருச்சியில் REC இருக்கிறதா
    9. திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றனவா

    10. திருச்சியில் விமான நிலையம் இருக்கிறதா

    ReplyDelete
  17. அருண் அம்பீ: தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் பெயரை நான் எங்குமே சொல்லவில்லை. பொதுவாக தெலங்கானா பிரச்னை அரசியலாக்கப்பட்டது பற்றிச் சொல்கிறேன். அதுவும் அரசியலாக்குதல் என்பதன் முழுப்பொருளையும் விளக்கிவிட்டுத்தான் சொல்கிறேன். ஆட்சியாளர்களின் அறிவிப்புகளில் உள்ள குழப்பங்களால் மட்டுமே ஒரு பிரச்னையை இந்த அளவுக்குப் பெரிதாக்க முடியாது. உண்மையாகவே தாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் கொண்ட பெரும்பான்மை மக்கள் ஒன்று திரண்டு எழுந்தால்தான் இந்தப் பிரச்னை இந்த அளவுக்கு வரும். அப்படி அந்த மக்கள் நிஜமாகவே வஞ்சிக்கப்பட்டிருக்கவேண்டும்; ஆல்லது வஞ்சிக்கப்பட்டதாக அவர்களை எண்ண வைக்கவேண்டும். இரண்டில் ஒன்று நடந்துள்ளது. அதுதான் என் முதன்மைக் கருத்து. அடுத்து, இனி என்ன ஆகும் என்ற கேள்வி. மூன்றாவது பிற மாநிலங்களில், அதுவும் முக்கியமாக, நான் வசிக்கும் தமிழ்நாட்டில் இப்படி ஆவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற கேள்வியை எழுப்புவது.

    இதைப் புரிந்துகொண்டால் மகிழ்ச்சியுடையவன் ஆவேன்.

    ReplyDelete
  18. பிரிப்பது என்றால் நம்ம பத்ரிக்கு ரொம்ப பிடிக்கும் போல. காஷ்மிர் போயாச்சு, இப்ப தெலிங்கானாவா?

    ReplyDelete
  19. // மூன்றாவது பிற மாநிலங்களில், அதுவும் முக்கியமாக, நான் வசிக்கும் தமிழ்நாட்டில் இப்படி ஆவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற கேள்வியை எழுப்புவது.//

    அதாவது இரண்டு கேள்விகள் உள்ளன

    1. மக்கள் நிஜமாகவே வஞ்சிக்கப்பட்டிருக்கவேண்டும் - நிஜமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு நான் பதிலளித்துள்ளேன், அல்லது பதிலளிக்க முயன்றுள்ளேன்

    2. ஆல்லது வஞ்சிக்கப்பட்டதாக அவர்களை எண்ண வைக்கவேண்டும்.

    Sudhar ன் Tamilnadu has development only in Chennai. Trichy is same like this for many years, no major project or development.

    மறுமொழி இதற்கும் பதில் கூறுகிறது :) :)

    ReplyDelete
  20. பத்ரி

    உங்களது இரண்டாவது கேள்விக்கு இந்த மறுமொழி முக்கிய ஆவணம் !!

    //Sudhar said...
    Kerala is also good example for overall development. (not in Industrialisation).

    Tamilnadu has development only in Chennai. Trichy is same like this for many years, no major project or development.//

    திருவண்ணாமலை அல்லது நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் இப்படி கூறியிருந்தால் கூட பரவாயில்லை

    திருச்சியில் வளர்ச்சியோ திட்டமோ இல்லை என்று கூறுவது :) :) :)

    ReplyDelete
  21. பத்ரி:
    உங்கள் தெலங்கானா பதிவின் ஆறாவது பத்தியில் கீழ்க்கண்டவாறு இருக்கிறது:
    //இப்படி தெரு வன்முறையாக்கப்படும் அரசியல், தங்களது முக்கிய நோக்கத்திலிருந்து பிறழமுடியாதபடி முக்கியத் தலைவர்களே வாக்குக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் தெலங்கான ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் போன்றோர் தம் மாணவர்களிடம் வாக்களித்துவிட்டனர். தெலங்கானா பெற்றே தீருவோம்; அதிலிருந்து வழுவமாட்டோம். எனவே அவர்கள் வழுவ, மாணவர்கள் விடமாட்டார்கள். புலிவாலைப் பிடித்த சந்திரசேகர ராவ், அதன்மேல் சவாரி செய்தே தீரவேண்டும். ஒன்று அவர் இறக்கும்வரை, அல்லது புலி இறக்கும்வரை.//

    நான் இதற்கல்லவா பதில் சொல்லியிருந்தேன்!!!

    நிற்க. நானும் வசிக்கும் தமிழகத்தில் தென் தமிழகம் தனியாக வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றதற்குக் காரணமே தென் மாவட்டங்கள் அதிக தொழில் முதலீடு பெறாதது தான். சென்னையில் இருக்குமளவு தொழிற்சாலை முதலீடுகள் சேவை நிறுவனங்கள் பிற பெரு நகரங்களில் இல்லை. திருச்சிக்குத் தெற்கே தொழில் என்றாலே மணல் அள்ளுவதும், ரியல் எஸ்டேட்டும் தான். மற்றவை காலங்காலமாய் இருந்து வரும் பஞ்சாலை, நூற்பாலை வகைகளே. புது முதலீடுகள் தெற்கே தலைவைத்துக் கூடப் படுப்பதில்லை. ஆனால், சென்னையில் வந்து புது நிறுவனங்களில் பணிபுரிவோர் 60-70% தென் மாவட்ட மக்களே!

