சில சோகங்கள் மிகவும் கொடுமையானவை.
மிக நன்றாகப் படிக்கும் ஒரு பெண். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண். ஆனால் அதன் காரணமாகவே அப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணபரன் என்பவரின் மகள் தீபா. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1149/1200 மதிப்பெண்கள். [பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 449/500 மதிப்பெண்கள் பெற்றவர்.]
இவ்வளவு நன்றாகப் படிக்கும் பெண்ணை மருத்துவப் படிப்பில் சேர்க்கத் தன்னால் முடியாதே என்று மனம் வருந்திய தந்தை, மதிப்பெண்கள் வந்த அடுத்த நாளே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சோகத்தைத் தாண்டி, தீபா மருத்துவ கவுன்செலிங் சென்றுள்ளார். சென்னையில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் (தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில்) படிக்க இடம் கிடைத்திருக்கிறது.
ஆனால், நல்ல மனம் படைத்தோர் உதவியின்றி அவரால் இந்தப் படிப்பைப் படிக்க முடியாது.
ஓர் ஆண்டுக் கல்விக் கட்டணம்:
மிக நன்றாகப் படிக்கும் ஒரு பெண். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண். ஆனால் அதன் காரணமாகவே அப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணபரன் என்பவரின் மகள் தீபா. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1149/1200 மதிப்பெண்கள். [பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 449/500 மதிப்பெண்கள் பெற்றவர்.]
இவ்வளவு நன்றாகப் படிக்கும் பெண்ணை மருத்துவப் படிப்பில் சேர்க்கத் தன்னால் முடியாதே என்று மனம் வருந்திய தந்தை, மதிப்பெண்கள் வந்த அடுத்த நாளே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சோகத்தைத் தாண்டி, தீபா மருத்துவ கவுன்செலிங் சென்றுள்ளார். சென்னையில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் (தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில்) படிக்க இடம் கிடைத்திருக்கிறது.
ஆனால், நல்ல மனம் படைத்தோர் உதவியின்றி அவரால் இந்தப் படிப்பைப் படிக்க முடியாது.
ஓர் ஆண்டுக் கல்விக் கட்டணம்:
- டியூஷன்: ரூ. 3,25,000
- ஹாஸ்டல்: ரூ. 60,000
- பிற: ரூ. 20,000
ஆக, ஆண்டுக்கு, சுமார் ரூ. 4 லட்சம். ஐந்தாண்டுகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 20 லட்சம்.
தந்தை இல்லை. வேறு வருமானம் இல்லை. வங்கிக் கடன் பெறுவது கடினம்.
இந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய ‘மனம் மலரட்டும்’ அறக்கட்டளை முன்வந்துள்ளது. இந்த அறக்கட்டளை ரூ. ஒரு லட்சம் கொடுத்து உதவியுள்ளதோடு, பலரிடமிருந்தும் நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தகவல் பெற, இந்தப் பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய, சரவணனைத் தொடர்புகொள்ளுங்கள்:
மனம் மலரட்டும்
சரவணன், manam.malarattum@gmail.com, 96004-49661
சிவகணேஷ், 99624-28642
தந்தை இல்லை. வேறு வருமானம் இல்லை. வங்கிக் கடன் பெறுவது கடினம்.
இந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய ‘மனம் மலரட்டும்’ அறக்கட்டளை முன்வந்துள்ளது. இந்த அறக்கட்டளை ரூ. ஒரு லட்சம் கொடுத்து உதவியுள்ளதோடு, பலரிடமிருந்தும் நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தகவல் பெற, இந்தப் பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய, சரவணனைத் தொடர்புகொள்ளுங்கள்:
மனம் மலரட்டும்
சரவணன், manam.malarattum@gmail.com, 96004-49661
சிவகணேஷ், 99624-28642
திருப்பூர் ராம்ராஜ் பனியன், கோவை செம்மனூர் ஜிவல்லர்ஸ் தொடர்ந்து பலருக்கு உதவுகின்றனர். முயலவும். சில அறக்கட்டளைகளும் உள்ளன
ReplyDeleteகீழுள்ள முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்:
www.ignite.org.in
தவறாக நினைக்க வேண்டாம் , அந்த பெண் ஏன் Engg படிக்க கூடாது , படிக்க வேண்டும் என்பது தானே முக்கியம் , டாக்டர் படிப்பாக தான் அது இருக்க வேண்டுமா. டாக்டருக்கு படித்தால் PG course செய்ய வேண்டி வருமே. டாக்டர் படிப்பின் மேல் ஏன் ஒரு மோகம் ?
