ஹெர்குலிஸ் த்ரில்லர் |
இரண்டு மாதங்களுக்குமுன் வாங்கிய சைக்கிள். முதலில் எதையோ வாங்கவேண்டும் என்று நினைத்து, அந்த எண்ணத்தை ஃபேஸ்புக்கில் தெரிவிக்க, சமூகம் ஒன்றுசேர்ந்து என்னை அந்த சைக்கிளை வாங்கவேண்டாம் என்று தடுத்தாட்கொண்டது. அதன்பின், உள்ளதிலேயே மிகச் சாதாரணமான, ஆனால் அதே சமயம் பழைய மாடல் இல்லாத ஒரு சைக்கிளை வாங்கினேன். ஹெர்குலிஸ் த்ரில்லர் என்ற பிராண்ட். பி.எஸ்.ஏ கம்பெனியுடையது.
ஒரிஜினல் சைக்கிளில் ரேஸ் சைக்கிளுக்கு இருப்பதுபோன்ற வளைந்து நெளிந்த கைப்பிடிகளைக் கழட்டிக் கடாசிவிட்டேன். உட்காருவதற்கு என்று ஜெல் வைத்த மெத்து மெத்தென்ற சிறப்பு இருக்கையைப் போட்டுக்கொண்டேன். உண்மையிலேயே வசதியாக இருக்கிறது. ஒரு மணி. இருள் சூழந்த நேரத்துக்காக பேட்டரியால் இயங்கும் ஒரு விளக்கு. ஒரு நல்ல ஹெல்மெட். காற்று அடித்துக்கொள்ள ஒரு பம்ப்.
ஓட்டி வரும் தூரம் வெறும் மூன்று கிலோமீட்டர்கள்தான். ஒரு நாளைக்கு ஆறு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதையெல்லாம் உடல் பயிற்சி என்று பொய் சொல்லக்கூடாது. இதனால் எல்லாம் உடல் குறையப் போவதில்லை. ஆனால் fossil fuels பயன்பாட்டைக் குறைத்துள்ளேன் என்ற அளவுக்கு சந்தோஷம்.
(1) சென்னையின் அற்புதமான வானிலை. காற்றின் ஈரப்பதம் கன்னாபின்னாவென்று இருக்கும். மூன்று கிலோமீட்டர் ஓட்டிவருவதற்குள் இடல் மேலிருந்து கீழ்வரை வியர்த்துக் கொட்டிவிடுகிறது. தலையிலும் அப்படியே. வியர்வை வழிந்து கண்ணை மறைக்கும் அளவுக்கு உள்ளது! எனவே தலையில் ஹெல்மெட்டுக்கு அடியில் கைக்குட்டை, மாற்று சட்டை, உடலைத் துடைத்துக்கொள்ள துணி ஆகியவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வருகிறேன்.
(2) மழை பெய்தாலும் சைக்கிளில்தான் வருவது என்று முடிவெடுத்துள்ளேன். சில வாரங்களுக்குமுன் ஒருநாள் பாதி வழியில் வரும்போது திடீரென ஒரு பேய் மழை. மைலாப்பூரில் கிளம்பும்போது இல்லை. ராயப்பேட்டைக்கு வந்துசேரும்போது இல்லை. நடுவில் மட்டும் பெய்து கொட்டிவிட்டது. நேற்று இரவு மழையை அடுத்து, இன்று முன்னேற்பாடாக ரெயின் கோட் அணிந்துவந்தால் மிகக் கொடுமை, வியர்வைதான். வெளியே லேசான மழைத் தூறல். உள்ளே வியர்வை மழை. ஆண்டு முழுதுமே சைக்கிள் பயணம் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
(3) சாலைகள்: குண்டு குழியான சாலைகளால் ஸ்கூட்டர், பைக், கார் ஆசாமிகளுக்கு என்றுமே பிரச்னை கிடையாது. ஆனால் சைக்கிள் ஓட்டுபவர்களுக்குத்தான் சிக்கலே. [பெரும்பாலான சைக்கிள்களில் சஸ்பென்ஷன் கிடையாது.] நல்ல சாலைகள் மிக மிக அவசியம். நடுநடுவே தன்னிஷ்டத்துக்கு வெட்டி ஒரு கேபிள் நடுவதற்காக இந்த மடையர்கள் செய்யும் கூத்து இப்போது அதிகக் கோபத்தை வரவழைக்கிறது.
(4) சக பயணிகள். ஒருசில கார் ஓட்டுனர்களைத் தவிர பிற மோட்டார் வாகனப் பயணிகள், சைக்கிள் ஓட்டுபவரை மதிப்பதே கிடையாது. மிக அருகில் வண்டியை ஓட்டிச் செல்வது, சடாரென கட் செய்து நம்மை பிரேக் போடவைப்பது போன்றவை சர்வசாதாரணம். பிரேக் பிடித்தபின் மீண்டும் சைக்கிளை ஆரம்பிக்கக் கொடுக்கும் பிரயத்னம் அதிகம். பைக் அல்லது கார் என்றால் கொஞ்சம் ஆக்சிலரேட்டரை முறுக்கினால் போதும். இதைப்பற்றியெல்லாம் சக சாலைப் பயனாளிகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
(5) சக சைக்கிள் பயணிகள். இவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் அல்லது பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அல்லது நிறுவனங்களில் கீழ்மட்டப் பணிகளைப் புரிபவர்கள். மாணவர்களை அவ்வளவு நெருக்கமாக நான் இன்னமும் கவனிக்கவில்லை. ஆனால் பிறர் பொதுவாக சாலை விதிகளை மதிப்பதில்லை. சைக்கிள்களுக்கு இண்டிகேட்டர் இருப்பதில்லைதான். ஆனால் இவர்கள் கைகளாலும் சிக்னல் காட்டுவதில்லை. போக்குவரத்து நிறுத்தங்களில் விளக்குகளைப் பெரும்பாலும் மதிப்பதில்லை. நட்ட நடு செண்டருக்கு சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டுவந்து நிற்கிறார்கள். நிச்சயமாக ஒருவழிப் பாதையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. நான் பார்த்தவரை மாணவர்களையும் சேர்த்து, யாருமே ஹெல்மெட் போட்டுக்கொள்வதில்லை. என் வட்டாரத்தில் நான் ஒருவன்தான் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்கிறேன்.
(6) போக்குவரத்தைத் திட்டமிடுவோர்: சைக்கிள் லேன் என்றெல்லாம் இவர்கள் இதுவரையில் யோசித்ததே கிடையாது. சைக்கிள் என்பது ஏழைகள் வண்டி. எனவே அதைப் பற்றிக் கவலைப்படுவானேன் என்ற எண்ணம்தான். இருக்கும் வழித்தடங்களில் கார், லாரி, பஸ், டூ வீலர் ஆகியவை போவதற்கே வழி இல்லை என்னும்போது சைக்கிள்களுக்குத் தனி லேனா? இது என்ன உளறல்? என்பதுதான் இவர்கள் கருத்து. இந்தியாவின் பிற நகரங்களில் இதுகுறித்து ஏதோ பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் கணிசமான அளவு மத்தியவர்க்க, புரஃபஷனல் மக்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தும்போதுதான் சைக்கிள் லேன் குறித்தெல்லாம் மாநகராட்சி யோசிக்கப்போகிறது.
என் தற்போதைய கருத்துகள்:
1. எங்கெல்லாம் நடந்துபோக முடியுமோ, அதற்குத் தேவையான நேரம் கையில் இருக்கிறதோ, அங்கெல்லாம் நடந்துபோவதே சாலச் சிறந்தது.
2. அதேபோலத்தான் சைக்கிளில் பயணம் செய்வதும். ஆனால் பலரும் என்னிடம் சொன்னதுபோல இன்று மாநகரத்தில் இது கொஞ்சம் கவனமாக, பாதுகாப்பாகச் செய்யவேண்டிய ஒன்று.
3. முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது. சென்னையில் மெட்ரோ ரயில் வருவதையும் அது விரிவாக்கப்படுவதையும் மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
4. சொந்த மோட்டார் வண்டியில்தான் பயணம் என்றால், இரு சக்கர வாகனங்களில், அதுவும் fuel-efficient வண்டிகளில் பயணம் செய்வது சிறந்தது. முடிந்தால் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனமாக இருத்தல் மிகவும் நல்லது.
5. வேறு வழி இல்லை என்றால் நான்கு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணிக்கவும். (மூன்று, நான்கு+ பேர் பயணம் செய்யவேண்டும் என்றால்.)
பத்ரி அவர்களுக்கு,
ReplyDeleteசைக்கிளில் அலுவலகத்திற்கு செல்வது உண்மையிலேயே நல்ல முயற்சி. பாராட்டுக்கள்! சமீபத்திய டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தபோது உங்கள் தொப்பை குறைந்திருந்தது!
சாலையில் அடுத்தவர்கள் செய்யும் குறைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதே ஆரோக்கியத்திற்கு உகந்தது!
பத்ரி,
ReplyDeleteசைக்கிளின் பெர்பார்மான்ஸ் எப்படி இருக்கிறது? நீங்கள் பயன் படுத்தும் அதே பயண தூர பயன்பாட்டிற்கு நான் வாங்கலாம் என்று நினைக்கிறேன். வேறேதேனும் மாடல் இதை விட சிறப்பாக இருக்குமா?
சரவணன்
என்னைக் கேட்டால் அட்லஸ் நைட்ரஜன் இதைவிட சற்று பெட்டர். பி.எஸ்.ஏ. த்ரில்லரில் ஸ்டேண்ட் படுத்தும்.
Deleteஎது சரியான சைக்கிள் என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. என் வீட்டுக்கு அருகில் இருக்கும் சைக்கிள் கடை என்பதும் என் தேர்வுக்கு ஒரு காரணமாக இருந்தது.
