Tuesday, March 26, 2013

எம்.ஏ வைணவம் மதிப்பெண்கள்

நான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்பு வழியாக எம்.ஏ வைணவம் படித்துக்கொண்டுவருவது குறித்து முன்னரே எழுதியுள்ளேன். முதலாம் ஆண்டு முடிவில் ஜூன் 2012-ல் பரீட்சைகளை எழுதமுடியவில்லை. அந்த நேரத்தில் இமயமலையில் பிரம்மி தால் என்ற இடத்துக்கு மலையேறச் சென்றுவிட்டேன். அடுத்து டிசம்பர் 2012 - ஜனவரி 2013-ல் தேர்வுகள் வந்தபோது, மீண்டும் ஷெட்யூல் கிளாஷ் காரணமாக முதல் இரு தேர்வுகளை எழுத முடியவில்லை. கடைசி மூன்று தேர்வுகளை மட்டும்தான் எழுத முடிந்தது. அந்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.

இன்று காலை தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியிருந்தன. நான் பெற்றுள்ள மதிப்பெண்கள்:

திருமங்கையாழ்வார் பாசுரங்கள் - 80 மதிப்பெண்கள்
இரகசிய இலக்கியம் - 75 மதிப்பெண்கள்
பல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் - 79 மதிப்பெண்கள்

வரும் ஜூன் 2013-ல் இரண்டாம் ஆண்டுக்கான ஐந்து தாள்களையும் முதல் ஆண்டில் இன்னும் எழுதாமல் இருக்கும் இரண்டு தாள்களையும் எழுதிவிடுவதாக முடிவெடுத்துள்ளேன்.

20 comments:

  1. இந்த கோர்சில் சேர்ந்து படித்தால் என்ன பயன்...?

    ReplyDelete
    Replies
    1. பயன் என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. அறிவு பெறுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். இத்துடன் நிற்காது மேற்கொண்டு ஸ்ரீவைணவ வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்யவும் விருப்பம் கொண்டுள்ளேன்.

      Delete
    2. என்ன சார் இது?
      இது சோற்று கல்வி இல்லை. அறிவு பசியை போக்கிக்கொள்ளும் கல்வி. பத்ரி போன்றோர் நம்மை நாமே அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டிய வழியை காண்பித்து கொடுக்கிறார்கள். வாழ்த்துக்கள் பத்ரி.

      Delete
  2. இந்த நடு வய்ிலும் அயராமல் படித்்ு ்ேர்வு எழதி நல்ல மதிப்பெண்கள் வா்்கு்் உங்கள் உழைப்புக்கம்் ஆர்வ்்்ுக்கும் பாராட்டுகள். ்ாநி

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சார். பொண்ணு எக்ஸாமுக்கு படிக்கறப்போ கூடவே நீங்களும் உட்கார்ந்து சத்தம் போட்டு படிச்சி மனப்பாடம் பண்ணுறமாதிரி ஒரு சீன் யோசிச்சிப் பார்த்தேன். சூப்பர் :-)

    ReplyDelete
  4. Great sir.Congrats....I'm still trying to join a PG course :(.

    ReplyDelete
  5. "டேய் தண்டச்சோறு! ஒன்னோட (வலைப்பூ) க்ளாஸ்தானே பத்ரியும்? பத்ரியோட மார்க்கைப்பாரு. அதே வாத்தியார்தானே (சக ப்ளாகர்ஸ்) ஒனக்கும் பாடம் எடுக்கறார் ? ஒனக்கு மட்டும் ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுதி மார்க் வாங்க என்னக்கேடு?" -

    இப்படிக்கு,
    தொலைதூரக்கல்வியில் சேர்ந்து வெறும் ப்ளாக் மட்டும் படித்து பெற்றோரிடம் (மனைவியிடமும்) திட்டுவாங்குவோர் சங்கம்

    ReplyDelete
  6. பத்ரி சார். நான் HCL TAB வாங்கியுள்ளேன். அதில் இணையம் மற்றும் face book ல் தமிழ் எழுத்துக்கள் சரியாக இல்லை. என்ன காரணம் சார்.

    ReplyDelete
  7. Congrats. மேலே ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து இரண்டாவது டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் பத்ரி. என் கணவர் பத்துநாட்களுக்கு முன்பு தான் PMP மற்றும் CPSM தேர்வுகளை முதல் முயற்சியிலேயே கிளியர் செய்தார், அவர் சொன்னது பாடங்களை உள் வாங்கிக் கொள்வது
    கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு, புத்தகத்தை தொடர்ந்து படித்தால் தூக்கம் வருகிறது என்றார். மார்க்- இன்றில் அபோவ் ஏவரேஜ், இன்னொன்றில் 75%. அவருக்கு வயது 54 :-)

    ReplyDelete
  9. congrats. you should also study M.A Shaivam to prove you are secular :-)

    ReplyDelete
    Replies
    1. Vainavam and Shaivam padicha eppadi Secular nnu prove panna mudiyum?

      Delete
    2. I think it's a joke. :)

      Delete
  10. இற்றைக்கும் ஏழெழ் பிறவிக்கும் பயன் படும் படிப்பு இது. வெறும் வங்கிக் கணக்கை வீங்க உதவும் படிப்பல்ல இந்த படிப்பு. கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்றார் ஆழ்வார். அதைப்போல் உயிர் வாழ ஆங்கிலக் கல்வியும் வாழ்வில் உயர ஆன்மிகக் கல்வியும் தேவை. தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. Congrats Badri, do you know whether MA Vaishnavism can be studied from the USA? Is it possible? I am very curious to do the course too.
    Murali
    Michigan.

    ReplyDelete
  12. Who will correct these papers? Is anybody exists?

    ReplyDelete