ReplyDeleteஇதில் தவறு எங்கே வருகிறது.மிகவும் நியாயமான கேள்வி
Deleteவருடத்திற்கு நாலு லட்சம் என்று ஐந்து வருடங்கள் படித்து முடிக்க இருவதிலிருந்து இருவத்தியிந்து லட்சம் ஆகும்.
மாதம் இருவதாயிரம் ,அரசு வேலை கிடைத்தால் முப்பதாயிரம் வர கூடிய படிப்பிற்கு இவ்வளவு செலவு அவசியமா
தனியார் கல்லூரிகள்,பல லட்சகணக்கில் செலவு செய்து தனியார் மருத்துவ கல்லூரியில் படிப்பு எனபது பணம் அதிகமாக இருக்கும் பணக்காரர்கள்,மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர்கள் வாரிசுகளுக்கு தான் சரிப்பட்டு வரும்
அரசு கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தால் அதை படிக்கலாம்.
டாக்டர் ஆக வேண்டும் என்ற வெறி,வைராக்கியம் இருந்தால் ஒரு வருடம் மேலும் படித்து முயற்சி செய்து அடுத்த வருடம் இந்திய அளவிலான மருத்துவ நுழைவு தேர்வுகளின் மூலம் சேர முயற்சி செய்யலாம்
அரசு கல்லூரி கிடைக்க வில்லை என்றால் நூறிற்கு தொண்ணூற்றி ஒன்பது மாணவ மாணவிகள் வேறு படிப்பை தான் தேர்ந்தெடுப்பார்கள்.
We are our brother's keepers & we are our sister's keepers. Badri wrote this article for a good cause - very moving. It's great if people could support that. It’s fine if people can't or don't want to. But commenting like clowns is silly and disgusting. Unsolicited advice would go straight to trash can. OK fellas.
Deletedear friend
DeleteI wish the girl all success and have nothing but praises for all those who are sponsoring her education.
But the fact is 999 out of 1000 parents should commit suicide if they feel guilty for not being able to educate their children in private medical colleges.there lies a major problem in this incident where a sense of guilt is created in parents for not being to able to afford costly education.she failed to get a seat in govt colleges where the fees is low. being a studious student she has the age and intelligence on her side to attempt next year for a seat in govt college or do courses which are less costly
how many in TN are in a position to afford education in private medical colleges.what happened to the govt scheme of sponsoring the education of a student in professional college if the parents are nongraduates
why is it difficult to get student loan. the loan repayment starts after the completion of the course.helping her getting a loan is better than making her dependant on several people and waiting anxiously every year for payment of fees
சூர்யாவின் அகரத்தை தொடர்பு கொள்ளலாம்.
ReplyDeleteநிச்சயம் உதவி கிடைக்கலாம்..ஆனால் மனம் மலரட்டும் அமைப்பு செய்யுமா என்பது தெரியவில்லை.
அகரத்தின் மின்மடல்:
info@agaram.in
தொலைபேசி:
+91 44 4350 6361
அலைபேசி:
+91 98418 91000
hello anony,
ReplyDeletethere are so many money-looking fellows are studying engineering, and there are very few people joining to medical, why do u want to stop this girl.
we all keep on complaining about hospitals & doctors in cities like chennai, as they are greedy, unnecessarily aksing us to take tests, scans, reports etc. (i stay in chennai past 1.5 years, atleast 10 doctors seen, 8 of them are greedy)
if we help this girl, atleast we can believe this girl won't do like that, and we can raise a good doctor. somewhat indirectly we are helping to ourself.
செந்தில் அவர்களே , இன்று மருத்துவம் என்பது ஒரு தொழிலே , பல லட்சங்கள் செலவு செய்து விட்டு , அதை மீட்க பல ஆயிரம் வாங்கி தானே ஆக வேண்டும். எது விதைக்க படுகிறதோ அதுவே முளைக்கும்.
