இந்தப் பரிசுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படும் நாவலோ விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கப்படும்போது இந்தப் புத்தகம் அச்சுக்கு வந்திருக்ககூடாது. அதாவது அச்சாவதற்கு முன்னரே - மேனுஸ்க்ரிப்டாக இருக்கும்போதே - விண்ணப்பிக்கவேண்டும். (இது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எங்களது சில நாவல்களைப் பதிந்துவைத்திருக்கலாம்.)
இந்த ஆண்டுக்கான நீண்ட பட்டியலில் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”யின் ஆங்கில வடிவம் “Midnight Tales” இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து 11 நாவல்கள் இடம்பெறுகின்றன.
- Tulsi Badrinath ("Melting Love")
- Anjum Hasan ("Neti, Neti")
- Daisy Hasan ("The To-Let House")
- Siddharth Dhanvant Shanghvi ("Lost Flamingoes of Bombay")
- Amit Varma ("My Friend, Sancho")
- Sarayu Srivatsa ("The Last Pretence")
- Kavery Nambisan ("The Story that Must Not be Told")
- Sumana Roy ("Love in the Chicken's Neck")
- Vaibhav Saini ("On the Edge of Pandemonium")
- Rupa Krishnan ("Something Wicked This Way Comes")
- Salma ("Midnight Tales")
Midnight Tales - The title is not opt.It is too bland and sounds like a title of xxx film.A poetic title would be better.Irandam Jamangalin Kathai in tamil is different from midnight tales in meaning.
ReplyDeleteoops it should be apt not opt.
ReplyDeleteஅன்புள்ள பத்ரி, உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவையாகவும், ஒருவித இன்பம் தருவதாகவும் உள்ளன. என்னால் நினைத்ததைச் சரியாக்ச் சொல்ல முடியவில்லை. குறிப்பாக வெஜிடேரியனிசம் மற்றும் கல்விச் செலவுகள் பற்றிய பதிவுகள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
நாகூர் ரூமி