Sunday, June 15, 2014

சோலார் விளக்கு + மொபைல் சார்ஜர்

நான் சுமார் ஓராண்டுக்குமுன் சூரிய ஒளி மின்சாரத்துக்கான அமைப்பை என் வீட்டில் ஏற்படுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு முழுதும் அதனால் என்ன சேமிப்பு என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தேன்.

சூரிய ஒளி மின் அமைப்பை ஏற்படுத்துவதற்குமுன் ஓராண்டில் நான் செலவழித்த மின் கட்டணம் சுமார் ரூ. 43,000 37,000. சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவியதன்பின் ஓராண்டில் செலவழித்த தொகை சுமார் ரூ. 20,000. ஓராண்டில் சேமிப்பு சுமார் ரூ. 23,000 17,000/- [கூட்டல் பிழை காரணமாக முதலாம் ஆண்டு செலவழித்த தொகையைச் சற்றே அதிகமாகக் குறிப்பிட்டுவிட்டேன்.]

***

நான் வசித்துவந்த வீட்டை வாடகைக்குத் தர எண்ணியுள்ளேன். என் பெண்ணின் பள்ளிக்கூடத்துக்கு அருகில் ஓரிடத்துக்கு நான் குடி பெயர்ந்துள்ளேன். புது இடம் வாடகை வீடு என்பதால் இங்கு சூரிய ஒளி மின்னமைப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் வேறு சில காரணங்களுக்காகத் தேடியபோது சோலார் விளக்கும் மொபைல் சார்ஜரும் சேர்ந்த ஒரு பொருள் கிடைத்தது. சென்ற வாரத்திலிருந்து இதனைப் பயன்படுத்திவருகிறேன்.

கிரீன்லைட் பிளானெட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இது. மிக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ள பொருள்.


இதன் முதல் பலம், இதன் எளிமை. சோலார் பேனலை வெயிலில் வைத்து அதிலிருந்து நீளும் ஒயரை விளக்கின் பின் செருகினால் போதும். தானாகவே பேட்டரி சார்ஜ் ஆக ஆரம்பித்துவிடும். சூரிய ஒளி எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை ஒளிரும் பட்டை ஒன்று காட்டிக்கொடுத்துவிடும்.


விளக்கின் பின்பகுதியில் இரண்டு USB slots உள்ளன. யு.எஸ்.பி மூலம் சார்ஜ் செய்யப்படும் கருவிகளை இதில் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்தக் கருவியுடன் USB->Nokia சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு நோக்கியா ஃபோன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். கிட்டத்தட்ட அனைத்துவித ஃபோன்களையும் சார்ஜ் செய்வதற்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் வீட்டில் இருக்கும் இரண்டுவிதமான அடிமட்ட நோக்கியா ஃபோன்கள், ஐஃபோன், கிண்டில் ரீடர், நெக்சஸ் 7 இஞ்ச் டாப் ஆகியவற்றை இதன்மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடிகிறது. ஐபேடை சார்ஜ் செய்ய முடியவில்லை.


முதலில் சார்ஜ் செய்வதைப் பார்ப்போம். சென்னை போன்ற இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் நெருக்கமாகக் கட்டப்பட்டிருப்பதாலும் மொட்டைமாடி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பதாலும் எங்கே வெயில் நேரடியாகக் கிடைக்கும் என்று நீங்கள் தேடவேண்டியிருக்கும். ஆனால் எப்படியும் கட்டாயம் பால்கனியில் அல்லது ஜன்னல் திட்டுகளில் என்று கிடைத்துவிடும். என் வீட்டில் காலை தொடங்கி பின்மதியம் வரை ஒரு ஜன்னல் திட்டிலும் அதன்பின் மாலைவரை ஒரு பால்கனியிலும் நேராக வெயில் படுகிறது. வெயில் படும் இடத்தில் சோலார் பேனல் படுமாறு வைத்துவிட்டால், அது பேட்டரியை சார்ஜ் செய்துவிடும். இந்தமாதிரி சுமாராகக் கிடைக்கும் வெயிலில் நாள் முழுவதும் எடுத்துக்கொண்டாலும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடிவதில்லை. ஆனால் சுமார் 80% சார்ஜ் ஆகிறது.