Deleteகேள்வி கேட்டது உதவியை தடுப்பதற்கு அல்ல , இவ்வளவு செலவு இருக்கிறதே , வேறு வழி இல்லையா என்ற யோசனையில் தான். மற்றபடி இப்படி ஒருவருக்கு உதவினால் அவர் சமுகத்திற்கு சேவை செய்வார் என்று நம்பி யாரும் உதவுவது இல்லை , ஏன் என்றால் "மாற்றம் ஒன்றே மாறாதது".
அந்த பெண் நல்லபடியாக மருத்துவம் படிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதுவரை என்னையும் சேர்த்து 7-8 பேர் உதவ முன்வந்துள்ளனர். கணிசமாகப் பணம் (அதாவது பணம் தருவோம் என்று உத்தரவாதம்) சேர்ந்துவிட்டது. வேறு பலவகைகளிலும் உதவச் சிலர் முன்வந்துள்ளனர்.
ReplyDeleteபத்ரி சார்
Deleteரொம்ப மகிழ்ச்சி.வங்கிகள் யாராவது சொத்து பத்திரம்,அல்லது fixed deposit வைத்தால் கடன் கொடுக்க தயங்காது.இந்த ஆண்டு நேரமில்லாததால் உதவிகள் கொண்டு ஆண்டு கட்டணத்தை கட்டி விடலாம்.அடுத்த ஆண்டிலிருந்து கடன் வாங்க முயற்சிகளை உடனே துவங்குமாறு வலியுறுத்துங்கள்.வங்கியில் இரண்டு லட்சம் ரூபாய் FD போட்டு அதை சாமீனாக (கடன் திருப்பி அடைக்கும் வரை எடுக்க மாட்டேன் )கொடுத்தால் ஒவ்வொரு ஆண்டு கட்டணமும் கடனாக கிடைக்கும்.அப்படி கடனுக்கு சாமீனாக FD போட நான் தயார்.
இது சற்று தாமதமாக வந்துள்ள அறிவிப்போ எனத் தோன்றுகிறது. இந்த ஆண்டுக்கான எனது 'கோட்டாவை' ஏற்கனவே வேறு இருவருக்கு கொடுப்பதாக உறுதியளித்து, ஒருவருக்கு கொடுத்துவிட்டேன். இன்னொருவருக்கு கொடுக்கப்போகிறேன். இருந்தாலும் என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன்.
ReplyDeleteமேலும் ஒரு வேண்டுகோள்.. இதைப்படிக்கும் வி.ஐ.பி.கள் யாராவது தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெற்றுத்தர முயற்சி எடுக்கலாமே! ஒவ்வோர் ஆண்டும் இவருக்கு இதேபோல நிதி திரட்டுவது மிகவும் கடினமான காரியம்.. ஆகவே வங்கிக்கடன் பெற்றுத்தந்தால் அது பேருதவியாக இருக்கும்!
Please remove her photograph.
ReplyDeleteநீங்களே ஏதாவது அறக்கட்டளை ஒன்றின் மூலம் பணம் திரட்டி அதை FD யில் போடலாம்.பணம் கொடுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வருடாவருடம் வட்டியும் கிடைக்கும்.சேர்ந்த பணத்தை SURETY ஆக காட்டி பல மாணவர்களுக்கு கடன் வாங்கி கொடுக்கலாம்.ஒரு கோடி FD இருந்தால் நாலு கோடி வரை கடன் கிடைக்கும் .பல மாணவ மாணவிகளுக்கு உதவ முடியும் .குழந்தைகளும்,நோயாளிகளும் தான் முழு உதவிக்கு தகுதியானவர்கள்.
ReplyDeleteமற்றவர்களுக்கு அவர்கள் திரும்ப செலுத்த கூடிய முறையில் உதவி செய்தால் அந்த பணத்தை வைத்து பலருக்கு உதவ முடியும்
நன்றி. இந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்வது மனம் மலரட்டும் என்ற அறக்கட்டளை. அவர்களுடைய தொடர்பு எண்களை மேலே கொடுத்துள்ளேன். வங்கிக் கடன் பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுமார் நான்கு லட்சம் வரைக்கும்தான் கிடைக்கலாம் என்பதுபோலச் சொன்னார்கள். எனக்கு கல்விக் கடன் பற்றி அதிகம் தெரியாது. அதற்கு நீங்கள் சொல்வதுபோல ஜாமீன் வைக்கவேண்டும்.
