Friday, May 04, 2012

சென்னை தி.நகரில் புதிய புத்தகக் கடை

நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனத்தின் சார்பாக வரிசையாகப் பல புத்தகக் கடைகளைத் திறக்க முடிவெடுத்துள்ளோம். அதன் ஆரம்பக் கட்டமாக தி.நகரில் ரங்கநாதன் தெருவை ஒட்டி ராமேஸ்வரம் சாலையில் ஒரு புத்தகக் கடையைத் திறந்துள்ளோம். (முகவரி: G-5, நாராயணா அபார்ட்மெண்ட், 23, ராமேஸ்வரம் ரோடு, தி.நகர், சென்னை 17, போன் 94459-01234 / 9445 97 97 97)


இது ஏற்கெனவே லிஃப்கோ புத்தக ஷோரூம் இருந்த இடம்தான். அந்த இடத்தை அவர்களிடமிருந்து பெற்று இந்தப் புத்தகக் கடையை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இங்கே கிழக்கு பதிப்பக புத்தகங்கள், லிஃப்கோ புத்தகங்கள் மட்டுமின்றி, தமிழின் அனைத்து முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, அடையாளம், வம்சி புக்ஸ், காவியா, வானதி, விகடன், திருமகள் நிலையம், அருணோதயம், சிக்ஸ்த் சென்ஸ், கண்ணதாசன், கவிதா, கலைஞன்... என தமிழின் அனைத்துப் புத்தகப் பதிப்பாளர்கள்களின் புத்தகங்களையும் இங்கே பெறலாம்.

சனி, ஞாயிறு, அனைத்து விடுமுறை தினங்களிலும் கடை திறந்திருக்கும். ஏசி வசதி உள்ளது. கிரெடிட் கார்ட் வசதி உள்ளது. மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன், தி.நகர் பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றுக்கு மிக அருகில் உள்ள இடம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

வரும் நாள்களில் வேறு பல இடங்களிலும் கடைகளைத் திறக்க உள்ளோம்.

சில மாதங்களுக்குமுன்பு டயல் ஃபார் புக்ஸ் என்ற ஒரு சேவையைத் தொடங்கியிருந்தோம். இணைய வசதி உள்ளவர்கள் இணையத்தில் புத்தகங்களை வாங்குவது எளிது. இல்லாதவர்கள் கடைகளுக்கே நேராகப் போய் வாங்கலாம். ஆனால் கடைகள் நம் அருகில் இல்லை என்றால்? நாம் போகும் கடையில் நமக்கு வேண்டிய புத்தகம் இல்லை என்றால்? இணைய வசதி இருந்தாலும் நம்பி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் நம் பணமெல்லாம் களவு போய்விடுமா? இப்படிப் பலர் இருக்கிறார்கள் என்பதால்தான் இந்தத் தொலைபேசிச் சேவையை ஆரம்பித்தோம். அது வேகமாக வளர்ந்துவருகிறது. எனவேதான் புத்தக ரீடெய்ல் அனைத்தையும் அந்த ஒரு பிராண்டின்கீழ்க் கொண்டுவருவது என்று முடிவெடுத்துள்ளோம். கடைகள் அனைத்துக்கும் டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடைகள் என்றுதான் பெயர் இருக்கும். இணையக் கடைக்கும் அதே பெயர்தான் விரைவில் வரும். இணையக் கடை, நிஜ உலகக் கடைகள் அனைத்தையும் இணைக்கும் பாலமாக தொலைபேசி இருக்கும்.

94459-01234 அல்லது 9445 97 97 97 என்ற எண்களை அழைத்தால் அனைத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களின் புத்தகங்கள் பற்றிய விவரம், அவை கிடைப்பது பற்றிய விவரம், விலை போன்ற அனைத்துத் தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

***

நியூ ஹொரைஸன் மீடியா ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இப்போது நடப்பது ஒன்பதாவது ஆண்டு. புத்தகக் கடைகள்மீது எங்களுக்கு ஆரம்பத்திலேயே ஆர்வம் இருந்தது. தயங்கித் தயங்கி ராயப்பேட்டையில் ஒரு கடையை ஆரம்பித்தோம். சரியாகச் செய்யவில்லை. சொதப்பிவிட்டோம்.

