2ஜி ஏலம், நான் எதிர்பார்த்ததைப் போலவே குறைந்த பணத்தைத்தான் பெற்றுத் தந்துள்ளது. இது ஆ. இராசா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளும் சிஏஜியும் கணக்கிடுதலில் பிசகியுள்ளனர் என்பதை நிரூபித்ததாகவே ஆகிறது.
2010-ல் ஏலம் நடந்திருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கும் என்றெல்லாம் சொல்வதை நான் நம்பவில்லை. 3ஜி ஏலமே தவறு என்பது என் கருத்து. இன்று டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் மார்ஜின் அழுத்தத்தில் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. 3ஜி ஏலத்துக்கான பணத்தை அவை கடனாகத்தான் பெற்றுள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியே அவற்றின் லாப விகிதத்தைக் கடுமையாகக் குறைக்கின்றன. இன்று 3ஜி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான தரத்தில் இல்லை. மேலும், 3ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பெற்றவர்கள், அதனை அடுத்தவர்களுக்கு வாடகைக்குத் தரக்கூடாது என்று டெலிகாம் அமைச்சகம் கழுத்தறுக்கிறது.
ஆ.இராசா மேலான குற்றம் என்ன என்று இன்னும் நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். இராசா லஞ்சம் வாங்கினாரா, அப்படியென்றால் எவ்வளவு, யாரிடமிருந்து, அந்தப் பணம் எங்கே என்று தெளிவாகக் காட்ட இன்றுவரை சிபிஐயால் முடியவில்லை. பால்வா - கலைஞர் டிவி விவகாரம் தவிர்த்து. அதிலுமே நிறையக் கேள்விகள் பாக்கி.
ஆனால் இதன் விளைவாக ஏலம் என்பதுதான் மிகச் சரியான முறை, அதிலிருந்து லட்ச லட்சம் கோடிகளாகக் கொட்டும் என்பது பரப்புரை செய்யப்பட்டு, இன்று இந்தியா முழுதுமே அதனை நம்புகிற நிலைக்கு வந்துவிட்டதுதான் துரதிர்ஷ்டம். பொருளாதார அடிப்படைகளின்படி, சில இடங்களில் ஏலம் மோசமான நிலைக்குத்தான் கம்பெனிகளைத் தள்ளும், மக்களையும் காயப்படுத்தும். டெலிகாம் நிச்சயமாக அதில் ஒன்று.
பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ரெவின்யூ ஷேர் என்பது மிக அற்புதமான ஒரு நடைமுறை. இன்றுவரை இந்திய தொழில்துறையின் எந்தப் பகுதிக்கும் இப்படிப்பட்ட தெளிவான ஒரு முறை அமல்படுத்தப்படவில்லை. அரசுதான் ஸ்பெக்ட்ரத்துக்குச் சொந்தக்காரர்; அதனைப் பயன்படுத்த ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தக் கூலி தரவேண்டும். அது, அதிலிருந்து பெறப்படும் வருமானத்தில் ஒரு பகுதி. இது தொழில் செய்வோருக்குத் தெளிவைத் தருகிறது. அரசுக்குத் தொடர்ந்த வருமானத்தைத் தருகிறது. நிறுவனங்களின் கடன் சுமையைக் குறைக்கிறது. பொதுமக்களின் போன் செலவைக் குறைக்கிறது. தொழில்நுட்பம் ஜனநாயகப் படுத்தப்பட்டு, அனைத்து மக்களின் கைகளிலும் செல்போனாக மிளிர்கிறது.
