Friday, October 14, 2011

வெறும் காற்றிலிருந்து சுத்தமான குடிநீர்

நேற்று திருவான்மியூரில் இந்திய நுகர்வோர் சங்கத்தின் (கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) தேசிகன், ராஜன் ஆகியோருடன் ஒரு சந்திப்பு. இடையில், நீர் சுத்திகரிக்கும் கருவிகள் பற்றிப் பேச்சு வந்தது. அக்வா கார்ட் (யுரேகா ஃபோர்ப்ஸ்) சேவை சரியாக இல்லை; எனவே இந்துஸ்தான் லீவரின் ப்யூர்-இட் வாங்கியுள்ளேன் என்றேன். விலை கொஞ்சம் அதிகமான, ஆனால் காற்றிலிருந்தே நீரை உறிஞ்சி சுத்திகரித்துத் தரும் வாட்டர் ப்யூரிஃபையர் ஒன்று உள்ளது, மெட்ரோ வாட்டர் சப்ளையே தேவையில்லை என்றார் தேசிகன். அதனை அவர்கள் இப்போது நீரின் தரத்துக்காகப் கன்ஸ்யூமர் அசோசியேஷன் பரிசோதித்துவருகிறது.

அந்தக் கருவியைப் பார்க்கமுடியுமா என்று ஆர்வத்துடன் கேட்டேன். இங்கேயேதான் பால்கனியில் இருக்கிறது என்றார் தேசிகன். அதற்குமுன் அதிலிருந்து கிடைக்கும் நீர் ஒரு கப் கொண்டுவந்து கொடுத்தார்கள். குடித்துப் பார்த்தேன். நல்ல நீர்.

ஆகாய கங்கை என்பதுதான் அந்தக் கருவியின் பெயர்.

இதன் உட்கருத்து மிக எளிதானது. காற்றில் எப்போதுமே ஈரப்பதம் உள்ளது. கடலோரப் பகுதிகளில் - அதாவது சென்னை போன்ற நகரங்களில் இந்த ஈரப்பதம் மிக அதிகமாகவே உள்ளது. ஒரு மழை பெய்தபிறகு அடிக்கும் வெயிலில் வியர்வை சொட்டச்சொட்ட நாம் திண்டாடக் காரணம் இந்த மிக அதிகமான ஈரப்பதமே. ஆற்றங்கரை நகரங்களிலும்கூட ஈரப்பதம் இருக்கும். ஆனால் கடற்கரை நகரங்கள்தான் இதில் உச்சம்.

இந்த ஈரப்பதத்தை உறிஞ்சி, பிழிந்து, கசடுகளை நீக்கினால் நல்ல நீர் தயார்.

பிற வாட்டர் ஃபில்ட்டர்களை எடுத்துக்கொண்டால், அவற்றுக்கு நீர் சோர்ஸ் தேவை. கார்பொரேஷன் நீர் குழாய் வழியாக வரவேண்டும். அல்லது நிலத்தடி நீர் வேண்டும். ஆனால் இந்த ஆகாய கங்கை கருவிக்கு அப்படி ஏதும் தேவையே இல்லை. இது வெறும் கருத்து மட்டுமல்ல. நிஜமான கருவி. நான் பார்த்த கருவி ஒரு நாளைக்கு சுமார் 40 லிட்டர் நீரைத் தருகிறது. இதனை வைக்க இடம் வேண்டும். மின்சாரத்தால் இயங்குவது. இதேபோன்ற கருவியின் உயர் வெர்ஷனில் 100-120 லிட்டர் நீரைக்கூடப் பெறமுடியும் என்று நினைக்கிறேன். 40 லிட்டர்வரை ஒரு நாளுக்குத் தரும் கருவியின் விலை கிட்டத்தட்ட 30,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள். ஒரு லிட்டர் நீருக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் ரூ. 1.25 முதல் ரூ. 1.50 வரை இருக்கலாம் என்கிறார்கள்.
இந்தக் கருவியைத் தயாரித்துள்ளவர் சென்னை ஐஐடியில் படித்த ஷாம்சுந்தர் என்ற ஒருவர் என்று சொன்னார்கள். நான் இவரைச் சந்தித்ததில்லை. சந்தித்து இந்தக் கருவியை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தலாம் என்பது தொடர்பாகப் பேச விரும்புகிறேன். சந்தித்ததும் அதனைப் பற்றியும் எழுதுகிறேன்.

இந்தக் கருவியால் என்ன லாபம்?

நல்ல நீரை மக்களுக்கு அளிக்க அரசு நிறையச் செலவழிக்கிறது. ஆனால் இந்த நீரின் பலன்கள் பெரும்பாலும் பணம் படைத்தோருக்கே செல்கிறது. ஒரு வீடு என்றால் ஒரு நாளைய தேவை என்பது சில நூறு லிட்டர்கள். குடிக்க, சமையல் செய்ய மட்டுமல்ல, குளிக்க, துணி துவைக்க, வீடு துடைக்க அல்லது கழுவ, கார், டூவீலர் துடைக்க.

ஆனால், பெரிய பெரிய அலுவலகங்களுக்கு குடிதண்ணீர் அல்லது பாண்ட்ட்ரி சமையல் வேலைகளுக்கும் பாத்திரம் கழுவவும் மட்டுமே நீர் தேவைப்படும். அதனை இந்தக் கருவியால் (அல்லது கருவிகளால்) பெற்றுக்கொள்ள முடியும். கருவிச் செலவு அதிகமானாலும், அவர்கள் மாநகராட்சி/நகராட்சி மீது அழுத்தம் தரவேண்டியதில்லை என்று ஆகிவிடும். அதனால் நிலத்தடி நீர் பெருமளவு பாதுகாக்கப்படும்.

பணக்காரர்கள் தம் வீடுகளில் இந்தக் கருவிகளைப் பொருத்திக்கொள்வதன்மூலம் பொது நீர் வளம்மீதான தங்கள் ஆதிக்கத்தைக் குறைக்கலாம். பெரிய பெரிய ஆடம்பர அடுக்ககங்கள் இந்தக் கருவிகள் பலவற்றைப் பொருத்துவதன்மூலம் மெட்ரோ வாட்டர் தேவையைக் கடுமையாகக் குறைக்கலாம்.

இதன் விளைவாக, மெட்ரோ வாட்டர் போன்ற அமைப்புகள் கீழ் மத்தியதர மக்களை அல்லது ஏழைகளை நோக்கித் தங்கள் சேவையை விரிவுபடுத்தலாம். இதனால் அனைவருக்கும் நல்ல குடிநீர் என்பது நிஜமாகவே சாத்தியப்படும்.

26 comments:

  1. குடிநீரைத்தருவதோடு காற்றில் உள்ள கூடுதல் ஈரப்பதத்தையும் குறைக்கும் என்பதால் சென்னை போன்ற நகரங்களில் பெரும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  2. வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  4. Badri,

    The concept is not new. Dehumidifers are already available in most of the European countries, which costs less as well. They just extracts the water from the air in rooms to reduce the dampness in house. What I really don't know is the quality of water.

    Check this link :
    http://www.amazon.co.uk/s/?ie=UTF8&keywords=dehumidifier&tag=googhydr-21&index=aps&hvadid=10152174766&ref=pd_sl_81cxxybd8u_b

    ReplyDelete
  5. எங்க அண்ணன் வீட்டில ஸ்ப்ளிட் ஏ சி லே இருந்து தண்ணி கொட்டும்.ஒரே ராத்திரியில பக்கெட் ரொம்பிடும்.அது மாதிரியா.
    மின்சாரத்தில ஓடுதுன்னா அந்த செலவு எவ்வளோ ஆகும்.இந்த ஏ சி,பிரிட்ஜ் ஆள தான் ஒசான்ல ஓட்டை ,உலகமே அழிய போவுதுன்னு எல்லாம் சொல்றாங்களே அதே மாதிரி ஈரப்பதம்,காத்தை பிரிக்கற மசின்ல இருந்து எவ்வளோ குழப்பம் வருமோ.

    ReplyDelete
  6. ராமதுரை எழுதியது
    பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஆஸ்பத்திரியில் இந்த குடி நீர் மெஷினைப் பார்த்திருக்கிறேன். நீர் காலியாகி விட்டால் காத்திருக்க வேண்டும் என்பது இதில் காணப்படும் ஓர் அம்சமாகும். சமைய்ல் தேவைக்கும் நல்ல நீர் தேவை என்பதால் பெரிய குடும்பத்துக்கான தேவையை இது பூர்த்தி செய்ய முடியுமா என அப்போது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. நான் பார்த்தது என்ன மாடல் என்று ஞாப்கமில்லை. நிறைய நீரை அளிக்கின்ற பெரிய யூனிட்டுகள் இப்போது விற்பனைக்கு வந்திருக்கலாம் நீங்கள் சொன்னது போல இது காற்றிலிருந்து நீரைப் பிழிந்து தருவதே.எவ்விதமான யந்திரமாக இருந்தாலும் Maintenance என்ற ஒரு பிரச்சினை உள்ளது. அதற்கு நல்ல உத்தரவாதம் இருந்தால் சரி.
    ராமதுரை
    ராமதுரை

    ReplyDelete
  7. NALLA KANDUPEDIPI.. VAZHTHUKAL..

    ReplyDelete
  8. As franklin says, Dehumidifiers are available in the market for long time. The water they collect usually but not always have microbes, viruses, oil droplets, dust, fumes from vehicles etc., and that is why water from air-conditioner for example is non potable. If this new machine can make it potable water its good for places like Chennai.

    ReplyDelete
  9. பல பண முதலைகளையும், வியாபார காந்தங்களையும், அரசியல் புள்ளிகளையும் வயிற்றில் அடிக்கும் ஒர் "மோசமான" கண்டுபிடிப்பு. நிச்சயம் சந்தைக்கு வராது. ஜெய்ஹிந்த்!!!!!!!

    ReplyDelete
  10. குடி நீர் கிடைக்கும் என்பதற்கு இணையான மகிழ்ச்சி இதனால் காற்றில் ஈரப்பதம் குறைந்து வெக்கை குறையும் என்பது :)

    ReplyDelete
  11. காற்றில் இருந்து நீர் எடுக்கும் கருவி பற்றி படித்திருக்கிறேன். இங்கே ஷார்ஜாவில் ஒரு பள்ளி தங்கள் வளாகத்தில் இதை பயன்படுத்திக் கொண்டிருப்பதாய் படித்தேன். http://www.thenational.ae/news/uae-news/school-makes-water-out-of-thin-air

    இந்த http://www.liquidoflife.net/ நிறுவனம் தான் இக்கருவியை நிறுவியுள்ளது..

    ReplyDelete
  12. நிலத்திற்கு அடியில் நீராகவே இருப்பதை உறிஞ்சி எடுப்பதால் தட்பவெப்பநிலை மாறுகிறது, இயற்கை பாதிப்படைகிறது என்கிறோம்.

    இந்தக் கருவியின் பயன்பாடு பரவலாக்கப்பட்டு, காற்றை உறிஞ்சி நீராக மாற்றுவதால் காற்றிலிருக்கும் ஆக்ஸிஜன் குறையாதா? இயற்கை..?

    ReplyDelete
  13. I think more than the technology as such consistency in performance is important. Humidity is air is not uniform throughout the year. Humidity in the air may cause sweat but it may have benefits for non-humans.Moreover the water may not be potable.What is the cumulative impact of '000s of such machines in a locality- any ideas.

    ReplyDelete
  14. பத்ரி,

    இது ஒரு சுற்றுச்சூழலுக்கெதிரான கருவியாக முடியலாமெனத் தோன்றுகிறது. அதிகப்படியான ஈரப்பதத்தைக் குறைப்பதற்காக இக்கருவி பயன்படுத்தப்படும் பொழுது ஒன்றும் சிக்கலில்லை. அதனுடைய துணை உற்பத்திப் பொருளாக குடிநீர் கிடைத்தால் பயனுடையதுதான், எந்தச் சிக்கலுமில்லை.

