சென்ற சில வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். தமிழக 12-ம் வகுப்புத் தேர்வில் பெண்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். ஆனால் வேறு ஒரு புள்ளிவிவரம் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதியவர்கள்: 5,55,965
பெண்கள்: 2,89,115
ஆண்கள்: 2,66,850
ஒன்றாம் வகுப்பில் சேர்வதில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் பெண்களைவிட ஆண்களே அதிகமாகக் கல்வியிலிருந்து விலகுகின்றனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைவதில் ஆண்கள் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பெண்கள் தேர்ச்சி விகிதம்: 84.6% (சென்ற ஆண்டு: 75.4%)
ஆண்கள் தேர்ச்சி விகிதம்: 77.4% (சென்ற ஆண்டு 70.2%)
மொத்தத் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது நல்ல விஷயமா? அல்லது தேர்வு முறை எளிதாகியுள்ளதா?
மற்றபடி மாநில ரேங்க் பட்டியலில் பெண்களே அதிகம். முதலிரண்டு இடங்கள் பெண்களுக்கு.
இம்முறை நுழைவுத்தேர்வு இல்லாத காரணத்தால் பொறியியல், மருத்துவம் ஆகிய இரண்டிலும் நுழையும் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.
தமிழகத்தில் மலர்கிறது பெண்கள் சாம்ராஜ்ஜியம்! ஆண்களுக்கு உயர்கல்வியில் 33% இட ஒதுக்கீடு விரைவில் தேவைப்படலாம். :-)
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
//ஆண்களுக்கு உயர்கல்வியில் 33% இட ஒதுக்கீடு விரைவில் தேவைப்படலாம். :-) //
ReplyDeleteபத்ரி, நீங்க கூடவா?!! :-)
நான் எப்பவுமே இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவன்!
ReplyDeleteபெண்கள் கல்வி+வேலைல அதிகமா இருக்கறது பலவிதங்களில் நல்ல பலனைத் தரும்.
வளர்ந்த நாடுகள் அனைத்திலும் பெண்கள் வேலையில் இருக்கும் சதவிகிதம் இந்தியாவைவிட வெகு அதிகம்.
My Observations are at
ReplyDeletehttp://bruno.penandscale.com/2007/05/12th-exam-in-tamil-nadu.html