Friday, August 17, 2012

அஹோம் (அஸ்ஸாம்) பிரச்னை இந்தியப் பிரச்னை ஆகிறதா?

அஸ்ஸாம் என்று நாம் அழைக்கும் பகுதியை அப்பகுதி மக்கள் அஹோம் என்றுதான் அழைக்கிறார்கள் என்றார் அப்பகுதியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் ஒருவர். அவரைப் போன வாரம் சந்தித்தேன்.

அஹோமில் போடோ பழங்குடி மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வெடித்துள்ளது. இது ஒரு பகுதிக்குள்ளாக இருக்கவேண்டிய பிரச்னை. இதனை இந்து-முஸ்லிம் பிரச்னையாகப் பார்க்க நினைக்கின்றன ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்றவை. அப்படிப்பட்டதாக இருந்திருப்பின், பிற அஹோமிய இந்துக்களும் களத்தில் இறங்கியிருப்பார்கள். அப்படி இல்லை. இது இரு குழுக்களுக்கிடையேயான நிலம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னை.

போடோக்கள் தங்கள் பாரம்பரிய நிலத்தில் பிற இடங்களிலிருந்து வரும் முஸ்லிம்கள் கடை பரப்புகிறார்கள் என்று கோபம் கொண்டதின் விளைவுதான் இப்போது நடந்துள்ள கலவரம். இந்த முஸ்லிம்கள் மேற்கு வங்கத்திலிருந்து வந்தாலும் சரி, வங்கதேசத்திலிருந்து வந்தாலும் சரி, போடோக்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அந்நியர்களே.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எளிதல்ல. வடகிழக்குப் பழங்குடியினரைப் பொருத்தமட்டில் நிலம் சார்ந்த உரிமை என்பதில் உள்ள குழப்பங்கள் மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு குழுவும் தம் பாரம்பரிய இடம் என்று காண்பிக்கும் பகுதியில் வேறு பல பழங்குடியினரும் பிறரும் வசிக்கத்தான் செய்கிறார்கள். நாகா, மிசோ தொடங்கிப் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் பிரச்னையே.

போடோ, முஸ்லிம்கள் ஆகிய இரு குழுக்களிடையேயான இந்தப் பிரச்னை அஹோமுக்குள் மட்டும் இருந்தால் அதனைத் தீர்க்க முயற்சிகளையாவது செய்யலாம். ஆனால், அங்கிருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இதனை எடுத்துச் செல்வது பிரச்னையைத் தீவிரமாக்குகிறது. முக்கியமாக மும்பையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஊர்வலம் கலவரமாக மாறியது. இந்த முஸ்லிம்கள் அஹோமிலும் மியான்மரிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து இந்த ஊர்வலத்தை நடத்தினர்.

மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் என்ற சிறுபான்மையினர், ராக்கைன் என்ற மாகாணத்தில் உள்ளனர். அந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். இவ்விரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பெரும் கலவரமாக ஆனது. அதில் பல ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் அகதிகளாக வங்கதேசத்துக்கும் தாய்லாந்துக்கும் சென்றுள்ளனர்.

வங்கதேசம் வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்குத் தங்களால் அடைக்கலம் தரமுடியாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகிறார். இது மியான்மரின் பிரச்னை என்கிறார். ஒருவிதத்தில் போடோ-முஸ்லிம் பிரச்னையும் ரோஹிங்யா-ராக்கைன் பிரச்னையும் ஒன்றுதான்.

ஆனால் இந்தப் பிரச்னைகளில் முஸ்லிம்கள் பக்கம் மட்டுமே நியாயம் இருப்பதுபோலவும் எதிர்த்தரப்பினர் நியாயமற்றவர்கள் என்பதாகவுமே இந்திய முஸ்லிம்கள் பார்ப்பதாகத் தெரிகிறது. உலகில் எல்லா இடத்திலும் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதாகப் பிரச்னை மாற்றப்படுகிறது. போடோக்களும் ராக்கைன்களும் என்ன சொல்கிறார்கள், அவர்கள் தரப்பு நியாயம் என்ன என்று கேட்பதற்கு யாரும் இல்லை. அவர்களுக்கு சர்வதேச அளவில் பரிந்துபேச ஒருவரும் இல்லை.

சரி, முஸ்லிம்கள் எல்லோரும் ஒருவித சகோதரத்துவத்தை முன்வைக்கவேண்டும் என்று எடுத்துக்கொண்டாலும்கூட மும்பையில் அமைதியாக அந்த ஊர்வலத்தை நடத்தியிருக்க முடியாதா?

அடுத்து இதனைப் பெரிதாக்கியது ஹைதராபாத் எம்.பியும் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவருமான ஆசாதுதீன் ஒவாய்சி மக்களவையில் பேசிய பேச்சு. பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகியவைபோல், இப்போது நடந்துள்ள அஹோம் கலவரம் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் சென்றுவிடுவார்கள் என்றார் இவர். இதனையே போடோக்களும் சொல்லலாம் அல்லவா?

பூனாவில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.
மைசூரில் திபெத்தியர் ஒருவர், வடகிழக்கு மாநிலத்தவர் என்ற சந்தேகத்தின்பேரில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, பூனா, ஹைதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் யாரோ பரப்பிய வதந்தி தீயெனப் பற்றிக்கொண்டது. ‘ரம்ஜானுக்குமுன் இங்கிருந்து போய்விடுங்கள். அதன்பின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்’ என்பதாக வடகிழக்கிலிருந்து வந்து இம்மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ் பரவியுள்ளது. இதனைப் பரப்பியது முஸ்லிம் சமூக விரோதிகளா அல்லது முஸ்லிம்களுக்குச் சிக்கல் வருவதை வரவேற்கும் இந்து சமூக விரோதிகளா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பெரும் எண்ணிக்கையில் இம்மாநிலங்களிலிருந்து மக்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தில்கூட இது நடக்கிறது! இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பார்த்ததில் அஹோமைச் சேர்ந்த ஒருவர் பேசினார். ‘எங்களுக்குச் சென்னையில் பிரச்னை ஒன்றுமில்லை. ஆனால் அங்கே வீட்டிலிருந்து கூப்பிடுகிறார்கள். அதனால் போகிறேன்’ என்றார் அவர்.

தென் மாநிலங்களில் முஸ்லிம்களால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்து வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்வது ஒருபுறம். அஹோமில் இருக்கும் தங்கள் குடும்பப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்து வந்துவிடும், அதனைத் தடுக்கவேண்டும் என்று போவது இன்னொன்று. கலவரத்தில் ஈடுபட்டு தங்கள் வீரத்தைக் காண்பிக்கவேண்டும் என்பதற்காகவும் சிலர் போகலாம்!

மொத்தத்தில், அஹோம் மாநிலத்தில் சிறிய பகுதி ஒன்றில் நடந்துள்ள ஒரு விபரீதம் இந்தியா முழுமைக்குமாக விரிவடைகிறது. இதற்கு முஸ்லிம் தலைவர்களின் பொறுப்பற்ற செயலும் ஒரு காரணம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களைக் கண்டித்தாகவேண்டும். மும்பை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள், அதைக் கவனமாகக் கையாண்டிருக்கவேண்டும். ஒவாய்சி போன்றவர்கள் பொறுப்புடன் பேசவேண்டும்.

