நேற்று திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசினேன். இந்தியாவின் வளர்ச்சிக்கான பொருளாதார மாதிரிகள் - என்பதுதான் தலைப்பு. சுமார் 25 பேர்தான் இருந்தார்கள். (என்ன பேசினேன் என்பது பற்றிப் பின்னர் பதிவிடுகிறேன்.) பேச்சு சற்று தாமதமாகத் தொடங்கியது. அந்த நேரத்தில் சிலர் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
என் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் "நீங்கள் ஏன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட்டுகள் மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்றேன். அவர் பூம்புகாரில் இறால் பண்ணை குறித்து தன் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார். அதன் இறுதியில் கார்ப்பரேட்டுகள் என்றாலே தீயவர்கள் என்றார். நான் அதனை மறுத்துப் பேச ஆரம்பித்தேன். கார்ப்பரேட் என்றாலே தீயவர்கள் என்ற எண்ணம் தவறானது என்றேன். நானே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைத்தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றேன்.
அவர் உடனே "நீங்கள் நல்லவர் இல்லை" என்றார்.
நான் அதிர்ச்சியுடன் "எப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாதே?" என்றேன்.
"நரேந்திர மோடியை ஆதரிப்பவர் நல்லவனாக இருக்க முடியாது" என்றார். தொடர்ந்து, என் எழுத்துகள் எல்லாம் ஏழைகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் எல்லாமே திட்டமிட்டு ஏழைகளுக்கு எதிரானவையாக உருவாக்கப்படுகின்றன என்று பேசத் தொடங்கினார்.
இந்தத் தர்க்கத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போய்விட்டேன் என்பதுதான் உண்மை.
அதன்பின் மேடைக்குச் சென்று என் பேச்சை முடித்துவிட்டு, கேள்விகள் இருக்கின்றனவா என்று கேட்டேன். அந்த நண்பர் என் உரை முழுதையும் கேட்டுக்கொண்டிருந்தார், ஆனால் கேள்வி எதையும் கேட்கவில்லை. அவர் அருகில் அமர்ந்திருந்த இன்னொருவர், "நீங்கள் (ஜகதீஷ்) பகவதியின் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள். அவர் மோடியை ஆதரிக்கிறார். அப்படியானால் நீங்கள் பாஜகவை ஆதரிக்கிறீர்களா?" என்றார்.
பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் எனக்குப் பிடித்தமான அளவு வலப்பக்கத்தில் இல்லை; சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஆகியோரின் கருத்துகள் எனக்கு ஏற்புடையவை அல்ல; ஆனால் பகவதியின் கருத்துகளை ஆதரிக்கிறேன், மோதி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன் என்றேன்.
இது பாஜகவின் இன்னொரு முகம் என்று சொல்லிவிட்டு அவர் எழுந்துசென்றுவிட்டார்.
லிபரல் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து, கட்சி சார்பின்றி தமிழகம் முழுக்கச் சென்று மக்களிடம் உரையாட நல்ல உந்துசக்தி ஏற்பட்டுள்ளது.
// சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஆகியோரின் கருத்துகள் எனக்கு ஏற்புடையவை அல்ல;
ReplyDelete//
நான் ஆர்.எஸ்.எஸ்.சோ, மோடி ஆதரவாளனோ சர்வ நிச்சயமாய் கிடையாது. ஆனால் சுதேசி பொருளாதாரத்தின் மிகத் தீவிர ஆதரவாளன். அதேபோல் சுதேசி பொருளாதாரம் என்பது ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டுமே உரித்தான பட்டா சொத்தல்ல. காந்தி முதற்கொண்டு பலரும் பேசியது. என் மண்ணை நேசிக்கும் எல்லாருக்கும் உரித்தானது.
Good initiative Mr.Badri. I request you to give lectures on liberal economic policies mainly to final year engineering college students (Tier II and Tier III) of Tamilnadu. Many students who are placed in a company think its due to their individual skillset and who are not placed in a company think, they are victimised by liberal economic policies.