கிழக்கு ஷோரூம் என்பது வேறு, புத்தகக் கடை என்பது வேறு. இந்த வித்தியாசத்தை இன்று நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். இப்போது நாங்கள் உருவாக்க இருக்கும் சங்கிலிக் கடைகள் தமிழ்ப் புத்தக விற்பனையில் குறிப்பிட்ட சாதனை படைக்கும் என்று நம்புகிறோம். வாடிக்கையாளரை மகிழ்விக்கும் வகையில் இதன் சேவை இருக்கும்.

ராமேஸ்வரம் சாலையில் உள்ள கடைக்குச் சென்று பாருங்கள். அல்லது 94459-01234 / 9445 97 97 97 எண்களை அழைத்துப் பாருங்கள். அல்லது இணையத்தில் புத்தகத்தை ஆர்டர் செய்து பாருங்கள். (இணையக் கடையின் பெயர் விரைவில் டயல் ஃபார் புக்ஸ் என்று மாற உள்ளது.)  உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகின்றனவா என்று feedback தாருங்கள்.

45 comments:

  1. இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. you should try at Tidel park or try a book shop in MRTS station

    ReplyDelete
    Replies
    1. பிற இடங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நல்ல கூட்டம் வரும் இடங்களைத்தான் முதலில் தேர்ந்தெடுப்போம். எம்.ஆர்.டி.எஸ், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்ட் ஆகியவை முதல் சுற்றில் கிடையாது.

      Delete
  3. we will be happy if you arrange to have stores in Egmore and Central stations too.

    ReplyDelete
  4. தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்கள் திட்டங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

    //டயல் ஃபார் புக்ஸ் // கிழக்கு பதிப்பகம் என ஒரு தமிழ்பெயர் வைத்தது போல கட்டாயம் ஓர் அழகிய பொருத்தமான தமிழ் பெயரும் ஆக்கிச் சூட்டுங்கள்.

    ஆங்கிலப் பெயரைப் பொருத்தவரையில் சுழற்றும் தொலைபேசிகள்தான் பட்ட பழையன ஆகிவிட்டனவே. எனவே dial க்கு பதிலா buzz அல்லது ring - எப்படி?.

    ReplyDelete
    Replies
    1. சில காரணங்களுக்கு தமிழ்ப் பெயர் எளிதாக வராது. டயல், கிளிக், ரிங், பஸ், கால்... என்று பல வினைச்சொற்களையும் யோசித்துப் பார்த்தோம். டயல் என்பது அந்தக் குறிப்பிட்ட சுழற்சியைத் தாண்டி, ஒரு நபரை அழைப்பதைத்தான் இன்று குறிக்கிறது. தமிழ்நாட்டின் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கவனித்தால் அதில் ‘இந்த நம்பரை டயல் பண்ணுங்க...’ என்று திரும்பத் திரும்பச் சொல்வதைக் கவனிக்க முடியும். எனவேதான் அந்தப் பெயரில் தொலைபேசி வழி புத்தகச் சேவையைத் தொடங்கினோம்.

      அந்தப் பெயரில் ஒரு கடையைத் தொடங்கினால் அது பொருள் பொதிந்ததாக இருக்குமா? இந்தக் கேள்வி அலுவலகத்தில் சிலரிடம் இருந்தது. இணையம், கடைகள், தொலைபேசிச் சேவை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் சரடு எது? எதுவானாலும் தொலைபேசியில் அழைத்துப் பேசிவிடுவோம் என்பதுதான் சரடு. இணையத்தில் ஆர்டர் செய்துவிட்டு, என் ஆர்டர் எப்போது கிடைக்கும் என்று வினவுகிறார்கள் வாடிக்கையாளர்கள். அதேபோல கடைக்கு வந்தால் புத்தகம் இருக்குமா என்று வினவுகிறார்கள். எனவேதான் அனைத்தையும் இணைக்கும் சரடு தொலைபேசி என்ற முடிவுக்கு வந்தோம்.

      Delete
    2. .பேரூந்து என்ற தமிழ்ச்சொல் ஒரு தலைமுறையைத்தாகள் ண்டியும் மக்வழக்குக்கு இன்னும் வரவில்லை.எழுத்தில் மட்டுமே நிற்கிறது

      Delete
  6. பெங்களுருவிலும் [bangalore] ஒரு கடை இதை போல திறக்கவும்

    ReplyDelete
    Replies
    1. பெங்களூரில் இப்போதைக்கு வாய்ப்பு இல்லை! தொலைபேசியில் அழையுங்களேன்... வீடு தேடி புத்தகம் வந்துவிடும்!

      Delete
  7. புதுசா கடை திறந்தற்க்கு வாழ்த்துக்கள்..எதாவது தள்ளுபடி உண்டா?.

    ReplyDelete
    Replies
    1. தள்ளுபடி கிடையாது. சிறப்பான சேவை கட்டாயம் உண்டு:-)

      Delete
  8. புத்தக விற்பனையில் இணையம் -தொலைபேசி-கடை விற்பனை சரியான வாய்ப்பாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் பத்ரி!
    -ஜெகன்

    ReplyDelete
  9. பிரகாசமான வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    தமிழ் புத்தகங்கள் மட்டும் தான் என்று உறுதியாக இருக்கிறீர்களா?

    ஸ்ரீகாந்த்

    ReplyDelete
    Replies
    1. இல்லை; சில ஆங்கிலப் புத்தகங்கள், சில நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கும். ஆனால் அவை அதிகம் விற்கும் சில புத்தகங்கள் மட்டுமே.

      Delete
  10. Hi Badri,

    Please open up a store in Velachery. Also the online catalog search is pretty confusing. Your author index is based on their initials.

    For Example. If i want to buy a book of Mr.Sujatha. I could directly goto S section and select his name. But i need to know his initials in your case. I took sujatha as example. But lots of your authors has Initials.

    ReplyDelete
    Replies
    1. We are redoing our e-commerce site and I expect all these problems to be resolved over the next few months.

      Delete
    2. We are working on the issues. If you have more issues, pl let us know. That would be helpful.

      You can search for Sujatha titles in Tamil and get them.

      Delete
  11. அன்பு நண்பருக்கு,

    தங்களின் புதிய முயற்சிகள் பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள். எமது கௌதம் பதிப்பக நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகளை விற்பனைக்கு வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவும்.

    மேலும் இதே போன்ற ஒரு முயற்சியை நாங்களும் துவங்கியுள்ளோம். அனைத்து பதிப்பக நூல்களும் ஒரே இடத்தில் இணையத்தில் கிடைக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றைத் துவங்கியுள்ளோம். (www.tamilbookpublishers.com) அதில் அனைத்து பதிப்பகங்களுக்கும் தனித்தனி பக்கங்கள் உருவாக்கி அதில் அவர்களின் நூல்களை வெளியிடுகிறோம். அப்பங்களிலேயே அப்பதிப்பகங்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களும் உள்ளதால் வாசகர்கள் நேரடியாக அந்தந்த பதிப்பகங்களை தொடர்பு கொள்ளவும் வசதியுள்ளது. இச்சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கிறோம். தங்களின் பதிப்பக நூல்கள் குறித்த தகவல்களை எமக்கு அனுப்பினால் அவற்றையும் வலையேற்றுகிறோம்.

    அன்புடன்
    கோ.சந்திரசேகரன்
    கௌதம் பதிப்பகம்
    கௌதம் இணைய சேவைகள்
    917 6888 688
    902 5888 988

    ReplyDelete
  12. Are there tamil ebooks from NHM? The postal charges from India to abroad is very high when compared to the actual price.

    ReplyDelete
    Replies
    1. Our e-book initiative is very much on. Once something concrete comes up, I will inform you.

      Delete
    2. நாங்கள் தபால் செலவில் அதிகம் வைத்து புத்தகங்கள் விற்பதில்லை. உண்மையிலேயே தபால் செலவு அதிகமாகத்தான் உள்ளது. ஆட்டோமேட்டிக் கணக்கீட்டில் கொஞ்சம் அதிகமாக ஷிப்பிங் சார்ஜ் வர வாய்ப்புள்ளது, அவ்வளவுதான். நாங்கள் ஷிப்பிங் சார்ஜில் ஒரு பைசாகூட அதிகம் வைக்க விரும்புவதில்லை. சரியான ஷிப்பிங் சார்ஜ் மட்டுமே வேண்டும் என்றால், நீங்கள் nhm-shop@nhm.inக்கு மடல் அனுப்பி, சரியான ஷிப்பிங் சார்ஜ் பார்த்து அதை மட்டும் செலுத்திப் புத்தகங்கள் பெறலாம். ஆன்லைனில் பெற்றாலும் அதே பணம் தான் வரும் என்றாலும், இம்முறையில் உங்களுக்கு உறுதி கிட்டும் என்பதால் சொல்கிறேன்.