ஏற்கெனவே கையில் கம்புகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள், வடகிழக்கு மக்களைக் காப்பதற்காக பெங்களூரு ரயில் நிலையத்தில் சுற்றத் தொடங்கிவிட்டார்களாம். அடுத்து வேறுவிதமான மதக்கலவரங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒவாய்சியின் கூற்றின்படி முஸ்லிம் இளைஞர்கள் radicalise ஆகிறார்களோ இல்லையோ, வடகிழக்கு இந்துக்கள் radicalise ஆவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

இது நல்லதற்கில்லை.

43 comments:

  1. இப்போது தான் புரிந்தது ! தினசரிகளும் தெளிவாக எழுதுவதில்லை ! ( அவர்களுக்கே புரிந்ததா ??). எப்போதும் போல் .நல்ல பதிவு ! நன்றி பத்ரி ! :)

    ReplyDelete
  2. ஸ்ரீ ராம சேனா, பஜ்ரங்கதள் போன்றவை கம்பு கட்டைகளோடு போகவில்லை உணவு பொருட்களோடு போனார்கள், அதை பார்த்து தான் முஸ்லிம் அமைப்பினரும் அவர்களுக்கு உதவி செய்ய போயிருக்கிறார்கள்...இந்து அமைப்புகள் உதவி செய்வது கூட பொறுக்காமல் சிஎன்என் ஐபிஎன் தொலைகாட்சியின் சகரிகா கோஸ் ட்விட்டியதை பாருங்கள். நீங்களும் MSM செய்வதையே தான் செய்கிறீர்கள் என்பதுதான் வேதனை :(
    https://twitter.com/sagarikaghose/status/236001306588901376

    ReplyDelete
    Replies
    1. ஆர்.எஸ்.எஸ்ஸினர் பெங்களூரு ரயில் நிலையத்தில் கையில் கம்புகளுடன் காவலுக்கு நிற்பதுபோன்ற படங்களை நான் பார்த்தேன். அரசின் காவல்துறை தவிர்த்து எந்தவோர் அமைப்பும் இதுபோன்ற செயல்களில் இறங்கக்கூடாது என்பது என் கருத்து. அது பிரச்னைகளை உருவாக்கும் என்பது என் கருத்து.

      Delete
  3. மீடியா எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம்.இல்லை இது மதக்கலவரமாக முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளது. கர்நாடக முஸ்லிம் தலைமை கூட்டம் இதைப் பற்றி 'இது வாழ்வாதாரப் பிரச்னையாக மட்டுமே பார்க்கவேண்டும் என்றும் இது மதப்பிரச்னை அல்ல' என்றும் கூறியிருக்கிறது. மும்பையில் நடந்தது அருவருத்தக்கதக்கது. கலவரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இருசாராரிலும் ஆட்கள் இருக்கிறார்கள்.அதையும் மீறி நியாயம் கிடைக்கணும்....

    ReplyDelete
  4. //இதனை இந்து-முஸ்லிம் பிரச்னையாகப் பார்க்க நினைக்கின்றன ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்றவை. // மிகவும் மேம்போக்கான பார்வை, ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் மீண்டும் மீண்டும் இதை இந்து முஸ்லீம் பிரச்சனை என கூறவில்லை. மாறாக அஸாமில் போலி மதச்சார்பின்மை-அரசியல்வாதிகள் தொடர்ந்து பங்களாதேஷி முஸ்லீம்களை வாக்குவங்கி இலாபங்களுக்காக அஸாமில் குடியேற்ற அனுமதித்து வருவதால் இத்தகைய விபரீதங்கள் அஸாமில் ஏற்பட்டு கொண்டே இருக்கும் என்று மட்டுமே கூறி வருகின்றன. பத்ரி ‘மீண்டும் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பாஜக’ இதனை மதப்பிரச்சனையாக பேசுவதாக கூறுவது பொறுப்பற்ற ஒரு கூற்று. தன்னுடைய ‘நடுநிலையை’ காப்பாற்ற உண்மையை பலி கொடுப்பது நம் போலி மதச்சார்பின்மை அறிவுஜீவித்தனத்தின் மற்றொரு இன்றியமையாத அம்சம்.

    ReplyDelete
    Replies
    1. அரவிந்தன்: அஹோமில் நடப்பதை இந்து-முஸ்லிம் பிரச்னை என்று நீங்கள் பார்க்கிறீர்களா? இந்து-முஸ்லிம் பிரச்னையாக இருந்தால் அது அஹோம் முழுவதற்குமாகப் பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். இது போடோ மக்கள், தம் இடத்தில் அத்துமீறீ உள்ளே நுழைந்த மக்களுக்கு எதிரானதாக (அவர்கள் இந்துக்களோ, முஸ்லிம்களோ) பார்க்கும் ஒரு பிரச்னையாகவும், அதற்கு முஸ்லிம்கள் செய்யும் எதிர்வினையாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆனால் பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் உண்மையில் இதனை எப்படிப் பார்க்கிறது என்று சொல்லுங்கள். நான் சொன்னதில் எந்தப் போலித்தனத்தைக் கண்டீர்கள்?

      அஹோமில் காங்கிரஸ் வாக்கு வங்கி வேண்டி முஸ்லிம் குடியேற்றத்தை ஊக்குவித்தது உண்மையே. அதன் விளைவாகத்தான் உல்ஃபா உருவானது அஹோம் கண பரிஷத் உருவானது.

      இன்றைய பிரச்னை கட்டாயமாக அதன் தொடர்ச்சியானதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய நேரடியான போடோ பிரச்னை இந்து-முஸ்லிம் பிரச்னையா?

      Delete
    2. சங்க பரிவாரங்களால் கொண்டாடப்படும் ஜெனரல் சின்ஹா குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம்
      http://www.satp.org/satporgtp/countries/india/states/assam/documents/papers/illegal_migration_in_assam.htm

      The following indicators of the dimension of illegal migration taking place are relevant :-

      1.

      Bangladesh census records indicate a reduction of 39 lakhs Hindus between 1971 and 1981 and another 36 lakhs between 1981 and 1989. These 75 lakhs (39+36) Hindus have obviously come into India. Perhaps most of them have come into States other than Assam.
      2.

      There were 7.5 lakh Bihari Muslims in refugee camps in Bangladesh in 1971. At the instance of Saudi Arabia, Pakistan was persuaded to accept 33,000 Bihari Muslims. There are at present only 2 lakh Bihari Muslims in refugee camps in Bangladesh. The unaccounted for 5.17 lakhs must have infiltrated
      into India, as there is little possibility or evidence of there having merged into Bangladesh society.
      3.

      In 1970 the total population of East Pakistan was 7.5 crores but in 1974 it had come down to 7.14 crores. On the basis of 3.1% annual population growth rate of that period, the population in 1974 should have been 7.7 crores. The shortfall of 6 million people can be explained only by large scale migration.

