Thursday, April 11, 2013

ஆண்டிராய்டிலும் என்.எச்.எம் ரீடர்

இப்போது என்.எச்.எம் ரீடர் மின்-படிப்பான் செயலி, ஆண்டிராய்டு செல்பேசிகள், சிலேட்டுக் கணினிகளிலும் வேலை செய்கிறது. கடந்த சில தினங்களாகவே இது கூகிள் பிளேயில் கிடைத்துவந்தாலும் அதனைப் பயன்படுத்தியவர்கள் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். அவற்றில் சில களையப்பட்டு, புதிய வெர்ஷன் இப்போது கிடைக்கிறது. மேலும் நிறைய மாறுதல்கள் செய்யப்படவேண்டும். செயல்பாடு மேம்படுத்தப்படவேண்டும். இருந்தாலும் இப்போது இருக்கும் செயலி ஒரளவுக்குத் திருப்தி தருவதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். Google Play சென்று NHM Reader என்று தேடி, கிடைக்கும் பொதியை இறக்கி, சோதித்துப் பாருங்கள்.

மேலும் புத்தகங்களைச் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மெதுவாகத்தான் நடக்கிறது. கொஞ்சம் சிக்கலான வேலைதான் இது.

இப்போது பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்), சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய மூன்று புத்தகங்களும் இலவசமாக என்.எச்.எம் ரீடருக்குள் படிக்கக் கிடைக்கின்றன. இலவசப் புத்தகங்களாக எண்ணற்ற புத்தகங்களைச் சேர்ப்பதற்கான திட்டத்தைப் பற்றி இன்றி விரிவாகப் பேசியுள்ளோம். வரிசையாக அவை கிடைக்கத் தொடங்கும்.

15 comments:

  1. இந்திரா பார்த்தசாரதியின் பல நூல்களும் கூடக் கிடைக்கின்றன என்பதையும் குறிப்பிடுங்கள்! இவற்றில் ஏசுவின் தோழர்கள், அக்னி, குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன போன்றவை அடக்கம்.

    ஆழம், அலமாரி ஆகிய பத்திரிகைகளை இதே செயலி வழியாகத் தரலாம். தமிழ் பேப்பரைத் தனிச் செயலியாகவே அளிக்கலாம்.

    சரவணன்

    ReplyDelete
  2. இலவச புத்தகம் படிக்க ரிஜிஸ்டர் செய்ய சொல்லுதே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ரிஜிஸ்தர் செய்தால்தான், அதற்கு ஏற்ப, சில என்கிரிப்ஷன் வேலைகளைச் செய்யமுடியும். இலவசப் புத்தகங்களையும் காசுக்கான புத்தகங்களையும் நாங்கள் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. இரண்டுமே என்க்ரிப்ட் செய்யப்பட்ட epub கோப்புகளே.

      Delete
    2. mm, ok na, but on Google play App page, it's mentioned as a feature to be able to access free books without any registration. athanala than ketten :)

      Delete
    3. \\ இலவசப் புத்தகங்களையும் காசுக்கான புத்தகங்களையும் நாங்கள் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை.\\

      ஏனெனில் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இந்தப் புத்தகங்கள் காசு கட்ட வேண்டியவையாக மாறலாம்!

      Delete
    4. பொன்.முத்துக்குமார்Sun Apr 14, 08:47:00 PM GMT+5:30

      \\ ஏனெனில் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இந்தப் புத்தகங்கள் காசு கட்ட வேண்டியவையாக மாறலாம்! \\

      அதுசரி, காசு போட்டு பாடுபடறவன் பாடுபடட்டும், நாம ஒசிலேயே மங்களம் பாடிட்டு இருக்கலாம்.

      Delete
    5. அனான்: இலவசப் புத்தகங்கள் மூன்று வகைப்படும். (1) காப்புரிமை தானாகவே அற்றுப்போன புத்தகங்கள். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதல் பெரும்பாலும் 20-ம் நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகள்வரை வெளியான புத்தகங்கள். இவற்றை எழுதிய ஆசிரியர்கள் இறந்து 60 ஆண்டுகள் கழிந்திருந்தால் இப்புத்தகங்களை யார் வேண்டுமானாலும் பதிப்பித்துக்கொள்ளலாம். (2) தமிழக அரசு, இந்திய அரசு காப்புரிமை வைத்திருப்போரிடம் பரிவுத்தொகை அளித்து புத்தகங்களை தேசிய உடைமை ஆக்குவதன்மூலம் கிடைக்கும் புத்தகங்கள். (3) புத்தக ஆசிரியர்கள் தாங்கள் மனமுவந்து தங்கள் புத்தகங்களை இலவசமாகப் பிறருக்குத் தர முன்வருதல் - இங்கே அவர்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் முறையில் வெளியிடலாம்; அல்லது காப்புரிமையை முழுமையாக வைத்துக்கொண்டு வாசகர்களுக்கு இலவசமாகத் தரலாம்.