Deleteஉயர்கல்விக்கான கட்டணம் கட்டமுடியாமல் கஷ்டப்படும் பல பிள்ளைகளுக்கும் நீங்கள் குறிப்பிடுவதுபோல உதவ நானும் என் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்வதுபோன்ற ஒரு நடைமுறையைத்தான் யோசித்துவருகிறோம். ஒரு அறக்கட்டளை தொடங்கி அதில் எங்கள் பணம் கொஞ்சம் போட்டு, மேற்கொண்டு பல நண்பர்களிடமும் பணம் திரட்டி, அதன்மூலம் உதவலாம் என்பது திட்டம்.
சென்ற ஆண்டே இதுபற்றிப் பேசினோம். ஆனால் செயல்படுத்துவதில் சுணக்கம். எங்கு, எப்படித் தொடங்குவது என்று ஒரு தெளிவு இல்லை. இந்த ஆண்டும் போய்விட்டது. அடுத்த ஆண்டுக்குள் இதனைச் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, தனித்தனியாக பதில் அளிக்காமல் மொத்தமாக ஒரு பதில்.
ReplyDeleteநம் பிள்ளை ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் பெற்று, மருத்துவம் படிக்க விரும்பினால் நாம் என்ன செய்வோம்? பணம் திரட்டமுடியும் என்றால் கஷ்டப்பட்டுத் திரட்டுவோம் அல்லவா? இந்தப் பெண்ணை நம் பெண்ணாகப் பார்த்து முடிந்தவர்கள் செய்வோம். முடியாதவர்கள் விட்டுவிடுவோம்.
நம் கல்விமுறை நாளைக்குள்ளாக மாறிவிடப்போவதில்லை. இன்று பணம் இருப்பவர்கள் மட்டுமே (அதற்கான எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும்கூட) படிக்கமுடியும் என்றாகியுள்ளது. நான் ஐஐடியில் படித்தபோது ஆண்டுக் கட்டணம் வெறும் ரூ. 200/-. நான்காண்டுகள் டியூஷன் கட்டணம் + ஹாஸ்டலில் தங்குவதற்கான கட்டணம் சேர்த்தால் மொத்தம் ரூ. 1,200/- (அதுதவிர உணவுக்கான செலவு, புத்தகங்களுக்கான செலவு). எனக்குச் செய்யப்பட்டுள்ள மொத்தச் செலவும் அரசிடமிருந்து மானியமாக வந்துள்ளது.
இதைப்போன்ற வசதியை ஒவ்வொரு நல்ல மாணவருக்கும் தரவேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை என்று நினைக்கிறேன். அரசு, தனி நபர்கள், பெற்றோர்கள் என்று அனைவருமே சேர்ந்து செய்யவேண்டிய வேலை இது.
எனவே நெகடிவாகப் பார்க்காமல் நம்மால் முடிந்ததைச் செய்யத் தொடங்குவோம்.
Well said Badri,
DeleteA young kid from a poor family who works hard, studies well, achieves phenomenal success in school should be able to pursue higher studies in a discipline of her/his choice. If it's not possible it's a shame to the society. We people are largely insensitive & irreasonable. Folks who comment on others should first put their loving ones in that situation and make their comments.
We indians are not that well known for philanthropy. Folks, we blindly copy many things from the west, lets copy this as well. There most people do little charity regularly. Lets start at a small scale. A guy who makes 50,000 per month can donate 200 per month for a cause dear to his/her heart.'Ooraar pillai-ai ootti valarthaal, thun pillai thaaney valarum', ok.
It's not at all a bad idea to put ourselves in others shoes and look through others eyes - the least expected from folks with basic education.
if it not fully done, pl contact here
ReplyDeletewe give 2nd preference to self-financing college students.
http://helpingminds.org/
Respected friends all are suggesting to get education loan from bank.first of all for your information for Indian students the bank will sanction maximum 7.5 lakhs for entire course ie is 5 years course.(without property holders) if you are having property based on that security they will sanction maximum 10 lakhs only. so kindly help her for future.giving money is the solution for her. i am in critical condition for my daughter i faced this problem now she is studying third year.
ReplyDelete