      இந்துக்கள மட்டும் ஒத்துப்போம்னு நீங்க வேணா சொல்லலாம்,ஆனா சட்டம் அப்படி சொல்லலையே

      அசாமில் 51 ல இஸ்லாமியர்கள் 24 சதவீதத்திற்கும் மேல்,71 ல 28 சதவீதத்திற்கும் மேல்.இதுவரை வந்தவர்கள் இந்தியர்கள் எனபது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒன்று
      2001 ல முப்பது சதவீதம் .முப்பது வருடத்தில் ரெண்டு சதவீத வளர்ச்சி.அஸ்ஸாமின் மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு ஆகிறது.
      பத்து ஆண்டுகளில் வந்த ஹிந்துக்கள் என்று கோவேர்னர் எவ்வளவு பேரை குறிப்பிடுகிறார் என்றும் பாருங்கள்
      ஆனால் அத்வானியில் ஆரம்பித்து அரவிந்தன் வரை மொத்தமாக அனைவரையும் திருட்டுத்தனமாக வந்தவர்கள் என்று குற்றம் சாட்ட ஹிந்டுத்வர்களால் மட்டும் தான் முடியும்

      இப்ப அங்கிருந்து வந்த வங்காளி ஹிந்துக்களை பிரித்தெடுத்து கண்டு பிடிக்க முடியுமா.இல்லை அவசியமா
      அதே தானே மற்ற மதத்தவருக்கும்
      அனைத்து மாநிலங்களுக்கும் ஆர்ட் 370 கொண்டு வந்தால் தன்னால் இந்த பிரட்சினைகள் பெருமளவில் குறைந்து விட போகிறது

      Delete
    3. திருபுரா என்று ஒரு மாநிலமும் வட கிழக்கில் உண்டு.

      மக்கள் தொகை 51 மற்றும் 71 இரண்டரை மடங்கு பெருகியது.அது ஞான மரபின் அருளால் என்பதால் தேசத்திற்கு நல்லது
      அங்கு இருக்கும் பழங்குடிகளை ஆர் எஸ் எஸ் எப்படி பார்க்கிறது என்று பார்ப்போம்

      http://www.southasiaanalysis.org/%5Cpapers17%5Cpaper1613.html

      In pre-Independence era it was a tribal dominated state but its aboriginal population got submerged in the growing waves of migration from erstwhile East Pakistan, which became Bangladesh in 1971. The immigrants now constitute over sixty eight percent of state population and their mother tongue Bengali is the official state language against KOK-BARAK, which enjoys the status of second language.

      வங்காளி ஹிந்துக்களுக்கும் பழங்குடிகளுக்கும் சண்டை நடக்கும் போது பழங்குடிகள் ரொம்ப கெட்டவர்கள்.கிருத்துவர்கள் ஆகி விட்டதால் தேச துரோகிகள்
      http://articles.timesofindia.indiatimes.com/2001-07-29/india/27218647_1_pracharak-rss-workers-bhagwat
      பெருமளவில் வங்காளி ஹிந்துக்கள் புகுந்து பழங்குடியினரை சிறுபான்மையினர் ஆக்கி தீவிராவதிகள்,தேசத்ரோகிகள் என்றும் முத்திரை குத்தி விட்டனர்
      ஆனா வங்காள இஸ்லாமியர்களோடு பழங்குடியினருக்கு சண்டை என்றால் காக்கி trouser ஓடு இந்தியா முழுவதும் ஓடியாடி தீயில் எண்ணெயை ஊற்றுவதில் இருக்கும் வேகம் பிரமிக்க வைக்கிறது
      நாகாலாந்தில்,மிசாரம்இல் ,மேகாலயாவில் வாழும் பழங்குடியினர் கிருத்துவர் ஆனதால் தேசத்ரோகிகள் ஆகி விட்டனர் என்று தானே ஒவ்வொரு சங்க கூட்டத்திலும் வாய்ப்பாடு போல ஒப்பிக்கப்படும்

      Delete
  5. Open threat of radicalization by Owaisi sounds like some sort of Right To Radicalization vested to Muslims alone in the world! Their eternal victim hood and cry for "selective justice" will definitely lead reverse radicalization on Hindus side!

    ReplyDelete
  6. மதக் கலவரங்கள் இல்லாமல் போவதற்காக வேண்டியாவது பிஜேபி ஆட்சிக்கு வந்தாக வேண்டும். பிஜேபி ஆட்சிக்கு வெளியில் இருக்கும் காலம்வரை இது தொடரும்...

    // மொத்தத்தில், அஹோம் மாநிலத்தில் சிறிய பகுதி ஒன்றில் நடந்துள்ள ஒரு விபரீதம் இந்தியா முழுமைக்குமாக விரிவடைகிறது. இதற்கு முஸ்லிம் தலைவர்களின் பொறுப்பற்ற செயலும் ஒரு காரணம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களைக் கண்டித்தாகவேண்டும். //


    100% true. well well said.

    ReplyDelete
  7. அருமையான பதிவு பத்ரி சார்...

    ReplyDelete
  8. அன்புள்ள பத்ரி, முதலில் நீங்களாக ஒரு குற்றத்தை சொல்கிறீர்கள். அதாவது பாஜக-ஆர் எஸ் எஸ் இது இந்து முஸ்லீம் பிரச்சனை என பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது. இல்லை. இது தவறு என்கிறேன். பாஜகவும் சரி ஆர் எஸ் எஸ்ஸும் சரி அப்படி சொல்லவில்லை. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பங்களாதேஷி முஸ்லீம்களை அஸாமில் குடியுரிமை அளித்தும் அளிக்காமலும் ஏற்றி வாக்குவங்கி அரசியல் நடத்திய போலி மதச்சார்பின்மை அரசியலே இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்று மட்டுமே பாஜகவும் ஆர் எஸ் எஸ்ஸூம் சொல்லி வருகின்றன. ஆனால் பாஜக ஆர் எஸ் எஸ் இதை இந்து முஸ்லீம் பிரச்சனை என கூறி மீண்டும் மீண்டும் பிரச்சனை செய்வதாக நீங்கள் கூறுவது சர்வநிச்சயமாக போலிமதச்சார்பின்மை அறிவுஜீவித்தனமான ஒளிவட்டம் பிரகாசிக்க அளிக்கப்படும் உண்மையின் யாகபலி.