ReplyDeleteஉங்கள் சொற்பொழிவுகள் தொடரட்டும். 'வெள்ளை வேட்டி வேதாந்திகள்' உங்களை இடைமறிக்கக்கூடும். கவலைப்படாதீர்கள். உங்கள் கம்பெனி பெரிதாக வளர்ந்தபின் உங்களிடமே தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கேட்டு வருவார்கள் அவர்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteஅய்யா பத்ரி,
ReplyDeleteநீங்கள் லிபரல் பொருளாதாரம் பற்றிப் பேசுவதற்கு முன்னால், ஒரு 101 வகுப்பு வைத்து, போராட்டமுதல்வாதிகளின், எதைஎடுத்தாலுமெதிர்ப்போமாராளிகளின் காதைத் திருகி, கன்னத்தில் செல்லமாக இரண்டு அறை கொடுத்து, மண்டையில் குட்டி, தயவுசெய்து அடிப்படைப் பொருளாதாரத்தை - அதாவது பொருளாதாரத்தின் அடிப்படைகளைக் கற்றுத் தரவும். பின்னர் லிபரலாக அவர்களை உயர்த்தலாம். :-)
எல்லாவிதமான துறைக் கல்லூரிகளிலும், முதல் இரண்டு செமஸ்டர்களில் இந்த பொருளாதாரம், சமூகவியல், கணக்குப் பதிவியல், வரலாறு, புவியியல் போன்றவைகளின் அடிப்படைகள் படிப்பிக்கப் பட்டு, கட்டாயப் பரீட்சைகள் நடத்தப் பட்டால் - இவற்றில் 80% மதிப்பெண் வாங்கினால் மட்டுமே மேலே படிக்கலாம் என்றமுறை வந்தால் நாம் ஒருவேளை உருப்படலாம் - இப்படி உருப்பட்டால் நல்லதென என் எண்ணம்.
இல்லையென்றால் - ஒன்றிரண்டு வார்த்தைகளைச் செய்தித்தாட்களில் படித்து விட்டு ஒரு இழவையும் புரிந்து கொள்ளாமல் கார்ப்பரேஷன், ரிஸெஷன், ஜிஎன்பி, எஃப்டிஐ எனச் சும்மனாச்சிக்கும் உளறிக் கொண்டேதான் - எப்படா அடுத்ததை எதிர்த்துப் போராடலாம் என்றே, பொழுதன்னிக்கும் இருக்கும் நம் சமுதாயம்.
அண்மையில் வந்த ஒரு (NRI) மாமனிதர் - உறவினர்தான், நம் தமிழ்ச் சமுதாயத்தினர்தான் - ஒரு சூடான பேச்சுவாக்கில், இந்தியப் பொருளாதாரம் ரிஸெஷனில் இருக்கிறது, உங்களை பாஜக வந்தாலும் முன்னேற்றவே முடியாது என்றார்! அப்படியா என்ன, ரிஸெஷன் என்றால் என்னவென்று கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை - நேரடியாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் - ‘ஸ்டேட்ஸில்’ ஒரு மாதிரி கணக்கு, இந்தியாவில் வேறு மாதிரியென்றார் - இளப்பமாகச் சிரித்துக்கொண்டே.
சரி, ஒங்க ‘ஸ்டேட்ஸில்’ என்ன மாரி கணக்கு என்றேன்? அது கொஞ்சம் சிக்கலான விஷயம், உனக்கெல்லாம் பொருளாதாரம் புரியாதென்றார். நான் சொன்னேன் - அய்யா, இரண்டு அடுத்தடுத்த காலாண்டுத் தொகுதிகளில், தொடர்ந்து எதிர்மறையான மொத்த வளர்ச்சிவிகிதம் (nett negative growth rate over two consecutive quarters) இருந்தால்தான் அது ஒங்களுடைய ரிஸெஷன். இங்கும் கணக்கு அப்படித்தான் என்றேன். இங்கு நிச்சயம் ரிஸெஷன் இல்லை, ஒங்க ‘ஸ்டேட்ஸில்’ எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் தான் சொல்லவேண்டும் என்றேன். கொஞ்ச நேர அமைதிக்குப் பின் - அடுத்த தலைப்புக்குச் சென்று விட்டார்: அதாவது இந்தியர்களுக்கு நேரத்தின் அருமையே தெரியாது. டட்டடா டட்டடா...