    ஆனால் குடிநீரையே காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதத்திலிருந்துதான் கொள்ளையடிக்க வேண்டுமென்றால் (மனிதர்களின் தேவைகள் எல்லாம் தேவைகளாகவே நிற்பதில்லை, கொள்ளையாகத்தான் முடிகின்றன) காற்றில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச ஈரப்பதம் கூட இல்லாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். அனைத்து இல்லங்களிலும், அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் இவை பாவிக்கப்பட ஆரம்பித்தால் காற்றிலுள்ள ஈரப்பதத்தின் நிலையென்ன? நாட்டில் மழை பெய்ய வாய்ப்புண்டா? இதுபற்றி நான் எங்கும் படித்ததில்லை. அதனால் என்னால் ஆதாரங்களையெல்லாம் கொடுக்க முடியாது. என்னுடைய அடிப்படை பயத்தின் அடிப்படையிலேயே இதைக் கூறுகிறேன்.

    இதுபோன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்கும் (அல்லது மாற்றியமைக்கும்) கருவிகள் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லையா? இதற்கான சட்டங்கள் இருப்பில் உண்டா?

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  15. இந்த மெஷினை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஒரு பொருட்காட்சியில்- சுமார் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம். தயாரிப்பு நிறுவனம் பெயர் நினைவில்லை.அப்போதே அவர்கள் சந்தைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்..மற்றும் சமீபத்தில் டிஸ்கவரி சானலில், இதைப் போல மிகப்பெரிய மெஷின்(கடற்கரையில் நிறுவப்பட்டிருந்தது)குறித்து நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது..கூடுதல் அம்சம்- அங்கு மின்சாரம் தேவைப் படவில்லை.. நல்ல முயற்சிகள் வெற்றி அடைந்தால் மக்களுக்கு பயந்தானே!

    ReplyDelete
  16. இது எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை. முதலில் காற்றை குளிர்வித்தால் தான் நீர் கிடைக்கும். அதற்கு ஆகும் மின்சார அளவு அதிகமாக இருக்கும். இரண்டாவது சென்னை போன்ற நகரங்களில் காற்றில் இருக்கும் கழிவுகளை குறைந்த செலவில் நீக்கி நீர் பயன்படுத்த முடியும் என்பது.

    ReplyDelete
  17. பதிவிலும் ட்விட்டரிலும் இதற்கு ஏகப்பட்ட பின்னூட்டங்கள். சில பதில்கள்:

    1. இந்தக் கருவிபோல் சில பிற நாடுகளில் பயனில் இருக்கலாம். இதன் அடிப்படைக் கருத்து மிக எளிதான ஒன்றுதான். பலரும் குறிப்பிட்டாற்போல, dehumidifiers, air conditioners எல்லாமே இதே கொள்கை அடிப்படையில்தான் இயங்குகின்றன. ஆனால் நோக்கம் வேறு. ஏசி, ஒரு சிறு அறையிலிருந்து ஈரப்பதத்தை வெளியே எடுக்க முனைகிறது. அந்த ஈரத்தை என்ன செய்வதென்று கவலைப்படுவதில்லை. ஆனால் இங்கே ஈரத்தை ஒன்று சேர்ப்பதுதான் முக்கிய வேலை.

    2. மற்றொருவர் சுட்டிக்காட்டியதுபோல, அப்படிச் சேர்க்கும் நீரைச் சுத்திகரிக்கவேண்டும். கசடுகளை நீக்குவதோடு, நுண்ணுயிரிகளையும் நீக்கவேண்டும். குடிக்கத் தோதானதாக நீரை மாற்றவேண்டும்.