Deleteஎன் சைக்கிளீன் பர்ஃபார்மன்ஸ் மிகவும் நன்றாகவே இருக்கிறது. நல்ல அளவில் டியூபில் காற்று இருந்தால், வண்டி ஜம்மென்று ஓடுகிறது.
Deleteநன்றி பத்ரி.
Deletewhat is the cost?
ReplyDeleteமிதிவண்டியில் அலுவலகம் செல்வது உண்மையிலேலே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
மிதிவண்டி ஓட்டுமுன் தலைக்குத் தேங்காய்நெய் (தேங்காய் எண்ணெய்) தேய்த்துக் கொண்டு சென்றால் குறைவாக வேர்க்கும் என்பது பெங்களூரில் நான் அனுபவத்தில் கண்டது. சென்னையில் உதவுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள். எண்ணெய் வியர்வை வெளிவரும் துளைகளை அடைக்கிறதா இல்லை சூட்டைக் குறைத்து வியர்வையின் தேவையை குறைக்கிறதா என்று புரியவில்லை. ஆனால் நெடுந்தூரம் (தினம் 25 கிமீ) செல்லும்போது இது மிகவும் வசதியாக உள்ளது.
ReplyDeleteYou can apply Navaratna hair oil. That will cool your scalp.
ReplyDeleteI appreciate your efforts; But I don't know how long this will go;
ReplyDeleteSecondly, though I am in Royapettah only so far I had no chancee to see you riding a bicycle either in beach side or near your Office; But when I imagine the scene, Laurell & Hardy only coming in my imaginary sight; Kindly pardon me for such an imagine
அற்புதம் .முன் யோசனை என்றால் இதுதான் அல்லது வரும் முன் காப்போம் என்பதாக கூட எடுத்து கொள்ளலாம்.இன்று பல பேரின் சோம்பேறித்தனம்தான் ,வேலைகளை காரணம் காட்டி அதிக வாகன பயன்பாட்டுக்கு காரணம் ஆகிறது .வலிகள் இருக்குமானால் அது புது வழியாக இருக்கும். அதன் வழிகாட்டியாக ஆகியதர்க்கு பாராட்டுக்கள்
ReplyDeletecongrats for your effort, but be careful while driving............ think about the family...............careful...
ReplyDelete
ReplyDeletedoes it really feel that nice to reach the office with all that sweat ?
and saving the fossil fuel ? - LOL - better luck...
Good start.
ReplyDeleteCompared to 15 years back, why the cycle manufacturers are aping the west (US) to design cycles like this? design of handle bars (like a race cycle) - why is it needed for normal city/home user?
Most of the current day cycles have small seat (area) to accommodate the broad back. Isn't that an extremely bad design - may create health issues / backpain ?
Why the normal cycles of yesteryears (with good seat area/ proper handle bars) and normal adult sized frame is no more available? (Hero / Hercules / BSA / Rayleigh)
(this cycle helmet wearing fad - did it start in India, after the Jeans movie initial scenes where the duo-Prashant do cycling)?
Great effort. Physical exercise + Other benefits. I think in Chennai for cycle riding best time would be either early morning till 07:00 or later in the evening after 9pm. Keep continuing and share the tips. If cyclists increase, virtual cycle lanes will come automatically. It will happen.
ReplyDeleteGreat Effort. Reduce Reuse Recycle - I think cycle is one of the best for implementing it. I hope more people love cycling for the multiple purposes it gives us: Health + Wealth + Pro Nature etc. If we could plan properly, surely cycle should be the vehicle every home should have and use.
ReplyDeleteRecycling என்பது இதுதானோ!
ReplyDeleteBadri,
ReplyDeleteI too use a cycle for commuting - mostly in Adyar, Besant Nagar area. I have taken it to malls or 3-5-star hotels (if there is a conference to attend or a friend to meet) mainly out of the fear that I may be disallowed to park. While a no-entry at mall (like it happened to an IIT Prof at Phoenix Mall) is fine and I can go back, it could be risky if I were to meet someone or participate in a meeting. Have you any experience in this regard? What do other cycle users say?
I have gone inside Hotel Savera and parked the bicycle in the two wheeler stand. No problems. I will try this with every five star hotel from now on just for the kick of it. Will also try it with malls. Let us fight this out:-)
DeleteI do cycling to my office once in a while (7 km one way) in Bangalore. The biggest problem i have faced is the huge amount of dust coupled with the sweat. This is a terrible combination. :( Such dusty roads will do more harm to our lungs than good. :( And, good quality filters are quite expensive and requires frequent filter change. This is a bit high maintenance thing.
ReplyDeleteதற்போது நடந்து முடிந்த ரினெர்ஜி 2014 கான்ஃபரன்ஸில், மின்சார சைக்கிள் / ஸ்கூட்டர், அம்பத்தூரில் செய்யப்பட்டது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பாரத்தீர்களா? Startingல் acceleratorம் நகரும்போது pedalம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ReplyDelete