ஆஹா, நீங்கள் சொல்வது சரி, எனக்கு வேலையிருக்கிறது என்று உடனே வெளியே சென்றுவிட்டேன். :-(
எதற்கு இதைச் சொல்லவருகிறேன் என்றால் - பொருளாதாரம் பற்றி ஒரு இழவையும் தெரியாதவர்களிடம் ஏன் வம்புக்குப் போகிறீர்கள்?
ஒன்றுமே தெரியாமல், மொட்டைத் தலைக்கும் சோ-வுக்கும் முடிச்சு (ம்ம்ம், இது எப்படி??) போடுகிறவர்களுடன் ஏன் மல்லுக்கட்டவேண்டும்? ;-)
ஆனால்... சில விஷயங்களைச் செய்துதானாக வேண்டும். :-(
அதற்கு நீங்கள் நல்லவனாக இருக்கக்கூடாதுதான். ;-)
நிச்சியமாக நீங்கள் லிபரல் பௌலாதார கொள்கையை குறித்து பேசவேண்டும். உங்கள் பேச்சின் எதிர்மரைக்காகவாவது, மேலும் சில பேர் இத்தகைய பேச்சுக்கள் அளிக்க முன்வரலாம், இதனால் தமிழகத்தின் மேடை பேச்சு கொஞ்சம் மேன்மை பெரும்.
ReplyDeleteதிரு.பத்ரி,
ReplyDelete(1) நீங்கள் வெற்றிகரமாக ஒரு கார்பொரேட் நிறுவனத்தை உருவாக்க என் வாழ்த்துக்கள். அதே நேரத்தில் உங்களைப் போன்றவர்களுக்கு நான் 3வது இடத்தையே
அளிப்பேன். திரு.நாராயணமூர்த்தி, ஆஸிம் பிரேம்ஜி போன்றவர்களுக்கு 2வது இடம். ஆனால், சோஷலிஸத்தின் கோரப்பிடியிலும், Escape Velocity of (Pluto)வினால்
உயர்ந்து, சமூகத்தையும் உயர்த்தி, அற்புதமான கார்பொரேட் நிறுவனங்களை உண்டாக்கிய டாடா, அம்பானி மற்றும் பிர்லா போன்ற குழுமங்களுக்கு முதல்
இடம். 100ல் 90 பேர் கார்பொரேட் நிறுவனங்களைப் பழிக்கத்தான் செய்வார்கள். என்னால் முடிந்தது, நான் மீதமுள்ள 10 பேரில் உள்ளேன். அவர்களை
வணங்குகிறேன்.
(2) Atleast அமேரிக்காவில், நேரடியாக வலதுசாரித்துவ பொருளாதார கொள்கையை ஆதரிப்போர் சமூகத்தில் (அரசியல்வாதிகளை விடுத்து) குறிப்பிடத்தக்க
அளவில் உள்ளனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை Centre-Right என்ற நிலையில்தான் பலர் இருப்பதாக அவதானிக்கிறேன். அதாவது, வலதுசாரித்துவ
பொருளாதாரத்தை ஆதரித்துக் கொண்டே, "ஏழைகளுக்காக, தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக" என்ற Templateனுள் பேசுபவர்களையே என்னால்
காணமுடிகிறது. லிபரல் கொள்கைகளினால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், அந்த இலாபத்தை மேன்மேலும் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்த வேண்டும்
என்று கூறாமல் (உதாரணமாக கட்டமைப்பு, Autonomous Regulatory Institutions, பல்துறைகளில் அறிவியல் ஆராய்ச்சி போன்றவை), Redistribution செய்வதை தவறு
என்று கூறாமல் இருப்போரும், அதை சரி என்றே கூறுபவர்கள் பலரை லிபரல் பொருளாதாரத்தை ஆதரிப்போரிடையே கூட பார்க்க முடிகிறது.
