வேலை நிமித்தமாக லண்டன் செல்ல வேண்டியிருந்தது.
ஞாயிறு விடிகாலை எமிரேட்ஸ் விமானத்தில் பயணம். சென்னை விமான நிலையத்தினை விரிவு படுத்தியுள்ளார்கள். இப்பொழுதுதான் பார்க்கக் கொஞ்சம் சகிக்கிறது. எத்தனை நாள் தாங்கும் என்று பார்ப்போம். புறப்படும் முன்னரே நல்ல மழை. சென்னைக்கு கொஞ்சமாவது விடிவு காலம். விமானம் தாமதமாகக் கிளம்புகிறது.
ஞாயிறு மதியம் துபாயில் செய்தித் தாளைப் பார்த்தால் யாரோ ஒருவர் ஐந்து கழுதை ஜோடிகளுக்கு சென்னையில் திருமணம் செய்து வைத்தாராம் - மழை பெய்வதற்காக. அதனால்தான் மழை பெய்தது என்கிறீர்களா? இந்த மாதிரி முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?
லண்டன் ஹீத்துரோ விமான நிலையத்தில் குடியேறல் முடித்து வெளியே வர 2 மணி நேரம் தாமதம். இன்னும் 10 பேரை வேலைக்கு வைக்கக் கூடாதா?
வழியில் பொழுதைக் கழிக்க "A brief history of Time" என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை துபாயில் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் பற்றி ஒரு நாள் எழுதுகிறேன்.
Monday, June 30, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment