செய்தி தி ஹிந்துவிலிருந்து
2,800 வருடங்களுக்கு முந்தைய மனித உடல்களும், எழுத்துக்களும் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருப்பதாக அகழ்வாராய்ச்சித் துறையினர் கூறியுள்ளனர்.
இதில் முக்கியமானது இந்த 'எழுத்துக்கள்' ஆகும். இவை தமிழ் பிராமி வடிவில் உள்ளன என்று சொல்கின்றனர்.
நான் முன்னர் ஐராவதம் மகாதேவனது பேச்சு ஒன்றைப் பதித்திருந்தேன். [ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு] மகாதேவன், இந்தியாவில் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கு முந்தையதாக எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் அசோகன் பிராமியிலிருந்து வடிவமைக்கப்பட்டது என்றும் சொல்லியிருந்தார். அசோகரின் காலம் 250 BC ஆகும். எனவே தமிழ் பிராமி அதற்குப் பிந்தையது என்றாகிறது.
சென்ற வாரம் [17 மே 2004], எழும்பூரில், இலங்கை அகழ்வாராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குனர் செரான் தெரன்யகளே பேசினார். அதற்குப் போயிருந்தேன். அப்பொழுது இலங்கையில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பற்றியும், அங்கு 2500 வருடங்களுக்கு முந்தைய எழுத்தாணி போன்ற எழுதுபொருள் கண்டெடுக்கப்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்டார். நேற்றைய கண்டுபிடிப்பைப் பற்றி தெரன்யகளே இவ்வாறு கூறுகிறார்: "ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகள் மிக மிக முக்கியமானவை. இலங்கையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிட்டத்தட்ட 75 மண்பானைத் துண்டுகள் எழுத்துக்களுடன் கிடைத்தன. ரேடியோ-கார்பன் முறையில் காலத்தைக் கணிக்கையில் அவை 600 BC க்கும் 500 BC க்கும் இடைப்பட்டது என்று தெரிய வந்தது. இப்பொழுதைய கண்டுபிடிப்பையும் சேர்த்துப் பார்க்கையில் தென்னாசியாவில் எழுத்துக்கள் எப்பொழுது ஆரம்பித்தன என்பது பற்றிய புதிய உண்மைகள் புலனாகும்."
விண்திகழ்க!
3 hours ago
Hi Badri, Good post. I wanted to write about it. You made my job easier. Thanks. PK Sivakumar
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteசெரான் தெரன்யகளே பேச்சைப் பற்றி நினைவிலிருந்ததோ, குறிப்புகளிலிருந்தோ பதியுங்களேன். இலங்கை-தமிழ்நாடு நிலப்பகுதியின் கலாச்சார மாற்றங்கள் முக்கியமானவை. ஆதிச்ச நல்லூர் கண்டுபிடிப்புகளை இன்னும் ரேடியோ கார்பன் டேட்டிங் செய்யவில்லை என நினைக்கிறேன்.
இந்த கால கணிப்பு மட்டும் ஏறக்குறைய சரியாக இருந்தால், we are in for some exiting times.
Siran என்பதை எப்படி உச்சரிப்பது? செரான் (அ) சிரான்?
ReplyDeleteDeraniyagala என்பதை? தெரனியகல (அ) தெரன்யகல (அ) தெரன்யகளே? சிங்களம் தெரிந்தவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.
அருள்: அந்தப் பேச்சின்போது (Pre-historic basis for the rise of civilization in Sri Lanka and Southern India) கொடுத்த சிறு புத்தகம் என்னிடம் உள்ளது. பேச்சு சற்றே சொதப்பலாகி விட்டது. தெரனியகலவின் ஆங்கில உச்சரிப்பைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தது. Slide projector சரியாக வேலை செய்யவில்லை. ஆனால் நல்லவேளையாக கையில் மிக அழகாக அச்சடித்த புத்தகத்தைக் கொடுத்தார்களோ, பிழைத்தேன். இலங்கை துணை ஹை கமிஷனால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி. (Second Vesak Commemoration Lecture - 2004)
அந்தப் புத்தகத்திலிருந்தும், பேச்சில் கேட்டதிலிருந்தும் பதிய வேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது. பிறகொரு நாள் செய்ய வேண்டும். நீங்கள் சென்னையிலே இருப்பதால், முகவரி அனுப்பினால், ஒளியச்சிட்ட தாள்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதில் முழுமையான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
Badri, if its of no trouble, effort and time consuming for you, may I also please have the OCR-ed version or important pages through e-mail. Please ignore this if it involves lots of ur work and time. Or please tell me where can I buy that book if its available in the market. Thanks in advance - PK Sivakumar
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteIt is a small booklet. 28 pages + cover. Let me see what I can do. It contains some photographs too. It is free. I don't think this is available anywhere to buy. It looked clear it was made only for this talk.
ReplyDeleteSuch documents should be created in PDF and made available online for anyone to download! One can only wish. Let me see what i can do.
பத்ரி, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆய்வு முழுமை பெறும் போது பல நீண்ட நாள் ஊகங்களுக்கு ஓரளவு விடை கிடைக்கலாம். தமிழ் நாட்டின் வரலாறு பற்றிய சான்று இல்லாத இலக்கிய செய்திகள் உண்மையென அறியும் நாளும் வரலாம். yes, it's exciting!
ReplyDeleteBadri,
ReplyDeleteRevd a booklet from Padmanabha iyer last week. thought it would be relevent. posted the contents in my blog.
http://tamil.weblogs.us/
மதி: நீங்கள் இணைத்துள்ள கட்டுரைகள் உபயோகமாயுள்ளன. நன்றி.
ReplyDeleteசிரான் தெரணியகல. do keep us posted.
ReplyDelete