(3) இதன் விளைவு, பொருளாதாரம் உயருகையில் மானியங்களின் அளவு உயர்வதையும், வீழ்கையில் சிக்கன நடவடிக்கைகளையும் மாறி மாறி
அனுபவிக்க வேண்டியதாகிறது. (இந்தியா, அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்).
(4)என்னைப் பொறுத்தவரை, கார்ல் மார்க்ஸும், எங்கெல்ஸும் கூறியதை நான் முற்றாக நிராகரித்தாலும், அவர்கள் கூறிய "ஜனநாயகம் சோஷலிஸத்திற்கே
இட்டுச்செல்லும்" என்ற வாக்கியம் மீண்டும் மீண்டும் உருவாகி மறைவதை காண்கிறேன். நான் கூற வருவது ஜனநாயகத்தில் என்னதான் வசதிகள்
இருந்தாலும், அனைவர்க்கும் ஓட்டுரிமை இருப்பதாலும், ஏழைகளே பெரும்பாலும் இருப்பதாலும், மானியங்கள் வேண்டும் என்ற குரல் எப்போதுமே ஒலிக்கப்
போவதாலும் மனித சமூகம் என்றென்றும் "முழுவதும் புதையாத புதைகுழியிலியே" உழல வேண்டியிருக்கும் என்றே நினைக்கிறேன்.
(5) முழுமையான பொதுவுடைமைச்சமூகம் உருவானாலும், சுயநலம், புகழ்ச்சி, ஆசை (பேராசையும் கூடத்தான்) போன்ற இயற்கையான மனித
குணாதிசயங்களை ஒடுக்க முடியாததால், டாக்டருக்கும் ஒரே சம்பளம், கம்பௌண்டருக்கும் ஒரே சம்பளம் என்ற பொதுவுடைமை நீண்ட காலம் தாக்குப்
பிடிக்கவும் முடியாது. இதை வரலாற்றில் பார்த்து விட்டோம். அதே நேரத்தில் ஓசியிலோ, மானியத்திலோ கிடைக்கும் வரை கிடைக்கட்டுமே, நமக்கும்
சேர்த்து பணக்காரன் உழைக்கட்டுமே என்று நினைப்பதும் மனித இயற்கைதானே! பெரும்பான்மை அவர்கள் கையில் இருப்பதால், மானியத்தை ஒழிப்பது
கனவாகவே போகும்.
(தொடரும்)
R Balaji
(6) லிபரல் கொள்கைகளை மக்களிடையே பரப்பப் போகிறீர்களா? என் மனக்கணக்கு. உலகில் மானியத்தையும், ஓசியையும் வேண்டுபவர்களே அதிகம் பேர்
ReplyDeleteஇருப்பார்கள். அறிவுக்கூர்மை, திறமை, உழைப்பு, ஆபத்தை எதிர்கொள்ளும் திறன், அதிர்ஷ்டம் ஆகியவற்றால் முன்னேற வேண்டும். அதே நேரத்தில்
தோல்வியடைந்தால் கீழேயும் விழ வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள 100ல் 10 பேர் தேறலாம். "எல்லார்க்கும் எல்லாம்"மில்தான் கவர்ச்சி இருக்கிறது.
பைத்தியக்காரத்தனமான, எதார்த்தத்திற்கு விரோதமான கருணை இருக்கிறது.
இக்கட்டுரையை பாருங்கள். http://www.washingtonpost.com/opinions/robert-j-samuelson-lets-get-rid-of-the-term-entitlements/2013/10/20/e3bd464c-3809-11e3-8a0e-4e2cf80831fc_story.html
"Americans oppose excessive government spending and persistent deficits. Yet they also support the individual benefit programs (a.k.a. “entitlements”), led by Social Security, that drive
spending and deficits.
அரசு செலவு குறைய வேண்டும். ஆனால் ஓசியும், மானியமும் தடைபடக்கூடாது. பெரும்பாலானோர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றே நான்
நினைக்கிறேன்.