    3. காற்றில் உள்ள ஈரப்பதம் என்பது எக்கச்சக்கம். நாம் அதிலிருந்து குடிக்கும் நீரை எடுத்துக்கொள்வதால் காற்றின் ஈரம் மாறப்போவதே இல்லை. மாறாக, அருகில் உள்ள நீர்நிலையிலிருந்து (அதாவது கடலிலிருந்து) மேலும் சிறிது நீர், நீராவியாக மாறி காற்றில் கலந்துவிடும். நமக்கு மேல் இருக்கும் காற்று பெரும் ரிசர்வாயர். எனவே பயப்படவேண்டியதில்லை.

    4. ஒரு நாள் முழுதும் கருவி ஓடத் தேவைப்படும் மின்சாரம் 18 யூனிட். அதற்கான செலவு இடத்துக்கு இடம் மாறுபடும். வசிக்கும் வீடு என்றால் செலவு வேறு, வணிகப்பகுதி என்றால் செலவு வேறு.

    5. ஷ்யாம்சுந்தரிடம் சில கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பினேன். அவர் பதில் அனுப்பியுள்ளார். அதனை அடுத்த பின்னூட்டத்தில் தருகிறேன்.

    ReplyDelete
  18. ”1. What is the actual cost one incurs in producing 40 litres of water?”

    To this question, he had attached an excel sheet. The summary of it is that, in ideal condition, it will produce 40 litres by consuming 18 units per day. But in Chennai, it will probably only produce 30 litres a day, consuming 16 units. You should calculate what the cost of 16 units is depending upon your electricity charges. Then you should compare that with the cost of procuring water in cans.

    ReplyDelete
  19. "2. What is the true cost of processing water by large scale initiatives such as desalination plants (including capex etc.)"

    He didn't have ready answer for this. I will try to find out if I can get this data.

    ReplyDelete
  20. "3. In what way is this a green initiative?"

    Answer: Akash Ganga is a green initiative for it saves the limited ground water resource. Every liter of water produced from Akash Ganga saves 3 liters of ground water (as seen in RO plants). Further there is no effluent in Akash
    Ganga.

    ReplyDelete
  21. "4. What is the impact of taking water out of the air? Will it not affect other life forms?"

    Answer: There is so much of evaporation from sea that in a conservative estimate per day evaporation is more than the entire ground
    water resource.

    ReplyDelete
  22. I am in valasaravakkam. The metro water is very often mixed with sewerage drainage and despite our appeals thro' Association representatives, the Municipality does not come forward to rectify the water pipes. The water during rainy season is highly polluted. We are forced to buy water at the rate of Rs.50 per cane. I am buying nearly 10 cans per month. I am also spending Rs.2000/- AMC for the RO system. Totally, per month, I am spending nearly Rs.700/-.
    I do not know whether the machine suggested by you will be able to provide good water, rid of all impurities and bacteria ( particularly airborne anerobic bacteria) .
    subbu rathinam
    http://Sury-healthiswealth.blogspot.com
    http://bullandbearfight.blogspot.com

    ReplyDelete
  23. comparing the *cost* only of this (not going into the purification, reliability, etc. for now) is not right. The mentioned 16 units per day results in approx 480 units per month. For ref, my 3 BR, independant house consumed 237 units per month over the past 4 months. This is for entire ligting, fan, fridge, iron, oven, water pumps and whatnot! A similar house in Chennai may consume, say, 400, or even 500 units, thanks to the ACs.

    Compare this with this 480 units. isualise the current energy scenario and where we are heading to.

    Anyone still think this is a green device? Bravo!

    ReplyDelete
  24. when we discussed it my friend raised a valid concern, how about the minerals in the water content ?

    will it have all the minerals like our ground water ??

    -mj

    ReplyDelete
  25. I have seen such an unit in Tamilnadu Text Book Corporation Offices; One of the Managing Directors, some times back bought a few units of this machine for their use in their HO in College Road, and godown in Tharamani and in their branches; It looks like our Ordinary fridge and even gives cool waTER; BUT IT IS NOT BEING USED PROPERLY by the corporation stafff, due to some miscoception among its staff as using of this water may create cold, coughe etc; But what I felt is, this is a very good and useful machine and I am interested in going in for such a one depending on its market price etc

    Suppamani

    ReplyDelete