    In other words, we're encouraging a talent exodus from other districts to Chennai, consequently Chennai is becoming unmanageably over populated. The economic growth in TN is limited to Chennai, as was with Bangalore during S.M.Krishna's tenure in K'taka.

    இந்நிலையில் தனிமாநிலக் கோரிக்கை தீவிரமடைய சமீபத்திய எதிர்காலத்தில் வாய்ப்புக் குறைவு. ஏனெனில் தென் தமிழக மக்கள் பலர் IT உள்பட பல வேலைகளிலும் அமர்ந்து திரைகடலோடித் திரவியம் தேடுகின்றனர். பொருளாதாரம் தற்போதைக்குப் பெருஞ்சிக்கல் ஏதும் இல்லாது இருக்கிறது. அடுத்து வரும் அரசுகளின் பொருளாதார வளர்ச்சிப் பரவலாக்கல் கொள்கையின் அடிப்படையில் தான் தனி மாநிலக் கோரிக்கையின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும்.

    ReplyDelete
  22. //நிற்க. நானும் வசிக்கும் தமிழகத்தில் தென் தமிழகம் தனியாக வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றதற்குக் காரணமே தென் மாவட்டங்கள் அதிக தொழில் முதலீடு பெறாதது தான். //

    //The economic growth in TN is limited to Chennai//

    மென்பொருள் ஒன்றை மட்டும் வைத்து முடிவிற்கு வர வேண்டாமே

    ReplyDelete
  23. //மென்பொருள் ஒன்றை மட்டும் வைத்து முடிவிற்கு வர வேண்டாமே //

    வன்பொருள் முதலீடுகள் கூட தென் மாவட்டங்களுக்கு அதிகம் வருவதில்லையே, புரூனோ!

    25000 ஏக்கர் தொழிற்பேட்டை அமைவது, ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், ஓசூர் ஆகிய பகுதிகளில். Lincoln Electric, Michelin Tyres, JK Tyres, BGR Energy & Hitachi இரு நிறுவனங்களின் JV, IOC ஆகியன ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், எண்ணூர் என்று தான் போகின்றன.

    Videocon TV தயாரிக்க மானாமதுரைக்கு வருகிறது. GEMAC Energy கடலூருக்குப் போகிறது.

    மொத்தம் சற்றொப்ப 20000 கோடி ரூபாய் முதலீடு. 1500 கோடி மட்டும் தெற்கே வரு்கிறது. கணக்குப் பார்த்தால் 10%க்கும் குறைவாகவே தென் மாவட்டங்களுக்கு முதலீடு வருகிறது.

    P.S:
    செய்யாரைவிட சிறப்பான இடம் கிடைப்பதால் Hyundai மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டு போகிறது. Ford கூட மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டுபோக முடிவு செய்துவிட்டது.

    ReplyDelete
  24. அண்ணாச்சி

    சென்னை தலைநகர்

    தலைநகர் என்பது பிற நகர்களை விட அதிகம் வளரும். அதிகம் தொழில்கள் இருக்கும்

    இங்கு பிரச்சனை பிற ஊர்கள் புறக்கணிக்கப்படுகின்றனவா என்பது தான்

    //25000 ஏக்கர் தொழிற்பேட்டை அமைவது, ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், ஓசூர் ஆகிய பகுதிகளில். Lincoln Electric, Michelin Tyres, JK Tyres, BGR Energy & Hitachi இரு நிறுவனங்களின் JV, IOC ஆகியன ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், எண்ணூர் என்று தான் போகின்றன.

    Videocon TV தயாரிக்க மானாமதுரைக்கு வருகிறது. GEMAC Energy கடலூருக்குப் போகிறது.

    மொத்தம் சற்றொப்ப 20000 கோடி ரூபாய் முதலீடு. 1500 கோடி மட்டும் தெற்கே வரு்கிறது. கணக்குப் பார்த்தால் 10%க்கும் குறைவாகவே தென் மாவட்டங்களுக்கு முதலீடு வருகிறது. //

    அது சரி

    அப்புறம் தற்சமயம் எல்காட் நிறுவனம் கூட IT SPECIFIC SPECIAL ECONOMIC ZONE சென்னையில் மட்டுமே அமைக்கிறது

    தமிழகத்தில் இருக்கும் அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளும் சென்னையில் மட்டுமே உள்ளன

    :) :) :)

    ReplyDelete
  25. தீப்பெட்டி தொழிற்சாலைகள் கோவில்பட்டியில் கிடையவே கிடையாது. சென்னையில் மட்டுமே உள்ளது

    ராஜபாளையத்தில் மில் எதுவுமே கிடையாது சென்னையில் மட்டுமே மில் உள்ளது

    அனைத்து அச்சுக்கூடங்களும் சென்னையில் மட்டும் தான் உள்ளன. கூடன்பர்கிற்கு அடுத்து உலகிலேயே அதிக அச்சு கூடங்கள் இருப்பது சிவகாசியில் இல்லை, தாம்பரத்தில்

    அனைத்து பட்டாசுகளும் சென்னையில் மட்டுமே செய்யப்படுகிறது

    சென்னையில் மட்டுமே உடை, ஆடை தொழிற்சாலைகள் இருப்பதால் சென்னை தென்னகத்தின் மாண்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது

    போதுமா ??

