Sunday, September 11, 2005

ஆண்களுக்கு மட்டும்...

பெண்களுக்கான சிகப்பழகுக் களிம்பை ஆண்களும் வெகுவாக உபயோகித்து வருகின்றனர் என்பது தெரிந்தவுடன் ஆண்களுக்காகவென்றே பிரத்யேகக் களிம்பு ஒன்றை இமாமி நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இதற்குப் பெயர் "Fair and Handsome". இந்தப் பொருளுக்கான விளம்பரத்தில், பெண்களுக்கெனத் தயாரிக்கப்படும் களிம்பு ஆண்களின் முரட்டுச் சருமத்துக்குப் பயன்படாது என்றும் மேற்படி தயாரிப்பு பிரத்யேகமாக ஆண்களின் சருமத்துக்கெனவே தயாரிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

சில மாதங்களாகவே இந்தப் பொருள் கடையில் கிடைத்தாலும் இப்பொழுதுதான் இதன் விளம்பரம் தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைத்தது.

Fair and Lovely எனப்படும் ஹிந்துஸ்தான் லீவர் தயாரிப்பை ஒத்ததாகப் பெயர் வைத்திருப்பதால் நீதிமன்ற வழக்குக்கு இந்தத் தயாரிப்பு உள்ளாகும் என்று நினைக்கிறேன்.

இன்று தொலைக்காட்சியில் பார்த்த மற்றுமொரு விளம்பரத்தில் பிரபல நடிகைகளைப் போல ஹிந்தி நடிகர் ஷா ருக் கான் குளியலறையில் ரோஜாப்பூ நிரம்பிய நீரில் குளித்தபடி லக்ஸ் சோப்பை விற்றார்.

2 comments: