2005-ம் வருடம் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது திலகவதி (ஐ.பி.எஸ்) அவர்களுக்குச் சென்றுள்ளது. அவரது கல்மரம் என்ற நாவலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருது கிடைத்த பிற மொழிகளுக்கான இலக்கியவாதிகள்:
சாகித்ய அகாதெமி விருது கிடைத்த பிற மொழி இலக்கியவாதிகள்:
G.V.கக்கநாடன் (மலையாளம்)
ராகவேந்திர படேல் (கன்னடம்)
அப்பூரி சாயாதேவி (தெலுங்கு)
(இறந்த) அருண் கோலாட்கர் (மராத்தி)
N.ஷிவதாஸ் (கொங்கணி)
மனோஹர் ஷ்யாம் ஜோஷி (ஹிந்தி)
ஜபீர் ஹுசைன் (உருது)
ராமசந்திர பெஹெரா (ஒரியா)
சுரேஷ் தலால் (குஜராத்தி)
தோலான் ராஹி (சிந்தி)
சேத்தன் சுவாமி (ராஜஸ்தானி)
குர்பச்சன் சிங் புல் (பஞ்சாபி)
க்ரிஷன் ஷர்மா (டோக்ரி)
ஹமீதி காஷ்மீரி (காஷ்மீரி)
விவேகானந்த் தாக்கூர் (மைதிலி)
சுவாமி ராமபத்ராசார்யா (சமஸ்கிருதம்)
நபகிஷோர் சிங் (மணிபுரி)
யேஷே டோர்ஜே தோங்ச்சி (அசாமி)
கிருஷ்ண சிங் மோக்டான் (நேபாலி)
மங்கல்சிங் ஹஸோவேரி (போடோ) - முதல்முறையாக இந்த மொழிக்கு வழங்கப்படுகிறது
ஜாதூமணி பேஸ்ரா (சந்தாலி) - முதல்முறையாக இந்த மொழிக்கு வழங்கப்படுகிறது
தகவல்: NewKerala.com, UNI
ஈரோடு தமிழன்பனுக்கு சாகித்ய அகாதெமி 2004
வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதெமி 2003
தம்பியின் வாழ்த்து
6 hours ago
சே. ராஜேஷ்குமாருக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இப்படி ஏமாற்றிவிட்டார்களே.
ReplyDeleteபட்டியலைப் பார்க்கையில், குறைந்தபட்சம் என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும் அளவில்கூட எத்தனை மொழிகளின் எழுத்துக்களைப் படிக்கமுடியாமல் போகிறது என்ற ஆதங்கம்தான் முதலில் வருகிறது. சாகித்ய அகாதெமியும் என்பிடியும் பதிப்பிக்கும் புத்தகங்கள் வழியாகப் பிறமொழிப் படைப்புக்களை ஓரளவு படிக்கமுடியும் எனினும்.
ReplyDeleteVairamuthu.. Thamizhanban... Thilagavathi... Rajeshkumar... aaha.. varisai kana katchitham! Kavalai padatheer youknowme. S.Academy intha vishayathil ungalai yematrathu endruthaan thondrugirathu.
ReplyDeleteபத்ரி, இந்த போடோ, சந்தாலி போன்ற மொழிகள் இந்தியாவில் எந்த பகுதிகளில் பேசப்படுகின்றன. சாகித்ய அகாதெமி விருது வழங்கும் அளவிற்கு ஒரு மொழி இருக்கிறது என்று தெரிந்தாலும், எந்த பகுதி என்று தெரிந்துக் கொள்ள முடியவில்லை [போடோ அஸ்ஸாம் பக்கமா?]
ReplyDeleteநாராயண்: போடோ, சந்தாலி இரண்டுமே இப்பொழுதைக்கு அசாம்ல பேசப்படுது. போடோக்களும் சந்தால்களும் அசாம்ல அதிகமா வசிக்கறாங்க. ஆனால் சந்தால் பழங்குடியினரோட ஒரிஜினல் இடம் மத்தியப் பிரதேசம். அவங்க எப்படி அசாமுக்குப் போனாங்கங்கறது தனிக்கதை.
ReplyDeleteஇப்ப, அசாமி, போடோ, சந்தாலி பேசறவங்களும் இன்ன பிற அசாமியப் பழங்குடிகளும் வங்காள மொழி பேசறவங்களும் தினந்தினம் அடிச்சுகிட்டு சாகறாங்கங்கறதும் ஒரு தனி சோகக்கதை.