    ReplyDelete
  26. போதுமா ?? போதாதா


    இரும்பு உருக்காலை சேலத்தில் கிடையாது. சென்னையில் உள்ளது
    அலுமினியம் ஆலை மேட்டூரில் கிடையாது சென்னையில் உள்ளது
    கடலூர் பாண்டிச்சேரி சாலையில் ஆலைகளே கிடையாது. சென்னையில் மட்டுமே உள்ளன
    ஸ்பில் ஆலை முத்தையாபுரத்தில் இல்லை. புரசைவாக்கத்தில் உள்ளது
    டாக், கனநீர் தொழிற்சாலைகள் ராயபுரத்தில் உள்ளன
    ஸ்டெர்லைட் திருவொற்றியூரில் உள்ளது
    டிசி டபிள்யூ தண்டையார்பேட்டையில் உள்ளது

    பெல் ஆலை திருவெறும்பூரில் இல்லை, கிண்டியில் உள்ளது

    டி.என்.பில் காகித ஆலை கரூரில் இல்லை, கோடம்பாக்கத்தில் உள்ளது

    டைடன் ஆலை ஓசூரில் இல்லை, சேப்பாக்கத்தில் உள்ளது

    சாயப்பட்டறைகள் அனைத்தும் சென்னையில் தான் உள்ளன

    கூடன் குளத்தில் அனுமின் நிலையம் கிடையாது. சென்னையில் மட்டுமே உள்ளது

    நெய்வேலியின் மின் நிலையம் கிடையாது

    மதுரா கோட்ச் அம்பாசமுத்திரத்திலோ மதுரையிலோ இல்லை, சென்னையில் உள்ளது

    இப்படி சொன்னால் தானே உங்களுக்கு திருப்தி :) :) :) அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  27. //P.S:
    செய்யாரைவிட சிறப்பான இடம் கிடைப்பதால் Hyundai மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டு போகிறது. Ford கூட மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டுபோக முடிவு செய்துவிட்டது.
    //

    நல்லது என்பது என் கருத்து

    தமிழகத்தில் போதுமான அளவு தொழிற்சாலைகள் உள்ளன

    இதற்கு மேல் இவர்களுக்கு

    (விவசாயிகளின் வயிற்றில் அடித்து) குறைந்த விலையில் நிலம்
    கிட்டத்தட்ட இலவச தண்ணீர்
    சலுகை விலையில் மின்சாரம்
    வரிவிலக்கு எல்லாம் அளிப்பது தேவையில்லை என்பதே என் கருத்து

    இன்றைய நிலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது விவசாயம் தான்

    ReplyDelete
  28. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான், ஹரியானா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை நேரில் பார்த்திருக்கிறேன்

    இங்கு நம் கிராமங்களில் இருக்கும் சாலைகளை போல் தான் அங்கு மாவட்ட தலைநகரங்களுக்கு இடையில் சாலைகள் உள்ளன

    ReplyDelete
  29. //P.S:
    செய்யாரைவிட சிறப்பான இடம் கிடைப்பதால் Hyundai மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டு போகிறது. Ford கூட மேலதிக முதலீடுகளை குஜராத் கொண்டுபோக முடிவு செய்துவிட்டது.
    //

    நேனோ விவகாரத்தில் நடந்தது என்ன
    http://specials.rediff.com/money/2008/nov/13slde1.htm

    1100 ஏக்கர் நிலம் இலவசம்
    நிலத்திற்கான முத்திரைத்தாள் கட்டணம் இலவசம்
    வேலை நிறுத்தம் கிடையாது என்ற உத்திரவாதம்
    9750 கோடி கடன் (வருட வட்டி 0.1 சதம். இருபது வருடம் கட்ட வேண்டாம்)
    உள்கட்டமைப்பு வசதி முழுவது அரசின் செலவு
    சிங்கூரிலிருந்து மாற்ற 700 கோடி
    ஊழியர் குடியிருப்பு கட்ட மேலும் 100 ஏக்கர் இலவசம்

    கூட்டிக்கழித்து பார்த்தால் ஒவ்வொரு நேனோ சீருந்திற்காகவும் குஜராத் மக்கள் 60,000 இழப்பதாக கூறப்படுகிறது

    இது போல் உங்களுக்கு ஒவ்வொரு hyundai காருக்காவும் 50000 இழக்க விருப்பமிருந்தால் கூறவும்

    :) :) :)

    ReplyDelete
  30. புதிதாக வரும் பெரு முதலீடுகளில் எவ்வளவு தென் மாவட்டங்களுக்கு வருகிறது என்று நான் பார்க்கிறேன். காமராசர் காலத்தில் துவக்கிய தொழில்களையும், ஆர்வீ கொண்டு வந்த தொழிற்சாலைகளையும் காட்டிவிட்டு போதாதா என்கிறீர்கள் நீங்கள். அதில் கருணாநிதித்தனமாக இதெல்லாம் இல்லையென்றால் திருப்திப்படுவாயா என்று வேறு கேட்கிறீர்கள்.