    ReplyDelete
    Replies
    1. காங்கிரஸ் பணம் கொடுத்து கட்சி கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல வங்காளதேசதிளிருந்து ஆட்களை கூட்டி வருவதை போல எழுதுவது தானே மத பிரட்சினையாக மாற்ற முயற்சிப்பது.
      அஸ்ஸாம் மாநிலத்தில் 1971 இல் இருவதிஎட்டு சதவீதம் இஸ்லாமியர்கள் என்ற உண்மையை மறைப்பது எதனால்
      1971 வரை வந்தவர்கள் விரும்பினால் ,இங்கயே இருக்கலாம்,குடியுரிமை தரப்படும் என்ற முடிவு அங்கு பாதிப்புகளை பெருமளவில் சந்தித்த ஹிந்துக்களுக்கு உதவ ஏற்பட்ட முடிவு.தனி தேசம் கிடைத்ததால் இஸ்லாமியர்கள் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்தால் அதற்கு என்ன செய்ய முடியும்.மதத்தை பார்த்து திருப்பி அனுப்புவதை இந்தியா 47 இல் கூட செய்யவில்லையே
      எல்லையை தாண்டி வங்காள தேசத்திலிருந்து இங்கு வந்து இங்கு இருக்கும் வங்காளி ஹிந்துக்கள்,இஸ்லாமியர்களோடு அவர்கள் கலந்து விட்ட பிறகு பிரிக்க வழி சொல்லுங்கள் பார்ப்போம்
      இதில் இந்துக்களை பற்றி பேசவே மாட்டோம் ஆனால் இஸ்லாமியர்களை பற்றி வெறுப்பை தூண்டுவோம் எனபது சரியா
      காங்கிரஸ் அங்கிருந்து வந்த இந்துக்களை திருப்பி அனுப்ப வேண்டும்,இஸ்லாமியர்களை வைத்து கொள்ளலாம் என்றா கூறுகிறது.ஆனால் அதை மாற்றி கூறுவது சங்க பரிவாரம் தானே
      இங்கயே பிறந்து வளர்ந்த ,வாழ்ந்த இஸ்லாமியர்களை நீ திருட்டுத்தனமாக வந்தவன் என்று மிரட்ட,துரத்தி விட கிடைத்த வாய்ப்பாக இந்த பிரத்சினையை ஊதுவது யார்

      Delete
    2. இப்போது மீண்டும் சில பத்திரிகைகளைப் பார்த்தேன். ஒப்புக்கொள்கிறேன். அத்வானியும் சரி, கட்கரியும் சரி, இது உள்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து ஊடுருவும் அந்நியர்களுக்கும் இடையிலான பிரச்னை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

      “The ongoing violence in Kokrajhar and neighbouring districts of Assam was not a Hindu-Muslim issue but a fight between people of Indian origin, including Indian Muslims, on the one side and “illegal Bangladeshi immigrants” on the other and should thus not be given a communal colour, Bharatiya Janata Party national president Nitin Gadkari has said here.”

      ஆனால், இவர் இதனைச் சொன்ன மாநாட்டு அரங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

      Mr. Gadkari, who was speaking at a discussion on “Bodo Hindus — Refugees in their own land: Bangladeshi Muslim infiltrators — the new kingmakers in an Indian State?” organised by the Dr. Syama Prasad Mookerjee Research Foundation here,...

      போடோ ஹிந்துக்கள் vs வங்கதேச முஸ்லிம் ஊடுருவல்காரர்கள்.

      சொல்வது யார்? ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி மையம்.

      இருந்தாலும் கட்கரியும் அத்வானியும் அவ்வாறு சொல்லவில்லை என்பதனால் என் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ் கூற்று என்ன என்பதை அதிகாரபூர்வமாக எங்கும் பார்க்கவில்லை. ட்விட்டர் போன்ற உரையாடல் தளங்களில் ஹிந்துத்துவச் சார்புள்ளவர்கள் என நான் நினைக்கும் ஆட்கள் பேசியதிலிருந்து தெரிவித்தது இது.

      Delete
  9. //ஆனால், இவர் இதனைச் சொன்ன மாநாட்டு அரங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா? “Bodo Hindus — Refugees in their own land: Bangladeshi Muslim infiltrators — the new kingmakers in an Indian State?” //

    இந்தியாவின் வனவாசி சமுதாயங்கள் இந்துக்கள் என்பது மகாத்மா காந்தி முதல் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா வரை பாரதிய சிந்தனை மரபின் ஒரு அடையாளப்படுத்துதல் மட்டுமே. மாறாக வங்க தேசத்திலிருந்து அங்குள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளாலும் ராணுவத்தாலும் தொடர்ந்து இனத்துடைத்தல் செய்யப்பட்டு விரட்டப்படும் சக்மா பௌத்தவனவாசிகள் வங்காள இந்துக்கள் ஆகியவர்களுக்கும் பொருளாதார லாப காரணிகளுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவி பின்னர் இங்கே ஒரு அரசியல் சக்தியாக மாறி அரசியலை மாற்றியமைக்கும் வங்க இஸ்லாமியர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. நிற்க. போடோக்கள் இந்துக்கள் என சொல்வதென்பது போடோக்களுக்கும் வங்க தேச ஊடுருவல்காரர்களுக்குமான மோதல் இந்து இஸ்லாமிய மோதல் என்பதாக சொல்லப்படுவதாக முடியாது.

    ReplyDelete
  10. என்னுடன் பணிபுரியும் அசாமி நண்பனுடன் கேட்ட பொழுது "Indian government treated Bodos as Hindus only" என்றான். ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவுசீவிகள் தான் இதைத் திரிக்கிறார்கள் என்றான்.

    ReplyDelete
  11. பத்ரி எழுதுகிறார்: “கையில் கம்புகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள், வடகிழக்கு மக்களைக் காப்பதற்காக பெங்களூரு ரயில் நிலையத்தில் சுற்றத் தொடங்கிவிட்டார்களாம்’ ஆனால் நான் பார்த்த மட்டில் ரயில் நிலையங்களில் அல்லல்படும் வடகிழக்கு மாநில சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிக்க உணவுப் பொட்டலங்களுடனும் ஆதரவு கோஷங்களுடனும்தான் ஆர் எஸ் எஸ் காரர்களை காணமுடிகிறது: http://www.facebook.com/photo.php?fbid=277641525675785&set=a.103965146376758.4613.100002898189553&type=1&theater ஒருவேளை தடியுடன் அலையும் ஆர் எஸ் எஸ் காரர்களை கம்புடன் அலைய தொடங்கிவிட்டார்களாம் என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என எழுதும் பத்ரி இறுதியில் கட்டுரையை இப்படி முடிக்கிறார்: ” முஸ்லிம் இளைஞர்கள் radicalise ஆகிறார்களோ இல்லையோ, வடகிழக்கு இந்துக்கள் radicalise ஆவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.” ஆக இந்து முஸ்லீம் பிரச்சனையாக்குவதாக பத்ரியின் தராசின் முள் பத்ரி பக்கமே சாய்ந்து முள்முனை காட்டுவது ஏனோ அவருக்கு தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அரவிந்த் நீங்க என்ன சொன்னாலும் பத்ரி அப்படிதான் பேசுவாரு அவருக்கு வேற வழியே கிடையாது. பத்ரியின் ஒரு பக்கம் நியாயம் பேச விரும்புகிறது, இன்னொரு பக்கம் தன்னுடைய மதச்சார்பற்ற முற்போக்காளர் வேடத்தையும் காப்பாற்றியாக வேண்டும். அதுக்காக அவர் கண்டுபிடித்த வழிதான், ரெண்டு பக்கத்தையும் ஒரு சாத்து சாத்துவது. So the Operation was a Success but the Patient Died. இன்னொரு விஷயம் இதை ஏன் மத பிரச்சனையா பாக்ககூடாது? சட்ட விரோத குடியேரிகளான பங்களாதேஷிகளுக்காக முஸ்லிம்கள் இந்தியா முழுக்க கூட்டம் நடத்தினாலும் அது மதசார்பின்மை, ஆனா அத பத்தி அத்வானியோ, நரேந்திர மோடியோ, இல்லாட்டி blogla நியாயமா கமெண்ட்ஸ் போடுற எல்லாரும் பிற்போக்குவாதிகள், மதவாதிகள். அய்யா poovannan சார் நீங்க அப்படியே போய் அஸ்ஸாம் காங்கிரஸ்ல சேந்துடுங்க, கண்டிபா ஒரு 10 வருடத்துல நீங்கதான் அஸ்ஸாம் முதலமச்சர்.

