இரு பிறப்பினர் (பிராமண, சத்திரிய, வைசியர்கள்), இரண்டாயிரம் வருட சூதினால், தங்களை வெறுப்புக்கு உள்ளாக்கிக்கொண்டனர். (பிற) பிற்படுத்தப்பட்டவர்களோ இருபதே வருடங்களில் அதைச் சாதித்துவிட்டனர். பிறபடுத்தப்பட்டோர்களின் பிரதிநிதிகள் இந்தியக் குடியாட்சி முறையையே வெட்கப்பட வைத்துள்ளனர். சமூகநீதி என்பதை கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.மாயாவதி உத்தர பிரதேசத்தில் வென்றதையொட்டி எழுதும் பிரசாத், பிற்படுத்தப்பட்டோர் சுய பரிசோதனை மேற்கொண்டு, தங்களைச் சீர்திருத்திக்கொள்ளாவிட்டால், ஆட்சியைப் பிடிப்பது நடவாத காரியம் என்கிறார்.
ஆனால் இது சில வட இந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடியது. தமிழகம் போன்ற இடங்களில் தலித்களுக்கு வலுவான அரசியல் கட்டமைப்பு கிடையாது. இருபிறப்பினர் என்று கூறப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. பிற்படுத்தப்பட்டோர் (OBC) - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இருவருக்கும் இடையேதான் அரசியல் போராட்டமே.
ராமதாஸால் வன்னியர்களை ஒருங்கிணைத்து வலுவான அரசியல் சக்தியாக மாற்ற முடிந்ததைப்போல, தமிழக தலித்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைப்பது எளிதாகத் தோன்றவில்லை. பள்ளர், பறையர், அருந்ததியர், சக்கிலியர், இன்னபிறர் என்று தலித்கள் பிரிந்துள்ளனர். வடக்குக்கு திருமாவளவன், தெற்குக்கு கிருஷ்ணசாமி என்று இரண்டு தலைவர்கள். இருவருக்கும் அரசியல்ரீதியாக மிகக்குறைந்த செல்வாக்கு. சட்டமன்றத் தேர்தலில் தனியாக நின்றால் ஒரு இடத்தைப் பெறுவதே இவர்களால் இயலாத காரியம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்றே தலித்கள் தனித்தனிச் சக்தியாக பிரிந்து இருக்கிறார்கள். அம்பேத்கரின் மஹாராஷ்டிரத்திலேயே தலித்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் அரசியல்ரீதியாக உபயோகமற்ற ஒரு குழுவாக இருக்கிறார்கள்.
Who is the oppressor??
ReplyDeleteHave you heard of any news item in Tamilnadu that a BRAHMIN is oppressing Dalit??? It is always the so called BC-MBC-OBC strata that are in constant conflict with Dalits and stopping their developments.
But, TN politicians and TN media shamelesslly twisted the whole issue. When the OBC community attacks the Dalits, even the Media is dezsscribing this as "Upper-caste" hits dalits. If they are upper-castes, why do OBCs need reservation?? Periyar was a flag-bearer of these OBCs and his actions like Vaikom agitation were only a rhetoric.
Now, see the news items on OBC & Dalit conflict in Tamilnadu for your self. I have collected the news and even given links.
--------------------------------------------------------------------------------------
Mullaly, who served as the sub-collector of Chingleput in 1889 was deeply disturbed by the fact that the untouchables did not even have a proper place to reside.
After his visit to a street of the untouchables in Tirukkazhukkundram, he identified that the untouchable settlement ‘covered only 3.46 acres but had 34 houses in which 65 families lived.’ The total population living in that area was 333 individuals, an average of 10 persons per house: ‘To form a proper conception, it must be remembered that each house consists of only one room, 12 by 8 feet.’ In his diary entry for 7 July 1888, Mullaly described the situation in Palar village: ‘I find that most of the paracheri (paraiyar cheri or paraiyar living area) lands are entered in the names of the Mudaliars (vellala Mirasidars) and that they threaten to evict them (the paraiyars) if they don’t work gratis or very cheaply for them’ (Irschick, p. 171-172).