ஆனால் அதற்கடுத்த கட்டத் தாவலைச் செய்யாமல் நாம் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறோம். இன்னும் 3ஜியே பரவல் அடையவில்லை. 4ஜி சேவையைச் செய்ய யாரும் தயாராக இல்லை. முகேஷ் அம்பானி கம்பெனி இதோ அதோ என்கிறது, ஆனால் சேவையைக் காணோம். குறைந்தவிலை இண்டெர்னெட் என்பது இன்னும் நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. மறுபக்கம் சிலேட்டுக் கணினிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. 3,000 ரூபாய்க்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க டேப்லட் கையில் கிடைக்கிறது. ஆனால் இணைய வசதிக்குத்தான் தகராறே. மாதம் 250 ரூபாய்க்கு நல்ல வயர்லெஸ் (4ஜி) பிராட்பேண்ட் இணைப்பு கிடைத்தால் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
2ஜி விவகாரத்தில் பலரும் சேர்ந்து அரசியல் செய்ததன் பலன், அடுத்த பத்து வருடங்களுக்கு நம்மைத் தரையோடு சேர்த்து வைத்து அழுத்தப்போகிறது.

1000- 2000 கோடி ஊழல் இல்லை என்பது குழந்தைக்கு கூடத்தெரியும் .... 20- 30 ஆண்டுகளுக்கு முன்னேயே விஞ்ஞானபூர்வமாக புறங்கையை நக்கியவர்கள். இன்றைய ஊழலில் "ஆர்பிட்ராஜை" நாம் பார்க்க வேண்டும் .... 1.75ல.கோடி என்பது யூக இழப்புதான். அதே தொகையை லஞ்சமாக கிறுக்கர்கள் கூட கொடுக்கமாட்டார்கள் .... (இந்த ஆர்பிட்ராஜ் கான்செப்ட் என்பது சாலை ஓரத்தில் காக்கி மாமா செய்யும் மாமூல்தான் ... லைசென்ஸ் இல்லையா அங்க ஆபீசர்ட்ட போனா 800ரூபாய் ... இங்கியே என் கிட்ட முடிச்சா 300ரூபாய்) ... யாரும் காக்கிக்கு 800ரூபாய் மாமூலாகக் கொடுப்பதில்லை ... அதே சமயம் 20ரூபாயும் குடுப்பதில்லை ... ஒரு குத்து மதிப்பாக 200ரூ வசூலித்துவிடுவார். .... அதுபோல இந்த ஊழலில் 1000கோடி என்பது காக்கியின் 20ரூ வசூல் போன்றது ... சயன்டிஃபிச் ஊழலில் டாக்டரேட் செய்துள்ள கரைவேட்டியினர் இவ்வளவு தாழ்ந்து போக மாட்டார்கள் ... எனவே ஊழல் தொகை நிச்சயம் 30ஆயிரம்- 50ஆயிரம் கோடி வரையாவது இருக்கும்... அதையும் கரைகள் மட்டுமே செய்திருக்காது ....சின்ன காக்கி பெரியகாக்கிக்கு பங்கு கொடுப்பதுபோல்... 50% வைத்துக்கொண்டு, மீதி தொப்பிக்காரர்களுக்கும் பங்கு சென்றிருக்கும் ... மேலும் புலி, கிளி, வரிக்குதிரை என்ற லெட்டர்பேடுகள் மூலம் நடைபெற்றுள்ள வேல்யுவேஷன் விளையாட்டையும், நடக்க சாத்தியமான வெள்ளையடித்த ஹவாலா பறிமாற்ற சாத்தியக்கூறுகளையும் இந்த வரிக்குதிரைகள் விஞ்ஞான பூர்வமாக பங்கு விற்று காசு பார்த்ததையும் நாம் பார்க்கவேண்டும்
ReplyDeleteமுறைகேடுகள் நடந்துள்ளன. அதற்கான சாட்சியம் உள்ளது. பணம் கைமாறியிருக்கலாம். அதற்கான சாட்சியம் இன்னும் நம் முன் வைக்கப்படவில்லை. ஆனால்... ஏலம்தான் கதி என்று சொல்லி, சன்ரைஸ் இண்டஸ்ட்ரி என்று சொல்லி, உண்மையில் 2ஜி என்பது சன்செட் இண்டஸ்ட்ரி. பாதி பேர் இன்னும் கொஞ்ச நாட்களில் இழுத்து மூடிவிடுவார்கள். மெர்ஜர், அக்விசிஷன். அப்போது பாருங்கள் நீங்கள் செல்போனுக்கு எவ்வளவு செலவு செய்யப்போகிறீர்கள் என்று.