    விவசாயம் செய்வது தான் வேண்டும் தொழிற்சாலைகள் தேவையில்லை என்ற Go Green வாதப்படி விவசாயம் செய்யவும் தென் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை. 1970களில் ஆரம்பித்து பேசிப் பேசி இப்போது தான் இராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். தண்ணீர் எந்தக் காலத்தில் வந்து சேருமோ தெரியவில்லை. அதில் விவசாயத்துக்கு எவ்வளவு தண்ணீர் தருவார்கள் என்பதும் கேள்வி.

    காவிரி மாமாங்கங்கள் முன்னேயே வானம் பார்த்த நதியாகிவிட்டது. வேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெற வக்கில்லை அரசுக்கு. முல்லைப் பெரியாறு வைகைச் சிக்கல் இன்னும் தீர்ந்த பாடில்லை. கட்சிக்காரன் விவசாய நிலங்களை அபகரித்து வீடுகட்டி அடிக்கிறான். விவசாயம் எப்படி ஐயா செய்வது?

    இதெல்லாம் இல்லை. விவசாயத்திற்குத் தண்ணீர் முதல் நிலம் வரை எல்லாம் ஏராளமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் வளம் கொழிக்க வழி இருந்தும், புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகியும் அந்த மக்கள் சொந்த மண்ணில் உழைக்க மறுத்து சென்னைக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம்.

    அப்துல் கலாம் ஐயாவைச் சொல்லவேண்டும்! கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ரிடையர் ஆகிவிட்டார். ஆளாளுக்குக் கனவு காண்கிறீர்கள். கனவு உண்மை என்று அடித்துப் பேசுவது தான் ஏற்க முடியவில்லை. உங்கள் கனவைக் கெடுப்பானேன். பிடியுங்கள் ஒரு தாலாட்டு.

    ஆராரோ ஆராரோ ஆரிராரோ
    தொழிற்சாலை பெருகுதே தமிழ்நாடு பூராவும்
    உழைப்பாளி பயமக்கள் பணங்காசு கொழிக்கிறானே
    விவசாயம் செழிக்குதே வான்பாத்த பூமியெல்லாம்
    போரடிச்ச ஆனையெல்லாம் சோர்வாகப் படுத்திருக்கே
    வாழ்க்கைத்தரம் உயருதே வான்தாண்டி வெளிமேலே
    பட்டணத்து மெத்தையிலே ஏசிபோட்டு நீயுறங்கு
    ஆராரோ ஆராரோ ஆரிராரோ

    //இது போல் உங்களுக்கு ஒவ்வொரு hyundai காருக்காவும் 50000 இழக்க விருப்பமிருந்தால் கூறவும்//
    இழப்பே இல்லை என்று வாதாட பத்ரி வரப்போகிறார் ஜாக்கிரதை. (ஆனால் அவர் வாதம் கொஞ்சம் தெளிவாக இருக்கும். உங்களது போல கருணாநிதித்தனமாக இருக்காது, ப்ரூனோ!)

    ReplyDelete
  31. "கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான், ஹரியானா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை நேரில் பார்த்திருக்கிறேன்"

    ப்ரூனோ,

    சைக்கிள் கேப்பில அடிச்சி விடறீங்க. ஆந்திரா, கர்நாடகா இரண்டு மாநிலங்களிலும் இப்போ சாலை வசதிகள் mucho better than what the scene was 15 years ago. In fact, the intra state express bus transport is now the best in AP amongst the southern states. கர் நாடகாவில் பாதி மாவட்ட தலை நகரங்களுக்கு பெங்களூரிலிருந்து வோல்வோ சர்வீஸ் இருக்கிறது. மீத இடங்கள் இல்லாதது பயணியர் அடர்த்தி குறைவால். ஆனால் அங்கும் சாதாரண express buses நம்ம ஊர் மாதிரி இருக்கிறது. உ.பி.யில் நிலமை 2003-2008ல் படு முன்னேற்றம். If my memory serves me right, now 30 district HQs in UP are connected by 4 lane highways. நீங்க இன்னும் 10 வருசத்துக்கு முன்னாடி இருக்கீங்க.

    ReplyDelete
  32. //புதிதாக வரும் பெரு முதலீடுகளில் எவ்வளவு தென் மாவட்டங்களுக்கு வருகிறது என்று நான் பார்க்கிறேன். //

    புதிதாக என்றால் எந்த வருடத்திற்கு பிறகு

    //விவசாயம் செய்வது தான் வேண்டும் தொழிற்சாலைகள் தேவையில்லை என்ற Go Green வாதப்படி விவசாயம் செய்யவும் தென் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை. 1970களில் ஆரம்பித்து பேசிப் பேசி இப்போது தான் இராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். தண்ணீர் எந்தக் காலத்தில் வந்து சேருமோ தெரியவில்லை. அதில் விவசாயத்துக்கு எவ்வளவு தண்ணீர் தருவார்கள் என்பதும் கேள்வி.//

    இரண்டும் வேண்டும் என்பது தான் என் நிலை

    //காவிரி மாமாங்கங்கள் முன்னேயே வானம் பார்த்த நதியாகிவிட்டது. வேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெற வக்கில்லை அரசுக்கு. முல்லைப் பெரியாறு வைகைச் சிக்கல் இன்னும் தீர்ந்த பாடில்லை. கட்சிக்காரன் விவசாய நிலங்களை அபகரித்து வீடுகட்டி அடிக்கிறான். விவசாயம் எப்படி ஐயா செய்வது? //