      Delete
  13. goodluck for the new venture. I pass this place on a weekly basis perhaps will drop in sometime to see thru. I am looking for Vyasar Virundhu by Rajaji. Do they have it??
    -Surya

    ReplyDelete
    Replies
    1. Please call the numbers given above, on Vyasar Virundhu. I think Vanathi are the publishers. So if this book is on stock, it should be available in our shop. Anyway call 94459-01234 / 9445 97 97 97 please.

      Delete
  14. This is a very good initiative, Thanks

    ReplyDelete
  15. புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  16. பத்ரி நல்ல முயற்சி, DFBமூலம் பல புத்தகங்களை பெற்றுள்ளேன், சேவை மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள், வெற்றிகள் பல கிடைக்கட்டும் தமிழ் சமூகம் நல்ல புத்தகங்களை படித்து இன்னும் தெளிவு பெறட்டும்.

    ReplyDelete
  17. இண்டிகோ, பார்டர்ஸ்,சேப்டர்ஸ், ஹிக்கின்பாதம்ஸ், லேண்ட்மார்க், கிராஸ்வேர்ட் எனப்ப்பார்த்துவிட்டு, டயல்ஃபார்புக்ஸ் என்ற பெயர் ஒரு புத்தகக்கடை செயினுக்கு மிகமொக்கையாக இருக்கிறது. Definitely, can do better on the name..

    ReplyDelete
  18. தென் தமிழகத்தில் DFBயின் ஒரு கிளையை ஆரம்பித்தால் வசதியாக இருக்கும். மதுரை உத்தமம். மேலும் உங்களுக்கும் அஞ்சல் செலவு குறையும்!!

    ReplyDelete
  19. புத்தகம் மட்டும்தானா இல்லை கால்ச்சுவடு போன்ற பத்திரிகைகளும் அங்கு கிடைக்குமா.

    ReplyDelete
  20. தங்களது முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள். பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. அதை மாற்ற முயல வேண்டாம். எதுவுமே பெயரில் இல்லை. பழகிப் போனால் எல்லா பெயர்களும் சிறப்பாக அமையும். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இடம் மிகச் சிறந்த இடம். முன்பு தி நக்ரில் இருந்த போது அந்தக் கடையில் பல புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ராசியான இடம் என்றும் கருதுகிறேன்

    ReplyDelete
  21. Vinothkumar ParthasarathySun May 06, 02:36:00 PM GMT+5:30

    Hi badri,

    I think I have to brought this issue before you. I tried dial a book for first time for this book 'புயலிலே ஒரு தோணி'. I am sorry to say, I didn't got a respectful response from the fellow who picked up the call, it remains me of my bitterly experience with BSNL while inquired about the complaint regarding to a broadband connection.

    Thanks

    ReplyDelete
    Replies
    1. Sorry, I do not remember this complaint before. Please call my number 98840-66566 or send me your mobile number so I can call you and find out more about this and see how I can address this.

      Delete
    2. Sorry for the inconvenience caused to you. Puyalile oru thoni is out of stock and its under print. Pl call 'dialforbooks' after one month to purchase the book. Or you pl mail me - hp@nhm.in

      Delete
  22. வாழ்த்துக்கள்!!!,

    தமிழ் புத்தக விறபனையில் சில்லறை வணிகத்தினை பத்ரி ஒரு வழியாக சரியாக புரிந்து கொண்டுள்ளார்((அனைத்து பதிப்பாளரின் புத்தகங்களையும் விற்பது)

    இந்த தொடர் புத்தக கடைகளில் வெளியாட்களும் பங்கு பெற முடியுமா.?

    ReplyDelete
    Replies
    1. அரவிந்தன்: இப்போதைக்கு நாங்கள் இதில் கற்றுக்கொள்ளவேண்டியதே நிறைய. மேலும் சில சோதனை முயற்சிகளுக்குப் பிறகு பார்க்கலாம்.

      Delete
  23. >>அல்லது இணையத்தில் புத்தகத்தை ஆர்டர் செய்து பாருங்கள்.<<<

    இரண்டு மாதங்களுக்கு முன்பு இணையம் மூலமாக மயிலாடுதுறையில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு 15 நூல்களை அனுப்ப இணையத்தில் கிழக்கை அணுகினேன். என் கடனட்டை கணக்கில் நூல்கள் அனுப்பிய பின் அவர்கள் கணக்கிற்கு வரவு செய்து, பின் இல்லாத 2 நூல்களுக்கு கழிவையும் உடன் செய்தனர். இது பாராட்டுகுரியது; நான் முன் நூல்கள் வாங்கின மற்றொரு நிறுவனமும் நூல்களை அனுப்பினாலும் ஒரு ஒழுங்கின்மை இருந்தது. உங்களிடம் அது இல்லை.