பயன்பாட்டில், மேசை விளக்கு, என் மகள் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னதான் குழல் விளக்கு இருந்தாலும், மேசை விளக்குக்கு ஓர் அவசியம் இருக்கத்தான் செய்கிறது. விளக்கைப் பயன்படுத்தும்போது பேட்டரி அதிகமாக டிஸ்சார்ஜ் ஆவதில்லை. அதேபோல நோக்கியா ஃபோன்களை சார்ஜ் செய்யவும் அதிகம் பேட்டரி சக்தி தேவைப்படுவதில்லை. அதற்கு அடுத்து கிண்டில் ரீடர். ஆனால் ஐஃபோன், நெக்சஸ் டாப் ஆகியவை பேட்டரியை அப்படியே உறிஞ்சிவிடுகின்றன.

இந்தக் கருவியின் விலை ரூ. 2,300/-. Sun King Pro 2 என்பது இதன் பெயர். Flipkart தளத்தில் இதனை வாங்கும் வசதி இருக்கிறது.

இந்த விளக்கை கையில் டார்ச் லைட் போல எடுத்துச் செல்லலாம். மேசை விளக்காகப் பயன்படுத்தலாம். மேலே தொங்கவிடலாம். முக்கியமாக செல்பேசிகளை சார்ஜ் செய்யலாம்.

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயனுள்ளதாக இருக்கிறது.

15 comments:

  1. interesting product...just beware about thieves while keeping your cellphones near window

    ReplyDelete
  2. How much did the solar system cost to Install?

    ReplyDelete
  3. Can you write about your Solar system setup in you old home and its specifics, total cost?

    ReplyDelete
  4. சூரிய ஒளி மின் அமைப்பை என் வீட்டில் நிறுவியது குறித்து நான் எழுதியுள்ள இரு பதிவுகள்:
    http://www.badriseshadri.in/2013/06/blog-post.html
    http://www.badriseshadri.in/2013/11/blog-post_27.html

    என் பதிவில் இடது மேல் பகுதியில் “சூரிய ஒளி” அல்லது “சோலார்” என்று போட்டுத் தேடியிருந்தால் இவை வந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பத்ரி. தேடி பார்க்காமல், கேட்டது என் தவறு.

      Delete
  5. ஐஃபோன் போன்றவை கிட்டத்தட்ட ஒரு ஃபிரிட்ஜுக்குத் தேவைப்படும் மின்சக்தியை செலவிடுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவை பேட்டரியை உறிஞ்சுவதில் ஆச்சரியம் இல்லை.

    ** ஃபியூச்சர் ஃபோன்கள் **

    'ஃபீச்சர்' என்று போடுங்கள்! கண்டிப்பாக 'எதிர்கால' ஃபோன்கள் அல்லவே!

    சரவணன்

    ReplyDelete
  6. உங்கள் பதிவை படித்தேன். அது தொடர்பாக எனது பிளாக்கில் பதிவிட்டுள்ளேன். பதிவை படியுங்கள்.
    http://lawforus.blogspot.com/2014/06/blog-post_7367.html

    ReplyDelete
  7. where did you get the whole house solar installation from

    ReplyDelete
  8. http://lawforus.blogspot.com/2014/06/blog-post_7367.html

    இரட்டிப்பு மின்சார உற்பத்தி செய்யும் பத்ரி சேஷாத்ரி வீட்டு சோலார் சிஸ்டம் !

    ????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  9. http://www.dlightdesign.com/
    இதுவரை நான் தேடி கண்டத்தில் இது தான் தரம் விலை இரண்டும் ஒத்து வந்தது
    என் கிராமத்தில் (தஞ்சை பக்கம்) சில பல சமயம் 6 1முதல் 2 மணி நேரம் மின்வெட்டு எதிர்பார்க்கலாம். இவை வீட்டு தேவையை திருப்திகரமாக பூர்த்தி செய்கிறது

    இங்கே இதை வாங்க ப்ளிப்கார்ட் தான் வழி
    flipkart link:
    http://www.flipkart.com/search?q=D.Light&as=off&as-show=on&otracker=start

    ReplyDelete
  10. சோலார் விளக்கு (சன் கிங்-ப்ரோ2) வீட்டில் இருக்கவேண்டிய சங்கதியாகப்படுகிறது. இதுமாதிரி இன்னும் எத்தனையோ கருவிகள் -தினசரிவாழ்க்கைக்கு எளிதாகப் பயன்படுபவை -மார்க்கெட்டில் இருக்கக்கூடும். உங்களைப்போல் யாராவது மனசு வைத்து எழுதினால் நன்றாக இருக்கும். பதிவிற்கு நன்றி

    -ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

    ReplyDelete
  11. Since i watching your vision and depates it very polite and deep ..every body will accpt your way of presentstion , bcos that is born from trouth.. pls keep it up. now people very less like you...i dont miss your tv depate just i strated to read your articles.. sara, hyderba.

    ReplyDelete