The non-brahmins who were described as ‘equivalent to the untouchables in social life’ by Periyar, never allowed the untouchables to better their lot. They treated them inhumanely. This historical truth continues even today. Periyar led many agitations demanding equality of opportunity. But it was only for those castes described as non-brahmins and not for the untouchables.
http://www.countercurrents.org/dalit-ravikumar020306.htm
--------------------------------------------------------------------------------------
"I was very much hurt when young boys and women of Vanniar community abused us with derogatory caste epithets and hurled stones at us. I was really scared", laments a Dalit priest who had come for the funeral of the mother of Fr A.C. Irudayanathan.
(note: Vanniar caste means Sudra caste, the lowest category among the castes)
"This is a problem of tradition, not of caste, it will go away in course of time. Even intermarriages have taken place in this parish", pleads Fr. Jacob, the Parish Priest of Eraiyur. (note: Fr.Jacob, a Vannier)
"The Archbishop is afraid of Vanniars. He himself was on the scene. He too was abused. The archbishop was not allowed into his own church. What kind of moral authority does he have if he doesn't take any action? Either he should close the parish or he should resign from his position", argues a Dalit activist.
(http://www.dalitchristians.com/Html/TNBCREPORT.htm)
-------------------------------------------------------------------------------
R Thirumalvalavan, leader of the Dalit Panthers of India -
When Ramdoss found his base -- he has no political base, only a caste base -- had eroded, he had to do something. If you remember it, he declared during the last assembly election that his party, the PMK was a party for all the communities in the state but he failed in the attempt to make the PMK a political party. So, once again, he wants to rely on his caste, the Vanniyars. He wants to exploit caste sentiments to win their support and votes by projecting himself as the saviour of the Vanniyars. When some dissenting voices came up in the party, he wanted to divert the attention of the people, and that was the reason why he shouted this slogan for a separate state.
It is dangerous to the country, the state and the people to have a state based on caste lines. It is particularly dangerous for the Dalits. I will tell you why. When they agitated to change the status of Vanniyars from BC (Backward Caste) to MBC (Most Backward Caste), more than 25,000 Dalit huts were burnt.
When we had to bear such atrocities for their fight for reservation, what would the situation be when they fight for a separate state? Their fight will be against the Dalits.
http://www.rediff.com/news/2002/aug/12inter.htm
-------------------------------------------------------------------------------
Traditionally, Dalits come under attack from Vanniyars in northern districts and Thevars in southern districts. But with the emergence of Thirumavalavan and Krishnasamy as strong political factors in the state, the Dalits have also started retaliating.
M Punitha Pandian, the editor of Dalit Murasu, says, “The government claims untouchability is on the wane, citing decreasing number of cases under the Protection of Civil Rights and SC/ST (Prevention of Atrocities) Act. But the truth is that the police refuse to register cases.”
http://www.aiccindia.org/news/danger_stalks_tamilnadus_dalit_leaders.htm
-------------------------------------------------------------------------------
Tension prevailed in Meensuriti village near Jayamkondan in Perambalur district late last night following a communal clash between Vanniyars and Dalits of the village. A petrol bunk was looted, a brick kiln and a saw mill were set afire in the clashes which erupted following the alleged pulling down of a PMK party flag at the Meensuriti bazaar on Tuesday.
http://ambedkar.org/News/hl/Communal clash.htm
-------------------------------------------------------------------------------
Caste clashes in the southern state of Tamil Nadu have predominantly involved two communities: the Thevars (a backward caste) and the Pallars (or Dalits). As has been the case in other states, Dalits in Tamil Nadu have long suffered from exploitative economic relationships and have frequently been the victims of violence. However, changes since the early 1990s have altered the economic relationship between the Thevars and the Pallars and have changed the contours of the conflict. Having benefited from the state’s policy of reservations in education and from the income provided by relatives working abroad, the Pallars have become much less dependent on Thevar employment and have begun to assert themselves in the political arena. The Thevars have responded to this threat to their hegemony with violence. Dalits, too, have begun to fight back.