      இம்மூன்று வகைப் புத்தகங்களையும் நாங்கள் இலவசமாகவே என்.எச்.எம் ரீடர் வழியாகத் தர உள்ளோம். இது பின்னாள்களிலும் மாறாது. ஆனாலும் இவை என்கிரிப்ட் செய்யப்பட்ட புத்தகங்களாக இருக்கும்.

      மதுரைத் திட்டம், தமிழக அரசின்கீழ் இயங்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்றவை எண்ணற்ற காப்புரிமையற்ற புத்தகங்களை எச்.டி.எம்.எல் கோப்புகளாக வைத்துள்ளன. இவை அனைத்தையும்கூட காசு இல்லாமல் இலவசமாகத் தருவதாகவே உள்ளோம். அதேபோல இவர்களிடம் இல்லாத பல புத்தகங்களையும் இலவசப் புத்தகங்களாகத் தருவதாக உள்ளோம்.

      இவை கட்டாயம் நாளை கட்டணப் புத்தகங்களாக மாறா. ஏனெனில் அப்படி மாறினால், அவற்றை நீங்கள் காசு கொடுத்து வாங்காமல் வேறு தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்வீர்கள்தானே?

      Delete
  3. வேறு நபர்கள் புத்தககங்களை தொகுத்துக் கொடுத்தால், அவற்றை உங்கள் செயலி மூலமாக மற்றவர்கள் படிக்கும்படி செய்யும் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

    ReplyDelete
  4. நான் சமீபத்தில் அஞ்ஞாடி புத்தகத்தைப் பற்றி என்னுடைய பதிவில் எழுதியிருந்தது “.............. அஞ்ஞாடி ஆண்டியையும் கருப்பியையும் பிடித்தாட்டிய கிறுக்கு, பத்ரியையும் பிடித்து ஆட்டுவதை உணர்ந்த இன்னொரு சந்தர்ப்பம். ஆண்டியைவிட பத்ரி இன்னும் மோசமான கிறுக்கு என்பதை பூந்தமல்லிக்கருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற கிராமத்தில் அவர் College of Engineering, Guindy, NSS மாணவர்களுடன் செலவிட்ட நேரத்தையும், மற்றதையும் சொல்லலாம். ஆண்டியை மற்றவர்கள் குறிப்பட்டது மாதிரி, வேலைவெட்டி இல்லாதவரா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம்.
    அஞ்ஞாடி கதைப்படி ஆண்டி இறந்துவிட்டார்தாம். ஆனால் ஆண்டியைப் போன்ற ஆத்மாக்கள், ஊரெல்லாம் “நல்லது விதைத்துக் கொடுக்க” நம்மிடையே இருக்கின்றார்கள். கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகளை நாம் பார்க்கலாம். விதைத்துச் செல்வதில் மட்டும் அவர்களுக்கு அலாதிப்பிரியம். அறுவடையை நாம் அனுபவித்துக்கொள்ளலாம்
    அதே மாதிரி இலவசப் புத்தகங்களையும் காசுக்கான புத்தகங்களையும் நாங்கள் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை உங்களுடைய கருத்து அதை பிரதிபலிக்கின்றது

    ReplyDelete
  5. Do you have support for kindle Fire ? I didn't find NHM reader in Kindle Fire appstore. If not can you also make it available for Kindle Fire also?

    ReplyDelete
    Replies
    1. I have discussed this internally. We will revert to you on when this will be placed in Kindle Marketplace.

      Delete
  6. பத்ரி,
    என்எச்எம் ரீடரை பயன்படுத்திப் பார்த்தேன்.

    மிக நல்ல முயற்சி.அசத்தலான வடிவமைப்பு.பின்வண்ணத்தைக் கருமையில் மாற்றும் வசதி மிக நல்லது.
    ஐபேடில் படிக்கும் போது பொதுவாக திரை ஒளிரும் தன்மையினால் கண்களுக்கு அயற்சி ஏற்படுகிறது.
    இன்னும் கிண்டில் ஃபைரில் இருப்பது போன்ற ஒளிரா வெள்ளை நிறத்தையும் ரீடரில் வைக்க முடிந்தால் அற்புதம்.