      Delete
  12. மும்பையில் நடந்த பிரச்னைக்கு காரணமான போட்டோக்கள் இவைகளே. முஸ்லிம் இளைஞர்கள் எப்படி வெறியேத்தப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல இது பொதுவாக நடக்கிறது என்பதை இந்த பாகிஸ்தானிய ஜர்னலிஸ்ட் சொல்கிறார்.புகைப்படங்கள் திரிக்கப்படுகின்றன.அப்பாவி இளைஞர்கள் வெடித்துக் கொண்டு கிளம்புகிறார்கள்.

    http://blogs.tribune.com.pk/story/12867/social-media-is-lying-to-you-about-burmas-muslim-cleansing/

    ReplyDelete

  13. Badri,

    Your argument says that if it is really a Hindu-Muslim problem, why no Hindus of Ahom have participated in the violence sounds logical at first.

    However, Badri, this situation is applicable everywhere in India. Even in Tamil Nadu when a dalit majority village was ransacked by a handful of muslims living in the same village, no help came from surrounding villages.

    Ahom Hindus are no different from any other Hindus. However, the situation is changing now as every Hindu community is now (although very slowly) realizing that the Nehruvian politics is keeping them disunited and weak.

    I had met a few students making exodus in Bangalore yesterday. A girl informed me that she was threatened with acid attack. Many of the students were asked by their families to come back to their house. The students told me that no government, no political party, or no media will bother about them. They will only bother whether their dead body is a ethnical dead body or communal dead body.

    However, these students who faced the threats are very minimal in number. Many of them have received SMSs, and most of the people are just frightened by the spread of this news and wave of lies. The amount of incidents that may not have happened is, of course, very high than true.

    Badri, most of the students are not Hindus. They are Christians. However, only RSS has arranged food for all those people.

    You are saying that RSS cadres are "roaming" with sticks. They are not roaming in any other areas, but only in the railway stations to protect the Indians fearing islamic ways.

    Bulk SMS are sent to north eastern students. The media is blaming that it was sent by Bhagat Singh Kranti Sena as per statements by unnamed 'muslim' leaders. Bhagat Singh Kranti Sena has openly challenged this allegation, and asked the government to find out the sources of the SMSs. It is technically possible.

    The Maharashtra government had declined to arrest any of the muslims participated in the Mumbai violence. The reason given was that they will do their duty only after the ramzon get over, that is after a week. Then Pune happened.

    No news channel has reported about what is happening in Rajasthan. 8 people are killed by muslims, and curfew is imposed now. This violence has nothing to do with Bodo issues at all.

    So, why the sudden violence all over India?

    Muslims in India want to ape their Syrian and Egyptian brothers, and want to take over as much as lands and houses as possible. Quran recommends violent actions after Ramzan. Therefore, more violence is expected.

    For your information, there are three muslims arrested in Bangalore today for threatening north eastern students who did not leave the city.

    The threats are real. Calling them as only rumour is the usual media/psuedo secular humour.

    .

    ReplyDelete
  14. About the title of the article.

    The answer to the interrogative title is this:

    The Indian issue is now getting known from Assam issue.

    ReplyDelete
  15. இந்தியாவில் பழங்குடியினரில் பெரும்பான்மையோர் இந்துக்களே.போடோக்களைப் பொருத்தவரை அவர்கள் இந்துக்களாகவே கருதப்படுகிறார்கள்.பழங்குடியினரில் ஒரு பகுதியினர் கிறித்துவத்திற்கு மதம் மாறியவர்கள்/மாற்றப்பட்டவர்கள்,பழங்குடியினரில் முஸ்லீம்கள் மிகவும் குறைவு.
    செக்யுலரிஸ்ட்கள் என்று சொல்லிக்கொள்பவர்களில் பலர் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறி ஆக்கிரப்போரை ஆதரிக்கிறார்கள்.இவர்கள் காஷ்மீர் பண்டிட்களை ஆதரிக்க மாட்டார்கள்.ஆனால் வங்கதேசத்திலிருந்து வந்த ஆக்ரப்பாளர்களை ஆதரித்து ‘மனிதாபிமானம்’ தேவை என்று எழுதுவார்கள்.

    ReplyDelete
  16. Minority leader Ajmal responsible for mass exodus: AASU

    http://www.indianexpress.com/news/minority-leader-ajmal-responsible-for-mass-exodus-aasu/989045/

    ReplyDelete
  17. அடிப்படை புரிதலை ஏற்படுத்துவதற்கான பதிவு என்பதில் சந்தோஷம். இதில் எனக்கு தெரிந்த பாமர விவரங்களையும் இணைக்க விருப்பம்.

    வங்க தேச முஸ்லீம்கள் (மற்றும் சில மற்ற மதத்தினர்) இந்தியாவிற்குள் வருவதால் ஏற்படுகிற பதட்ட நிலை இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாகவே புகைந்து கொண்டே இருந்தது. அஸ்ஸாமில் மட்டுமில்லை, அது மற்ற இடங்களிலும் முக்கியமாக மேற்கு வங்காள மாநிலத்திலும் புகைந்து கொண்டு தான் இருந்தது.

    ஆண்டுக்கணக்கில் புகைந்து கொண்டிருந்த இந்த பதட்ட நிலையைத் தீர்க்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா முழுக்க உள்ள அடிப்படைவாதிகள் (முஸ்லீம் மற்றும் இந்துக்கள்) தங்களுக்கான ஆதாயத்திற்காக இந்தப் புகைச்சலை மேலும் பெரிதாக்கினார்கள். இன்றைய கலவர நிலைக்கு இது மட்டும் காரணமல்ல என்றாலும் இந்த அடிப்படைவாதிகளும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாதது.

    அஸ்ஸாம் கலவரம் நிகழும் போது கூட இந்தியா முழுக்க இருக்கும் முஸ்லீம் அடிப்படைவாதிகள் அதைத் தங்களுக்குச் சாதகதமாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இந்து அடிப்படைவாதிகள் இப்போது தான் கலவரத்தைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தும் முயற்சியினைத் தொடங்கி இருக்கிறார்கள்.