http://www.hrw.org/reports/1999/india/India994-07.htm
-------------------------------------------------------------------------------
THE SO CALLED OBC - THE TRUE PERPETRATORS OF HARIJANS
According to Indian government’s 1996-1997 annual report for ministry of Human Affairs, caste related incidents in 1996 in the southern state of Tamil Nadu increased by 34 percent over previous years. Out of 282 reported incidents, 238 took place between scheduled castes and other backward communities. The main caste groups involved were Thevar, Nadars, and Vanniyars (all backward castes) (2). In the second part of twentieth century, India has witnessed a spurt in violence against dalits. This physical violence is perpetrated largely by the ‘backward’ castes, who claim victimhood under Brahmins but also turn oppressors of Dalits. This phenomenon can be best understood by study of Tamil Nadu. Tamil Nadu, home to the non-brahmin movement, has been projected by the political class, social scientists and policy-makers as fertile soil for social justice. However, the Dravidian movement’s empowerment agenda left the dalits – nineteen percent of the population – almost untouched. In fact, dalits have been subjected to the worst forms of violence, from being forced to consume human excreta to being murdered for contesting local body elections
மிக மிக கால தாமதத்துடன் பணிவாக சமைக்கும் பின்னூட்டம்:
ReplyDeleteஇன்றைய காலகட்டத்தில் சாதி சண்டைகள் நடைபெருகின்றவே அவற்றில் சாதிகள் என்ற அவல பிரிவினைகளைத் தோற்றுவித்த பார்பனர்களின் பங்கு இருக்கிறதா அவர்களின் பங்கு ஒன்றும் இல்லை என்றால் பிற சாதிக் காரர்கள் எந்த அடிப்படையில் உயர்வு-தாழ்வு கூறி பிற - குறிப்பாக தலித்களை - தனிப்படுதுகிறார்கள் ? இது குறித்து ஏதாவது ஒரு சமூக இயல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்க்கிறதா; அதற்கு பெரியார் வழி வந்த அல்லது அவர் வழி நிற்பதாகச் சொல்லிக்கொள்ளும் திராவிட கண்மணிகள் என்ன சொல்கிறார்கள்; மேலும், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் சாதிச் சண்டைகள் மிக அதிகம் நடப்பது போல் தோன்றுகிறதே - அது உண்மையா
இரண்டு, தாம் ஆட்சிக்கு வந்த வுடன், சாதிகளின் எண்ணிக்கையை குறைக்க அதாவது சாதிகளுக்குள் உட்பிரிவுகள் குறையவும், ஒற்றுமை ஓங்கவும் ஏதாவது செய்து இருக்கிறார்களா?
மூன்று, இது என்னுடைய நீண்ட கால எண்ணம்: ஒரே அடியில் சாதிகளை இல்லாமல் செய்வது என்பது சாத்தியம் ஆகாது; ஆகவே, இதற்கு முதல் படியாக, சிற்சிறு சாதி உட்பிரிவுகளை ஒழித்துவிட்டு சில சாதிகளை அதாவது சாதிப்பிரிவுகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கலாம், இவ்வாறு நாளடைவில் சாதிகளின் எண்ணிக்கை குறையும், சில நூற்றாண்டுகளுக்குப் பின் அவை இன்னும் குறைந்து கொண்டே வந்து, ஒரு பொன்னாளில் சாதி என்ற பிரிவுகளே இல்லாமல் ஒழியலாம்.
இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் இதுபோன்று ஆக்கமான எண்ணங்களை எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை தான்: சாதி கூட்டங்களுக்கு அமைச்சர்களும் எம் எல் எ க்களும் தலைமை தாங்க சென்றால் அவர்கள் சாதிப்பிரிவுகளை ஊக்குவித்து அவர்களுக்கு இடையே புரசல்களை வளர்ப்பார்கள் என்றே தோன்றுகிறது. இதற்க்கு எந்த ஒரு அரசியல்வாதியாவது மறுப்பு எழுதட்டும்; இல்லை கருத்தை வரவேற்று, தாம் முயல்வதாக சொல்லட்டும்: நான் அதிப் பேறு பெற்றவனாக நினைப்பேன்.