    எழுத்துக்களின் ஒளிரும் அளவைக் கூட்டும்|குறைக்கும் வசதி, சரியாக வேலை செய்ய வில்லையோ என்று ஒரு ஐயம் இருக்கிறது..பார்க்கவும்.

    வாங்கிய புத்தகங்கள் கோப்பில் சேமிக்கப் படும் போது, கைப்பேசியின் செயல்பாடு படிதிறன்நினைவு-ராம்-குறைவதாகவும் தோன்றுகிறது..

    நான் ட்ராய்ட் மற்றும் ஐ இயங்குதளம் இரண்டிலும் பார்த்து விட்டேன். ஐ இயங்குதளத்தில் இந்த இயக்க வேறுபாடு அவ்வளவாகத் தெரியவில்லை.ஆனால் ட்ராய்ட் தொலைபேசி திணறுகிறது.

    ஆனால் இன்றைய படிப்பான்கள் அனைத்தையும் ஒப்பு நோக்க, தமிழில் கிடைப்பதும் பயன் அனுபவத்திலும் என்எச்எம் ரீடர் முன்னிற்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    பாராட்டுகள் மற்றும் நன்றி பல.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நீங்கள் சொல்வதுபோல நாங்கள் நிறைய முன்னேற்றங்களைச் செய்யவேண்டும். அவை என்னென்ன என்றும் ஓரளவுக்கு அறிவோம். செயல்படுத்துதலில் உள்ள பிரச்னைகள்தாம். ஆனால் வரும் வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் செல்வோம். உங்களைப் போன்ற வாசகர்கள், பயனாளர்களின் கருத்துகளைத் தொகுத்து அவற்றுக்கு ஏற்ப மாறுதல்களைச் செய்துகொண்டே வருகிறோம்.

      Delete
    2. முக்கியமான ஒரு நெருடல்..இணையத்தில் இல்லாதிருக்கும் போதும் படிப்பான் உள்நுழைய பயனர் பெயரும் கடவுச் சொல்லும் கேட்கிறது.அது சரிதான்..ஆனால் இணையத்தில் இல்லையெனில்,பயனர் பெயரில் உள்நுழையவே இயலவில்லையே...இது சிறிது முரண்பாடாக இருக்கிறது..

      இணையத்தில் இல்லாத நிலையிலும் நான் தரவிறக்கிய புத்தகங்களை பயனர் பெயரின் வழி படிக்க இயலவேண்டும்..அதுதான் சரியான நிலை என்று நினைக்கிறேன்..

      இது தொழில்நுட்பப் பிரச்னையா அல்லது வடிவாக்கமே இப்படித்தானா?

      இரண்டாவது காரணம் எனில் இதைச் சரி செய்ய வேண்டுவது அவசியம்.(தரவிறக்கிய புத்தகங்களை ஒரு ரயில் பயணத்திலோ அல்லது விமானப் பயணத்திலோ படிப்பது இயலாத காரியம் எனும் போது, இந்தப் படிப்பானின் பயனே கேள்விக் குறியாகிறது!)

      Delete
  7. என்.எச்.எம். சப்போர்டுக்கு நான் அனுப்பியுள்ள (ஆங்கில) கமெண்டுகளைக் கீழே தருகிறேன்.

    1) Page number (current/total) should be displayed. I've never seen an ebook reader that doesn't display page number.

    2) In Landscape mode, page should be displayed as two columns.

    3) You can add animation effect for page turning, though this is not absolutely essential.

    இத்துடன் இன்னொன்று - ராமானுஐன் புத்தகத்தில் கணித சமன்பாடுகள் ( ஏ-யின் இருமடி), கிரேக்க எழுத்துகள் (பை, தேட்டா) சரியாகத் தெரியவில்லை. என்.எச்.எம். முக்கு மின்னஞ்சலாக ஸ்கிரீன்ஷாட்கள் அனுப்புகிறேன்.

    மேலும் தினமும் குறைந்தது ஒரு புதிய புத்தகம் (இலவசமோ விலையுள்ளதோ) சேர்க்கப்பட்டால் ஆர்வம் குறையாமல் இருக்கும்!

    சரவணன்

    ReplyDelete