    ஐயா

    இங்கு பிரச்சனை

    தமிழகத்தில் சென்னையில் மட்டும் தொழிற்சாலைகள் உள்ளனவா
    அல்லது
    தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளனா என்பதே


    நான்

    தமிழகம் முழுவது பரவலாக உள்ளது என்றே
    அதற்கு போதிய ஆதாரங்களையும் அளித்துள்ளேன்

    ReplyDelete
  33. //இதெல்லாம் இல்லை. விவசாயத்திற்குத் தண்ணீர் முதல் நிலம் வரை எல்லாம் ஏராளமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் வளம் கொழிக்க வழி இருந்தும், புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகியும் அந்த மக்கள் சொந்த மண்ணில் உழைக்க மறுத்து சென்னைக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம். //
    நான் கூறாததை எல்லாம் கூற வேண்டாம்

    //அப்துல் கலாம் ஐயாவைச் சொல்லவேண்டும்! கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ரிடையர் ஆகிவிட்டார். ஆளாளுக்குக் கனவு காண்கிறீர்கள். கனவு உண்மை என்று அடித்துப் பேசுவது தான் ஏற்க முடியவில்லை. உங்கள் கனவைக் கெடுப்பானேன். பிடியுங்கள் ஒரு தாலாட்டு.//

    நான் எனது கருத்திற்கு பல ஆதாரங்களை தந்துள்ளேன்
    அதில் ஏதாவது தவறு என்றால் கூறவும்

    இப்படி திசை திருப்பும் முயற்சி சிரிப்பை தருகிறது

    ReplyDelete
  34. //ஆராரோ ஆராரோ ஆரிராரோ
    தொழிற்சாலை பெருகுதே தமிழ்நாடு பூராவும்
    உழைப்பாளி பயமக்கள் பணங்காசு கொழிக்கிறானே
    விவசாயம் செழிக்குதே வான்பாத்த பூமியெல்லாம்
    போரடிச்ச ஆனையெல்லாம் சோர்வாகப் படுத்திருக்கே
    வாழ்க்கைத்தரம் உயருதே வான்தாண்டி வெளிமேலே
    பட்டணத்து மெத்தையிலே ஏசிபோட்டு நீயுறங்கு
    ஆராரோ ஆராரோ ஆரிராரோ//

    //இழப்பே இல்லை என்று வாதாட பத்ரி வரப்போகிறார் ஜாக்கிரதை. (ஆனால் அவர் வாதம் கொஞ்சம் தெளிவாக இருக்கும். உங்களது போல கருணாநிதித்தனமாக இருக்காது, ப்ரூனோ!)//

    பத்ரியின் வாதம் தெளிவாக இருக்கும்
    என் வாதத்தில் என்ன பிழை என்று கூறினால் திருத்திக்கொள்ள தயார்

    ReplyDelete
  35. // mucho better than what the scene was 15 years ago. //

    இது சரி ஐயா

    ஆனால்

    இப்பொழுது உள்ள நிலையில் இரு மாநிலங்களையும் ஒப்பிடுங்கள்

    ReplyDelete
  36. அருண் அம்பி
    Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறியது
    The economic growth in TN is limited to Chennai

    அதைத்தான் நான் தக்க ஆதாரங்களுடன் மறுத்தேன் (மீண்டும் உரையாடலை வாசிக்கவும்)

    நான் உங்கள் கருத்தை ஆதாரத்துடன் எதிர்த்தவுடன்,
    உங்கள் சமாளிப்பு தகர்ந்தவுடன், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதையாக //புதிதாக வரும் பெரு முதலீடுகளில் // என்று மாற்றி உங்கள் egoவை திருப்தி செய்ய முயல்கிறீர்கள்

    :) :) :)

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. // நீங்க இன்னும் 10 வருசத்துக்கு முன்னாடி இருக்கீங்க.
    //

    முன்னாடி
    அல்லது
    பின்னாடி ?? (பின்னால்)

    ReplyDelete
  38. //தமிழகத்தில் சென்னையில் மட்டும் தொழிற்சாலைகள் உள்ளனவா
    அல்லது
    தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளனா என்பதே//
    பரவல் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் நான் தந்தேன். சிவகாசியில் பட்டாசு, ராஜபாளையத்தில் பஞ்சு, கோவில்பட்டியில் கடலைமிட்டாய், திருப்பூரில் ஆடை என்று குமாரசாமி ராசா காலத்த்துத் தொழில்களையே நீங்கள் பட்டியலிட்டுவிட்டு ஆதாரம் தந்ததாகச் சொல்கிறீர்கள்.

    //புதிதாக என்றால் எந்த வருடத்திற்கு பிறகு//
    Ford, Hyundai, Nissan, Nokia எல்லாம் சென்னைக்கு எந்தக் காலத்தில் வந்ததோ அந்தப் புது முதலீடுகள் சென்னைக்கு வந்த காலத்தில் தென் மாவட்டங்களுக்கு எவ்வளவு முதலீடு வந்தது? அது முதலீட்டுப்பரவல் என்ற சொல்லுக்குப் பொருந்துமா?

