இந்த ஆண்டு, இயல்பியலுக்கான நோபெல் பரிசு பீட்டர் ஹிக்ஸ், ஃப்ரான்சுவா எங்க்லேர் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. ஹிக்ஸ் என்பவர் பெயர் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்ற ஆண்டு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டறியப்பட்டு, ‘கடவுள் துகள்’ என்று வெகுஜன ஊடகங்களில் அனைவராலும் உளறித் தள்ளப்பட்டது. போஸான் என்ற பெயர் காரணமாக, சத்யேந்திரநாத் போஸ் பற்றியும் கொஞ்சம் மக்கள் தெரிந்துகொண்டனர்.
இவ்வுலகம் எப்படி உருவானது, எவற்றால் இவ்வுலகம் நிரம்பியுள்ளது என்பது குறித்த எளிமையான கேள்விகளுக்கு நம்மிடையே ஓரளவுக்குத்தான் விடை உள்ளது. அந்த விடையின் ஒரு பகுதி, பல்வேறு அடிப்படைத் துகள்கள். இவை எவற்றையும் நம் கண்களால் காண முடியாது. சோதனைச் சாலையில் சில சோதனைகளை உருவாக்கி அவற்றில்தான் இவை இருப்பதை உறுதி செய்யமுடியும்.
மிக எளிதான “எலெக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான்” கொண்ட அணுக்கள் என்பதிலிருந்து நாம் மிகவும் முன்னே வந்துள்ளோம். பல்வேறு துகள்கள், அவற்றை உள்ளடக்கிய கோட்பாடுகள், அவற்றைக் கண்டுபிடிக்கச் செய்யப்பட்ட பரிசோதனைகள், இவற்றின் பின்னணியில் இருந்த ஆராய்ச்சியாளர்கள் என அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள Robert Oerter எழுதியுள்ள “The Theory of Almost Everything: The Standard Model, the Unsung Triumph of Modern Physics” என்ற புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன். இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அமேசானில் பார்த்தேன். பழைய புக் $2. ஆனால் Shipping $16 :-( Kindleஉம் பத்து டாலர். யாராவது மலிவான இந்தியப்பதிப்பு கொண்டுவந்தால்தான் உண்டு.
ReplyDeleteதிரு.பத்ரி,
ReplyDeleteசுருங்கச்சொல்லி விவரத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். 'இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்போது, ஒரு விஞ்ஞான உண்மை தென்படுகிறது.