Wednesday, April 04, 2012

ஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை

கிழக்கு பதிப்பகத்திலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை இந்த மாதத்திலிருந்து வெளியாகிறது. அடுத்த இரண்டு நாள்களில் பல கடைகளில் கிடைக்கும். இதற்குமுன் பிப்ரவரி, மார்ச் இதழ்கள் இரண்டைச் செய்திருந்தோம். அவற்றை வெள்ளோட்டமாகச் சிலருக்கு மட்டும் அனுப்பிவைத்திருந்தோம். இந்த ஏப்ரல் இதழ் விற்பனைக்குக் கடைகளில் கிடைக்கும்.


இதழ் 80 பக்கங்கள் கொண்டது. முழுதும் வண்ணத்தில், வழ வழ தாளில்.

இதில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகும். அந்தத் தளத்தை விரைவில் கொடுக்கிறேன். தனித் தனிக் கட்டுரைகளாக இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம். அல்லது முழு பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொண்டு உங்கள் கணினியிலும் படிக்கலாம்.

ஆழம் என்பது அரசியல், சமூக, பொருளாதார நடப்பு நிகழ்வுகள் குறித்த இதழ். சினிமா, விளையாட்டு, இலக்கியம் போன்றவை குறைவாகத்தான் இருக்கும்.

ஆழம் என்ற பெயர் ஏன்? இன்றைய தமிழ் செய்தித்தாள்களிலும் வார/மாத இதழ்களிலும் செய்திகளை அலசும் ஆழம் போதவில்லை என்பது எங்கள் கருத்து. அதனைக் கொண்டுவரும் ஒரு முயற்சிதான் இது. செய்திதான் கனமாக இருக்கவேண்டுமே தவிர, அது எழுதப்பட்டிருக்கும் மொழி இலகுவாக இருக்கவேண்டும் என்பது நோக்கம். அதனை அடைகிறோமா இல்லையா என்பதைச் சொல்லவேண்டியது நீங்கள்தான்.

 
இணைய வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறோம். செய்து முடித்து கடந்த மூன்று மாத இதழ்களும் ஏற்றப்பட்டதும் தகவல் சொல்கிறேன்.

அச்சு இதழை உடனே வாங்க விரும்புபவர்கள் சென்னை, தி.நகரில் உள்ள கிழக்கு ஷோரூமுக்குச் செல்லலாம். முகவரி:

கிழக்கு பதிப்பக ஷோரூம்
பி.எம்.ஜி காம்ப்லெக்ஸ் (ரத்னா பவன் ஹோட்டலுக்கு எதிரில், தி.நகர் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில்)
தெற்கு உஸ்மான் சாலை
தி. நகர்
போன்: 4286-8126

25 comments:

  1. வாழ்த்துக்கள்.

    புதியதொரு மாதப் பத்திரிக்கை / புதிய மாத பத்திரிக்கை.....எது சரியாக இருக்கும். # டவுட்

    ReplyDelete
  2. இலக்கியம் போன்றவை குறைவாகத்தான் இருக்கும்.

    Why?

    ReplyDelete
  3. is it not naatkal instead of naalkal?

    ReplyDelete
  4. லாபம் சம்பாதிப்பதை விட கருத்துக்கள் மக்களைச்சென்று அடையவேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் . அன்புடன் மா.சட்டநாதன்

    ReplyDelete
  5. தங்கள் ஆழம் அகலம் காண வாழ்த்துக்கள் தோழர்; ...
    "புத்தகம் என்னை பொறுத்தவரை ஒரு பண்டம்" - IIT யா கொக்கா... நல்ல பிசினஸ் மைன்டையா உமக்கு... ஆவலுடன் காத்திருக்கிறோம் ...

    ReplyDelete
  6. அந்த வெள்ளோட்ட இதழின் பிடிஎஃப் கோப்பை இணையத்தில் ஏற்றலாமே ?

    ReplyDelete
  7. புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பத்ரி,

    உங்கள் புதிய மாதாந்திரப்பண்டம் நல்ல படியாக விற்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. தமிழ் பேப்பர் மாதிரி மொக்கையா இல்லாட்டி ஓகே

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்!!
    --iambalamurugan@twitter

    ReplyDelete
  11. ஆழம் இதழின் ஆசிரியர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை. எவ்வளவு பக்கங்க்ள், விலை போன்ற தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

    ReplyDelete
  12. வாழ்த்துகள்..ஃப்ரண்ட்லைன் போல தமிழிலோ? ஒரு இதழின் விலை என்ன?