    மதத்தினை வளர்ப்பதற்குக் கலவரங்களையும் பதட்ட சூழ்நிலைகளையும் ஆதாயமாக்கி கொள்ளும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது. மத அடிப்படைவாதம் வன்முறையிலே முடியும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். அதைச் சகோதரத்துவம் என்று சொல்லி தப்பி விட முடியாது. மதத்தினைத் தாண்டி மற்ற அணுகுமுறைக்கு இவர்கள் வழிவிட வேண்டும். மதத்தின் பெயரால் பிரச்சனையை எதிர்கொள்வது என்பது அப்பிரச்சனையை மேலும் மேலும் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பாகவே மாற்றுகிறது என்பதை உணர வேண்டும்.

    இப்போது கூட்டம் கூட்டமாக ரயில் ஏறுகிற வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்கள் உருவ வேற்றுமையாலே பயப்படுகிறார்கள். அவர்கள் அஸ்ஸாமியர்கள் மட்டுமல்ல என்றாலும் பொத்தம்பொதுவாக உருவ வேற்றுமையைக் குறி வைத்தே தாக்குவார்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

    இப்பிரச்சனையின் உண்மையான பின்புலத்தை ஆராய்ந்து அதை பொதுவில் விவாதிக்க வேண்டிய அரசும் அரசியல் கட்சிகளும் இதனை ஒரு எஸ்.எம்.எஸ் பிரச்சாரத்தின் பின்விளைவு என்பதாக சுருக்கி விட்டனர்.

    * மதத்தினை அடிப்படையாக கொண்டு ஒன்றிணைவது, பிரச்சனைகளை எதிர்நோக்குவது மேலும் உணர்ச்சிப்பூர்வமான சங்கடங்களையும், பதட்டத்தினையும் கொண்டு வருகிறது.
    * உருவ வேற்றுமைகளைக் கருத்தில் கொள்ளாமல் இந்தியர்கள் இந்தியாவினுள் எங்கு வேண்டுமானாலும் குடி ஏறலாம் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமாகி இருக்கிறது என்கிற கேள்வி மீண்டும் எழுந்து இருக்கிறது.

    ReplyDelete
  18. @அரவிந்தன் நீலகண்டன்: நீங்க என்ன சொன்னாலும் பத்ரி அப்படிதான் பேசுவாரு அவருக்கு வேற வழியே கிடையாது. பத்ரியின் ஒரு பக்கம் நியாயம் பேச விரும்புகிறது, இன்னொரு பக்கம் தன்னுடைய மதச்சார்பற்ற முற்போக்காளர் வேடத்தையும் காப்பாற்றியாக வேண்டும். அதுக்காக அவர் கண்டுபிடித்த வழிதான், ரெண்டு பக்கத்தையும் ஒரு சாத்து சாத்துவது. So the Operation was a Success but the Patient Died. இன்னொரு விஷயம் இதை ஏன் மத பிரச்சனையா பாக்ககூடாது? சட்ட விரோத குடியேரிகளான பங்களாதேஷிகளுக்காக முஸ்லிம்கள் இந்தியா முழுக்க கூட்டம் நடத்தினாலும் அது மதசார்பின்மை, ஆனா அத பத்தி அத்வானியோ, நரேந்திர மோடியோ, இல்லாட்டி blogla நியாயமா கமெண்ட்ஸ் போடுற எல்லாரும் பிற்போக்குவாதிகள், மதவாதிகள். அய்யா poovannan சார் நீங்க அப்படியே போய் அஸ்ஸாம் காங்கிரஸ்ல சேந்துடுங்க, கண்டிபா ஒரு 10 வருடத்துல நீங்கதான் அஸ்ஸாம் முதலமச்சர்.

    ReplyDelete
    Replies
    1. பூவண்ணன் என்ற ஒன்றைப்பற்றியெல்லாம் பேசி பதில் போட்டு bandwidth ஐ வீணடிக்கவேண்டாம். அது தன்னை ஒரு ஹைப்பர் அறிவாளி என்று நினைத்துக்கொண்டு திரியும் 1/2 வேக்காடு.

      Delete
    2. ஹி ஹி ஹி இப்படி எல்லாம் திட்டினா நாங்க அடங்கிடுவமா

      ராம் ஜெத்மலானி ராஜீவ் காந்தியிடம் கேள்விகள் கேட்ட போது நாய் குறைப்பதர்கேல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்றார்
      நான் ஜெத்மலானியும் அல்ல நீங்கள் ராஜீவ் காந்தியும் அல்ல
      ஆனால் கேள்வி கேட்டால் தரக்குறைவாக திட்டுவது நம் ஒட்டிபிறந்த குணம் ஆயிற்றே
      எளிதில் போய் விடுமா

      Delete
  19. Mumbai police commissioner Arup Patnaik has landed himself in a controversy after a video emerged purportedly showing him berating his junior officer for nabbing a person suspected to be involved in Saturday's riots.

    Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2189016/Mumbai-cops-YouTube-trouble.html#ixzz23s01LYgA

    ReplyDelete
  20. "மதத்தினை வளர்ப்பதற்குக் கலவரங்களையும் பதட்ட சூழ்நிலைகளையும் ஆதாயமாக்கி கொள்ளும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது. மத அடிப்படைவாதம் வன்முறையிலே முடியும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். அதைச் சகோதரத்துவம் என்று சொல்லி தப்பி விட முடியாது. மதத்தினைத் தாண்டி மற்ற அணுகுமுறைக்கு இவர்கள் வழிவிட வேண்டும். "

    The fundamental issue is that islamists have been doctored from very young age that theirs is the ONLY TRUE PATH (MARGAM). Most of the muslims are conditioned to believe in this doctrine and it is just impossible to expect them to look at other options,delinking their religion.And they dont think twice to resort to violance whenever they are made to perceive their relgion/their brethern are under threat.Irresponsible muslim leaders like Owaisi's speeches incite them in no time.The merits of any issue is quickly buried and they only approach it with a religious perspective.Even moderate leaders like Kamal Farookhi does'nt find any thing wrong in bangladeshi infiltration,primarily because of the infiltrators' religion. But then more than Owaisi,I find Badri kind of "secularists" will create much more radicalization among hindus,fanning this sensitive issue.

    ReplyDelete
  21. ’என்னதான்யா நடக்குது? ஒண்ணூம் புரியலையே!’ என்கிற என் ட்வீட்டுக்கு (https://twitter.com/losangelesram/status/236989041986387968) நண்பர் விஜய் கொடுத்த தகவலின் பேரில் இங்கே வந்தேன்.

    பத்ரியின் விபரமுள்ள பதிவும் அரவிந்தன் மற்றும் இதர நண்பர்களின் தெளிவான பதில்களும் பிரச்னை பற்றி நன்றாகவே புரிய வைக்கின்றன.

    அதற்குள் பாகிஸ்தானைத் திட்டலாமா, சோஷியல் மீடியாவைத் திட்டலாமா என்று அலைபவர்கள் அநேகம்.

    நிதானமான அணுகுதலை அரசாங்கத்திடம் எதிர்பார்க்கமுடியாது. மக்கள் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.

