சென்னையில் மழை நின்று விட்டதாம். நேற்று வரை லண்டனில் பெய்யாத மழை, இன்று நான் வந்தவுடன் ஆரம்பம்! ஆனால் இங்கு மக்கள் மழையை வா என்று வரவேற்கவில்லை. விம்பிள்டனில் விளையாட்டு தடைப்படுமே! அதுவும் இன்று ஹென்மன் விளையாட இருக்கிறார்.
டென்னிஸ் தடைப்படும் என்றால், கிரிக்கெட்டும் தடைப்படும். இன்று லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள விருந்தினர் அறை ஒன்றில்தான் - அலுவலக "மேல்மட்ட" ஊழியர் அனைவரும் பங்குகொள்ளும் கூட்டம். வெளியே மிடில்செக்ஸ் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் யாரோடோ விளையாட எத்தனிப்பார்கள். லெஸ்டர்ஷயராக இருந்தால் ஷேவாக் விளையாடுவார், ஆனால் அது இல்லை என்று தெரியும். அவர் வேறு இடத்தில் அசத்தல் சதம் அடித்துள்ளார். பார்க்கலாம் - விளையாட்டு என்ன சுவாரசியமாக இருக்கும் என்பதை.
விண்திகழ்க!
3 hours ago
No comments:
Post a Comment