    //சென்னையில் மட்டுமே உடை, ஆடை தொழிற்சாலைகள் இருப்பதால் சென்னை தென்னகத்தின் மாண்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது//
    கோவை, திருப்பூரில் ஆடை தொழிற்சாலைகள் நிலை என்ன என்று தினமும் பேப்பர் படிப்பவர்கள் நன்கறிவர். நீங்கள் பாவம் பிசி போலிருக்கிறது!!

    //இன்றைய நிலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது விவசாயம் தான் //
    விவசாயிகளின் வயிற்றிலடித்து மின்சாரம் தண்ணீர் தந்து தொழிற்சாலை வேண்டுமா என்றீர்கள்.
    தென் மாவட்டங்களின் ஜீவாதார குடிதண்ணீர் பிரச்சினைக்கே இப்போது தான் குழாய்க்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். இந்தத் திட்டம் எப்போது முடிந்து எப்போது தண்ணீர் வர, எப்போது விவசாயம் செய்ய? குடிக்கவே தண்ணீர் இல்லை விவசாயத்துக்கு எப்படித் தருவார்கள் என்றேன். இரண்டுக்குமே வேண்டும் என்று கருத்துச் சொன்னீர்கள்.

    நெல்லையில் மெட்ரோ ரயில் இல்லை என்றவருக்குத் தண்டவாளம் போட்டுத்தருவது போல எந்தத் தடத்தில் மெட்ரோ வேண்டும் என்று கேட்டீர்களே... விவசாயத்துக்கு வழி சொல்லுங்கள் என்று பிரச்சினையைச் சொன்னால், தொழிற்சாலை இருக்கிறதா என்பது தான் கேள்வி என்று அது பற்றி மட்டும் பேசச் சொல்கிறீர்கள்.

    பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன என்பதல்ல. அதனால் மக்கள் வாழ்க்கைத்தரம் எவ்வள்வு உயர்ந்ததா/தாழ்ந்ததா, பிரிவினைக் கோரிக்கை வருமா வராதா என்பதே! (பத்ரியின் பதிவை நிதானமாக மீண்டும் வாசிக்கவும்)

    இன்றைய நிலையில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இருந்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை, மாறாக தாழ்ந்திருக்கிறது. சென்னையில் இருக்கும் வசதி வாய்ப்புகள் தெற்கே கிடையாது. சத்தமில்லாமல் 120 நாட்களுக்கு ஒரு முறை தொழிலாளிகளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு மீண்டும் தினக்கூலியாக எடுக்கும் அவலம் தொடர்கிறது. அரசு அறிவிக்கும் அடிப்படைச் சலுகைகள் கிடைக்காது. இதுதான் நீங்கள் பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் சிவகாசி பட்டாசு, ராஜபாளையம் பஞ்சு, கோவில்பட்டி கடலைமிட்டாய், திருப்பூர் ஆடை மற்றும் இன்னபிற தொழில்களால் மக்கள் அடைந்த பலன்.

    ஒரு வேலையை விட்டால் அடுத்த வேலை என்று சென்னையில் வாய்ப்புகள் அதிகம். தெற்கே அது மிகக்குறைவு. புதிது புதிதாக வரும் முதலீடுகள் பல சென்னை சுற்றுவட்டாரங்களில் இருப்பதே உண்மை. அதைச் சொன்னால் விக்னோல்ஸ் துரை ரயில் விட்டாரே என்ற ரீதியில் 1990 களுக்கு முன் வந்த முதலீடுகள் பற்றிப் பேசுகிறீர்கள். Comparing with Chennai, Southern districts are deprived of investments. அது தான் தெற்கத்தி மக்களின் மனநிலை. கிண்டல் கலந்த கருணாநிதித்தனமான
    வாதங்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.

    //என் வாதத்தில் என்ன பிழை என்று கூறினால் திருத்திக்கொள்ள தயார் //
    Attempting to obscure the ground reality with statistics. Chiding the opponent with history when discussing about current affairs. இதைத்தான் உங்கள் வாதம் கருணாநிதித்தனமாக இருக்கிறது என்று நான் சொன்னேன்.

    ReplyDelete
  39. //பரவல் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் நான் தந்தேன். //

    பரவல் என்பதற்கு நான் பல உதாரணங்களை தந்துள்ளேன்

    //Ford, Hyundai, Nissan, Nokia எல்லாம் சென்னைக்கு எந்தக் காலத்தில் வந்ததோ அந்தப் புது முதலீடுகள் சென்னைக்கு வந்த காலத்தில் தென் மாவட்டங்களுக்கு எவ்வளவு முதலீடு வந்தது? அது முதலீட்டுப்பரவல் என்ற சொல்லுக்குப் பொருந்துமா?
    //
    இல்லை
    1990க்கு பிறகு வந்த முதலீடுகளில் பெரும்பாலானவை சென்னை மற்றும் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டமே
    இதில் எந்த சந்தேகமும் இல்லை

    ஆனால் //The economic growth in TN is limited to Chennai// என்ற உங்கள் வாதத்தை நான் இன்னமும் கடுமையாக எதிர்க்கிறேன்

    ReplyDelete
  40. //கோவை, திருப்பூரில் ஆடை தொழிற்சாலைகள் நிலை என்ன என்று தினமும் பேப்பர் படிப்பவர்கள் நன்கறிவர். நீங்கள் பாவம் பிசி போலிருக்கிறது!!//