    ReplyDelete
  22. \\முஸ்லிம்களுக்குச் சிக்கல் வருவதை வரவேற்கும் இந்து சமூக விரோதிகளா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கிறது\\

    பத்திரி உங்க செக்யூலர் பைத்தியத்திற்கு ஒரு அளவே இல்லையா?

    http://timesofindia.indiatimes.com/city/bangalore/Cops-nab-gang-which-sent-hate-SMSs-in-Bangalore/articleshow/15548350.cms

    ReplyDelete
  23. பழங்குடியினரை ஹிந்து என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வீர்கள்... பொங்கள் படைத்து உண்பவனும் ஹிந்து தான், ஆடு வெட்டி உண்பவனும் ஹிந்து தான், கள் இறக்கி படைத்து உண்பவனும் ஹிந்து தான். அடுத்து ஹிந்து என்பது ஒரு வழிபாட்டை அடையாளமாக கொண்ட மதம் அல்ல என்பது உங்கள் அறிவு ஜீவி மூளைக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே!!!!

    ReplyDelete
    Replies
    1. மாடு மாடு சாமி
      உசாரா ஆட்டு கறின்னு சொல்றீங்க
      மாடு ,பண்ணி ,பாம்பு, நரி, எலி ,எல்லாம் சாமி
      சங்க பரிவாரம் மாட்டு கறியை ஏற்று கொண்டு விட்டதா
      கொண்டாட வேண்டிய விஷயமாயிற்றே

      Delete
    2. பூவண்ணன் அது என்னது சங்க பரிவார்... அவங்க என்ன ஹிந்து மதத்துக்கு patent வாங்கி வச்சு இருக்காங்களா என்ன? அவங்க சொன்ன அது அவங்க கருத்து அது ஒட்டு மொத்த ஹிந்துவோட கருத்து இல்ல... அப்புரம் முக்கியமான விசயம்.. மாடு, பன்றி, பாம்பு, நரி எல்லாம் கடவுள் அப்புடின்னு எல்லாரும் கும்டுரது இல்ல. சில மக்கள் மாட்ட தெய்வமா கும்புடுராங்க.. சில பேர் பாம்ப தெய்வமா கும்புடுராங்க.. சில பேர் இரண்டையும் தெய்வமா கும்புடுராங்க.. சில பேர் எல்லாமே தெய்வம் அப்புன்னு சொல்றாங்க... இப்படி பல ஆயிரம் முறைகள் இருக்கு..

      பசுவ எந்த காலத்துலையும் எந்த ஒரு 'settled society" சேர்ந்தவங்களும் பலி கொடுத்ததும் இல்லை... சாப்புடரதும் இல்ல.. ஆன சில வனவாசிங்க சாப்புடராங்க.... அவ்வளவு தான்..... சில விசயங்கள் விதிவிலக்கா இருக்கு...

      நான் ஒன்னும் சங்க பரிவாரத்தோட பிரதிநிதி கிடையாது....

      Delete
    3. முழு பூசணிக்காய் இல்ல முழு எருமையையே இப்படி மறைக்கிரீர்கலே
      இப்ப பத்து வருஷம் முன்னாடி மகாவிஷ்ணுவின் அவதாரமான நேபாள ராஜா பதவி ஏற்ற போது பலி கொடுக்க கொடுத்தது என்ன மிருகம் தெரியுமா

      http://articles.timesofindia.indiatimes.com/2002-06-27/india/27309221_1_kamakhya-animal-sacrifice-temple-committee

      இன்றும் கோர்க்காக்கள் தசராவிற்கு ஒரே வெட்டில் எருமையை வெட்டுவது நடந்து தான் வருகிறது.

      ஒரு சிலர் வந்து இது பாவம்,கொலைபாதகம்னு சொல்லி,ராஜாவை வைத்து தண்டனை கொடுக்க வைத்து பசு மாட்டை சாபிடுபவர்களை கொலை செய்ய ஆரம்பிக்கும் வரை இந்தியா முழுவதும் முக்காலவாசி பேர் எருது.பசு எல்லாவற்றையும் ருசித்து கொண்டு தான் இருந்தார்கள்
      இப்பவும் அந்த ஹிந்து மிச்சிஒனரிகள் கால்படாத இடங்களில் எல்லாம் இந்த கறியை சாப்பிட கூடாது என்று எந்த குழுவும் எதையும் ஒதுக்கியதில்லை

      Delete
  24. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே வருவதற்கு எந்த தடையும் இல்லை
    நம் நாட்டு ராணுவத்தில் கூட நேபாளத்தை சார்ந்த கோர்க்காக்கள் இருவது ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கின்றனர்
    அவர்கள் விரும்பினால் இந்திய குடிமக்கள் ஆகலாம் (ஏன் என்றால் அது இந்து தேசமாக இருந்தது,இப்போது அது செகுலர் அரசு ஆகி விட்டதால் அவர்களையும் ஒத்துக்கும் முயற்சிகள் வலு பெற்று வருகின்றன)
    மத்ய பிரதேசம்,உத்தர் காண்டம் ,வட கிழக்கு மாநிலங்கள் ,தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான கோர்க்காக்கள் வாழ்ந்து வருகினறனர்.குரியுரிமை பெற்றுள்ளனர்
    கோர்க்ஹா குழுக்கள் உருவாகி வட கிழக்கு மாநிலங்களில் பழங்குடியினருடன் போராடுகின்றனர் ,வங்காளத்தில் தனி மாநிலமாக கோர்காலாந்து வேண்டும் என்று முரட்டுத்தனமாக போராடுகின்றனர்
    பிரதநிதிதுவம் குறைவாக உள்ளது என்று தேஹ்ராடூனிலும் போராடுகின்றனர்
    வெளி நட்டு பிரஜைகள் இங்கு ராணுவத்தில் கூட வேலை செய்யலாம்.ஆனால் இங்கயே பிறந்து வளர்ந்த அச்சமாய்,வங்காளத்தை சார்ந்த இஸ்லாமியர்களை பரிவாரங்கள் வந்தேறிகள் என்று திட்டும்,நாட்டை அழிக்கிறார்கள் என்று கூப்பாடு போடும்
    நாம் ஆமாம் சாமி போட்டால் நல்லவர்கள்
    ஏதாவது கேள்வி கேட்டால் அந்நிய கைகூலிகள்
    சில காலம் முன் வரை நானும் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர் அனைவரும் வங்கள் தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று எண்ணியிருந்தேன்.பரிவாரங்களின் பிரச்சார சக்தி அப்படி
    கிளறி பார்த்தால் தான் தெரிகிறது விடுதலையின் போதே அசாமில்,மேற்கு வங்காளத்தில் இருவதியிந்து சதவீதம் அளவிற்கு இஸ்லாமியர் இருந்தது
    வங்காள ஹிந்துக்களும் பல லட்சம் பேர் வங்காள தேசத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் போல இருக்கிறது என்றால் பதி இல்லை,ஆனால் ஐயோ ஐயோ ஐயையோ இஸ்லாமியர் பெருகி விட்டார்கள் என்ற கூப்பாடு சத்தம் மட்டும் ஆதாரங்களே இல்லாமல் எதிர் கட்சி தலிவர் முதல் தேசபக்தர்களால் போடப்படுகிறது

    ReplyDelete
  25. @poovannan: Because once Muslims came over and settle in a place, the next thing they do is 'the majorities are threatening us so we want a separate nation'. That's why India should allow a Hindu refugee but stop a Muslim refugee at any cost. It is the real fact but people never want to say that, because they are afraid of being stamped as an fundamentals or Hindu fanatic from people's like you.