(7) அமேரிக்காவில், பெரும்பாலும் வலதுசாரித்துவ பொருளாதார கொள்கைகளை பேசுவோர், சமூக, சமய நிலைப்பாடுகளில் பழமைவாதிகளாகவே
இருக்கிறார்கள்.(Abortion,Gay marriage etc) இந்தியாவிலும், உங்களைப் போலவே, நானும் ஆதரிக்கும் மோடியின் கட்சியிலும் இப்படிப்பட்டவர்களைத்தான் பார்க்க
முடிகிறது. இவர்களை செல்லமாக "பசு-ராம்" குழு என்று அழைக்கலாம். எங்கே சுற்றினாலும் பசுவிற்கும் ராமருக்கும் வந்து விடுவார்கள்.
(8) பொருளாதாரத்தில் வலதுசாரித்துவத்தையும், அதே நேரத்தில், இந்த "பசு-ராம்" குழுவினரின் சமூக, சமய நிலைப்பாடுகளை எதிர்த்தும் வருவோரை
எவ்வாறு அழைப்பது? நான் இக்குழுவிற்கு வாக்களிக்க இருக்கிறேன். ஆனால் இக்குழுவில் இல்லை என்பது எனக்கே முரணாக உள்ளது. (இருக்கேன் ஆனா
இல்ல!)
(9) ஒருபுறம் ஜனநாயகத்தினால் விளைந்த நன்மைகள், தாராள பொருளாதாரத்தினால் உருவாகும் பணக்காரர்கள் மற்றும் நடுத்தர மக்கள். மேலும் கீழ்
நிலையிலுள்ளவர்களுக்கு உருவாகும் வாய்ப்புகள். அதே நேரத்தில், அதே ஜனநாயகத்தினால் உந்தப்பட்டு வரும் சோஷலிஸம். எனக்கென்னவோ, இந்த
சுழலுக்கான மருந்து கிடைக்கவே போவதில்லையோ என்ற அச்சமே உள்ளது.
(10) ஒரே வழி; "எல்லார்க்கும் எல்லாம்" என்றென்றும் கிடைக்காது என்றும், "ஏழைகள் சமூகத்தில் இருக்கவே செய்வார்கள்" என்பதையும் சமூகத்தில்
பெரும்பாலானோர் (ஏழைகள் உட்பட) ஏற்றுக் கொண்டால்தான் தீர்வு வரும். அது நடப்பது கனவில்தான் சாத்தியம். ஆகவே லிபரல் கொள்கைகள் என்று
நம்மைப் போன்றவர்கள் பெருமை பீத்தகளையர்களாக திரிய வேண்டியதுதான். சிவாஜி போல கூறுவதாக இருந்தால் "என்னைக்காவது ஒருநாள்"
பெரும்பாலான மக்கள் உண்மையை உணர்வார்கள் என்ற அசட்டு நம்பிக்கையுடன் வாழ்ந்து தீர வேண்டியதுதான்.
பொதுவுடைமை கொடூரத்தை அனுசரித்து தற்காலிகமாக வெல்வதை விட, "சிலருக்குத்தான் எல்லாம்-பலருக்கு சிலதான்" என்று தைரியமாக உண்மையை
முழங்கி தோற்றுப் போவதே மேல்தான். (நாம் உருவாவதே மில்லியன் கணக்கான விந்தணுக்களில் ஒன்றின் வெற்றியின் மூலம் தானே! அனைத்து
விந்தணுக்களுமா வெல்கின்றன? ஒன்றைத்தவிர மற்றவை மடியத்தானே செய்கின்றன!)