    அப்படியா

    அங்கு ஆடை தொழிற்சாலை உள்ளது என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி

    எந்த தொழிலும், ஏற்றமும் இருக்கும் இறக்கமும் இருக்கும்

    மென்பொருள் 2008, 2009 காலகட்டத்தில் தொய்வாக இருந்தது போல் இந்த வருடம் ஆடை தொழில்

    அடுத்த வருடம் வேறு ஏதாவது

    இது ஒரு சுழற்சி

    ReplyDelete
  41. //நெல்லையில் மெட்ரோ ரயில் இல்லை என்றவருக்குத் தண்டவாளம் போட்டுத்தருவது போல எந்தத் தடத்தில் மெட்ரோ வேண்டும் என்று கேட்டீர்களே...//
    அதற்கு நீங்கள் இது வரை பதில் சொல்லவில்லை என்று நினைவு படுத்துகிறேன்


    // விவசாயத்துக்கு வழி சொல்லுங்கள் என்று பிரச்சினையைச் சொன்னால், தொழிற்சாலை இருக்கிறதா என்பது தான் கேள்வி என்று அது பற்றி மட்டும் பேசச் சொல்கிறீர்கள்.//

    முதல் கேள்வி அது தானே

    அது குறித்து முதலில் முடிவு செய்து விட்டு

    அதாவது நீங்கள் முதலில் கூறியது (The economic growth in TN is limited to Chennai) சரியா தவறா என்று முடிவு செய்து விட்டு அடுத்த விஷயத்தை பேசலாம் என்றேன்

    நான் தொடர்ந்து விவாதிக்க தயார்

    முதல் விவாதத்தை முடித்து கொண்டு அடுத்த விவாதம் சென்றால் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  42. //பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன என்பதல்ல.
    அதனால் மக்கள் வாழ்க்கைத்தரம் எவ்வள்வு உயர்ந்ததா/தாழ்ந்ததா, பிரிவினைக் கோரிக்கை வருமா வராதா என்பதே! (பத்ரியின் பதிவை நிதானமாக மீண்டும் வாசிக்கவும்)
    //

    பிரச்சனை Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறியது
    The economic growth in TN is limited to Chennai

    அது தவறு என்பது என் நிலை

    மீண்டும் நிதானமாக வாசிக்கவும்

    ReplyDelete
  43. //பிரச்சினை எத்தனை தொழிற்சாலைகள் எங்கெங்கே உள்ளன என்பதல்ல. அதனால் மக்கள் வாழ்க்கைத்தரம் எவ்வள்வு உயர்ந்ததா/தாழ்ந்ததா, பிரிவினைக் கோரிக்கை வருமா வராதா என்பதே! (பத்ரியின் பதிவை நிதானமாக மீண்டும் வாசிக்கவும்)//

    பிரச்சனை Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறியது //The economic growth in TN is limited to Chennai//

    அது தவறு என்பதால் பிரிவினை கோரிக்கை வரும் வாய்ப்பு குறைவு

    அப்படி கூட திருச்சி முன்னேறவில்லை என்று கூறுபவர்கள் பிரிவினை கேட்கலாம்

    இது குறித்து எல்லாம் தெளிவாகவே கூறிவிட்டேனே

    இன்னமும் என்ன குழப்பம்

    ReplyDelete
  44. //இன்றைய நிலையில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இருந்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை, மாறாக தாழ்ந்திருக்கிறது.//

    மறுக்கிறேன்

    1967ல் இருந்ததை விட இன்று தென் மாவட்டங்களில் வாழ்க்கை தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது

    HDI போன்ற தரவுகளை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்

    // சென்னையில் இருக்கும் வசதி வாய்ப்புகள் தெற்கே கிடையாது.//

    உண்மை. அதாவது அனைத்து வசதிகளும் கிடையாது.

    ஆனால் பெரும்பாண்மையான வசதிகள் உள்ளன என்பதே உண்மை

    இது குறித்து நான் ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளேன்

    வாசித்து பார்க்கவும்

    //சத்தமில்லாமல் 120 நாட்களுக்கு ஒரு முறை தொழிலாளிகளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு மீண்டும் தினக்கூலியாக எடுக்கும் அவலம் தொடர்கிறது.//

    எங்கு
    தென் மாவட்டங்களிலா
    சென்னையிலா

    விளக்கவும்

    //அரசு அறிவிக்கும் அடிப்படைச் சலுகைகள் கிடைக்காது.//
    எங்கு
    தென் மாவட்டங்களிலா
    சென்னையிலா

    விளக்கவும்

    // இதுதான் நீங்கள் பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் சிவகாசி பட்டாசு, ராஜபாளையம் பஞ்சு, கோவில்பட்டி கடலைமிட்டாய், திருப்பூர் ஆடை மற்றும் இன்னபிற தொழில்களால் மக்கள் அடைந்த பலன். //

    சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் நிரந்தர ஊழியரா என்று சொல்லவும்

    ReplyDelete
  45. //ஒரு வேலையை விட்டால் அடுத்த வேலை என்று சென்னையில் வாய்ப்புகள் அதிகம்.//
    உண்மை