    ReplyDelete
  26. Badri,

    Here is one of the report that has been sent to the Central government many years ago. The report clearly warns the government about the violence, which has happened.

    http://www.satp.org/satporgtp/countries/india/states/assam/documents/papers/illegal_migration_in_assam.htm

    ReplyDelete
    Replies
    1. தோழரே நீங்க கொடுக்கற ரிப்போர்ட் அ நீங்க முழுசா படிக்க மாட்டீங்களா
      மேல நான் கொடுத்து இருக்கற செய்தியான 1971 பிறகு 75 லட்சம் வங்காளி ஹிந்துக்கள் வந்திருக்காங்கன்னு அது ஜெனரல் சின்ஹா அறிக்கையில் இருந்து எடுத்தது தான்
      இதையும் கொஞ்சம் படியுங்க

      http://www.outlookindia.com/article.aspx?282004

      In the last three Censuses (1991, 2001 and 2011), decadal growth rates of population have been lower than the national figure.
      Also, it’s incorrect that abnormal population growth automatically suggests illegal migration.
      Population in Dhemaji district grew dramatically by 74.72 per cent between 1971 and 1991. But 95 per cent of the population happen to be Hindus.
      Tripura has a 900-km border with Bangladesh (as compared to 270 kms for Assam) and yet illegal migrants do not seem to be an issue ther
      அஸ்ஸாம் வங்காள தேசம் எல்லை 262 km தான்.ஆனா திருபுரா வங்காளதேசம் 900 km
      அஸ்ஸாம் எல்லாம் முப்பது சதவீத மக்கள் தொகை வளர்ச்சியில இருக்கும் போது திருபுராள மூணு மடங்கு அளவிற்கு வளர்ச்சி.மொத்த அதிகாரமும் வங்காள ஹிந்துக்கள் கிட்ட தான் .
      அது கண்ணுக்கே தெரியாதே

      18.

      The following indicators of the dimension of illegal migrationtaking place are relevant :-a.

      Bangladesh census records indicate a reduction of 39 lakhsHindus between 1971 and 1981 and another 36 lakhsbetween 1981 and 1989. These 75 lakhs (39+36) Hindushave obviously come into India. Perhaps most of them havecome into States other than Assam.

      b.

      There were 7.5 lakh Bihari Muslims in refugee camps inBangladesh in 1971. At the instance of Saudi Arabia,Pakistan was persuaded to accept 33,000 Bihari Muslims. There are at present only 2 lakh Bihari Muslims in refugeecamps in Bangladesh. The unaccounted for 5.17 lakhs musthave infiltratedinto India, as there is little possibility or evidence of therehaving merged into Bangladesh society.c.

      In 1970 the total population of East Pakistan was 7.5 croresbut in 1974 it had come down to 7.14 crores. On the basis of 3.1% annual population growth rate of that period, thepopulation in 1974 should have been 7.7 crores. Theshortfall of 6 million people can be explained only by largescale migration.

      பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆனா கதையா
      கிளற கிளற 1971 பின்பு வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் பெருமளவு ஹிந்துக்கள் தான் எனபது தான் தெரிய ஆரம்பிக்கிறது

      Delete

  27. The genocide of Hindus in Bangladesh is voiced out even in USA. However, it is never even mentioned in the Indian Parliament by anybody - including the BJP !

    US parliamentarian voiced for 49 Million Missing Hindus from Bangladesh

    http://www.youtube.com/watch?v=QSk7Lpym7g0

    ReplyDelete
  28. Poovannan,

    You are saying that because Nepal has become a secular country , the Gorkhas in Indian army are getting neglected and oppressed. Could you please provide any proof on such a morbid accusation?

    Based on your evidence, I am going to write to the Indian army condemning such a new development.

    .

    ReplyDelete
  29. ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் வருந்துகின்றன.
    ஆடு = வடகிழக்கு கூலித் தொழிலாளிகள். ஓநாய்கள் = அவர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்கள்.

    1000 ரூபாய் வாடகைக் கட்டிடம் இன்று 50000 ஆயிரம் ஆகிவிட்டது. ஆனால் 200 ரூபாய் கூலி மட்டும் இன்னும் 200 ரூபாய்தான். வடகிழக்கு கூலித் தொழிலாளிகள் 200 ரூபாய்க்கு மேலே கேட்டால் இந்த ஓநாய்கள் அவர்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கும்.

    வாழ்வாதாரத்திற்காக குடியேறுகிற வங்கதேசத்தினர் போல இன்று வாழ்வாதாரத்திற்காக வடகிழக்கு மக்கள் இன்னொரு பகுதிக்கு இடப்பெயர்கிறார்கள். வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களை ஓட்டுக்கு பயன்படுத்திக்கொள்வது போல வடகிழக்கிலிருந்து குடியேறியவர்களை குறைவான கூலிக்கு பயன்படுத்திக்கொள்கிறோம்.

    வடகிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட பயத்திற்கு மதம் காரணம் அல்ல. வாழ்வாதாரப் பிரச்சிணை.

    எப்படி அஸ்ஸாமில் வங்கதேச மக்களுக்கு எதிரான கலவரத்திற்கு வாழ்வாதாரப்பிரச்சிணை காரணம் என்கிறோமோ அதுபோல குறைவான கூலியால் நிரப்பப்படுகிற வடகிழக்கு மக்களால் வேலையை இழக்கும் உள்ளூர் மக்கள் ஒருவேளை தாக்கக் கூடும் என்கிற அச்சம்! இந்த இனம் தெரியாத அச்சத்திற்கு மதச்சாயம் பூசப்படுகிறது.

    பட்டிதொட்டி முதற்கொண்டு வேலைகள் இடம்பெயர்ந்து வரும் குறைவான கூலி பெறக் கூடிய தொழிலாளர்களால் நிரப்பப்படுகின்றன. உள்ளூர் தொழிலாளி வேலை இழக்கின்றான். உள்ளூர் மக்களுக்கும் குடியேறுகிற வேற்று மாநிலத்தவர்க்கும் இடையே சுமுகமான உறவில்லை. இன்று ஏற்பட்ட பயம், நாளை நிஜத்தில் போய் முடியும்!

    இந்தியர், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வாழலாம் என்று வெட்டி நியாயம் பேசுவதை விடுத்து, அதிகாரங்களை உண்மையாகவே பரவலாக்குவதற்கு முயற்சியுங்கள். வளர்ச்சியை எல்லா இடங்களிலும் பரவலாக்குங்கள்.

    ReplyDelete
  30. பத்ரி சார், தயவு செய்து இந்த அறிக்கையைப் படிக்கவும்.

    அன்புடன், நம்பி நாராயணன்.

    ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை செயலர் தத்தாத்ரேய ஹொசபலே அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல்

    http://rsschennai.blogspot.in/2012/08/blog-post_22.html


    ReplyDelete