தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கலை, இலக்கியம், பாரம்பரியம் தொடர்பாக ஒரு உரை நிகழ்ச்சியை நடத்திவருகிறது. தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா பள்ளியில் விநோபா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று மாலை நிகழ்ச்சியில் பேரா. ஜம்புநாதன், புறநானூறு காட்டும் மானுடம் பற்றிப் பேச உள்ளார்.
ஜம்புநாதன் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.
இவருடன் சேர்ந்து நான்கு நாட்கள் நாங்கள் ஒரு குழுவாக புதுக்கோட்டையின் பல இடங்களுக்குச் சென்றுவந்தோம். இவர் புதுக்கோட்டையிலேயே பிறந்து வளர்ந்தவர். படித்தவர். அங்கேயே வேலை செய்தவர். ஒரு சைக்கிளிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுவந்தவர். அப்பகுதியின் பல பெருங்கற்காலப் புதைகுழிகளைக் கண்டுபிடித்த பெருமை பெற்றவர். அவற்றின் எண்ணிக்கைகளை அடிப்படையாக வைத்து தமிழகத்திலேயே மாந்தன் தோன்றிய பகுதி புதுக்கோட்டையாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு (சற்றே விந்தையான!) கோட்பாட்டையும் கொண்டுள்ளவர்.
ஜம்புநாதன் இன்று புறநானூறு குறித்துப் பேசுவதைக் கேட்க அவசியம் வருக.

பத்ரி,
ReplyDeleteபேச்சின் ஒலிக் கோப்பை அவசியம் இந்தப் பக்கத்தில் பகிர வேண்டுகிறேன்.
பல தளங்களில் இயங்கும் உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள் பல..
This comment has been removed by the author.
ReplyDeleteதிரு.பத்ரி., இந்த சொற்பொழிவு நடந்ததா ? பேச்சின் சாராம்சம் என்ன? ஒரு சிறு கட்டுரை எழுத முடியுமா ?
ReplyDeleteஇந்த சொற்பொழிவு நடந்ததா ? பேச்சின் சாராம்சம் என்ன? ஒரு சிறு கட்டுரை எழுத முடியுமா ?
ReplyDelete