    நிற்க.

    சற்றுமுன் Gordon Weiss எழுதிய நூலின் தமிழ் வடிவம் பற்றிய அறிவிப்பு வந்தது. தமிழில் Gordon என்பதை கார்டன் என அச்சடித்துள்ளது வேடிக்கை, கொடுமை. கோர்டன் என்றல்லவா இருக்க வேண்டும்..?? கார்டன் = Garden

    ReplyDelete
    Replies
    1. வாசன், நன்றி.

      கோர்டன், கார்டன் உச்சரிப்பு கோ/கா இரண்டுக்கும் இடைப்பட்டது அல்லவா? அதிலும் பிரிட்டிஷ்காரர்கள் வேறு மாதிரியும் அமெரிக்கர்கள் சற்றே வேறு மாதிரியும் உச்சரிக்கக்கூடியது என்று நினைக்கிறேன். நாங்கள் அனுப்பியுள்ள அறிவிப்பில், காலச்சுவடு வெளியிட்டுள்ள புத்தகத்தில் இருப்பதை அப்படியே கொடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. >> கோர்டன், கார்டன் உச்சரிப்பு கோ/கா இரண்டுக்கும் இடைப்பட்டது அல்லவா? >>

      துல்லியமாகப் பார்த்தால் நீங்கள் சொல்றது சரிதான்.

      அண்மை காலங்களில் எமது நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ள தெற்காசியர்களின் தடிமனான ஆங்கில உச்சரிப்பு பல அமேரிக்கர்களுக்குப் புரிவதில்லை. முதன்மையான காரணம், இரண்டுங்கெட்டானான ஆங்கில உச்சரிப்புகள், என் கருத்தில்.

      Zoo வை ஜூ என, Business ஐ பிஜினஸ் (வடநாட்டாரின் தனிச்சிறப்போ), Organization ஐ ஆர்கனைசேஷன் என்பன போல பற்பல சொற்கள். இச்சொற்கள் முறையே : ஸூ, பிஸினஸ், ஓர்கனைசேஷன் என்றல்லவா உச்சரிக்கப்பட வேண்டும், அமேரிக்காவில் வசிக்கும் நபர்களாகவாது! - ஏன், நீங்கள் படித்த ப.க.கழகம் "கொர்னேல்" ஆ - அல்லது "கார்னெல்" ஆ!

      வண்ணதாசனின் 3 நூல்கள் - சிறுகதை தொகுப்புகள், கிழக்கு மூலம் வாங்கியது: நாலைந்து மூச்சில் படித்து முடித்தேன். 15 வருடங்கள் கழித்து 2013ல் தமிழகம் போக முடிந்தால், நெல்லை பக்கம் முதன் முறை போய் ஆகவேண்டும் என்றாகிவிட்டது.


      கிழக்கு மென்மேலும் வளர நல்வாழ்த்துகள்!

      Delete
  24. Some months back I orderd 8 books online but they delivered only 6 books and after few days I see that my money has been credited back to my credit card account. But is this the right approach? I had only one day left and could not rush to any nearest shop to buy those books. First thing, there should be direct link from shopping cart to inventory. otherwise, there should be some offline process to check the stock availability and inform the buyer much in advance.

    ReplyDelete
    Replies
    1. Unfortunately, we do not have stock details of other publishers and they do not give us this data regularly. So we take the risk of adding those items to our shop and refund the money if the book is actually not available.

      Flipkart does not allow this. They only display those books for which they have assured stock. Indiaplaza and other sites work more like we do. In refunding the money back to the customer, we actually lose more money, but in the environment we are operating, this seems to be the best option.

      I would suggest call up 94459-01234 or 9445 97 97 97 and find out what books are available for certain and then order them. Online ordering may not work out best if you have limited time and have to travel to to other places.

      Delete
  25. // தென் தமிழகத்தில் DFBயின் ஒரு கிளையை ஆரம்பித்தால் வசதியாக இருக்கும். மதுரை உத்தமம். மேலும் உங்களுக்கும் அஞ்சல் செலவு குறையும்!! //

    250 ரூபாய்க்கு மேல் நூல்கள் வாங்கினால் அஞ்சல் செலவு கிடையாது என்று நேற்றுதான் அறிந்தேன்.. தவறான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்..

    ReplyDelete