    // தெற்கே அது மிகக்குறைவு.//
    உண்மை

    // புதிது புதிதாக வரும் முதலீடுகள் பல சென்னை சுற்றுவட்டாரங்களில் இருப்பதே உண்மை.//
    உண்மை

    இதையெல்லாம் நான் மறுக்கவேயில்லை

    நான் மறுத்த கருத்து எது வென்று தெளிவாகவே கூறிவிட்டேன்

    படித்து பார்க்கவும்

    // அதைச் சொன்னால் விக்னோல்ஸ் துரை ரயில் விட்டாரே என்ற ரீதியில் 1990 களுக்கு முன் வந்த முதலீடுகள் பற்றிப் பேசுகிறீர்கள்.//
    முழுவதும் படித்து பார்க்கவும்

    ReplyDelete
  46. //Comparing with Chennai, Southern districts are deprived of investments.//
    உண்மை

    அதாவது சென்னை அதிகமாக வளர்ந்துள்ளது என்பது உண்மை. அதை நான் முதலிலேயே கூறிவிட்டேன்
    ஆனால் சென்னை மட்டுமே வளர்ந்துள்ளது என்பது வடிகட்டிய முட்டாள்தனம் அதைத்தான் நான் மறுத்தேன்

    // அது தான் தெற்கத்தி மக்களின் மனநிலை. கிண்டல் கலந்த கருணாநிதித்தனமான
    வாதங்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.//

    இங்கு பிரச்சனையே Wed Jan 12, 05:00:00 PM ISTல் நீங்கள் கூறிய The economic growth in TN is limited to Chennai கருத்து தான் சாமி

    ReplyDelete
  47. //Attempting to obscure the ground reality with statistics.//

    மன்னிக்கவும்

    நான் உண்மை நிலவரத்தை விளக்கியே ஆதரங்கள் தந்தேன்

    சென்னை மட்டுமே வளர்ந்துள்ளது என்ற முட்டாள்தனமான கருத்து அந்த ஆதாரங்களினால் தகர்ந்தது இந்த விவாதத்தின் பலனே

    //Chiding the opponent with history when discussing about current affairs. இதைத்தான் உங்கள் வாதம் கருணாநிதித்தனமாக இருக்கிறது என்று நான் சொன்னேன்.//

    நான் கூறியதில் எதுவும் தவறில்லை என்று தெரிவித்தற்கு நன்றி

    -

    சரி முடிவாக சொல்லுங்கள்

    சென்னை மட்டுமே வளர்ந்துள்ளதா
    அல்லது
    சென்னை பிற ஊர்களை விட அதிகம் வளர்ந்துள்ளதா
    அல்லது
    சென்னையும் பிற ஊர்களும் சமமாக வளர்ந்துள்ளனவா
    அல்லது
    சென்னை பிற ஊர்களை விட குறைவாக வளர்ந்துள்ளதா
    அல்லது
    சென்னை வளரவேயில்லையா

    எது ground reality

    ReplyDelete
  48. //
    சென்னை மட்டுமே வளர்ந்துள்ளதா
    அல்லது
    சென்னை பிற ஊர்களை விட அதிகம் வளர்ந்துள்ளதா
    அல்லது
    சென்னையும் பிற ஊர்களும் சமமாக வளர்ந்துள்ளனவா
    அல்லது
    சென்னை பிற ஊர்களை விட குறைவாக வளர்ந்துள்ளதா
    அல்லது
    சென்னை வளரவேயில்லையா//
    இவ்வளவு பின்னூட்டங்களிலும் Chennai Centric ஆகத்தான் பேசினீர்களா? நான் ஏதோ மொத்தத் தமிழகத்துக்காகவும் பிரச்சினைகளின் ஆணிவேரை அறிந்து அலசத்தான் பேசினீர்கள் என்று எண்ணி பதில் சொன்னேனே!

    the Questions should be like this.

    தென் மாவட்டங்கள் மட்டுமே வளர்ந்துள்ளதா => சத்தியாமாக இல்லை.
    அல்லது
    பிற ஊர்களை விட தென் மாவட்டங்கள் அதிகம் வளர்ந்துள்ளதா => இல்லவே இல்லை.
    அல்லது
    தென் மாவட்டங்களும் பிற ஊர்களும் சமமாக வளர்ந்துள்ளனவா => நிச்சயமாக இல்லை.
    அல்லது
    தென் மாவட்டங்கள் பிற ஊர்களை விட குறைவாக வளர்ந்துள்ளதா => சர்வ நிச்சயமாக ஆமாம்.
    அல்லது
    தென் மாவட்டங்கள் வளரவேயில்லையா.
    => இல்லை.

    ReplyDelete
  49. //இவ்வளவு பின்னூட்டங்களிலும் Chennai Centric ஆகத்தான் பேசினீர்களா? நான் ஏதோ மொத்தத் தமிழகத்துக்காகவும் பிரச்சினைகளின் ஆணிவேரை அறிந்து அலசத்தான் பேசினீர்கள் என்று எண்ணி பதில் சொன்னேனே! //

    ஐயா

    பிற ஊர்களை வைத்து தான் பேசினேன்
    அது குறித்து உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்

    --

    தென் மாவட்டம் என்று மட்டுமில்லாமல் மேற்கு மாவட்டங்களையும் சேர்த்து கொண்டதால் பிற ஊர்கள் என்று குறிப்பிட்டேன்

    ReplyDelete