Deleteமேலும் புலி, கிளி, வரிக்குதிரை என்ற லெட்டர்பேடுகள் மூலம் நடைபெற்றுள்ள வேல்யுவேஷன் விளையாட்டையும், நடக்க சாத்தியமான வெள்ளையடித்த ஹவாலா பறிமாற்ற சாத்தியக்கூறுகளையும் இந்த வரிக்குதிரைகள் விஞ்ஞான பூர்வமாக பங்கு விற்று காசு பார்த்ததையும் நாம் பார்க்கவேண்டும் . கைப்புண்ணுக்கு கண்ணாடிபோன்ற இதற்கு வியாபார பூர்வமாக நீங்கள் எழுதியுள்ள கருத்துக்களைப் பார்த்தால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லை?
ReplyDeleteஎந்த டெலிகாம் நிறுவனமும் காசு பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. வேல்யுவேஷனை வைத்து அந்நிய நிறுவனங்கள் நிறையக் காசை அந்த கம்பெனியில் போட்டன. ஆனால் புரமோட்டர் பங்குகளை வாங்கவில்லை. அப்படி வாங்கினால்தான் காசு ‘பார்க்க’ முடியும். உதாரணமாக, யூனிடெக் போட்ட காசைக்கூட இப்போது எடுத்திருக்காது. டெலிநார் சண்டையில் டெலிநாருக்கும் நஷ்டம், யூனிடெக்குக்கும் நஷ்டம். எடிசாலாத் கம்பெனியை இழுத்து மூடிக்கொண்டு போய்விட்டார்கள். பால்வா ஜெயில், கேஸ், அது இது என்று கோவிந்தா. சிஸ்டெமா முதற்கொண்டு பலரும் ஐயோ, இவ்வளவு போட்டோமே, எல்லாம் கோவிந்தாவா என்று யோசிக்கிறார்கள். வீடியோகான் கம்பெனியை இழுத்து மூடியாயிற்று.
Deleteயார் காசு பார்த்தார்கள்? சொல்லுங்கள்.
I dont understand this. The licenses are canceled. There was no business. How can see money
Deleteneengal (neengal mattumalla, ottumothha mediavume) ippadi ezhutha vendum endru nirnayiththu thaan intha eelame!! aatchiyaalargalum corporate niruvanangalum koottu sernthu entha alavukkum pogakkoodiyavarkalthaan endru sameebaththiya varalaaru namakku aliththa padaththai marakkaththuninthaal yaar muttaal??
ReplyDeleteசிறப்பாக கொண்டுவந்திருக்கிறீர்கள் !!!
ReplyDeleteஇல்லை, இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை, 2ஜி ஊழலை மறைக்க மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் , மொபைல் முதளாளிகளும் "கை"கோர்த்து ஆடும் நாடகம்.
ReplyDeleteஏலம் குறைவாக போனதை வைத்து, 2ஜி யில் முறைகேடு நடக்கவில்லை என்று சொல்ல ஒரு வாய்ப்பை பபயன்படுத்தியுள்ளனர் என்பதுதான் உண்மை.
ஏலத்திலும் நாடகம் ஆட முடியுமென்றால், என்ன ...க்கு ஏலம் விடாதது தப்புன்னு எல்லாரும் கூவினானுங்க?
Deleteஇல்லை, இந்த கருத்தை நான் ஏற்க வில்லை.
ReplyDelete2ஜி யில் நடந்த ஊழலை மறைக்க காங்கிரசும்,மொபைல் முதளாளிகளும் செர்து நடத்தும் நாடகம். குறைவான விலக்கு ஏலம் கேட்டு , முன்பு நடந்த முறைகேட்டை மறைக்க பார்க்கின்றனர் என்பது தான் உண்மை.
ராசாவின் முறையில் வெளிப்படைத் தன்மை குறைவு என்பதுதான் உண்மை. எட்டாண்டுகளுக்கு முன்னால் இருந்த விலையையே சகட்டு மேனிக்கு நிர்ணயித்து, அதுவும் தனது ஆதரவாளர்க பெற வேண்டும் என தேதிகளை மாற்றி, மொத்தத்தில் கந்தர கோலம்தான்.