R Balaji
Mr R Balaji: I don't think one needs to stretch that far. Yes - a bit of democratic 'socialism' is inevitable as you mentioned. But, it is okay to spread the idea that we can only 'share' a very small pie without liberal capitalism -- increasing debt to increase pie size won't scale. At least to increase the size of the pie to be shared, we need liberal capitalism. I think that would be palatable for many - including those who would want to "share" without contributing :-)
ReplyDeleteமோதியை ஆதரிப்பவர் எல்லாம் கெட்டவன் என்கிறார்கள் சிலர். இஸ்லாமியர்களெல்லாம் தீவிரவாதிகள் என்கிறார்கள் சிலர். இரண்டு பேருக்கும் வித்தியாசம் இல்லை போல் தெரிகிறது.
ReplyDeleteThe problem with you and many others who write or speak in Tamil in public fora, print and TV is that you speak with little knowledge and assert.
ReplyDeleteIt takes time to learn and understand. It takes more time to get a grip on issues as what you get to read in media is not sufficient.
One need not be an expert but one should at least know the limitations in one's own reading and understanding. There is more to Amartya Sen than the controversy of Bhagwati vs. Sen. Understanding Sen through this controversy can result in a perspective that ignores the core of his contribution.You cannot understand Sen unless you are keen to understand ethics and its role in policy.Sen's capability approach according to some is better than Rawlsian theory of justice. But how many of you have bothered to do a 101 in both.
European countries did not follow the U.S model in many aspects and achieved greater equality and more social welfare. Germany and Nordic countries rank much above the USA in many indicators.Canada is another example. Yet you seem to harp on free market ideology that negates the idea that society or government cannot remain oblivious to needs of the majority. Try to understand the history of economic thought and particularly the rise, fall (and rebirth) of Keynesism.
I agree I have to learn more. I am humble enough. You seem to know more. If you can point to some of your writings, or even specific links or titles of books written by others (rather than - learn about X, do 101 in Y kind of advice) will help me. And you do not have to be anonymous to point out obvious flaws in my arguments (but that is your choice).
DeleteHello Anon,
DeleteJohn Rawls and his Theory of Justice are great, of course. But personally, I do not know of any respected Economist or a Ethicist or a Jurisprudentialist comparing John and Amartya and assessing that Amartya's Capability model is better than that of John.
Educate me please, if you have some pointers.
Anyway, the fact that Amartya colluded with a person like Martha Nussbaum and spread unsubstantiated rumours and carried out a blatantly partisan propaganda points to his immaturity model. Where is ethic here?
I am not even bringing in his sad and poignant begging bowl model of economics.
I think, we need to discuss this threadbare, instead of sermonizing.
This man Amartya Sen lives comfortably in a capitalist country and sermonizes begging bowl economics to India.
DeleteWhat are the "needs of majority" that Mr Anon hinted? Free food, free drink and free .... ?? And who has to "plan" for these "needs"? Bunch of bureaucrats and politicians? Haven't we tried that for many years and failed?
This is a comment on Badri's post - by a common friend -- by way of sharing his opinion of how corporations work. (I know of many such corps & if one carefully looks around, he/she could find many too; of course, there are blackguards in every field, without exception)
ReplyDelete----
Ram, Badri,
Just a note in reference to நீ நல்லவன் கிடையாது!
There is this Cadabams Center for Rehabilitation - an organisation to serve persons with mental health problems. They are situated about 35km from Bangalore. (http://cadabams.org/)
My cousin is mentally challenged and we got him admitted at Cadabams where they take good care of him. Cadabams charges us a hefty amount for taking care of him and we are glad to pay the fee.
Earlier, my cousin was in a hostel in Mugappair, where the care wasn't quite satisfactory. I can't blame them as they used to charge about a couple of thousand rupees a month. That's a classic case of good intention with poor execution, primarily because it was run as a charity - not as a corporate.
Cadabams is run as a business and that's the only way to run an organization that can offer services, create jobs and bring in prosperity.
----
Sir,
ReplyDeleteAny of the Books like 'Naked Economics' by Charles Wheelan & Burton G. Malkiel, 'The Undercover economist' by Tim Harford, or 'Economics in one lesson' by Henry Hazlitt can be a good starting point for people who want to understand the basics. 'Crisis Economics' by Nouriel Roubini throws good light on the 2007/2008 crisis and helps to make sense of it.
Thanks
Ramanan