    ReplyDelete
  13. சிறப்பாக தடம் பதிக்க வாழ்த்துக்கள் பத்ரி. அனைத்து தரப்புகளும் இடம்பெறும் நல்ல ஆழமான உரையாடல்/விவாத வெளிக்கான களமாக ஆழம் அமையட்டும்.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

    ReplyDelete
  14. Good initiative. All the best. Probably you can try for a new TV channel. There is a big vaccum over there. Atleast we have few good magazines like Vikatan but your contribution is very much needed over there.

    ReplyDelete
  15. பெயரே பயமுறுத்துகிறது :).’செய்திதான் கனமாக இருக்கவேண்டுமே தவிர, அது எழுதப்பட்டிருக்கும் மொழி இலகுவாக இருக்கவேண்டும் என்பது நோக்கம்.’
    மொழி இலகுவானது என்பதை குறிக்கோளாகக் கொள்வதை விட கருத்துகள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளனவா,தகவல் பிழைகள் இல்லையா என்பது முக்கியம்.எளிமையான நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் எழுத
    முயற்சிக்கலாம்.அது கைகூடும் என உறுதி சொல்ல
    முடியாது.ஏனெனில் தமிழில் சமகால செய்திகளை/நிகழ்வுகளை அலச/எழுத போதுமான கலைச்சொற்கள் இல்லை,பல கோட்பாடுகள் தமிழில் எழுதப்படவேயில்லை.மேலும் மேலோட்டமான
    நடையில் எதையாவது எழுதி அதில் ஆழ்ந்த பொருள்
    இருப்பதாக நினைத்துக் கொள்ளும் போக்கும் உள்ளது. உ-ம் சாய்நாத்தின் பல கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாவது.தமிழில் எழுதுவோரில், பிரபல ‘ரைட்டர்கள்’ உட்பட எத்தனை பேரிடம் ஆழமான புரிதல் இருக்கிறது அல்லது குறைந்தது தங்கள் அறியாமையை ஒப்புக்கொள்ளூம் நேர்மை இருக்கிறது.

    ReplyDelete
  16. Congratulations. Best Wishes and Hearty prayers. Krish

    ReplyDelete
  17. வாழ்த்துகள்! ஆண்டு சந்தா பெற்று தபால் மூலம் வெளியூர்களிலும் கிடைக்க வழி செய்யுங்கள்

    ReplyDelete
  18. Congratulations Badri and Team. Way to go.
    In fact last 3-4 days I have been checking up at news stands.

    ReplyDelete
  19. Badri Sir,
    Best Wishes for your new project.
    Bala

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் சார்,

    உங்களது இந்த முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    - "சங்கமம்" விஜய்

    ReplyDelete
  21. ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ் இந்தியா டுடே ஞாபகம் வருகிறது. ஆனால் அந்தக் கரடுமுரடு தமிழை தயவு செய்து உபயோகப் படுத்தாதீர்கள். நன்றி!

    ReplyDelete
  22. கோவை கடைகளில் காணவில்லையே!

    ReplyDelete
  23. ஓர் வேண்டுகோள். நடுப் பக்கத்தில் நடிகைகளின் கவர்ச்சிப் படத்தோடு சினிமா கிசு-கிசு போடுங்கள் :-)

    ReplyDelete
  24. Waiting to pick up the first issue in stands sir.

    ReplyDelete
  25. வாழ்த்துகள் சார்! பெயரை வேறு மாதிரி வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆழத்தில் ஒரு கவர்ச்சி இல்லையே! குமுதம் ரிப்போர்டர், ஜுனியர் விகடன் மாதிரி 'கிழக்கு ' என்று கூட வைத்திருக்கலாம். நக்கீரன் மாதிரி அடிவாங்காமலும் துக்ளக் மாதிரி துதிபாடாமலும் 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன்' வெற்றி நடை போட வாழ்த்துகள்!

    இப்போது இருப்பதில் புதிய தலைமுறை எனக்குப் பிடித்திருக்கிறது.

    விலை 25 என்பது அதிகமோ எனத் தோன்றுகிறது. அதற்கு பதில் 40 பக்கங்களில் மாதமிருமுறை விலை 12 (அ) 15 என வைத்தால் விற்பனை சூடுபிடிக்கும் என நம்புகிறேன்.

    அ. சரவணன்

    ReplyDelete