ReplyDeleteஅதற்காகவே ராசா களி திங்க வேண்டும் இன்னமும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அரசாங்கம் 4000 கோடி வருமானம் வரும் என கணக்கில் ஏற்றிக் கொண்டதால் 1000 கோடிக்கு விற்றது 75% கம்மி போன்று தெரிகிறது. உச்சநீதி மன்றத்தையும், ஜிஏஜியையும் மக்கள் மதிக்கிறார்கள், முழுமையாய் நம்புகிறார்கள். அந்த இம்மேஜை உடைக்க அரசாங்கம் + டெலிகாம் கம்பனிகள் நடத்தும் கூட்டுக் களவானி திட்டம் தான் இந்த வியாபர மந்தம்.
ReplyDeleteராசா விட்ட 2ஜியின் கால்வாசியை முழுப்பங்கை விட 30 மடங்குக்கு வித்த வித்தைகளை மக்கள் இன்னும் அரசாங்கம் எஇனைப்பது போல் மறந்து விடவில்லை Mr.பத்ரி.
நிலக்கரி சுரஙகத்திலும் இப்படித்தான் இழுத்தடித்து மக்களைக் குழப்பி ஓட்டு மீன் பிடிக்க ஓடுவார்கள். எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற இயலாது.
The Editorial in today's Hindu makes sense
ReplyDeleteஇத்தனை நஷ்டம் எனும் சி ஏ ஜி யின் கணக்கீடு முறைகளுக்கு போதுமான சப்ஷ்டான்சியேஷனே இல்லை.. இதனை பத்ரி மிகத் தொடக்கத்திலிருந்தே சொல்லிக் கொண்டு வந்தார்.
ReplyDeleteஎத்தனை வாங்கிக் கொண்டு எழுதுகிறார் என்று கூட கேள்வி வந்திருக்கும். ( அப்படி வந்ததா பத்ரி ? ஐ மீன் கேள்வி !!)
இந்தப் பதிவு சொல்ல வந்த ஆங்கிளை மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறது
Chapter 6 (read here) of the CAG report contains the main conclusions on what it thinks is at the heart of the scam.
ReplyDeleteFirst, it says, “the entire process of allocation of UAS (unified access service) licences lacked transparency and was undertaken in an arbitrary, unfair and inequitable manner. The Hon’ble Prime Minister had stressed on the need for a fair and transparent allocation of spectrum, and the Ministry of Finance had sought for the decision regarding spectrum pricing to be considered by an EGoM. Brushing aside their concerns and advices, the Department of Telecommunications, in 2008, proceeded to issue 122 new licences for 2G spectrum at 2001 prices, by flouting every canon of financial propriety, rules and procedures.”
Second, “the DoT did not follow its own guidelines on eligibility conditions, arbitrarily changed the cutoff date for receipt of applications post facto and altered the conditions of the FCFS (first-come-first-served) procedure at crucial junctures without valid and cogent reasons, which gave unfair advantage to certain companies over others”. This is the heart of the 2G scam, not Rs 1.76 lakh crore.
Third, “the Department of Telecommunications also did not do the requisite due diligence in the examination of the applications submitted for the UAS licenses, leading to the grant of 85 out of 122 UAS licences to ineligible applicants. These companies, created barely months ago, deliberately suppressed facts, disclosed incomplete information, submitted fictitious documents and used fraudulent means for getting UAS licences and thereby access to spectrum”.
CAG goes on to indicate many other lapses, but it does not make a fetish of the Rs 1.76 crore loss figure. It concludes: “The fact that there has been loss to the national exchequer in the allocation of 2G spectrum cannot be denied. However, the amount of loss could be debated.”
Even in its conclusion, CAG is not saying its estimates are god’s truth. They are open to debate. So one wonders why Manish Tewari and Kapil Sibal are calling the CAG to account.
- From First post website by R Jagannathan
சி ஏ ஜியை 3 நபர் குழு ஆக்க எண்ணமில்லை: நாராயண சாமி. அப்படியென்றால் எண்ணமிருக்கிறது என்று தான் பொருள் என்பது தானே இந்த 65 வருஷ ஜன நாயகம் கற்றுத்தந்துள்ள பாடம்? TN சேஷன் வந்து தேர்தல் கமிஷனின் பலத்தைக் காட்டியதும் அதற்கு மூன்று கமிஷனர்கள் நியமித்தது அரசு. இப்போது ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி விவகாரம் அம்பலத்துக்கு வந்தவுடன் சி ஏ ஜிக்கும் செக் வைக்க நினைக்கிறது அரசு. அதற்கான குழி பறிப்பு வேலைதான் இது என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். இனிமேல் இந்தப் புள்ளி விபரக் கணக்குகளையெல்லாம் காட்டி குப்பன் சுப்பனைக் கூட ஏமாற்ற முடியாது.
ReplyDeleteதேர்தல் கமிஷனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கமிஷ்னர்களை நியமிக்கும் ஷரத்து அரசியல் சாசனத்திலே ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது தானே..
ReplyDeleteஆனால் காம்ப்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் பொறுப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நியமிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வரணுமே
அரசியல் சட்டத் திருத்தம் அவ்வளவொன்றும் கஷ்டமில்லை- எதிர்க்கட்சிகளுக்கும் இது வசதி என்பதால். அப்படி ஒன்றும் இல்லா விட்டாலும் ஸ்பெக்ட்ரத்துக்கு சமாதி கட்ட இப்போதைக்கு உதவும் என்பதே பெரிய விஷயம் தானே?
Delete2ஜியில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பிலை என்றே நீங்கள் முதலில் எழுதினீர்கள்.
ReplyDeleteபின்னர் சிஏஜி கூறியிருக்கும் அளவுக்கு நடந்திருக்க வாய்ப்பில்லே என்று சொன்னீர்கள்.
இந்த மறு ஏலம் நடந்திருப்பது 22 உரிமங்களுக்கு மட்டுமே.மேலும் 2008 ல் நடந்த ஏலத்தில் அளிக்கப்பட்ட உரிமங்கள் 122.
இந்த ஏலம் ஒரு தோல்வியில் முடிய வேண்டும் என்றே காங்கிரஸ் அரசு முயன்றிருக்கிறது என்பது தெளிவு.
இந்த இரண்டு
கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.
ரெவின்யூ ஷேரிங் என்பது நிச்சயம் நல்ல முறைதான்.ஆனால் ராசா அதையும் பின்பற்ற வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
The poor 3g service may be punishable under terms of license - this may also be due tgovt's connivance. The companies bid for license, well knowing the positives and negatives - thjey werent playing "mangaathaa "
ReplyDeleteIf one group erred in propagating that auction is the only route for maximizing profit, then isnt it true that castigating CAG on the same line is also an error.
ReplyDeleteCAG merely presented facts that if auction this could have been the profit. If based on price in 2008 this could have been the profit.
It is upto the Govt to explain to the people on why it decided on so and so pricing method. Since it was a blunder on the part of Govt and owing to the corrupt methodologies(alleged) followed in allocating specturm, it could not justify its position with confidence.
Can you please explain how you say that Revenue Sharing model is the best. Especially in India. Given the manner how business are run in India, the Govt will never get to see their actual Revenue Share. Like how they never get to see the actual Tax collection.
Even if CAG has erred in its projections the fundamental question of flawed procedure and refusal to follow good practices cannot be ignored. If you are in support of free market and competition you cannot support crony capitalism and manipulation by vested interests. You seems to be neither here nor there in this issue. The worse of both worlds scenario is not because of economics but because of politics over riding all other interests.
ReplyDeletePlease look at the link http://dinamani.com/editorial/article1342596.ece, why 2G is not gone for good rate when Government gave the tender?
ReplyDeleteWhy CAG calculated the 1.76 Cr? you may understand.
I am sharing only for information not for commenting your article.
Thanks